jaga flash news

Wednesday, 29 November 2023

தூங்கி எழும்போது தொப்புளில் பஞ்சு போன்று உருவாவது ஏன்?

நன்றாகத் தூங்கி எழும் போது தொப்புளில் பஞ்சு போன்று இருப்பதை யாராவது கவனித்திருக்கிறீர்களா? அப்படிக் கவனித்திருந்தால் அது என்ன எனச் சிந்தித்திருக்கிறீர்களா? நம்மில் பலர் அது படுக்கை, போர்வை அல்லது ஆடையிலிருந்து வெளியேறும் நூலிழைகள் என நினைத்திருப்போம். ஆனால் அப்படி அல்ல. அந்த பஞ்சுகளின் பின்னனிருக்கும் அறிவியலைக் கண்டறிந்துள்ளார் ஆஸ்திரேலியா வேதியியலாளர் ஜார்ஜ் டின்ஹவுஸர் (Georg Steinhauser).

இதனைக் கண்டறிய வியென்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 500க்கும் மேற்பட்டோரின் தொப்புல் பஞ்சுகள் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வில் இந்த பஞ்சுகள் முடிகளுக்கு இடையில் உருவாகி மெதுவாக தொப்புளால் உறிஞ்சப்பட்டு தொப்புள் குழியில் சேர்ந்து பஞ்சு போன்று ஆகிறது எனக் கண்டறியப்பட்டது
மேலும் இந்த பஞ்சுகள் கொழுப்பு, வியர்வை, இறந்த செல்கள் மற்றும் தூசிகளால் ஆனது எனக் கண்டறியப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் பஞ்சுகள் உருவாகியுள்ளன. அதிகபட்சமாக 7.6 கிராம் எடை வரை இந்த பஞ்சுகள் உருவாகின்றன.

இந்த பஞ்சுகளைக் கொண்டு வித்தியாசமான கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பார்கர் என்ற நபர். 1984 முதல் தனது தொப்புள் பஞ்சுகளைப் பக்குவமாகச் சேகரித்து சுத்தமான கண்ணாடி ஜார்களில் அடைத்துப் பாதுகாத்து வருகிறார் அந்த நபர். இதனால் அதிக பஞ்சுகளைச் சேகரித்த அவருக்கு 2010ல் கின்னஸ் சாதனை பட்டம் வழங்கப்பட்டது

Monday, 27 November 2023

மாரடைப்புக்கு 3 காரணங்கள்...


இளம் வயதிலேயே பலருக்கும் மாரடைப்பு வருகிறது. உடற்பயிற்சி செய்தவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் என பலரும் மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள். மாரடைப்பு ஏற்படுவதற்கான மூன்று முக்கிய காரணங்கள்

"எதனால் மாரடைப்பு வருகிறது என்று பார்த்தீர்கள் என்றால், இதயம் மனிதனின் இடதுபாகத்தில் இருக்கிறது. இந்த இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது. ஒரு நாளைக்கு லட்சம் முறை துடிக்கிறது. நாம் 100 வருடம் கடந்து வாழ்கிறோம் என்றால் இதயம் சீராக துடிப்பதே காரணம். இதயம் சீராக துடிப்பதற்கு ரத்தம் ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அதற்கு கொரோனெரிவெர்செல்ஸ் என்று பெயர். கொரோனெரிவெர்செல்சஸ் தான் வேண்டிய ஆக்சிஜன், நியூட்ரிசியனை இதய தசைகளுக்கு எடுத்து செல்லும்.. இதுதான் சக்தி வாய்ந்த மசில்.

எதிர்மறை எண்ணங்கள்: இதில் முக்கியமான விஷயங்கள் பார்த்தீங்க அப்படீன்னா.. எதிர்மறை எண்ணங்கள்.. எதிர்மறை எண்ணங்கள் என்ன என்று பார்த்தால், எப்ப பார்த்தாலும், கோபமாக, டென்சனாக, ஆத்திரத்துடன், பொறாமையுடன், போட்டியுடன் எதிர்மறை எண்ணங்கள் வரும் போது, அட்ரினல் என்ற ஹார்மோன் சுரக்கிறது.. அட்ரினல் என்ற ஹார்மன் சுரக்கும் போது, உடனே அவன் வந்து கொழுப்பான உணவுகளை சாப்பிட தூண்டப்படுவான்.. கொழுப்பான உணவு சாப்பிட்ட உடன் அவன் உடல் உடனே பருமானாகிவிடும்.. இந்த லெவலில் போகும் போது, அவன் உடற்பயிற்சியை தவிர்த்து விடுவான்..

மது புழக்கம், புகைப்பழக்கம்: உடனே அவன் நினைத்து கொள்வான்.. மகிழ்ச்சி என்ற ஒன்றை அடைவதற்கு, புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் வழி என நினைப்பான். அது மகிழ்ச்சி தருவதாக மாய உணர்வில் சேர்ந்துவிடுவான்.. அப்படி சேர்ந்தால், இந்த நான்கு போய் (எதிர்மறை எண்ணங்கள், கொழுப்பு உணவுகள், மது, புகை) ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இது தொடர்ச்சியாக வரும்.

மாரடைப்புக்கு 3 காரணங்கள்: எதிர்மறை எண்ணங்களால் அட்ரினல் சுரபி சுரக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பு ரத்த குழாயில் படிந்து விடுகிறது. எப்பொழுது அட்ரினல் சுரப்பால் கொழுப்பு ரத்த குழாயில் படிக்கின்றதோ அதுதான் ரத்த குழாய் அடைப்பு.

இளம் வயது மாரடைப்பு: 20, 25 வயதில் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று சொல்கிறார்களே ஏன் தெரியுமா? ரத்த குழாயில் கொழுப்பு படிவது மட்டுமின்றி, இரத்தம் உறைந்துவிடும்.. அது இரண்டு நிமிடத்தில் கூட உறைந்துவிடும்.. இல்லாவிட்டால் இந்த இரத்த குழாய் வேகமாக சுரங்குவதும் இந்த மூன்று தான் இதய அடைப்புக்கு காரணமாகிறது. அதாவது ரத்தக்குழாய் அடைப்பது, ரத்தம் உறைவது, ரத்தகுழாய் வேகமாக சுரங்குவது இந்த மூன்று தான் மாரடைப்பு என்ற கொடிய நோய்க்கு காரணம். பொறாமை இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்வது மாரடைப்பு வராமல் காக்கும்".

பிறப்பிலேயே அதிக பொறாமை புடிச்ச ராசிகள் இவங்கதான்...



பிறப்பிலேயே அதிக பொறாமை புடிச்ச ராசிகள் இவங்கதான்



Jealousy Rasis: இயற்கையாகவே மற்றவர்கள் மீது கவனத்தை செலுத்தி தன்னை பாழாக்க முயற்சிக்கும் ராசிகளையும் இங்கே காண்போம்.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் வெவ்வேறு விதமான குணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. களத்திற்கு ஏற்றார் போல் தங்களது இயல்பை மாற்றிக் கொண்டு செயல்களில் ஈடுபடுகின்றன.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் வெவ்வேறு விதமான குணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. களத்திற்கு ஏற்றார் போல் தங்களது இயல்பை மாற்றிக் கொண்டு செயல்களில் ஈடுபடுகின்றன.

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து 12 ராசிகளின் செயல்பாடுகளும் அமைவதாக கூறப்படுகிறது.
(2 / ல்
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து 12 ராசிகளின் செயல்பாடுகளும் அமைவதாக கூறப்படுகிறது.


ரிஷப ராசி: பொருட்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் இவர்கள். எப்போதும் தன்னை அலங்காரம் செய்து கொள்ள முக்கியத்துவம் கொடுப்பார்கள். அன்புக்காக எத்தனை ஆழம் வேண்டுமானாலும் செல்வார்கள். இதை மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது பொறாமை தானாக வருகிறது. இவர்கள் தனித்துவத்தை இது போன்ற செயல்களில் ஈடுபடுத்தாமல் இருந்து வந்தால் பொறாமையால் ஏற்படக்கூடிய சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம்.  




சிம்ம ராசி: தங்களை அனைவரும் கவனிக்க வேண்டும் என்பதில் இவர்கள் மிகவும் குறியாக இருப்பார்கள். புகழ் மற்றும் பாராட்டை அதிகமாக விரும்பக் கூடிய ராசிக்காரர்கள் இவர்கள். இவை அனைத்தும் மற்றவர்களுக்கு கிடைக்கும் போது இந்த ராசிக்காரர்களுக்கு பொறாமை தானாக தலை தூக்குகிறது. இவர்களின் கடுமையான முயற்சியும், உழைப்பும் தவறான பக்கத்தில் திரும்பினால் கட்டாயம் சிக்கல்கள் ஏற்படுவது உறுதி. 

விருச்சிக ராசி: இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சி மற்றும் ஆழ்ந்த உள்ளுணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதனை மிகவும் ஆழமாக ஆராய கூடிய திறன் கொண்டவர்கள். அந்த சிந்தனை அவர்களுக்கு தீராத பொறாமை குணத்தை உருவாக்குகின்றது. தான் விருப்பப்பட்ட காரியத்தை அடைவதற்காக இவர்கள் ஈடுபடும் முறை காலப்போக்கில் பொறாமையாக மாற்றமடைந்து சிக்கலாக மாற வாய்ப்பு உள்ளது.

விருச்சிக ராசி: இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சி மற்றும் ஆழ்ந்த உள்ளுணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதனை மிகவும் ஆழமாக ஆராய கூடிய திறன் கொண்டவர்கள். அந்த சிந்தனை அவர்களுக்கு தீராத பொறாமை குணத்தை உருவாக்குகின்றது. தான் விருப்பப்பட்ட காரியத்தை அடைவதற்காக இவர்கள் ஈடுபடும் முறை காலப்போக்கில் பொறாமையாக மாற்றமடைந்து சிக்கலாக மாற வாய்ப்பு உள்ளது.

கடக ராசி: உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுக்கக் கூடிய ராசிக்காரர்கள் இவர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மற்றவர்கள் முன்னேற்றம் அடையும் பொழுது அதன் மீது இவர்களுடைய கவனம் செல்லும். தெரிந்தவர்களாக இருந்தாலும் அன்பை மீறி அவர்கள் மீது பொறாமை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்கள் மீது அதிக நன்றியை வளர்த்துக் கொள்வது இவர்களுக்கு இந்த சிக்கல்கள் இருந்து வெளிவர உதவியாக இருக்கும்.

கடக ராசி: உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுக்கக் கூடிய ராசிக்காரர்கள் இவர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மற்றவர்கள் முன்னேற்றம் அடையும் பொழுது அதன் மீது இவர்களுடைய கவனம் செல்லும். தெரிந்தவர்களாக இருந்தாலும் அன்பை மீறி அவர்கள் மீது பொறாமை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்கள் மீது அதிக நன்றியை வளர்த்துக் கொள்வது இவர்களுக்கு இந்த சிக்கல்கள் இருந்து வெளிவர உதவியாக இருக்கும்.


Coffee Benefits...


எப்படி குடித்தாலும் சரி நம் உடலில் அது சேரும்போது அது என்னென்ன நன்மைகளை தருகிறது என்று பார்க்கலாம். காபியின் ஆச்சரியமான நன்மைகளின் பட்டியல் இங்கே.
Coffee Benefits : காபியில் இந்த நன்மைகளா? இதுவரைக்கும் இந்த விஷயங்கள் பத்தி உங்களுக்குத் தெரியுமா?

