மகாளய அமாவாசை.. தர்ப்பணம் செய்வதில் இத்தனை பலனா
மகாளய அமாவாசையின் சிறப்புகள் என்ன? அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பது குறித்து ஆன்மீகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறிய குறிப்பு ஒன்றை பார்ப்போம்.
மஹாளய என்றால் "கூட்டாக வருதல்" என்று அர்த்தம்.. மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது அர்த்தமாம்.. அதாவது மறைந்த நம்முடைய முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்கிறோம்.
வளைகாப்பு புரட்டாசியில் செய்யலாமா? புதிய தொழில்இம்மாதம் துவங்கலாமா? இப்படி ஒரு விசேஷ காரணமா? சூப்பர்
" வளைகாப்பு புரட்டாசியில் செய்யலாமா? புதிய தொழில்இம்மாதம் துவங்கலாமா? இப்படி ஒரு விசேஷ காரணமா? சூப்பர்"
இந்த புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது. ஏனென்றால், இந்த ஒரு அமாவாசையில் மட்டும் தான் நம்முடைய முன்னோர்கள், நம்முடனே தங்கியிருந்து நமக்கு ஆசி வழங்குவதாக நம்பப்படுகிறது.. முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்தவர்களுக்கு, பெற்றோர்களின் இறந்த தேதியை, திதியை மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்பார்கள்.
பித்ரு தோஷம்: பித்ரு தோஷம், பித்ரு சாபங்கள் எதுவானாலும், இந்த மகாளய அமாவாசையின்போது, அதன் ஆற்றலும், தாக்கமும் குறைந்துவிடும்.. அதனால்தான், எந்த அமாவாசையில் விரதமிருந்து, முன்னோர்களை வழிபட தவறினாலும், மகாளய அமாவாசையன்று மட்டும் விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுத்தால், வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுத்த பலனை பெறலாம் என்கிறார்கள்.
இப்படி செய்யும்போது, முன்னோர்கள் நம்மீது ஏதாவது கோபத்தில் இருந்தாலும், அது தணிந்து, நமக்கு ஆசி வழங்குவார்கள் என்றும் நம்பப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்பதால்தான், இந்த நாளில் ஒருசில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்கிறார்கள். நாளைய தினம் மகாளய அமாவாசை ஆகும்.
வாசல் கோலம்: இந்த அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு திதி கொடுத்த பிறகுதான், வாசலில் கோலம் போட வேண்டும்.. முன்னோர்களின் போட்டோக்களுக்கு, வெறும் துளசியை மட்டுமே சாற்ற வேண்டும்.
சைவ உணவுகளையே சமைக்க வேண்டும். பின்னர் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். அதன்பின்னர் விளக்கேற்றி, கற்பூர ஆராதனை செய்து பிறகு சாப்பிட வேண்டும். முன்னதாக காகத்திற்கு கட்டாயம் சோறு வைக்க வேண்டும். சாதம், காய்கறி, குழம்பு, நெய் இவைகளை கலந்து காகத்துக்கு வைக்கலாம்.
தர்ப்பணம் செய்து முடித்ததும், 4 தர்ப்பைகளை வாங்க வேண்டும்.. கிழக்கு-மேற்கு 2 தர்ப்பைகள், வடக்கு தெற்கு 2 தர்ப்பைகள் வைத்து அதற்கு நடுவில் எள் கலந்த சாதத்தை வைத்து, தண்ணீரில் நைவேத்தியம் செய்து விட்டு, காகத்தை அழைத்தால் போதும்.
காகத்திற்கு சாதம் வைக்கிறீங்களா? இந்த தப்பை மட்டும் செய்துடாதீங்க..காகம் உணவை எடுக்காமல் போனால்?? அட
"காகத்திற்கு சாதம் வைக்கிறீங்களா? இந்த தப்பை மட்டும் செய்துடாதீங்க..காகம் உணவை எடுக்காமல் போனால்?? அட"
தர்ப்பணம்: எள்ளும் தண்ணீரும் இரைத்திடும் தர்ப்பணத்தை வீட்டில் அல்லது அந்தணரை அழைத்து செய்யலாம்.. சூரிய உதயத்திற்கு பிறகு, எள்ளும் தண்ணீரும் இரைத்துக்கொள்ளலாம். நீங்கள் இரைக்கும் எள்ளை, எங்குமே முளைத்துவிடாதபடி, சிந்தி விட வேண்டும்.. காலை 9.30 மணிக்கு முன்பாக தர்ப்பணம் கொடுத்து முடித்து விட வேண்டும். பின்னர் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, 2 மஞ்சள் வாழைப்பழம், வெல்லம் போன்றவற்றை தானமாக தரவேண்டும்.
காலை 11 மணிக்குள் 2 பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும். 11 மணிக்குமேல் படையல் போட்டுக் கொள்ளலாம்.. மாலை 6 மணிக்கு பிறகு, வீட்டில் முன்னோர்கள் போட்டோ முன்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். இப்படி செய்யும்போது, சாபம், திருமணத்தடை விலகும்.. தோஷமும் அனைத்து தடைகளும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் பெருகும்.
கோலம் போடக்கூடாது: நாளைய தினம் அமாவாசை தினத்தில் கடன் கொடுக்க கூடாது.. அதேபோல, வீட்டு வாசல், பூஜை அறையில் கோலம் போடக்கூடாது. வெறுமனே தண்ணீர் தெளித்து விட்டால் போதுமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment