சாஃப்ட் இட்லி வேணும்னா 6- 7 நிமிஷம் மட்டுமே வேக விடணும்;
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் இட்லியை சாஃப்ட்டாக தயார் செய்ய உங்களுக்காவே டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
Soft idli simple tips
தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி உள்ளது. இவற்றுடன் சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகளை சேர்த்து ருசித்தால் அசத்தலாக இருக்கும்.
இட்லி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த அருமையான உணவை தயார் செய்ய பலரும் சிரமப் படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம்.
அந்த வகையில், சாஃப்ட் இட்லியை தயார் செய்ய உங்களுக்காவே செஃப் தீனா வழங்கியுள்ள சில சிம்பிள் டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
உப்பு
வெந்தயம்
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் இட்லி அரிசி மற்றும் வெந்தயத்தை எடுத்து அவற்றை நன்றாக அலசிக் கொள்ளவும். பிறகு, அவற்றை வழக்கம் போல் தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். இவற்றை குறைந்தது 6 முதல் 7 மணி ஊற வைக்கவும். இதேபோல், உளுந்தையும் ஊற வைக்கவும்.
இதன்பின்னர், இரண்டையும் தனித்தனியாக கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். முதல் உளுந்தையும், பிறகு அரிசியையும் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரிசியை 95 சதவீதம் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், இட்லிக்கு மாவு சேர்ப்பது போல், உளுந்தம் மாவுடன் அரிசி மாவு சேர்த்து, அவற்றுடன் உப்பு சேர்த்து கையால் மாவு நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இவற்றை புளிக்க வைத்துக் கொள்ளவும்.
மாவில் புளிப்பு ஏறிய பிறகு, வழக்கம் போல் இட்லி தட்டு எடுத்து அதில் மாவு ஊற்றி வேக வைக்கவும். இவை 6 முதல் 7 நிமிடங்கள் வெந்தால் போதும். அப்படி வேக வைத்து எடுத்தல், சாஃப்ட் இட்லி ரெடி.
No comments:
Post a Comment