jaga flash news

Saturday 17 October 2020

ஜாதகப்படி குழந்தை பிறந்த சரியான நேரம் என்பது என்ன? எதை அடிப்படையாக வைத்து இதை கணிக்க வேண்டும்? எது துல்லியமாக இருக்கும்?



 ஜாதகப்படி குழந்தை பிறந்த சரியான நேரம் என்பது என்ன?  எதை அடிப்படையாக வைத்து இதை கணிக்க வேண்டும்? எது துல்லியமாக இருக்கும்?

 ஜாதகப்படி 80% துல்லியமான பலனை பெற வேண்டும் என்றால் முதலில் ஜாதகத்தில்  பிறந்த நேரம் சரியாக இருந்து அதன் மூலம் கணிக்கப்படும் ஜாதகத்தின் பலன் 80%  துல்லியமாக இருக்கும்.( இங்கு 100% சொல்ல யாரும் இல்லை.)

 தவறான முறையில் அல்லது துல்லிய தன்மையற்ற முறையில் கணிக்கப்பட்ட ஒரு ஜாதகத்தை,எவ்வளவு பெரிய ஜோதிடரிடம் பார்க்க கொடுத்தாலும் பலன் தவறிவிடும் .

பலன் தவறாக சொன்னால் பழி என்னவோ ஜோதிடர் மேல் தான்.

 ஒரு குழந்தை பிறக்கப்போகிறது எனும்போது , மருத்துவமனை அங்குள்ள சூழல் எவ்வளவு டென்ஷனாக இருக்கும் என்று குழந்தையை பெற்ற அனைவருக்கும் தெரியும்.

 அதிலும் குழந்தை தலைகீழாக உள்ளது ,கொடி சுற்றி உள்ளது, ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்பது போன்ற காரணங்கள் இருந்தால் BP  எகிறிடும். நமக்கு மட்டுமல்லாமல் ,பிரசவம் டாக்டருக்கும் சேர்த்து தான்

 இந்த சூழ்நிலையில் தாய் ,சேய் என 2 உயிர்களை காப்பாற்ற தான் ஒரு மருத்துவர் போராடுவார் .அவர் ஜோதிடம் தெரிந்த மருத்துவராக இருந்தாலும் ,அந்த நேரத்தில் அந்த இருவரின் உயிர் தான் முக்கியம்.

 இந்த சூழ்நிலையில் சரியான நேரத்தை கணிப்பது என்பது இயலாத ஒன்று.

 ஒரு கரு உருவாகி ,இறைவனால் உயிர் கொடுக்கப்படுகிறது.

 கரு வளர்வது என்பது தாயின் தொப்புள் கொடி மூலமாக தாய்  எடுத்துக்கொள்ளும் உணவின் வழியாக குழந்தையை சென்றடையும்.

 தொப்புள் கொடி உறவு என்பது தாய்க்கும் ,சேய்க்கும் ஆன உறவுப்பாலம்.

 ஒரு குழந்தை தாயின் யோனி மூலமாக வெளியே வந்தாலும் அல்லது சிசேரியன் மூலமாக  குழந்தை பிறந்தாலும் தொப்புள் கொடி வெட்டப்படும் பொழுதுதான் அந்த குழந்தை ,இந்த பிரபஞ்ச சக்தியை 
முழுவதுமாக ,தாயின் துணையின்றி உள்ளிழுக்க பெறுகிறது.

 சரியாக சொன்னால் ,தொப்புள் கொடி வெட்டப்பட்டு முழுவதுமாக பிரபஞ்ச சக்திக்குள்  வரும் நேரமே, சரியான குழந்தை பிறந்த நேரம் என கணக்கிட வேண்டும் .அதுதான் துல்லியமாக இருக்கும்.

 குழந்தை பிறந்தவுடன் ஆழ வேண்டும்.
( இல்லையென்றால் நாமெல்லாம் அழ வேண்டும் என்ன ஆச்சோ ,ஏது ஆச்சோ என்று)

 சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் ,சில நிமிடங்கள் கழித்து அழும் இருந்தாலும் குழந்தையின் தொப்புள் கொடி வெட்டப்பட்டு பிரபஞ்ச சக்தியை  தன் மூச்சுக்காற்றால் உள்ளிழுக்கும் நேரமே சரியான பிறந்த நேரம் ஆகும்.

 சிலர் யோனியிலிருந்து குழந்தையின் தலைப்பகுதி வெளியே வரும் நேரம் சரியான பிறந்த நேரம் என்று கணிக்கின்றனர் அது தவறு. சிலருக்கு  தலைப்பகுதி வெளியே வந்தாலும் தலை பகுதியை விட உடம்பு பகுதி ,பெரிய அமைப்பை உடையது என்பதால் சிலருக்கு  பிரசவத்தின் யோனியை சிறிது கிழித்து ,குழந்தையை வெளியே எடுப்பார்கள்.

 அதற்கு சில நிமிடங்கள் ஆகும் என்பதால் அதற்குள் லக்னம் மாற வாய்ப்புண்டு.

 சிலர் குழந்தை முழுவதுமாக வெளியே வந்து பூமியை தொடும் நேரம் என்று கணக்கிடுகின்றனர் .அதுவும் தவறு.

 குழந்தை முழுவதுமாக வெளியே வந்தாலும் ,நச்சுக்கொடி எனும் தொப்புள்கொடி மூலம் வந்து அழுதாலும் தொப்புள் கொடி உறவு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 அதனால் சரியான குழந்தை பிறந்த நேரம் என்பது தொப்புள் கொடி வெட்டப்பட்டு ,முழு மூச்சை உள்ளிழுக்கும் நேரமே சரியான பிறந்த நேரம் ஆகும்.

 இதில் சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்.

 இவ்வளவு துல்லியமாக கணித்தாலும் சந்தியில் லக்னம் இருந்தால் பலன் கணிப்பது என்பது சவாலாகவே இருக்கும். அதை போகப்போகத்தான் நடைமுறை வாழ்க்கை  மூலம்  நாம்தான் அதை கண்டுபிடித்து உணரமுடியும் .அதற்கு சில காலங்கள் ஆகவே செய்யும்


No comments:

Post a Comment