காபி


'டயர்டா இருக்கு ஒரு காபி சாப்பிடலாம்', என்ற பதம் நம் ஊரில் அதிகம் கேட்கும் வார்த்தை. நம் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்படவைக்கும் என்பது நாம் வெளிப்படையாக அறிந்த விஷயம். பலர் காலை எழுந்ததும் காபி குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கும் ஊர் நம் ஊர். ஆனால் நமக்கே அதில் இவ்வளவு மறைமுக நன்மைகள் இருப்பது தெரியாது. காபியை பல விதமாக குடிக்கும் மக்கள் நாம், கோல்டு காபி என்ற பெயரில் குளிர்ந்தும், பாலுடன் சேர்த்து சூடாகவும், ஃபில்டர் காபி, பிளாக் காபி என்று பல வகை உண்டு. எப்படி குடித்தாலும் சரி நம் உடலில் அது சேரும்போது அது என்னென்ன நன்மைகளை தருகிறது என்று பார்க்கலாம். காபியின் ஆச்சரியமான நன்மைகளின் பட்டியல் இங்கே.



நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்


காபி பற்றிய அறிவியல் தகவல் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் அல்லது அழற்சி எதிர்ப்பு விளைவுகள் உள்ளிட்ட பல காரணிகள், ஒரு கப் காபி குடிக்கும் போது, டைப் 2 நீரிழிவு நோயின் ஆபத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


Coffee Benefits : காபியில் இந்த நன்மைகளா? இதுவரைக்கும் இந்த விஷயங்கள் பத்தி உங்களுக்குத் தெரியுமா?

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது


ஹார்வர்ட் ஆய்வின்படி, தினமும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பது, இதய செயலிழப்பிலிருந்து பாதுகாக்கும் மற்றும் பக்கவாதம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: Erode East By Election 2023: முழு உரிமையும் உள்ளது.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம் - ஓபிஎஸ் பேச்சு


எடை குறைப்பை ஊக்குவித்தல்


நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (என்ஐஎச்) நடத்திய ஆய்வில், காஃபின் உட்கொள்வது கொழுப்புச் சேமிப்பைக் குறைப்பதோடு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இவை இரண்டும் எடை குறைப்பிற்கு உதவும் விஷயங்கள் ஆகும்.


மனச்சோர்வின் அபாயத்தைக் குறைக்கும்


ஒரு கப் காபி குடிப்பதால் மனச்சோர்வு அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. NIH ஆராய்ச்சியின் படி, காபி குடிப்பது அல்லது காஃபின் உட்கொள்வது மனச்சோர்வு அபாயம் குறைவதோடு பெரும் அளவில் தொடர்பு கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


Coffee Benefits : காபியில் இந்த நன்மைகளா? இதுவரைக்கும் இந்த விஷயங்கள் பத்தி உங்களுக்குத் தெரியுமா?

பார்கின்சன் நோய்க்கு நல்லது


காபியில் உள்ள காஃபின் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் கட்டுப்பாடற்ற இயக்கங்களை நிர்வகிக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கூற்றுப்படி, காபியை அதிகமாக உட்கொள்வது பார்கின்சனின் அபாயத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


டிமென்ஷியா/அல்சைமர் நோய் அபாயத்தைக் குறைக்கிறது


ஒரு நாளைக்கு 3 முதல் 5 கப் காபி குடிப்பதால் டிமென்ஷியா-அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்றும் என்ஐஎச் ஆய்வு காட்டுகிறது. கிரெம்பில் மூளை நிறுவனத்தின் மற்றொரு ஆய்வு, காபி குடிப்பது அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் இரண்டையும் உருவாக்காமல் உங்களைப் பாதுகாக்கும் என்று கூறுகிறது. காபி கொட்டைகளை வறுக்கும் செயல்முறை இந்த நோய்களைத் தடுக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்க வேண்டும்?


Fda.gov கருத்துப்படி, ஒரு நாளைக்கு 400 மில்லிகிராம் காபி ஆரோக்கியமான நபர்களுக்கு பாதுகாப்பான அளவு என்று கூறப்படுகிறது. பல சுகாதார வல்லுநர்கள் பிளாக் காபி குடிப்பது எடை குறைப்பை மேம்படுத்துவதற்கான ஆரோக்கியமான வழிகளில் ஒன்றாகும் என்று கூறுகின்றனர்.


Sunday, 26 November 2023

குங்குமப் பூ...


மினுமினுக்கும் குங்குமப்பூ.. பெண்ணின் வரப்பிரசாதம்.. இல்லறத்தை மலரவைக்கும் பூ.. அதிசய குங்குமப் பூ
வயதானவர்களுக்கு அருமருந்தாவது இந்த குங்குமப்பூக்கள்.. குறிப்பாக பெண்களுக்கு பயன்படும் அத்தனை மகத்துவமும், மருத்துவமும் இந்த குங்கும பூவில் நிறைந்துள்ளன.

குரோசின், பிக்ரோகுரோசின், சாப்ரனால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த குங்குமப்பூக்கள் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய இடத்தை பெற்று வருகிறது.. இந்த பூவை வைத்து ஆராய்ச்சி நடந்துள்ள அளவுக்கு வேறு பூக்களில் நடந்திருக்குமா என்று தெரியுமா? இப்போதுவரை ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.. நடந்து முடிந்த ஆராய்ச்சிகளில் பலவித மருத்துவ உண்மைகள் நிரூபணமாகி உள்ளன.

Do you know Excellent Benefits of Saffron and Saffron is the Best medicinal Herbal for Women
மன அழுத்தம்: அந்தவகையில், மன அழுத்தத்தை போக்குவதற்கான குணங்கள் இந்த குங்குமப்பூவில் இருக்கிறதா.. குங்குமப்பூவை 6 வாரங்கள் தந்து, ஆய்வு நடத்தப்பட்டுள்ளதில், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டதாம். இந்த பூக்களை மருந்தாக சாப்பிடும்போது, செரடோனின் என்ற பொருள் நம்முடைய உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகிவதாக கூறுகிறார்கள்.




மன அழுத்தம் மட்டுமல்ல, பதட்டம், டென்ஷன், மனம் தளர்ச்சி, ஞாபக மறதி போன்ற நரம்பு மண்டல சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இந்த குங்குமப்பூ தடுக்கிறதாம்.. அத்துடன், நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது.

இல்லற வாழ்வு: இல்லற வாழ்வுக்கு இந்த குங்குமப்பூக்கள், பெரும்பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. இந்த பூக்களை தூள் செய்து, குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால், ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறதாம்.

மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை இந்த பூக்கள் தீர்க்கின்றன.. அதிலும் மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம், உடல்சோர்வு போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதுடன், முதுமையையும் தள்ளிப்போடக்கூடிய பண்புகள் குங்குமப்பூக்களுக்கு உள்ளது. நரம்பு மண்டலத்திற்கு தேவையான அத்தனை நன்மைகளும் இந்த பூக்களில் உள்ளன. புற்றுநோயை தடுப்பதிலும் இந்த பூவின் பங்கு மிக அதிகம்..

உடல் எடை: ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த பூக்கள் கொலஸ்ட்ராலை குறைக்கின்றன.. பசியை தடுக்கின்றன.. அதனால்தான், உடல் எடையை குறைக்கவும் இந்த பூக்களை பயன்படுத்துகிறார்கள். அதனால்தான், கருவுற்ற பெண்களுக்கு இந்த பூக்களை பாலில் கலந்து தருவார்கள். இதனால், தாய்க்கும், வயிற்றிலுள்ள குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும். இதய தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதால், ரத்த அழுத்தமும் கட்டுப்படுகிறது.. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களும் நீங்குகின்றன.

சைனஸ் இருப்பவர்கள், மற்றும் மூக்கடைப்பு, தலைவலி பிரச்சனை இருந்தால், குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால், நிவாரணம் கிடைக்கும். அதேபோல, சருமத்தின் பாதுகாவலனாக இந்த பூக்கள் திகழ்கின்றன..


பருக்கள், தழும்புகள், போன்றவற்றிற்கு இந்த பூக்களை அரைத்து தடவலாம். இதனால் முகமும் பொலிவு பெறும். அதனால்தான், சருமத்துக்கு உபயோகப்படுத்தும், அழகு தயாரிப்புகளிலும், மூலப்பொருட்களாக இந்த குங்குமப்பூக்கள் இன்றும் சேர்க்கப்படுகின்றன.

சரும பாதுகாப்பு: சருமத்துக்கு உபயோகமாக இருப்பதைபோலவே, தலைமுடிக்கும் இந்த பூக்கள் உதவுகின்றன. வெறுமனே குங்குமப்பூவை தண்ணீரில் கலந்து குடிப்பதாலே, தலைமுடி வலுவடைவதுடன், முடிஉதிர்வதும் நின்றுவிடும்.

நன்மைகள் பல இருந்தாலும், அதிகமாக இந்த பூக்களை எடுத்து கொண்டால், வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உபாதைகள் வரலாம். அதேசமயம் டாக்டர்களின் ஆலோசனைகளை பெறாமல், மருந்தாக யாருமே உட்கொள்ளக்கூடாது


Saturday, 25 November 2023

PPF கால்குலேட்டர்...


PPF கால்குலேட்டர்: உங்கள் PPF மீதான வட்டியில் இருந்து மட்டும் ரூ.1.74 கோடி சம்பாதிக்க முடியுமா? கணக்கீடுகள் தெரியும்பிபிஎஃப் மீதான தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதம். திட்டத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புகைப்படம்: கோப்பு/பிரதிநிதித்துவம்
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்): மக்கள் நல்ல முதலீட்டு விருப்பங்களைத் தேடுகிறார்கள், அங்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில், வருமான வரி இல்லாத வருமானத்தை ஈட்ட உதவும் முதலீட்டு வழிகளையும் அவர்கள் தேர்வு செய்ய விரும்புகிறார்கள். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இந்த நோக்கத்திற்கான சிறந்த தேர்வுகளில் ஒன்றாக வெளிப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நல்ல வருமானத்துடன் வரிச் சேமிப்புக்கான விருப்பத்தை வழங்குகிறது. நீங்கள் ஓய்வூதியத் திட்டத்தைச் செய்து


PPF: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஏன் பிரபலமானது?
PPF பிரபலமாக உள்ளது, ஏனெனில் அதில் டெபாசிட் செய்யப்படும் பணம், பெறப்பட்ட வட்டி மற்றும் முதிர்ச்சியின் போது பெறும் தொகை ஆகியவை முற்றிலும் வரி விலக்கு.

இது EEE பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. EEE என்றால் விலக்கு.

இப்போது பிரபலமாகிறது
ஒவ்வொரு ஆண்டும் டெபாசிட்களுக்கு வரி விலக்கு கோருவதற்கான விருப்பம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பெறும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

கணக்கு முதிர்ச்சியடைந்தவுடன், முழுத் தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.

PPF: PPF இல் யார் முதலீடு செய்யலாம்?
சிறு சேமிப்புத் திட்டம் PPF என்பது நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் ஆகும்.

இதை தபால் அலுவலகம் அல்லது வங்கியில் திறக்கலாம்.

ஸ்பான்சர் செய்யப்பட்ட இணைப்புகள்நீங்கள் விரும்பலாம்

ஊனி பிஸ்ஸா ஓவன்கள்
தபூலா மூலம்
ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.

வட்டி ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இருப்பினும், வட்டி காலாண்டு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

தற்போது PPFக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

முதிர்வு காலம் 15 ஆண்டுகள் நீடிக்கும்.

திட்டத்தில் கூட்டுக் கணக்கு தொடங்க வசதி இல்லை.

இருப்பினும், ஒரு நியமனம் செய்யப்படலாம்.

HUF என்ற பெயரில் கூட PPF கணக்கைத் திறக்க விருப்பம் இல்லை.

குழந்தைகளாக இருந்தால், பாதுகாவலரின் பெயர் PPF கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், அது 18 வயது வரை மட்டுமே செல்லுபடியாகும்.

PPF: PPF ஒரு கோடீஸ்வரனை எப்படி உருவாக்கும்?
PPF என்பது கோடீஸ்வரனாக மாறுவதற்கு எளிதான திட்டமாகும்.

இதற்கு வழக்கமான முதலீடு தேவை.

