அரைஞாண் கயிற்றின் ஆரோக்கிய மருத்துவ பயன்.. ஹெர்னியா வலி? குடலிறக்கம் வலியை போக்கும் சூப்பர் உணவுகள்
ஹெர்னியா என்று சொல்லப்படும் குடலிறக்கம் என்றால் என்றால் என்ன? இதற்கான காரணங்கள் என்னென்ன? இயற்கை முறையில் உணவு மூலமாகவே இந்த குறைபாடுகளை சரி செய்யலாமா? அதிமதுர பவுடரின் முக்கியத்துவம் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
உடலில் பலவீனமான இடத்தின் வழியாக, வீங்கிய உறுப்பு அல்லது கொழுப்பு திசுக்களையே ஹெர்னியா என்கிறார்கள்.. உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாமல் இருப்போர்களுக்கம், அதிக எடை தூக்குவோருக்கும், ஆபரேஷன் மேற்கொண்டவருக்கும் குடலிறக்கம் என்ற ஹெர்னியா ஏற்பட வாய்ப்புள்ளது.
Backfill Promotion
hernia pain waist card health
அதேபோல, மன அழுத்தம், மனபதட்டம் அதிகரிக்கும்போதும், ஹார்மோன்கள் உடலின் உறுப்புகளை பலவீனப்படுத்தலாம்.. இதன் காரணமாகவும் ஹெர்னியா ஏற்படலாம்
உடற்பயிற்சி: குடலிறக்கம் வலி குறைய வேண்டுமானால், உணவில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். முக்கியமாக அதிக காரமான உணவினை தவிர்க்க வேண்டும். அமில உணவுகள், கடினமான உணவுகள் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. இதனால், வீக்கம் இன்னும் அதிகமாகிவிடும். கடினமான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
எப்போதுமே சமையலில் இஞ்சி, மிளகு இரண்டையும் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இந்த 2 பொருட்களும் குடலிறக்கம் மூலம் ஏற்பட்ட வலியை குறைக்க உதவும். வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் தீர்க்கும். கேரட், கீரை, வெங்காயம், புரக்கோலி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளில் சூப் தயாரித்து குடிக்கும்போது, இவைகளிலுள்ள அடர்த்தியான ஊட்டச்சத்துக்களும், அழற்சி எதிர்ப்பு தன்மைகளும், குடலிறக்கத்தின் வலியை குறைக்க செய்கின்றன. காலையில் கற்றாழை ஜூஸ் குடிக்கலாம்.
குடலிறக்க வலிகள்: குடலிறக்க வலிகளுக்கு சித்த மருத்துவத்தில் அதிமதுரம் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்குழாய் பகுதிகளில் ஏற்படும் சேதங்களை, இந்த அதிமதுரம் வேர்கள் குணமாக்குகின்றன. எனவே, நாட்டு மருந்து கடைகளிலுள்ள அதிமதுர பொடியை, பாலில் கலந்து வாரம் 2 முறை குடித்துவந்தாலே குடலிறக்கம் கட்டுப்படும்... அல்லது அதிமதுர பவுடரில், டீ தயாரித்தும் குடிக்கலாம்.
இதுபோன்ற தொந்தரவுகள் ஆண்களுக்கு ஏற்படும் என்பதால்தான் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து வந்துள்ளது. ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்று பகுதியாகும்.
சிறுநீரக பிரச்சனை: இந்த அரைஞாண் கயிற்றை, இடுப்பை சுற்றி கட்டும்போது, மேல்வயிற்று பகுதியிலுள்ள குடல் கீழே இறங்காமல் இருக்குமாம். விதைப்பையை பாதுகாக்கவும், வயிற்றின் உள்உறுப்புகள் மேல் ஏறாமல் தடுக்கவும், இந்த அரைஞாண் கயிறுகள் கட்டப்படுகின்றன. இதனால், சிறுநீர்ப்பை, மலப்பைகளுக்கு ரத்த ஓட்டமும் சீராவதுடன், சிறுநீரக பிரச்சனைகளையும் ஏற்படாமல் தடுக்கிறது.. அத்துடன், இடுப்பில் கட்டும் இந்த அரைஞாண் கயிறுகள், ஆண்மை கோளாறுகளையும் ஏற்படாமல் தடுக்க செய்கிறதாம்.
No comments:
Post a Comment