jaga flash news

Friday, 9 October 2020

ஸப்த மாதாக்கள்

ஸப்த மாதாக்கள்.
.................

அஷ்டமங்கல்ய ப்ரஸ்ன ஜோதிஷன்,
அவிட்டம்திருநாள்,
அஜய்குமார்.
செல்;8056203692,

ஆதிபராசக்தியின் விபூத ரூபங்கள் "ஸப்த மாதாக்கள் ""

தேவி மகாத்யமத்தில் சொவ்வப்படுகின்றது,

01. ப்ராமணீ,
02. வைஷ்ணவி,
03. மகேஸ்வரி,
04. கௌமாரி,
05. வராஹி,
06. இந்திராணீ ( நரசிம்ஹி)
07. சாமூண்டீ 

என்கின்ற தேவிமார்கள் தான் " ஸப்த மாதாக்கள் "

இந்திராணீக்கு பதிலாக சில ஸ்தலங்களில் "நரசிம்ஹியை தான் பூஜிக்கிறார்கள்,

ப்ரம்மன்,
சிவன்,
விஷ்ணு,
யமன்,
இந்திரன்,
சுப்பிரமணியன்,

போன்ற தேவன்மார்கள் ஸரீரத்தில் இருந்துதான் " ஸப்தமாதாக்கள் "தோன்றினர்,

சிவனும், விஷ்ணுவும் கூடி அந்தகாஸுரனை யுத்தம் செய்து கொல்ல முடியாததால் " ஸப்தமாதாக்கள் "சிருஷ்டிக்க பட்டதாக ஒரு கதை உண்டு,

அந்தகாஸுரனின், ஒவ்வொரு துளி ரக்தமும் நிலத்தில் வீழும்போது, அதிலிருந்து ஒவ்வொரு அந்தகாஸுரன்மார்கள் ஜெனிப்பார்கள்,

தேவன்மார்களார் சிருஷ்டிக்கப்பட்ட " ஸப்தமாதாக்கள் " யுத்தத்தில் அந்தகாஸுரன் ரத்தம் நிலத்தில் விழும்போது அந்த ரக்ததுளிகளையும் குடித்தார்கள் ஸப்தமாதாக்கள்,

அதன்பிறகு தான் சிவனாலும், விஷ்ணுவாலும் கூடி அந்த அரக்கனை கொல்ல முடிந்தது,

வாமனபுராணம் 56 வது அத்தியாத்தில் வேறு ஒரு கதை உண்டு,

ஒருக்கில் தேவர்களுக்கும், அஸுரன்மார்கள்கும் கடும்யுத்தம் நடந்தது,

" தேவாஸுர. யுத்தம் "

அதில் தோற்று போன அஸுரன்மார்களில்"ரக்தபீஜன் "என்கின்ற அஸுரன், தனது படையான.,
"அக்ஷௌஹிணீ " படையுமாய் ஒரு மகா யுத்தத்திற்கு தயாரானான்,

 இதை கண்ட ஆதிபராசக்தி, ஒரு சிங்கத்தை அனுப்பி வைத்தாள்,

தேவியின் திரு வாயிலிருந்து,
" ப்ராமாணீயும்,

திருக்கண்ணிலிருந்து " மகேஸ்வரியும்,

தேவியின் இடுப்பிலிருந்து, "கௌமாரியும்,

கைகளில் இருந்து "வைஷ்ணவியும்"

யோனியிலிருந்து " வராஹியும் "

இதய பாகத்தில் இருந்து " நரஸிம்ஹையையும் "

பாதத்திலிருந்து " சாமூண்டி "யையும் வெளி வர செய்தாள்,

கார்த்தாயீனி அன்னையின் கௌசிக ருபத்தின் பேதமாகின்றது,

ஆதிபராசக்தி தன்னுடைய. தலைமுடி கெட்டை அவிழ்த்து விட்டபோது தலைமுடி கெட்டின் முனை பாகம்  பூமியில் ஒங்கி இடித்தது,

அதிலிருந்து " ஸப்தமாதாக்கள் "தோன்றினார்கள் என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது,

ஒவ்வொரு ஸப்தமாதாக்கள்கும் வாகனம், ஆயுதமும் உண்டு,

ப்ராமணீயின் வாகனம் நாகம்,
கையில் ஜபமாலையும் கமண்டலம்,

த்ரிலோச்சனியாகிய மகேஸ்வரிக்கு " வாகனம், சிவனைப்போல் "ரிஷபக்காளை "
கையில் "திரிசூலம் "
சிவவைப்போல், வளையல்களாகவும், மாலையாகவும், ஸர்ப்பங்கள் அணிந்துள்ளாள்,

கௌமாரியின் வாகனம் மயில், கையில் வேல் உண்டு, தன் புத்ரன் சுப்பிரமணியன் போல்!

வைஷ்ணவி வாகனம் கருடன், தனது ஸகோதரன் போல் கையில்  " சங்கும், சக்கரமும் '

" சங்குசக்ர தாரிணீ "

வராகியின் வாகனம்  ஆதிசேஷ நாகத்தின் மேல் தேரில் " உக்ர தேவியாக காட்சி தருகிறாள்,
ஆயுதம் " வலக்கையில் "உலக்கை "

நரசிம்ஹிக்கு வாகனம் சிங்கம்,

இந்திராணியின் வாகனம் ஆனை,
" அபய முத்ரை காட்டி ஆசிர்வதிக்கின்றாள்,

சாமூண்டிக்கு " ஆண் எருமை வாகனம்,
இவள் பராசக்தி அம்ஸம்,
எட்டு கைகள்,
"திரிசூலம் "ப்ரதான ஆயுதம்,
சங்கு. சக்கரம்,  பலகை, கயிறு, அம்பூ தான்யம்,  போன்றவை மற்ற கைகளில் உண்டு,

01. ப்ரமாம்ணீயை . தொழுதால்  ரோகங்கள்  குணமாகும்.

02. மகேஸ்வரி : 
ஸர்வ மங்களங்களும் உண்டாகும்,

03. கௌமாரி,
ரக்தசம்பந்தப்பட்ட ஸர்வ ரோக நிவர்த்தி,

04.வைஷ்ணவி,
விஷஜந்துக்களில் இருந்து தப்பித்தல்,

05. இந்திராணி,
தாம்பத்ய சுகம், தருவாள்,ஸ்த்ரீ, புருஷ தாம்பத்ய பிரச்சினைகளை தீர்ப்பாள்,
விஷ்ணு அம்ஸமுள்ளவள்,

06. சாமூண்டி.
ஆதிபராசக்தி, காளி, பரமேஸ்வரி போன்ற அம்ஸமுள்ளவள், சகல சௌபாக்கியம் தரக்கூடியவள்,

07.  வராஹீ '
விஷ்ணு அம்ஸமுள்ளவர், " சத்ருதோஷம் " நீக்க கூடியவள்,

ஸப்தமாதாக்களை இப்படியும் அதிகாரத்தோடும், அன்போடும், ஆசையோடும், இப்படி "பட்ட பெயர் " வைத்தும் அழைப்பார்கள்

01.ப்ராம்ணீ : பெற்ற அம்மா "
02.மகேஸ்வரி ;வளர்த்த அம்மா,
03.கௌமாரி :குருவின் பத்தினியம்மா.
04. வைஷ்ணவி :ராஜமாதா அம்மா,
05. இந்திராணீ : ப்ராமணத்தீ அம்மா,
06. சாமூண்டி : கோமாதா அம்மா,
07. வராஹீ : பூலோக மாதா அம்மா,

அம்மே நாராயணீ,
தேவி நாராயணீ,
பத்ரே நாராயணீ 

No comments:

Post a Comment