jaga flash news

Wednesday 30 October 2024

அசைவம் சாப்பிடலாமா? கூடாதா ?



அசைவம் சாப்பிடலாமா? கூடாதா ?

இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை. இதற்கு பதில் தராத குருவும் இல்லை. ஆயினும் கேள்வி தொடர்கிறது

உணவுக்கும் இறைவனுக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை..

உணவுக்கும் கடவுள் கோபிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை...

உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

* உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு

* உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு

* உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு

* உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு...

* உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு..

* உணவுக்கும் மனித மனதிற்கும் சம்மந்தம் உண்டு.

* மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..

கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..அதைக் கரைக்கவே மனித பிறவி...

தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் குறைவு. மாமிச  உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் அதிகம்..

எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்.

அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள் தாயின் மனம் மற்றும் அந்த குட்டியின் மனம் எவ்வாறு தேடி தவித்து இருக்கும்? அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணர வேண்டியது இதுதான்.

அதிக பாசம் உள்ள ஆடு கோழி மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும். அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்

அந்த கர்மாவையும் சேர்த்து கரைக்க
ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம். இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை...

ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார். மற்றவர் ஒரு கோடி வாங்குகிறார். இதில் மேலாளாருக்கு என்ன பிரச்சனை. கடன் வாங்கியவனே கடனை கட்ட வேண்டும்.

சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல, பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால்

காட்டில் கூடஆடு மாடு யானை குதிரை ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.

புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று கூறுகின்றோம். ஆக, சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை..

உடலால் மனித பிறவி சைவம் உயிரால் மனித பிறவி சைவம் குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.

ஆடு, மாடு, மான், யானை
போன்றவை உடலால் சைவம் உயிரால் சைவம் மனதாலும் சைவம்.

ஆகவே, மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது என்பதால் அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.

No comments:

Post a Comment