jaga flash news

Tuesday 8 June 2021

அனைத்துமே மாயை" என்பது, எதற்கும் லாயக்கு இல்லாதவர்களின் வீண் வாதம்!!!

"அனைத்துமே மாயை" என்பது, எதற்கும் லாயக்கு இல்லாதவர்களின் வீண் வாதம்!!!
-------------
ஏதோ தான் அனைத்தும்  அறிதார்போல, "எல்லாம் மாயை! வாழ்வே மாயை! உலகே மாயை!" என்று பலர் தங்கள் இனவாழ்வை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்!!

முதலில் மாயை என்றால் என்ன என்று அந்த மேதாவிகளிடம் வினவினால்........... வெறும் பேய் முழிப்புதான் மிஞ்சும். 

மாயை என்பது எங்கோ இருக்கின்ற எதோ அல்ல. இல்லாததை நாம் இருப்பதாக எண்ணுவதே "மாயை" ஆகும். உதாரணமாக காணல்நீர் போல. அது நம் பார்வைக்கோளாறு. அதேபோல, நம் அறியாமையால் நமக்கு ஏற்படும் துக்கத்திற்கு ஓர் பெயர் தான் மாயை ஆகும். தவிர அவ்வாறு ஒன்றும் இல்லை. 

இருப்பது அனைத்துமே பிரம்மமாய், பிரபஞ்சமாய், இறைவனாய், அந்த இரண்டற்ற ஆனந்த வஸ்துவாய் இருக்க, இரண்டற்ற அதில் மாயை என்னும் இரண்டாவதற்கு ஏது இடம்???

வாழ்கையை வெறுத்து, தன்னால் எதயும் செய்யமுடியாமல், எதற்கும் கையாலாகாமல், இறைவன் மீது உறுதியற்ற நாத்திகரின் வாதம்தான் "எல்லாம் மாயை" என்பது. 

ஆனால் இருப்பது அனைத்துமே பிரம்மம் தான். அந்த முழுமயைதவிர்த்து இங்கு இரண்டாவதாக எதுவுமே இல்லை. 

மனைவி, மக்கள், சொத்து, நிலம், வாழ்க்கை இவை அனைத்தும் மாயை என்று என்னும் சிறுபுத்தி கொண்டவாரா நீங்கள்?
அவ்வாறெனில், வாழ்வதற்கே தகுகியற்றவர் நீங்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இங்கு இருப்பது அனைத்துமே மாயை அல்ல. சத்தியம்தான். ஆனால் அவைகளை, "உங்களுடையது, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, உங்களுக்கு ஆட்பட்டது.............." என்னும் எண்ணம்தான் மாயை, என்பது. மாயை என்பது மனதைத்தவிர, வீண் சிந்தனைகளைத்தவிர உண்மையில் எங்கோ இல்லை. 

உங்கள் மனைவி, மக்கள், தொழில், உலகம்............ அனைத்துமே சத்தியம் தான். ஆனால் அவை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்னும் நினைவு தான் மாயை. உங்கள் மனைவியாக இருக்கும் அந்நபர் சத்தியம், ஆனால், அங்கு "என்மனைவி, எனக்கு ஆட்பட்டவள், எனக்கு கட்டுப்பட்டவள்......" என்னும் "யான், எ்னது" தான் மாயை!!! 

வீண் மாயாவாதத்தை விட்டொழித்து, இறைவன் அளித்த இன்வாழ்வை சிறப்பாகவும், முழுமையாகவும், அமைதியாகவும் வாழ்வோம்!!!

No comments:

Post a Comment