நீங்கள் 25 வயதாகிவிட்டீர்கள், நீங்கள் PPFல் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

நிதியாண்டின் 1 முதல் 5 வரை கணக்கில் ரூ.1,50,000 (அதிகபட்ச வரம்பு) டெபாசிட் செய்தால், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் ரூ.10,650 வட்டியாக மட்டுமே டெபாசிட் செய்யப்படும்.

அதாவது, அடுத்த நிதியாண்டின் முதல் நாளில் உங்கள் இருப்பு ரூ.1,60,650 ஆக இருக்கும்.

அடுத்த ஆண்டும் இதையே செய்தால், கணக்கு இருப்பு ரூ.3,10,650 ஆக இருக்கும்.

ஏனெனில், ரூ.1,50,000 மீண்டும் டெபாசிட் செய்யப்படும், அதன்பின் முழுத் தொகைக்கும் வட்டி வழங்கப்படும்.

இம்முறை வட்டித் தொகை ரூ.22,056 ஆக இருக்கும்.

ஏனெனில், கூட்டு வட்டி சூத்திரம் இங்கே வேலை செய்கிறது.

இப்போது 15 வருட பிபிஎஃப் முதிர்வு முடிந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம், உங்கள் கணக்கில் ரூ.40,68,209 இருக்கும்.

இவற்றில் மொத்த டெபாசிட் தொகை ரூ.22,50,000 மற்றும் ரூ.18,18,209 வட்டியில் இருந்து மட்டுமே கிடைக்கும்.

PPF கணக்கில் நீட்டிப்பு நன்மை
PPF 25 வயதில் தொடங்கப்பட்டது.

40 வயதில், 15 வருட முதிர்ச்சியின் போது 40 லட்சத்திற்கும் அதிகமான தொகை கையில் உள்ளது.

ஆனால் திட்டமிடல் நீண்ட காலத்திற்கு இருந்தால், பணம் வேகமாக வளரும்.

PPF இல் முதிர்ச்சியடைந்த பிறகு, கணக்கை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.

முதலீட்டாளர் பிபிஎஃப் கணக்கை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 45 வயதிற்குள் மொத்தத் தொகை ரூ.66,58,288 ஆக இருக்கும்.

இதில் முதலீடு ரூ.30,00,000 ஆகவும், வட்டி வருமானம் ரூ.36,58,288 ஆகவும் இருக்கும்.

PPF: 50 வயதில் நீங்கள் கோடீஸ்வரராக முடியுமா?
கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற இலக்கு இப்போது நிறைவேறும்.

உங்கள் PPF கணக்கை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு அதாவது 25 ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும்.

மீண்டும், நீங்கள் ஆண்டுக்கு ரூ.1,50,000 முதலீடு செய்ய வேண்டும்.

50 வயதில் மொத்தம் ரூ.1,03,08,014 பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

இதில் முதலீடு ரூ.37,50,000 ஆகவும், வட்டி ரூ.65,58,015 ஆகவும் இருக்கும்.

PPF: 55 வயதில் உங்கள் பணம் எவ்வளவு அதிகரிக்கும்?
PPF இன் இரண்டாவது அம்சம் என்னவென்றால், நீங்கள் அதை 5 ஆண்டுகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்.

தற்போது மீண்டும் 5 ஆண்டுகள் கணக்கை நீட்டித்தால் 55 வயதில் ரூ.1 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்து 910 இருக்கும்.

இதில் முதலீடு ரூ.45,00,000 மட்டுமே, ஆனால் வட்டி வருமானம் ரூ.1 கோடியைத் தாண்டி மொத்த வருமானம் ரூ.1,09,50,911 ஆக இருக்கும்.

PPF: இப்போது ஓய்வு பெறும் முறை வரும்
நீங்கள் ஓய்வூதியத்திற்காக அதில் முதலீடு செய்திருந்தால், கடந்த 5 ஆண்டுகளாக PPF மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும்.

அதாவது ஒட்டுமொத்த முதலீடு 35 ஆண்டுகளுக்கு தொடரும்.

இந்த வழக்கில், முதிர்ச்சி 60 வயதில் இருக்கும்.

இந்நிலையில், பிபிஎஃப் கணக்கில் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.2 கோடியே 26 லட்சத்து 97 ஆயிரத்து 857 ஆக இருக்கும்.

இதில் மொத்த முதலீடு ரூ.52,50,000 ஆகவும், வட்டி வருமானம் ரூ.1 கோடியே 74 லட்சத்து 47 ஆயிரத்து 857 ஆகவும் இருக்கும்.

எந்த வரியும் விதிக்கப்படாது என்பதால் மன அமைதி
நீங்கள் 60 வயதில் ஓய்வு பெறும்போது, ​​PPF-ல் டெபாசிட் செய்யப்படும் 2 கோடி ரூபாய்க்கு மேல் பெரிய தொகைக்கு வரி ஏதும் இருக்காது.

பொதுவாக, இவ்வளவு பெரிய தொகையை வேறு எங்காவது சம்பாதித்தால், அதற்கு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து 35 ஆண்டுகள் பிபிஎஃப் கணக்கை இயக்கினால், இருவரின் மொத்த இருப்பு ரூ.4 கோடியே 53 லட்சத்து 95 ஆயிரத்து 714 ஆகும்.

­

மிருதுவான காய்கறி, கீரை ஆம்லேட்!


Egg - Veg Omelette : மிருதுவான காய்கறி, கீரை ஆம்லேட்! உச்சுக்கொட்ட வைக்கும் சுவை நிறைந்தது!  
Egg - Veg Omelette : மிருதுவான காய்கறி, கீரை ஆம்லேட்! உச்சுக்கொட்ட வைக்கும் சுவை நிறைந்தது! 

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1

கேரட் – 1

வெங்காயம் – 1

தண்டுக்கீரை – ஒரு கைப்பிடி

கார்ன் ஃப்ளோர் அல்லது மைதா – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – அரை ஸ்பூன்

சாட் மசாலா – கால் ஸ்பூன்

முட்டை – 3

செய்முறை
நன்றாக கழுவி தோல் சீவிய உருளைக்கிழங்கு ஒன்றை, கேரட் துருவும் கட்டையில் வைத்து நன்றாக துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதைப்போல், கேரட் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றையும் நீள நிளமாக கட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி தண்டுக் கீரையை தண்டோடு நறுக்கிக் கொள்ளவேண்டும்.

இவையனைத்தையும் ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றுங்கள். கார்ன் ஃப்ளோர் அல்லது மைதா தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள், சாட் மசாலா அனைத்தும் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு தவாவில் கலக்கி வைத்த முட்டைக் கலவையை வட்ட வடிவ ஆம்லேட்களாக, ஒரு ஸ்பூனால் எடுத்து பரப்பி, வேகவிட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேக விட்டு எடுக்கவேண்டும். சத்தான காய்கறிகள், கீரை ஆம்லெட் ரெடி.

இதைத் தனி ஸ்நாக்சாகவும் பரிமாறலாம். சாப்பாட்டுடன் இணையாக தரலாம். பிரெட் மற்றும் சாண்ட்விச்சாகவும் சாப்பிடலாம்.

தண்டுக்கீரைக்கு பதில் ஸ்பிரிங் ஆனியன், பச்சை மிளகாய், பனீர், காளான் போன்றவற்றையும் இதோடு சேர்த்து செய்யலாம். சுவையில் அசத்தும்.

முட்டையில் வைட்டமின் A, வைட்டமின் B12, செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 

இதன் மூலம் நோய்வாய்ப்படுவதையும் தவிர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விரும்புபவர்கள் முட்டையை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு தினமும் ஒரு வேக வைத்த முட்டை கொடுப்பது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும

பூரி டெக்னிக்...


பூரி செய்யும்போது இனி இந்த முறையை பின்பற்றுங்க. சாஃப்டான, மற்றும் உப்பலான பூரி கிடைக்கும்
சாஃப்டான பூரி எப்படி செய்வது?
சாஃப்டான பூரி செய்வது ஒன்றும் மாய வித்தை அல்ல. அதற்கு நீங்கள் பூரி மாவு பிசையும் போது கோதுமை மாவோடு கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்க்க வேண்டும். அவற்றோடு பால் மற்றும் எண்ணெய் அல்லது நெய் சேர்க்க வேண்டும். நீங்கள் பால் சேர்க்கும் போது அவை அரை சூட்டில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இவை உங்கள் பூரியை மென்மையாக மாற்ற உதவும்.
மிருதுவான பூரி எப்படி செய்வது?
மிருதுவான பூரி பெற நீங்கள் தயார் செய்யும் பூரி மாவுடன் சிறிதளவு, ரவை சேர்க்க வேண்டும்.
எண்ணெய் கம்மியா உள்ள பூரி செய்வது எப்படி?
முதலில் நீங்கள் பூரிக்கு மாவு தயார் செய்யும் போது அவை நிலைத்தன்மையுடன் சற்று கடினமாக உள்ளது போல வைத்துக்கொள்ளவும். இரண்டாவதாக, பூரி சுடும் முன்னர் அந்த எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும். மூன்றாவதாக, மாவை குளிர்சாதன பெட்டியில் சுமார் 15 நிமிடங்கள் வைத்த பின்னர் பூரி சுட ஆரம்பிக்கலாம்.
பொன்னிறமான பூரி எப்படி சுடலாம்?
பூரி தங்க நிறத்தில் வருவதற்கு, மாவு தயார் செய்யும் போது அவற்றுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். இவை பூரி பொன்னிறமாக தோன்ற உதவும். மேலும் பூரி சுடும் போது துருப்பிடிக்காத கரண்டியை பயன்படுத்தி, பூரி மாவை எண்ணெய்க்குள் போடும் போது அந்த கரண்டியால் அழுத்தி பிடிக்கவும். இப்போது பூரி உப்பலாகவும், பொன்னிறமாகவும் எழும்பி வரும்.


Loneliness-தனிமை



``15 சிகரெட்டுகளை விட மோசமானது தனிமை" எச்சரிக்கும் மருத்துவர்... தீர்வு என்ன?


ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பை தனிமை உருவாக்குகிறது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக உருமாறி வருகிறது... புதிய நபர்களைச் சந்திக்கும்போதும், புதிய விஷயங்களைக் காணும்போதும் தனிமை என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வர முடியும

தனித்து வாழ்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விவேக் மூர்த்தி என்ற மருத்துவர் தனிமை பற்றி சமர்ப்பித்த தனது அறிக்கையில், "தனிமை என்பது மோசமான ஓர் உணர்வு. அது தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. இதயநோய், டிமென்ஷியா, பக்கவாதம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.





ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பை தனிமை உருவாக்குகிறது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக உருமாறி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மருத்துவர் டெட்ராஸ் அதானோம், "உலகம் முழுவதும் தனிமை என்பது உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. போதுமான சமூக தொடர்புகள் இல்லாதவர்கள் மனச்சோர்வு, தற்கொலை எண்ணம் போன்ற ஆபத்துகளில் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.






“ஜப்பானில் 2018-ம் ஆண்டு தனித்து வாழ்பவர்களின் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு அமைச்சர் பதவியும் உருவாக்கப்பட்டது. அந்த அளவுக்கு கண்காணிக்க வேண்டிய விஷயமாக தனிமை உள்ளது.



மனிதன் ஒரு சமூக விலங்கு. பண்டைய காலம் முதல் மனிதன் கும்பலாக வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. கடந்த 10 வருடங்களாக மனநலம் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தனிமை பற்றி அதிகம் பேசப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றின்போதே மக்கள் தனிமைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.


வயதானவர்கள் தனிமையாக இருக்கும்போது டிமென்ஷியா பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு 50% ஆக உள்ளது. மேலும் இதயநோய் போன்ற ரத்த நாள பிரச்னைகள் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் 30% அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தனிமை
தனிமை
Also Read
இதை உணர்ந்துவிட்டால்... உங்கள் கவலைக்கு விடுதலை கொடுத்து விடுவீர்கள்! | மகிழ்ச்சி - 5
இதை உணர்ந்துவிட்டால்... உங்கள் கவலைக்கு விடுதலை கொடுத்து விடுவீர்கள்! | மகிழ்ச்சி - 5
தனிமை இரண்டு வகைப்படும். சூழ்நிலையினால் தனிமை படுத்தப்படுவது, மற்றொன்று மனநோயினால் ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது. இது தவிர, தானாக விரும்பி தனிமைப்படுத்திக்கொள்வது ஒரு வகை.


