அரிசியைவிட 8 மடங்கு இரும்புச் சத்து: பெண்களுக்கு இந்த உணவு முக்கியம்
சமீபகாலமாக சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் தங்கள் அன்றாட உணவுகளில் சிறுதானியங்களை சேர்த்து வருகின்றனர். சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் அளவிட முடியாதவை.
கம்பு பருவமடைந்த பெண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. மாதத்தில் நான்குமுறையாவது கம்பை உணவாக எடுத்துக் கொள்வது பெண்களுக்கு நன்மை தரும்.
மாதவிடாய் சமயங்களில் அடி வயிற்று வலியும், ரத்தபோக்கும் உண்டாகும் நேரங்களில் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் வைத்து கொடுப்பதன் மூலம் இவை குறையலாம். அதே நேரம் கம்பு உடன் மோர் மற்றும் சாம்பார் வெங்காயம் சேர்த்தும் சாப்பிடலாம்.
பிரசவத்துக்கு பிறகு பெண்கள் பலவீனமாக இருப்பார்கள். அதனால் அவர்கள் சத்தான உணவு எடுத்து கொள்வது நல்லது. மேலும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவிலுள்ள சத்துக்கள் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் செல்லும்.
எனவே பிரசவித்த பெண்கள் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அப்படி பார்க்கையில், பிரசவித்த பெண்கள் கம்பு உணவு எடுத்துகொள்ளும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
அதோடு ஆற்றல் மிகுந்த சத்துகளை கொண்டிருப்பதால் அவர்கள் சோர்வு இல்லாமலும் இருப்பார்கள்.
மாதவிடாய் சமயங்களில் அடி வயிற்று வலியும், ரத்தபோக்கும் உண்டாகும் நேரங்களில் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் வைத்து கொடுப்பதன் மூலம் இவை குறையலாம். அதே நேரம் கம்பு உடன் மோர் மற்றும் சாம்பார் வெங்காயம் சேர்த்தும் சாப்பிடலாம்.
கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மற்ற சிறு தானியங்களைப் போலவே, நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது.
No comments:
Post a Comment