jaga flash news

Monday 13 November 2023

கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி இருக்கு.. தாண்டி பயன்படுத்தினால் ஆபத்து? எப்படி கண்டுபிடிக்கனும்?


 
வீட்டில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டருக்கும் கூட காலாவதி தேதி உள்ளதாம். இந்த காலாவதியான சிலிண்டரை பயன்படுத்தினால் வெடிக்க கூடிய ஆபத்தும் இருப்பதாக அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர். சிலிண்டருக்கான காலாவதி தேதியை எப்படி கண்டுப்பிடிப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.


வீட்டு கிட்சன்களில் காய்கறி இல்லாமல் கூட சில நேரங்கள் இருக்கும்... ஆனால் கேஸ் சிலிண்டர் இல்லாத கிட்சன்களையே பார்க்க முடியாது. கிராமப்புறங்களிலும் கூட தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தியே இல்லத்தரசிகள் சமையல் வேலையை செய்கின்றனர். புதிதாக சிலிண்டர் இணைப்பு வாங்கி விட்டால் தேவைப்படும் நேரத்தில் புக் செய்து காலி சிலிண்டரை கொடுத்து புது சிலிண்டரை வாங்கிக் கொள்ள முடியும்
ஆனால், ஒரு சிலர் மார்க்கெட்டுகளில் சிலிண்டரை மட்டும் வாங்கிக் கொண்டு தேவைப்படும் சமயத்தில் கேஸ் நிறுவனத்திற்கு கொண்டு போய் சிலிண்டரை நிரப்பி மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், சிலிண்டரை இப்படி மீண்டும் மீண்டும் ரீஃபில் செய்து பயன்படுத்துவது கொஞ்சம் ரிஸ்க் ஆனது என்று சொல்கிறார்கள். இது குறித்த விவரங்களை பார்ப்போம்.

காலாவதி தேதி குறியீடு: கேஸ் சிலிண்டர் என்று சொல்லப்படும் எரிவாயு உருளைக்கும் காலாவதி தேதி உண்டு என சொன்னால் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக உள்ளதுதானே.. அது மட்டும் இல்லை.. அந்த காலாவதி தேதியை தாண்டி சிலிண்டரை பயன்படுத்தினால் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதோடு வெடிக்க கூட செய்யலாம் என்று அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சரி... சிலிண்டருக்கு எப்படி காலாவதி தேதியை கண்டுபிடிப்பது என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், ஒவ்வொரு சிலிண்டரிலும் அதன் காலாவதி தேதி குறித்து குறியீடு எண் இடம் பெற்று இருக்குமாம். அதாவது, சிலிண்டரின் மேல் பகுதி அதாவது நாம் பிடித்து தூக்கும் இடத்தில் உள்புறமாக ஆங்கில எழுத்துக்களில் ஏ முதல் டி வரையிலான ஆங்கில எழுத்தும் அதன் எண்களும் பெயிண்டில் இடம் பெற்று இருக்கும்.


எப்படி கண்டுபிடிப்பது: அதன் அர்த்தம் என்னவென்றால், ஆங்கில எழுத்துக்கள் காலாவதி ஆகும் மாதத்தையும் எண்கள் ஆண்டையும் குறிப்பிடுகிறது. அதாவது ஏ என்பதன் அர்த்தம் என்பது முதல் காலாண்டு ( ஜனவரி முதல் மார்ச்), பி - என்பதன் அர்த்தம் இரண்டாவது காலாண்டு (ஏப்ரல் முதல் ஜூன்), சி என்றால் ஜூலை டூ செப்டமர் (மூன்றாவது காலாண்டு), டி என்பதன் அர்த்தம் அக்டோபர் முதல் டிசம்பர் (நான்காவது காலாண்டு) என்பதை குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக சிலிண்டரில் C-26 என்று எழுதியிருந்தால் அதன் காலாவதி தேதி ஜூலை முதல் செப்டம்பர் 2026' என்பதாகும். 

No comments:

Post a Comment