முதல் வகையைப் பொறுத்தவரை அந்தச் சூழல் மாறினாலோ, சரியானாலோ சரியாகிவிடும். மனநோயினால் தனிமையில் இருப்பவர்களுக்கு அதற்கான சிகிச்சை எடுத்தால் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். தானாக விரும்பி தனிமைப்படுத்திக்கொள்வதை பற்றி கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இளம் தலைமுறையினர் தனிமைக்குத் தள்ளப்படுவதற்கு சமூக வலைதளங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாகத் திகழ்கின்றன. தனிமைமோசமான ஓர் உணர்வு. இது தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும். இதயநோய், மறதி, பக்கவாதம், மனச்சோர்வு, பதற்றம் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைகிறது தனிமை.


தனிக்குடும்பம், 'லிவிங் டு கெதர்' போன்ற கலாசாரம் தற்போது இந்தியாவிலும் பரவலாகிவிட்டது. இவற்றினால் ஏற்படும் பிரச்னைகளைப் பார்த்து பெரும்பாலானவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்வதைத் தேர்ந்தெடுக்கின்றனர்.




விரும்பித் தேர்ந்தெடுக்கும் தனிமையை சிகிச்சை மூலம் சரி செய்ய இயலாது. தாங்களாகவே அதிலிருந்து வெளியே வருவதற்கு முயல வேண்டும். எடுத்துக்காட்டாக, சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், விருப்பமான கிளப் அல்லது குழுக்களில் சேர்தல், ஒத்த சிந்தனை உடையவர்களுடன் நேரம் செலவிடுதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். அப்போது தனிமை மெதுவாக விலகத் தொடங்கும்.


புதிய நபர்களைச் சந்திக்கும்போதும், புதிய விஷயங்களைக் காணும்போதும் தனிமை என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வர முடியும். கூடுதலாக, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல தூக்கம் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதால் தனிமையினால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்கலாம். இந்தப் பழக்கவழக்கங்கள் தற்கொலை, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது போன்ற எண்ணங்கள் வராமல் தடுக்கும். சமூகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

Counseling

உதவியை நாடுவது தவறில்லை!
தனிமையின் அலைகளால் தாக்கப்படும்போது யாரிடமாவது பேசுவது நல்லது - அது நண்பராக இருக்கலாம் அல்லது மனநல ஆலோசகராக இருக்கலாம். தனிமை ஒருவரை அழுத்தும்போது தகுந்த உதவியை நாடுவதில் தவறில்லை" என்றார் அவர்.


Bad Food Combo For Bones...


எலும்புகளை பலவீனப்படுத்தும் கீரைகள்! கீரையுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்
Bad Food Combo For Bones: எலும்பு பலவீனத்தை ஏற்படுத்தும் காய்கறிகளில் கீரைக்கு தான் முதலிடம் உண்டு. கீரையில் கால்சியம் இருக்கும்போது அது எப்படி எலும்பை பலவீனப்படுத்தும்? தெரிந்துக் கொள்ளுங்கள்

எலும்புகளை பலவீனப்படுத்தும் கீரைகள்! கீரையுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்

கீரையில் கால்சியம்
எலும்பை பலவீனப்படுத்தும் உணவுகள்
மோசமான உணவு காம்பினேஷன்கள்

ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் சில பொருட்கள், தீமையையே செய்யும். அதற்கு காரணம், சத்தான பொருளுடன் மற்றொரு உணவு இணையும்போது ஏற்படும் மாற்றங்கள் தான். அதற்கு உதாரணமாக உடலில் இருக்கும் கால்சியத்தை கரைத்து விடும் தன்மை கொண்ட ஒரு நல்ல உணவைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். பச்சை பசேலென்று இருக்கும் இந்த காய்கறி எலும்புகளில் இருந்து கால்சியத்தை அழித்துவிடும், உணவு உடலுக்கு ஆரோக்கியதை கொடுக்கும் வேலையை மட்டுமல்ல, கெடுக்கும் வேலையையும் செய்யும்.



எலும்புகளை வலுவாக வைத்திருக்க, காய்கறிகளை உள்ளடக்கிய சரியான உணவைக் கொண்டிருப்பது முக்கியம். ஆனால் சில காய்கறிகள் எலும்பு பலவீனத்தையும் ஏற்படுத்தும் என்பது ஆச்சரியமான ஆனால் சத்தியமான உண்மை ஆகும். எலும்புகள் நமது உடலின் கட்டமைப்பின் முக்கிய அடிப்படையாகும், நமது உடலில் உள்ள தசைகளின் பங்களிப்பு எலும்புகளின் பங்களிப்புக்கு சமம். எனவே, எலும்புகளை வலுவாக வைத்திருக்க சரியான உணவைக் கடைப்பிடிப்பது அவசியம்.

எலும்புகளை வலுவாக வைத்திருக்க, பால், விதைகள், உலர் பழங்கள் மற்றும் மீன் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவை அனைத்தும் எலும்புகளுக்கு கால்சியத்தை வழங்கும் உணவுகள், ஆனால் சில வகையான உணவுகள் எலும்புகளில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | சுகர் லெவலை சூப்பரா கட்டுப்படுத்தும் கொய்யா இலை: இப்படி சாப்பிடுங்கள்

இந்த உணவுகளை நாம் அறியாமல், தினமும் இந்த உணவுகளை உட்கொண்டால், நமது எலும்புகள் வலுவிழந்துவிடும். இதன் காரணமாக, எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

குறிப்பாக ஏற்கனவே எலும்பு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அதனால் அவர்களின் நோயின் அறிகுறிகள் தீவிரமடைவதைத் தடுக்கலாம்.

எலும்பை பலவீனப்படுத்தும் கீரை

எலும்புகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக பலவீனமடையச் செய்யும் உணவுகளில் கீரையும் ஒன்று. கீரையில் கால்சியம் அதிகம் இருந்தாலும், அதனுடன் ஆக்சலேட்டும் இதில் உள்ளது. ஆக்சலேட் என்பது ஒரு சிறப்பு வகை கலவை ஆகும், இது கால்சியம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. கீரையில் உள்ள கால்சியம் எலும்புகளில் உறிஞ்சப்படுவதில்லை என்பதால் எலும்புகளுக்கு அது சென்று சேராது.

மேலும் படிக்க | கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்! சகல ரோக நிவாரணியாகவும் மாறும் இயற்கைக்கொடை

கீரையின் பக்க விளைவுகள்
கால்சியம் சத்து தரும் கீரையுடன் கூடிய உணவுகளை சாப்பிட்டால் அதன் முழு பலனையும் பெற முடியாது. உதாரணமாக, இரவு உணவில் கீரையை சாப்பிட்டுவிட்டு, இரவு தூங்கும் முன் பால் குடித்தால், பாலில் உள்ள கால்சியத்தை முழுமையாகப் பெற முடியாமல் போகலாம். கீரையில் உள்ள ஆக்சலேட் தான் இதற்கு காரணம் ஆகும்.

இருப்பினும், கீரை மிகவும் நன்மை பயக்கும் உணவாகும், இது நம் உடலுக்கு இரும்பு, வைட்டமின்கள் உட்பட பல வகையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. எனவே, கீரை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். ஆனால் அதனுடன் அதிக கால்சியம் உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். உதாரணமாக, நீங்கள் கீரை காய்கறிகளை சாப்பிடுகிறீர்கள் என்றால், 4 முதல் 5 மணி நேரம் கழித்து பால் குடித்தால் தான் அதன் பயன் கிடைக்கும்.


முருங்கை கீரை ...



தினமும் வெறும் வயிற்றில் முருங்கை கீரை கஷாயம்... உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்!
முருங்கை கீரையில், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் இதில் காணப்படுகின்றன. மேலும், இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொண்டால், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல முக்கிய சத்துக்கள் கிடைக்கும்.

தினமும் வெறும் வயிற்றில் முருங்கை கீரை கஷாயம்... உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்!

முருங்கை இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
முருங்கை இலையின் நன்மைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
முருங்கை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே ஆரோக்கிய நன்மை நிறைந்தது. நமது உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. அதோடு, மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், முருங்கை இலையில் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து காணப்படுகிறது. இதன் நன்மைகளை உணர்ந்த நம் முன்னோர்கள் இதை சமையலில் பயன்படுத்தி வந்தார்கள்.  முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், ரத்த சோகை முற்றிலும் நீங்கும். 

முருங்கை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. முருங்கை கீரையில், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் இதில் காணப்படுகின்றன. மேலும், இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொண்டால், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல முக்கிய சத்துக்கள் கிடைக்கும். இதுமட்டுமின்றி, முருங்கைக்காயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பல வகையான தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கும். முருங்கை இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எனவே முருங்கை இலையின் நன்மைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

Powered By
VDO.AI


TRENDING NOW

முருங்கை கீரையின் நன்மைகள்

எடை இழப்புக்கு உதவும் முருங்கை கீரை:

உடல் பருமனை குறைக்க வேண்டுமானால் (Weight Loss Tips) முருங்கை இலைகளை பயன்படுத்தலாம். குளோரோஜெனிக் அமிலம் மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் இதில் இருப்பதால், அதிகரித்த எடையைக் குறைக்க  பெரிதும் உதவும்.

நீரிழிவு நோய்க்கு உதவும் முருங்கை கீரை:

நீரிழிவு நோய்க்கு முருங்கை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முருங்கை காய்கள், பட்டை மற்றும் இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முருங்கை கீரை: 

இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த முருங்கை இலை கஷாயம் உதவியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இரத்த அழுத்தம் குறித்த இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், முருங்கைகாய் கஷாயம் அருந்திய பங்கேற்பாளர்களுக்கு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கீல்வாதம் - யூரிக் அமிலம் 

முருங்கை டீயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. இந்த கலவைகள் முழு உடலிலும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன, இதன் காரணமாக உடலில் உள்ள யூரிக் அமிலம் குறைக்கப்படுகிறது. இதனால் கீல்வாதத்தின் வலியும் குறையத் தொடங்குகிறது.

இதயத்திற்கு இதமாகும் முருங்கை கீரை:

மேலும் படிக்க | கல்லீரல் முதல் நுரையீரல் வரை... வியக்க வைக்கும் வெல்லத்தின் மருத்துவ குணங்கள்!

முருங்கை கீரையில் அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் காணப்படுகின்றன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. முருங்கை இலைகளை சாப்பிடுவதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

புண்களுக்கு மருந்தாகும் முருங்கை கீரை:

முருங்கை இலைகளை சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் குறையும். இது அல்சர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக அல்சர் அபாயத்தைத் தடுக்க இது உதவியாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை:

முருங்கை இலைகளில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி பல தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும்.


சாணக்கிய நீதி...

நம் வாழ்வில் சில விஷயங்களை கடைப்பிடித்தால் மட்டுமே வேலையில் நாம் வெற்றி பெற முடியும் என்கிறார் சாணக்கியர். ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைக் கூறியுள்ளார். இதை கடைபிடிப்பதன் மூலம் ஒருவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். சாணக்கிய நீதி என்ன வேலை எப்போது செய்ய வேண்டும் அல்லது எத்தனை பேருடன் என்ன வேலை செய்ய வேண்டும் என்று என்பது பற்றி குறிப்பிட்டுள்ளார். இவற்றை நம் வாழ்வில் கடைப்பிடித்தால் வேலையில் எளிதில் வெற்றி பெற முடியும். நான்கு பேருடன் பயணம் சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் எப்போதும் 4 பேருடன் பயணம் செய்ய வேண்டும். நீங்கள் தனியாக பயணம் செய்தால், நீங்கள் அதிக ஆபத்துக்களை எடுக்க வேண்டியிருக்கும். சொல்லப்போனால் எந்த ஒரு பிரச்சனையையும் இரண்டு பேரால் சரியாக சமாளிக்க முடியாது. எனவே பயணத்தில் குறைந்தது 4 பேர் இருந்தால், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இரண்டு பேராக மட்டுமே படிக்க வேண்டும் சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் 2 பேருடன் ஒன்றாக அமர்ந்து படிக்க வேண்டும். ஏனெனில், ஒரே இடத்தில் பலர் அமர்ந்து படிப்பதால், கவனம் சிதறும். இந்த சூழ்நிலையில் உங்களால் சரியாக படிக்க முடியாது. அதே சமயம், இருவர் மட்டும் சேர்ந்து படிக்கும் போது, ஏதேனும் ஒரு பாடத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளலாம். ஒருவர் மட்டுமே தவம் செய்ய வேண்டும் ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, தவம் எப்போதும் தனியாக மட்டுமே செய்யப்பட வேண்டும். ஏனெனில், நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து செய்தால், உங்கள் கவனம் சிதறலாம். எனவே எப்பொழுதும் தனியாகவே தவம் செய்ய வேண்டும். அதன்மூலம் தவத்தை சரியாக முடியும், அப்போதுதான் உங்கள் இலக்கை அடைய முடியும். குறைந்தது 3 நபர்களுடன் பொழுதுபோக்க செல்ல வேண்டும் நீங்கள் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வுக்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் குறைந்தது 3 பேருடன் செல்ல வேண்டும். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பொழுதுபோக்கிற்கு 3 பேருக்கு மேல் இருக்க வேண்டும் என்கிறார். 3 பேருக்கும் குறைவான நபர்களுடன் பொழுதுபோக்கிற்கு வெளியே சென்றால், அதில் முழு இன்பம் கிடைக்காது என்று சாணக்கியர் கூறுகிறார். போருக்கு செல்லும் போது கூட்டமாக செல்ல வேண்டும் ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் ஒருபோதும் அதீத தன்னம்பிக்கையில் தனியாகப் போருக்குச் செல்லக்கூடாது. ஏனெனில், போரில், உங்கள் பக்கம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது முக்கியம். உங்களுடன் அதிக மக்கள் துணையாக இருக்கும் போது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே போருக்குச் செல்லும்போது, உங்களுடன் அதிக உதவியாளர்களை மற்றும் நண்பர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

கார்த்திகை தீபம் எதனால் கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. சொல்லப்போனால் தீபாவளியை விட கார்த்திகை தீப பண்டிகையின் போது வீடுகளானது பல மடங்கு விளங்குகளால் அழகாக அலங்கரிக்கப்படுகிறது.  சரி, இத்தனை ஆண்டுகளாக கார்த்திகை தீப பண்டிகையை கொண்டாடி வருகிறீர்களே, இந்த பண்டிகை எதனால் கொண்டாடப்படுகிறது, அதற்கு பின்னிருக்கும் உண்மையான கதை என்னவென்று உங்களுக்கு தெயுமா? கார்த்திகை மாதமானது முருகப்பெருமான் பிறந்த மாதம் என்பதால், இந்த மாதம் இன்னமும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. இப்போது கார்த்திகை தீப பண்டிகையின் பின்னணி கதையைக் காண்போம். விஷ்ணு, பிரம்மா சண்டை ஒருமுறை விஷ்ணு, பிரம்மா இருவரும் யார் உயர்ந்தவர் என்ற ஒரு விவாதத்தில் ஈடுபட்டு, சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இப்படி பிரம்மாவும், விஷ்ணுவும் பயங்கரமாக சண்டை போடுவதால், மற்ற தேவர்கள் கவலையடைந்து சிவபெருமானிடம் சென்று, நடந்ததைக் கூறி, இந்த சண்டையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் பிரம்மா மற்றும் விஷ்ணுவின் முன் தோன்றி, ஒரு பெரிய நெருப்புத்தூண் (ஜோதிர்லிங்கம்) வடிவத்தை எடுத்து, இந்த நெருப்புத் தூணின் தொடக்கத்தையும் முடிவையும் கண்டுபிடிக்குமாறு கூறினார். அதில் யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ, அவரே உயர்ந்தவராக கருதப்படுவர் என்றும் சிவன் கூறினார். பிரம்மாவும், விஷ்ணுவும் அதை ஒப்புக் கொண்டனர்.  அப்போது விஷ்ணு பன்றியாக மாறி நெருப்புத் தூணின் முடிவைக் கண்டுபிடிக்க பூமியை ஆழமாக தோண்டினார். ஆனால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின் சிவனிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். அதே வேளையில் நெருப்புத் தூணின் தொடக்கத்தைக் கண்டறிய பிரம்மா மேல் நோக்கி அன்ன வடிவில் மேலே பறந்து சென்றார். ஆனால் அவராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சிவனிடம் வந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறினார். சிவபெருமான் பிரம்மா பொய் சொல்வதை அறிந்து, சாபமிட்டார். இதன் மூலம் சிவன் தான் உயர்ந்தவர் என்றும், மற்ற இருவரும் தன்னை விட தாழ்ந்தவர் என்றும் நிரூபித்தார். அப்போது தான் திருவண்ணாமலை பகுதியில் மலை வடிவில் சிவன் காட்சியளித்தார். திருவண்ணாமலை என்பதற்கு புனிதமான நெருப்பு மலை என்று பொருள். இந்த நிகழ்வின் நினைவாகவே திருவண்ணாமலையில் ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டது. மேலும் கார்த்திகை தீபத்தன்று இந்த திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதாக கூறப்படுகிறது. மற்றொரு கதை கார்த்திகை தீபம் குறித்து கூறப்படும் மற்றொரு கதை தான் இது. இதில் கார்த்திகை தீபம் பண்டிகையானது சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகனான முருகப்பெருமானுடன் தொடர்புடையதாக கூறுப்படுகிறது. சிவபெருமானின் மூன்றாவது கண்ணில் இருந்து தோன்றிய 6 தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமான் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த 6 தீப்பொறிகளும் சரவண பொய்கை ஏரியில் 6 கார்த்திகை பெண்களால் பராமரிக்கப்பட்டு 6 குழந்தையாக இருந்தது. கார்த்திகை தீப நாளில் பார்வதி தேவி இந்த 6 குழந்தைகளையும் ஒரு குழந்தையாக இணைத்தார். இதனாலேயே முருகப் பெருமானுக்கு ஆறுமுகன், ஆறுமுகம், கார்த்திகேயன் என்ற வந்தது. 

Benefits of Mushroom and Broccoli


காய்கறிகள், பழங்களைவிட அதிக புரோட்டீன் நிறைந்த உணவு எது தெரியுமா? கோதுமையைவிட, 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்த உணவு எது தெரியுமா? எலும்புகளை வலுவுடன் வைத்து கொள்ள உதவும் உணவு எது தெரியுமா?

எலும்புகளை பலப்படுத்தக்கூடியதில் பிரதானமானது புரோக்கோலி.. முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சேர்ந்தது இந்த ப்ரோக்கோலி.. ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன..

Do you know Excellent Benefits of Mushroom and Broccoli is the Best food for Bone Strength 
எலும்புகள்: ஒரு கப் ப்ரோக்கோலியில், ஏ, பி 6, பி 2, ஈ வைட்டமின்களும், பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. அதிலும் ஏகப்பட்ட கால்சியம் சத்து நிறைந்தது.. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகள் வலுப்படும். இதிலிருக்கும் வைட்டமின் கே எலும்பு உறுதிக்கு உதவும்.

செம்பருத்தி டீ சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் | Sembaruthi Health Benefits in Tamil | Hibiscus Tea
புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் C சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதால், சருமத்துக்குப் பாதுகாப்பைத் தருகிறது.. கால்சியம் அதிகமாக உள்ளதால், பல், எலும்புகளுக்கு வலு தருகிறது.. இதுபோலவே, எலும்புகளுக்கு வலுவை தரக்கூடியது காளான்.. நோய் எதிர்ப்பு நிறைந்த இந்த காளான், உடல் எடை குறைப்போருக்கு சிறந்த உணவாக உள்ளது.. மட்டனை போலவே ருசியையும் தரக்கூடியது.

புரோட்டீன்கள்: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பிரதானமாக உணவில் சேர்த்து கொள்வது காளான்களைதான்.. புரோட்டீன்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்துகள் குறைவான அளவிலும் இருப்பதுதான் காளானுக்கு உணவில் முக்கியத்துவம் கொடுக்க காரணமாகின்றன. காளானில் நிறைய புரோட்டீன்கள் உள்ளதாம்..

குறைந்த அளவு கலோரிகள், குறைந்த அளவு கொழுப்புகளை கொண்டவை என்பதால், கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.. லேசான உடற்பயிற்சியுடன், காளானையும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, உடல் எடையில் மாற்றம் தெரியும் என்கிறார்கள். காளான்களில் சர்க்கரை இல்லை என்பதால்தான், நீரிழிவு நோயாளிகளுக்கும் காளான் உதவுகிறது.

பாதுகாப்பு: உடலுறுப்புகளுக்கு பாதுகாப்பையும், பலத்தையும் தரக்கூடிய பல உணவுகள் இருந்தாலும், எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் காளான்களுக்கு பெரும்பங்கு உண்டு..

பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருப்பதே இந்த காளான்கள்தான். முக்கியமாக, இதயத்திற்கு நன்மை தரக்கூடியது இந்த காளான்கள்.. எலும்புகள் வலுப்படுவதுடன், புதிய எலும்புகளை உருவாக்கவும் காளான் உதவுகிறது..


Do you know Excellent Benefits of Mushroom and Broccoli is the Best food for Bone Strength 
அடிக்கடி சமையலில் காளானை சமைத்து சாப்பிட்டு வந்தால், எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் நெருங்காது. எலும்பு தொடர்பான நோய்கள் எலும்புப்புரை, எலும்பு வலி, எலும்பு சிதைவு போன்றவற்றைத் தடுக்க உதவக்கூடியது என்கின்றன ஆய்வுகள்.

காளான் பிரியாணி: ஆனால், சாப்பிடத்தகுந்த காளான்கள் என்றாலும்கூட, நன்றாக சமைத்த பிறகே சாப்பிட வேண்டும். அந்தவகையில், மட்டன் சுவையுடன், இந்த காளானில் சுவையான பிரியாணி செய்யலாம்.. குக்கரை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி, பட்டை லவங்கம், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

இதனுடன், புதினா கொத்தமல்லி, தயிர் சேர்த்து கிளறி, அத்துடன், காளானையும் சேர்க்க வேண்டம்.. இப்போது, 20 நிமிடங்களுக்கு முன்பு கழுவி ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை அதில் போட்டு, அளவான தண்ணீர் , உப்பு சேர்த்து வேகவைத்து இறக்கிவிட வேண்டும்.


தட்டை பயிறு


தட்டை பயிறு.. விறுவிறுனு எடை குறையணுமா? இந்த 2 பயிறு போதுமே.. இயற்கையின் வரப்பிரசாதம் "தட்டாம்பயிறு"
உடல் எடையை குறைக்கவும், சரும ஆரோக்கியம் காக்கவும், பலவகையான கீரைகள், காய்கறிகள், பயிறுகள் நமக்கு உதவுகின்றன.. எனினும், இவைகளில் பிரதானமாக பயன்படும் 2 வகையான பயிறுகளை பற்றி பார்ப்போம்.

உடலிலுள்ள கெட்ட கொழுப்பை அகற்றுவததில், இந்த தட்டைப்பயிறுக்கு பிரதான பங்கு உள்ளது.. காரணம், இதில் நார்ச்சத்து மிக அதிகம்.. அசைவத்தில் உள்ளதுபோலவே, இந்த தட்டைப்பயிறும், நிறைய புரோட்டீன்கள் உள்ளன. அத்துடன், நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து, போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன..

Do you know Health Benefits of Green Gram and Thattam Payiru is the Best Food for Weight Loss
கழிவுகள்: இதனால், நச்சுக்களும், கழிவுகளும் வெளியேறி, குடல் சுத்தமாகிறது.. கொழுப்பே இல்லாத அந்த பயிறை, வேகவைத்து, மிளகு தூள் சாப்பிட்டாலே போதும், உடல் எடை குறையுமாம்.

அதேபோல, ஆண்டி ஆக்சிடென்ட் நிறைய உள்ள இந்த பயிறு, சருமத்தை பாதுகாக்கிறது.. தலைமுடியையும் உதிராமல் பாதுகாக்கிறது.. இந்த பயிறின் இலைகள், புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் என்பதால், தட்டைப்பயறை பச்சையாக பயன்படுத்துவதை போலவே, தட்டைப்பயறு இலையையும் சமைத்து சாப்பிடலாம்.

தட்டை பயிறு: அதேபோல, இந்த தட்டைப்பயறை காய வைத்து தூள் செய்து வைத்து கொள்ள வேண்டும். தினமும் இதில் சிறிதளவு பொடியை, வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், வயிற்று புண்கள், வாய்ப்புண்கள் ஆறும்..

எப்போதுமே குறைந்தது 7 மணி நேரமாவது, இந்த தட்டைப்பயிறை ஊறவைக்க வேண்டும்.. குழம்பில் சேர்ப்பதைவிட, சுண்டலாகவோ, மசித்து சாப்பிட்டால், கூடதல் நன்மை தரும். ஆனால், எந்த ரூபத்தில் சாப்பிட்டாலும், இது வாயு உண்டாக்கிவிடும் பயிறு என்பதால், சிறிது மிளகு, சீரகம் சேர்த்து பயன்படுத்த வேண்டுமாம்.

உடல் எடை குறைப்பதற்கு பிரதான தேவையாக இருப்பது புரோட்டீன்கள்.. அந்த புரதச்சத்து, பச்சைப்பயறில் நிறைய உள்ளத.. உடல் எடை இழப்புக்கு என்னென்ன தேவைப்படுமோ, அத்தனையும் நிறைந்துள்ள பயிறுதான் பச்சை பயிறு..

இதனால் குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்து மெட்டபாலிசத்தை சீராக்குகிறது. செரிமானத்தை தாமதப்படுத்தி பசியைக் கட்டுப்படுத்துகிறது. பச்சை பயிறு சாப்படுவதால், நீண்ட நேரம் வரையிலும் வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும்.

பச்சை பயிறு: இதே பச்சை பயிறை, அடுத்த வேளை சாப்பிடும்போது, உணவின் அளவு இயல்பாகவே குறைந்துவிடும்.. இதனால், கலோரிகள் குறையும்போது இயல்பாகவே உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.


அதேபோல, பச்சை பயிறை முளை கட்டி வைத்து கொண்டு, குறைவான மசாலா சேர்த்து கிரேபி போல செய்யலாம். இதனை சப்பாத்திக்கு வைத்து சாப்பிடும்போது, உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் முழுவதுமே கிடைத்துவிடும்.

 அதாவது,வேக வைத்த முட்டையின் வெள்ளை கருவை காலையில் சாப்பிடுவாராம். அதேபோல் இரவு 8 மணிக்கு மேல் எதையும் சாப்பிட கூடாதாம். வெள்ளை சர்க்கரை, அரிசி, உப்பு என எதையுமே சாப்பிட மாட்டாராம்.

மதிய நேரத்தில் மதியம் அரை கப் சாதத்துடன், பச்சை காய்கறி, கீரை சேர்த்து சாப்பிடுவாராம். அல்லது ராகி சாதம் அல்லது ராகி கஞ்சி குடிப்பாராம். இதைத்தவிர, பச்சை பயிறு, சோளம், திணைகள், விதைகளை எடுத்துக்கொண்டாராம்.. ஆனால், இதில் அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தது பச்சை பயிறுதானாம்.. உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியதாம்

வடஇந்தியா உணவு: பெரும்பாலும், புரோட்டீன் நிறைந்த பருப்புகள் உடலுக்கு நன்மைகளை தருகின்றன என்றாலும், இரவில் பருப்பு உணவுகள் அதாவது புரோட்டின் உணவுகளாக எடுத்துக்கொள்ளும்போது, உடல் எடை விரைவில் குறைய நிறைய வாய்ப்புள்ளதாம்.. அதனால்தான், வட இந்தியாவில், "தால் ஷாவான்" என்று சொல்லப்படும் உணவு அதிகப்படியான டயட் ஃபோட்டில் இடம் பெற்றிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.


Friday, 24 November 2023

கிராம்பு

 உடல்நலம் உங்க கல்லீரல் ஆரோக்கியமா இருக்கவும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் 'இத' வெறும் வயித்துல சாப்பிட்டா போதுமாம்!  அஜீரணத்தை போக்க ஒரு கிராம்பை மென்று சாப்பிடும்படி, உங்கள் பாட்டி அல்லது அம்மா எப்போதாவது உங்களிடம் சொல்லி இருக்கிறார்களா? இந்தியில் 'லாங்' என்று குறிப்பிடப்படும், கிராம்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசாலா பொருள். இது பல ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது. கிராம்பு உங்கள் உணவில் சுவை மற்றும் நறுமணத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. எண்ணெய் முதல் உலர்ந்த மொட்டுகள் வரை, கிராம்பு மருத்துவ மற்றும் ஆரோக்கிய நோக்கங்களுக்காக பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. அளவில் சிறியதாக இருக்கும் இந்த மசாலாவை வெறும் வயிற்றில் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். வெறும் வயிற்றில் கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.  செரிமான பிரச்சனைகளுக்கு எவ்வாறு உதவுகிறது? வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட கிராம்பு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது. நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், கிராம்பு செரிமானத்தை மேம்படுத்த உதவுவதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் வீக்கத்தின் பிரச்சினைகளைப் போக்குகிறது. குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுடன் இது உட்செலுத்தப்பட்டுள்ளது. இதனால் மேம்பட்ட செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது. உணவு விஷத்திற்கு காரணமான ஈ.கோலி என்ற பாக்டீரியாவை அகற்றும் திறனுக்காகவும் கிராம்பு அங்கீகரிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.  கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கிராம்பில் யூஜெனால் உள்ளது, இது உங்கள் கல்லீரலுக்கு நன்மை பயக்கும் கலவையாக கருதப்படுகிறது. ஜர்னல் ஆஃப் மெடிசினல் ஃபுட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கிராம்பு எண்ணெய் அல்லது யூஜெனோல் கொண்ட கொழுப்பு கல்லீரல் நோய் கலவைகளை உண்ணும் எலிகள் மேம்பட்ட கல்லீரல் செயல்பாட்டை கொண்டிருந்தன. அத்துடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைத்ததாகவும் கூறப்பட்டது. உலர்ந்த கிராம்பு மொட்டுகள் புதிய செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இது கல்லீரல் நச்சுத்தன்மைக்கு உதவுகின்றன. மேலும் தைமால் மற்றும் யூஜெனால் போன்ற தனிமங்கள் மூலம் உங்கள் கல்லீரலுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. ADVERTISEMENT இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது கிராம்புகளில் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் கலவைகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சிறிதளவு கிராம்பு பொடியை எடுத்துக் கொண்டால், அவர்கள் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும். இருப்பினும், உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டிய சரியான அளவைத் தெரிந்துகொள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். குமட்டலை குறைக்கிறது குமட்டல் மற்றும் வாந்தியைக் குறைக்க கிராம்பு பெரிதும் உதவும். உண்மையில், கிராம்பு அதன் சிகிச்சை பண்புகள் காரணமாக பல நூற்றாண்டுகளாக நாட்டுப்புற மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. பயோகெமிக்கல்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் கூட, குமட்டலைச் சமாளிக்க கிராம்பு உங்களுக்கு உதவும் என்பதைக் கண்டறிந்துள்ளது.  நிபுணரின் கூற்றுப்படி, கிராம்பை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது அதன் ஆண்டிசெப்டிக் குணங்களால் நன்மை பயக்கும். கிராம்பு உமிழ்நீருடன் கலக்கும்போது சில நொதிகள் செயல்படுத்தப்படுகின்றன. இது குமட்டலுடன் தொடர்புடைய அறிகுறிகளைப் போக்க உதவுகிறது. MOST READ:உங்க இதயம் செயலிழக்காமல் இருக்க... மாரடைப்பு வராமல் தடுக்க... இந்த விஷயங்கள மறக்காம ஃபாலோ பண்ணுங்க! பல் ஆரோக்கியத்திற்கு நல்லது கிராம்பு அடிக்கடி பற்பசை மற்றும் மவுத்வாஷ் ஆகியவற்றில் சேர்க்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை பல்வலிக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. வலி நிவாரணம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவை வாய்வழி அழற்சி, பிளேக் மற்றும் ஈறு அழற்சியைக் குறைப்பதற்கும் மற்றும் வாய்வழி அழற்சியை எதிர்த்துப் போராடுவதற்கும் பங்களிக்கின்றன. அடவல்
 மூட்டு வலியை சமாளிக்க உதவுகிறது நீங்காத மூட்டு வலியால் நீங்கள் தொடர்ந்து அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் கிராம்புகளை முயற்சிக்கவும். கிராம்பில் மாங்கனீசு மற்றும் ஃபிளாவனாய்டுகளில் நிறைந்துள்ளன. அவை எலும்பு அடர்த்தியைப் பாதுகாக்க பங்களிக்கின்றன. இந்த கலவைகள் எலும்பு திசுக்களை சரிசெய்வதற்கும் உதவுகின்றன. இது மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியத்தைத் தணிக்க அல்லது தடுக்க உதவுகிறது. கூடுதலாக, அவை வயதானவர்களின் தசைச் சிதைவை மெதுவாக்க உதவுகின்றன. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது ஒவ்வொரு நாளும் 100 முடி உதிர்வது இயல்பானது என்றாலும், அதை விட அதிகமாக முடி உதிர்வது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். நீங்கள் அதிகளவு முடி உதிர்வை சந்தித்திருந்தால் அல்லது உங்கள் தலைமுடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ப்பதற்கான வழிகளைத் தேடுகிறீர்களானால், உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் கிராம்பை சேர்க்க வேண்டும். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் அப்ளைடு ஃபார்மாசூட்டிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கிராம்பு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது கிராம்பு உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும், இது இன்றைய காலகட்டத்தில் செய்ய வேண்டியது அவசியம். கிராம்புகளை தவறாமல் உட்கொள்வதால், காய்ச்சல், சளி, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் பிரச்சினைகள் மற்றும் வைரஸ் தொற்றுகள் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். உணவு மற்றும் மருந்து பகுப்பாய்வு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கிராம்பு சாறுகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதில் ஆன்டி-வைரல் பண்புகள் மற்றும் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையும் உள்ளது. இது இரத்தத்தில் நச்சுத்தன்மையின் அளவைக் குறைக்கிறது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கிராம்பு உங்கள் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளை அளிக்கும் அதே வேளையில், ஒவ்வொருவரின் உடலும் வெவ்வேறு விஷயங்களுக்கு வித்தியாசமாக பதிலளிக்கலாம். கிராம்பினால் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பதை அறிய, உங்கள் மருத்துவரை அணுகுவது எப்போதும் நல்லது. 

Tuesday, 21 November 2023

நம் வாழ்க்கை இப்படியே சென்று விடுமா?


எதற்காகப் பிறந்தோம் எதனால் இந்த பூமிக்கு வந்தோம். நம் வாழ்க்கை இப்படியே சென்றுவிடுமா?  இறப்புக்குப் பின்னால் நம்முடைய நிலை என்ன? என்று, நம் பிறப்பிற்கான காரணம் என்ன நம் வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன என்று? அனுதினமும் சிந்தித்துக்கொண்டே இருப்பவர்கள் நீங்கள், உங்கள் கேள்விக்கான பதிலை இதில் பார்ப்போம். 

