jaga flash news

Saturday 25 November 2023

மிருதுவான காய்கறி, கீரை ஆம்லேட்!


Egg - Veg Omelette : மிருதுவான காய்கறி, கீரை ஆம்லேட்! உச்சுக்கொட்ட வைக்கும் சுவை நிறைந்தது!  
Egg - Veg Omelette : மிருதுவான காய்கறி, கீரை ஆம்லேட்! உச்சுக்கொட்ட வைக்கும் சுவை நிறைந்தது! 

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1

கேரட் – 1

வெங்காயம் – 1

தண்டுக்கீரை – ஒரு கைப்பிடி

கார்ன் ஃப்ளோர் அல்லது மைதா – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – அரை ஸ்பூன்

சாட் மசாலா – கால் ஸ்பூன்

முட்டை – 3

செய்முறை
நன்றாக கழுவி தோல் சீவிய உருளைக்கிழங்கு ஒன்றை, கேரட் துருவும் கட்டையில் வைத்து நன்றாக துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதைப்போல், கேரட் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றையும் நீள நிளமாக கட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி தண்டுக் கீரையை தண்டோடு நறுக்கிக் கொள்ளவேண்டும்.

இவையனைத்தையும் ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றுங்கள். கார்ன் ஃப்ளோர் அல்லது மைதா தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள், சாட் மசாலா அனைத்தும் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு தவாவில் கலக்கி வைத்த முட்டைக் கலவையை வட்ட வடிவ ஆம்லேட்களாக, ஒரு ஸ்பூனால் எடுத்து பரப்பி, வேகவிட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேக விட்டு எடுக்கவேண்டும். சத்தான காய்கறிகள், கீரை ஆம்லெட் ரெடி.

இதைத் தனி ஸ்நாக்சாகவும் பரிமாறலாம். சாப்பாட்டுடன் இணையாக தரலாம். பிரெட் மற்றும் சாண்ட்விச்சாகவும் சாப்பிடலாம்.

தண்டுக்கீரைக்கு பதில் ஸ்பிரிங் ஆனியன், பச்சை மிளகாய், பனீர், காளான் போன்றவற்றையும் இதோடு சேர்த்து செய்யலாம். சுவையில் அசத்தும்.

முட்டையில் வைட்டமின் A, வைட்டமின் B12, செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 

இதன் மூலம் நோய்வாய்ப்படுவதையும் தவிர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விரும்புபவர்கள் முட்டையை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு தினமும் ஒரு வேக வைத்த முட்டை கொடுப்பது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும

No comments:

Post a Comment