ஒரு ஆசிரமத்தில் ஒரு குரு வசித்து வந்தார். அங்கு வழிப்போக்கனாக வந்த ஒருவன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். "பிறப்பு இறப்பு என்றால் என்ன? நாம் இந்த வாழ்க்கைக்கு எங்கிருந்து வந்தோம்.  இறப்புக்குப் பின்னால் நாம் எங்குச் செல்வோம்?" என்று கேட்டான்.

உடனே, குரு சிரித்துக்கொண்டே ஒரு புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டு,  கேள்வி கேட்டவனிடம் அதை பக்கத்து அறையிலிருந்து எடுத்து வரச் சொன்னார். அவனும் அந்த அறைக்குச் சென்று பார்த்து மீண்டும் குருவிடம் வந்து, “அந்த அறை முழுவதும் இருளாக இருக்கிறது. எப்படி அந்த புத்தகத்தைத் தேடுவது?” என்று கேட்டான்.

குரு மீண்டும் சிரித்துக்கொண்டே கையில் ஒரு மெழுகுவர்த்தியை அவன் கையில் கொடுத்து அதில் ஒளியேற்றி “இதைக் கொண்டு தேடு” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.  மெழுகுவர்த்தியுடன் சென்ற அந்த வழிப்போக்கன் குரு சொன்ன புத்தகத்தை குருவிடம் கொண்டுவந்து கொடுத்தான்.

குரு அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு அந்த மெழுகுவர்த்தியை  ஊதியணைத்தார். வழிப்போக்கனுக்குப்  பயங்கர கோபம் வந்தது,
‘நான் என்ன கேள்வி கேட்டேன், இந்த குரு அதை விட்டு வேறு வேலைகள் எல்லாம் செய்யச் சொல்கிறார்’ என்று முணுமுணுத்து, அதனை குருவிடமும் கேட்டுவிட்டான்.

குரு சாந்தமாக அந்த வழிப்போக்கனிடம் பதில் உரைக்கிறார். “இந்த மெழுகுவர்த்தியில் ஒளி எங்கிருந்து வந்தது?” என்று அவனிடம் கேட்டார்.

அதற்கு அவன் “எனக்குத் தெரியாது” என்றான்.

“சரி நான் ஊதி அணைத்த பின்பு இந்த ஒளி எங்குச் சென்றது?” என்று மீண்டும் அவனிடம் கேட்டார்.

அதற்கும் அவன் தெரியாது என்று கூறினான்
அப்போதுதான் குரு அவனிடம் தெளிவாகக் கூறினார், “இந்த ஒளி எங்கிருந்து வந்தது, எங்குச் சென்றது என்பது நமக்கு முக்கியம் இல்லை. ஆனால், இது ஒளி தந்த காலங்களில் நாம் தேடிய ஒரு பொருளைக் கண்டறிய நம்மால் முடிந்தது. அது, நமக்கு ஒளி தந்த நேரத்தில் பயனுள்ளதாக இருந்தது இல்லையா? அதேபோல்தான் நம் வாழ்க்கையும். நீ எங்கிருந்து வந்தாய், இறப்புக்குப் பின்பு நீ எங்குச் செல்வாய் என்பதைப் பற்றி எண்ணுவது முக்கியமில்லை. இந்த வாழ்க்கையில் உனக்கான காரணம் என்ன, உனக்கான பயன் என்ன என்று அறிந்து அதைத் தேடு” என்றார்.

குரு சொன்னதைப்போல், நம் வாழ்க்கை இப்படி ஏன் இருக்கிறது என்று எண்ணுவதைவிட, நம் வாழ்க்கையில் நமக்காக என்ன இருக்கிறது என்று எண்ணித் தேட ஆரம்பித்தாலே உங்கள் வாழ்க்கை பயனுள்ளதாக மாறிவிடும். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த தருணம் வந்தால் நினைவில் கொள்ளுங்கள்... இந்த வரிகள் உங்களுக்கு மீண்டும் நம்பிக்கையைத் தரும்.

‘தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்’.

‘தேடித்தேடிக் கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை’.



Monday, 20 November 2023

பெற்றோர் குழந்தைகளை எப்படி கண்டிக்க வேண்டும்?


குழந்தையின் நடத்தை நமக்கு மகிழ்ச்சியை தராத போதும் அந்நடத்தைகளை வெளிக்காண்பிக்கக்கூடாது என குழந்தைகளை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
குழந்தைகளின் நடத்தைகளில் தவறான, கெட்ட நடத்தை எவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஓர் குழந்தை தனக்கு பிடித்தமான ஒன்றை கேட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருப்பது, படிக்காமல் எப்போதும் விளையாடிக்கொண்டே இருப்பது, ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் அதிகமாக உண்பது ஆகியவையெல்லாம் கெட்ட நடத்தைகள் அல்ல. இவையெல்லாம் குழந்தைகளுக்கு பிடித்தவை. அதனால் அவைகளை குழந்தைகள் அதிகமாக செல்கின்றன. இவற்றைக் குறைக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமே தவிர கண்டிப்பு தேவையில்லை. பிறர் பொருளை திருடி வைத்துக் கொள்வது, பிற குழந்தைகளை அடிப்பது, கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்றவைகள் கெட்ட நடத்தைகளின் வகையில் அடங்கும். இக்கெட்ட நடத்தைகளை குழந்தை எங்கேயிருந்து பழகிக் கொண்டது? பெற்றோர்கள், குழந்தை வளரும் சூழ்நிலையில் உள்ள மற்றவர்களிடமிருந்தே குழந்தை இந்நடத்தைகளை கற்றுக் கொள்கிறது. இவைகளை கண்டித்து திருத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.
நடத்தைகளை குறைக்க உளவியல் இரண்டு விஷயங்கள் உண்டு. முதலாவது நடத்தைக்குறைப்பிகள் (Negative Reinforcement) இரண்டாவது தண்டனை, முகத்தை சுழிப்பது, பிடிக்கவில்லை என்பதைக் காட்டும் முகபாவனை, திட்டுதல், விலகிச் செல்லுதல், எந்த எதிர்வினையும் புரியாமல் இருத்தல், உன் நடத்தை எனக்கு பிடிக்க வில்லை என நேரிடையாகக் கூறுதல் ஆகியவை நடத்தை குறைப்பிகள் ஆகும். அடித்தல், கிள்ளுதல், தள்ளி விடுதல், சூடு வைத்தல் போன்றவை தண்டனை வகையில் அடங்கும். நடத்தை குறைப்பிகளை பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு உடல்ரீதியான தீங்கு ஏதும் ஏற்படாது. ஆனால் தண்டனையைப் பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு வலி போன்ற உடல் தீங்குகள் ஏற்படும். மேலும் இதுவரை நடத்தப்பட்டுள்ள உளவியல் ஆய்வுகள் அனைத்துமெ தண்டனையைப் பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை, அதனால் கெட்ட நடத்தைகள் குறைவதே இல்லை என்றே கூறுகின்றன.
குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இவ்வாய்வு முடிவுகள் பொருந்தும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற ரீதியில் தண்டனையளிக்கும் நாடுகளில் கூட குற்ற எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறதே தவிர குறைவதில்லை. குழந்தைகள் படிக்கவில்லை என்ற காரணத்திற்காக அடித்தல், சூடுபோடுதல் போன்ற தண்டனைகளை அளிப்பது நம் கலாச்சாரத்தில் சாதாரணாமாக நடப்பது. படிப்பது போன்ற திறமைகளை கற்றுக் கொள்ளும் விஷயத்தில் தண்டனை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். அடிவாங்கிய குழந்தைக்கு பாடத்தின் மீது வெறுப்பு ஏற்படுமே தவிர, அதனை விரைவில் சரியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படாது.
தண்டனை கொடுக்கக்கூடாது என்ற நிலையில் எதிர்மறை நடத்தைகளை குறைக்க நடத்தைக் குறைப்புகளே சிறந்த வழி. அத்தகைய நடத்தை குறைப்புகளில் பாராட்டாமல் விடுதல், வாய் திறந்து நேரிடையாக நீ செய்வது தவறு என கூறுவது ஆகிய இரண்டும்தான் உளவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இவ்விரண்டுமே மிகச் சிறந்த முறையில் கெட்ட நடத்தைகளை குறைக்கின்றன என்பது உளவியல் ஆய்வு முடிவு எதிர்மறை நடத்தைகளை மேற்கொள்ள நடத்தைக் குறைப்பிகளைக் கொண்டு குறைக்க முயற்சி செய்யும் அதே சமயத்தில் கெட்ட நடத்தைகளின் விளைவுகளை சரியான அறிவுரையாக, விபரமாக குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். பெரியவர்கள் சொல்வதை மிகச் சரியாக புரிந்து கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு உண்டு. அதே சமயத்தில் குழந்தையின் நல்ல நடத்தைகளை பரிசு, பாராட்டு, அன்பு, அரவனைப்பு, ஆகிய வலிமையூட்டிகளை பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து அவ்வாறு ஊக்குவித்துக்கொண்டே வந்தால், நல்ல நடத்தைகள் அதிகமாகி கெட்ட நடத்தைகளுக்கு நேரமில்லாது அவை தானாகவே குறைந்து விடும்.

Parenting Tips


Parenting Tips | 
தவறு செய்யும் குழந்தைகளிடம் மிகுந்த கோபத்தை வெளிக்காட்டினால், அவர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கக் கூடும். அதாவது, பெற்றோர் தன்னை அடிக்கும் நிலையில், தான் ஏன் மற்றவர்களை அடிக்கக் கூடாது என்ற குழப்பமான மனநிலை உண்டாகும்.
குழந்தைகளை நல்ல பண்போடும், ஒழுக்கத்தோடும் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. இதற்காகத் தான் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்கின்றனர். சில சமயம், தண்டிக்கவும் செய்கின்றனர். ஆனால், குழந்தைகள் கள்ளம், கபடமற்ற பிஞ்சு மனம் கொண்டவர்கள். அவர்கள் தவறு செய்யும் நேரங்களில் திட்டுவது, ஆவேசமாக மிரட்டுவது போன்ற பாணிகளை கையாளக் கூடாது. குழந்தைகள் மனதில் வன்மம், வெறுப்பு உள்ளிட்டவை உண்டாக இது காரணமாகும்
பொறுமை அவசியம்: தவறு செய்யும் குழந்தைகளிடம் மிகுந்த கோபத்தை வெளிக்காட்டினால், அவர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கக் கூடும். அதாவது, பெற்றோர் தன்னை அடிக்கும் நிலையில், தான் ஏன் மற்றவர்களை அடிக்கக் கூடாது என்ற குழப்பமான மனநிலை உண்டாகும். அதே சமயம், எந்த இடத்தில் குழந்தை தவறாக நடந்து கொண்டதோ, அங்கிருந்து அழைத்து வந்து, தன் தவறை தானே சிந்திப்பதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். மாறாக, உங்களுடைய கோபத்தையும், உணர்ச்சிகளையும் கொட்டக் கூடாது.
தீர்வுகளை கண்டறிய உதவுங்கள்: குழந்தைகளிடம் ஆரோக்கியமான முறையில் பேசுவது மிக முக்கியம். குறிப்பாக, நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் குழந்தைகள் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும்
மனதினுள் சுய வேலி ஒன்றை உருவாக்கும். நல்லது, கெட்டது இடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வைக்கும்

யதார்த்தம் என்னவென்று புரிய வைப்பது: எது யதார்த்தம், எது இயல்புக்கு மாறானது என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். சில தவறுகளை செய்வதினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். சத்தான உணவுகளை குழந்தை சாப்பிட மறுக்கும் நாட்களில் அவர்களுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்களை கொடுக்கக் கூடாது

குழந்தைகளின் உணர்வுகளை குறைவாக மதிப்பிட வேண்டாம்: உங்கள் குழந்தை வயதில் சிறியவராக இருக்கலாம். ஆனால், பெரியவர்களைப் போல அவர்களுக்கும் தங்களுடைய உணர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவர்களின் உணர்வுகளை புறக்கணித்தால், நாளடைவில் அது வன்மமாக மாறும்.

மதிப்புகளை உணர கற்றுக் கொடுங்கள்: குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கில் பெற்றோர் கடுமையாக உழைக்கின்றனர். அதே சமயம், ஒவ்வொரு விஷயத்தின் மதிப்புகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். சிறப்பினும், சிறப்பானதை தேர்வு செய்ய சொல்லிக் கொடுக்கவும்.

Thursday, 16 November 2023

காற்று தத்துவம்! சிறுகதை


காற்று தத்துவம்!
சிறுகதை


ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். பணத்தினால் பெறக்கூடிய எல்லா சுக - சௌகரியங்களும் அவனுக்கு இருந்தும் மகிழ்ச்சியின்றி இருந்தான். நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேடி, ஒரு ஞானியிடம் வந்தான்.

அவரிடம் தன் குறையைச் சொன்னான்.  “ஏராளமான செல்வம் படைத்த நீங்கள் எதை வேண்டுமானா லும் வாங்கலாம்; எங்கு வேண்டுமானாலும் போகலாம். அப்படியிருக்க என்ன பிரச்னை?” என்று ஞானி கேட்டார்.

“எனக்கு, உடனடியாக மகிழ்ச்சி தேவை. அதை வாங்க முடியுமா?” என்றான் செல்வந்தன்.

ஞானி அவனை, கால்பந்து விளையாட்டு பார்க்க அழைத்துச் சென்றார். மைதானத்தை அடைந்து பந்தயத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர். இரு அணிகளும் உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்தனர்.

ஞானி, “எவ்வளவு நன்றாக விளையாடுகிறார்கள்! ஒருவருக்கொருவர் சளைக்காமல் வெற்றி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு விளையாடுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது” என்றார்.

ஆனால், பணக்காரன் கண்களிலோ பந்து உதைபட்டு இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுவதுதான் விழுந்தது. அவன் ஞானியிடம் சொன்னான்: “இந்தப் பந்தைப் போன்றதுதான் என் நிலையும்... வருமான வரிக்காரர்கள், தொழிலாளிகள், பிள்ளைகள் என்று நாலா பக்கமும் இடிதான்!”

“சரி, இது வேண்டாம்! வேறு இடத்துக்குப் போகலாம்” என்று ஞானி ஒரு சங்கீத கச்சேரிக்கு அவனை அழைத்துபோனார்.  அங்கு ஒரு புல்லாங்குழல் வித்துவான் ஆனந்தமாக இசைமழை பொழிந்து கொண்டிருந்தார். அவர்கள் அமைதியாக இசையை ரசித்து மகிழ்ந்தனர்.

வழியில் ஞானி கேட்டார்: “பந்துக்கும் குழலுக்கும் என்ன வேற்றுமை?”

“இதென்ன கேள்வி? ஒன்று இசைக்கருவி, மற்றொன்று விளையாட்டுச் சாதனம்!” என்றான் தனவான்.

ஞானி விளக்கினார்: “இவை இரண்டுக்கும் தேவைப்படுவது காற்று. பந்து, தான் வாங்கிய காற்றைத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது. அதனால்தான் அது உதைபடுகிறது.

புல்லாங்குழல், உள்வாங்கிய காற்றை தகுந்த இடத்தில், தக்க அளவில் வெளியே விட்டுவிடுகிறது. அதனால், அற்புதமான இசை உருவாகிறது. இப்போது புரிகிறதா?” என்று கேட்டார் ஞானி.

பணத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்வதால் நிறைவு கிடைக்காது. அதைப் பாத்திரமறிந்து, தேவையறிந்து வினியோகிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி, நிம்மதி கிடைக்கும் என்று தெளிவடைந்தான் செல்வந்தன்.




குளிக்கும் முறை...



இன்றைய வாழ்க்கை முறையில் சருமத்தை பாதிக்க கூடிய பலவித செயல்களை செய்து வருகிறோம். மோசமான கெமிக்கல் கொண்ட புராடக்ட்ஸ் முதல் காற்று மாசு வரை நமது தோல் சருமத்தை பாதிக்க கூடிய அளவிற்கு உள்ளன. இது ஒரு புறம் இருக்க நாம் பின்பற்ற கூடிய வாழ்க்கை முறையும் நமது தோலை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நாம் தினசரி குளிக்கும் முறை கூட நமது தோலின் ஆரோக்கியத்தை பாதிக்குமாம். அது எப்படி குளியல் கூட நமது தோலை பாதிக்கும் என்று யோசிக்கிறீர்களா? ஆம், இது உண்மை தான்.


நீண்ட நேரமாக குளிக்கும் முறை உங்களது தோலை பாதிக்கும் என்று தோல் நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக குளியல் என்பது அமைதியான உணர்வைத் தருவதோடு, உடலில் உள்ள மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அளவைக் குறைக்கும் வழியாக உள்ளது. சிலர் அதிகாலையில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாலும், மற்றவர்கள் இரவில் நீண்ட நேரம் குளித்து சுத்தம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் குளிக்கின்ற கால அளவு கூட உங்களின் தோலை பாதிக்கும். அதே போன்று நமது தோலை பாதிக்க கூடிய குளியல் நேர முறைகளை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.


ஷவர் ஜெல்


குளிக்கும்போது ஷவர் ஜெல் அல்லது கூடுதல் நுரைக்கும் ஜெல்லை பயன்படுத்துவதால், அது சருமத்தை சேதப்படுத்துமாம். மேலும் குளிக்கும்போது ஷேவிங் செய்யக்கூடாதாம். இதற்கு காரணம் குளிக்க கூடிய நேரத்தில் நமது சருமம் ஷேவிங்கிற்கு தயாராகி வருவதற்கு நேரம் எடுத்து கொள்ளுமாம். சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் நனைந்த பிறகு தோல் மிருதுவாகி, ஷேவிங்கிற்குத் தயாராகும். குளிக்கும் போது அவசரமாக ரேசரை தோலில் பயன்படுத்தினால், அது ஆழமான வெட்டுக்களை ஏற்படுத்தும்.
குளிக்கும் போது மேக்கப்பை கழுவ கூடாதாம். குளிக்கும்போது தண்ணீரை ஊற்றி மேக்கப்பை அகற்ற முயற்சித்தால், மேக்கப் முழுமையாக அகற்றப்படாது. எனவே, குளிப்பதற்கு முன் மேக்கப் ரிமூவர் அல்லது எண்ணெயைக் கொண்டு மேக்கப்பை நன்றாக அகற்றுவது நல்லது. அதன் பிறகு குளியலை எடுத்து கொள்ளலாம்.
வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தோல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், பலருக்கும் வெந்நீரில் குளிப்பது என்பது சோர்வை நீக்க கூடியதாக இருக்கும் என்று கருதுகின்றனர். இது சோர்வை நீக்கினாலும் சருமத்தையும் சேதப்படுத்துகிறது. எனவே மிக சூடான வெந்நீரில் குளிப்பதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில் குளிக்க முயற்சிக்கலாம்
தூங்குவதற்கு முன்னர் குளிக்க கூடிய பழக்கம் சிலருக்கு உண்டு. இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம், இரவில் உறங்கச் செல்வதற்கு முன், உங்கள் உடல் வெப்பநிலை குறைந்து விடுமாம். எனவே உறங்குவதற்கும் குளிப்பதற்கும் இடையில் குறைந்தது இரண்டு மணிநேர இடைவெளியை வைத்திருப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது
இன்றைய வாழ்க்கை முறையில் பலதும் வொர்க் அவுட் செய்யும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இது நல்லது தான் என்றாலும், வொர்க் அவுட் செய்த உடனே குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கும் மற்றும் சில நேரங்களில் இது உங்களுக்கு மயக்கத்தை கூட ஏற்படலாம்.

மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி, உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருங்கள்






உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி குளிக்க வேண்டும்...




உடலில் ஏற்படும் அதிகமான வெப்பம் பெரும்பாலான நோய்களுக்கு காரணமாகிறது. உடல் ஆரோக்கியம் பெறுவதற்கு எவ்வாறு குளிக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்....
குளிக்க ஆரம்பிக்கும் போது முதலில் தலையில் தண்ணீரை ஊற்றுவது தவறானதாகும். குளத்தில் இறங்கி குளிக்கும் முறையை போல முதலில் சிறிது நீரை உச்சந்தலையில் தெளித்து கொண்டு பின்பு கால்களில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு உடலில் தண்ணீரை ஊற்ற இறுதியாக தலையில் நீரை ஊற்ற வேண்டும். அப்போது தான் உடலின் மொத்த வெப்பமும் காதுகள், கண்களில் வழியாக வெளியேறும். எடுத்த எடுப்பிலேயே தலையிலும், தேளிலும் நீரை ஊற்றும்போது மொத்த வெப்பமும் உடலிலேயே தங்க நேரிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குளிப்பது உடலை குளிர்விப்பதற்கான செயல் முறை. குளிர்ந்த நீரில் குளித்தால் மட்டுமே உடலின் வெப்பத்தை வெளியேற்ற முடியும். குளிப்பதற்கு முன்பாக வாய் முழுவதும் நீரை நிரப்பி அப்படியே வைத்திருந்து குளித்து முடித்தவுடன் துப்பிவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நுரையீரலுக்கு மிகவும் நல்லதாகும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். நல்லெண்ய்யை மிதமாக சூடாக்கி அதில் தோல் நீக்கிய சிறிய இஞ்சி துண்டையும்,சிறிது மிளகையும் பொடித்து போட்டு ஆறவைக்க வேண்டும். அந்த எண்ணெய்யை தலையிலும், உடலிலும் தேய்த்து அரை மணி நேரமாவது ஊற வைத்து விட்டு குளிக்க வேண்டும். எண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது மட்டும் மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு மற்ற வேலைகளை பார்ப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது. உணவு உண்டதும், உடல் செரிக்கும் வேலையை தொடங்கி விடும். செரிமானத்துக்க்காக உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அநத் நேரத்தில் குளித்தால், உடல் குளிர்ச்சியடைந்து செரிமான வேலை தடைப்படும். இதன் காரணமாக அமிலச்சுரப்பு அதிகரித்து நெஞ்செரிச்சல் ஏற்படலாம். குளிப்பது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை தரக்கூடிய இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும். அவசர அவசரமாக குளிப்பதால் குளியலின் நன்மைகளை முழுமையாக பெற முடியாமல் போகலாம்.

குளிக்கும் முறை ( அகத்தியர் கூற்று)



குளிக்கும் முறை ( அகத்தியர் கூற்று ) 
🍀🌹🍀🌹🍀
 குளிக்கும் முறை  (  அகத்தியர் கூற்று ) 
குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள்.  (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.  மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).
தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.  குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் “ஓம்” என்று த்யானம் செய்து எழுதுங்கள்.  அந்த நீர் அப்போதுமுதல் கங்கை நீராக மாறிவிடும்.  ஒரு நிமிட த்யானத்தில் “இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.  குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.
அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.  உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல்  ஏறுவதுதான் சரி.  தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.  
நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.  காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும்.  அதுவே சரியான முறை. 
 தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை “பிரஷ்டம்” என்பர்.  அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது.  அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.  
துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.  அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.  உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.
பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம்.  மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.
      🌻🌻    குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது. 🌻🌻 தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது.  குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை.  அதை உணரவேண்டும்.
குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம்.  வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.
நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.  நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.
நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.  நீரின்றி ஒரு உயிரும் இல்லை.



நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.

உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.  வெள்ளியன்று குளிப்பது நல்லது.