இந்த பங்குனி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இந்த பங்குனி மாதம் முழுவதுமாக அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் உண்டாகும். பிள்ளைகள் போக வேண்டும் என நினைத்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசிநாதனாகிய செவ்வாய் 11 ஆம் இடத்தில் அமருவதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
செவ்வாய் சனி பகவானுடன் சேர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. மேஷ ராசிக்காரர்கள் அபிராமி அந்தாதி கேட்பது நல்ல பலன்களைத் தரும், 49, 50, 75 ஆவது பாட்டை படிப்பது நல்ல பலன்களைத் தரும். பிள்ளைகள் விஷயங்களில் கோபதாபம் இல்லாமல் நடந்துகொள்வது நல்லது. பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பது நல்லது. எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டங்கள் முழுமையாக குறையும்.
வழக்கு போன்ற விஷயங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டு. திடீர் யோகங்கள், அதிர்ஷ்டம் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் முதுகு தொடர்பான பிரச்சனைகள், சளி பிரச்சனைகள் ஏற்படும். உள்ளூர், வெளியூர், தொலைதூரப் பயணங்கள், குடும்பத்தில் நல்ல காரியங்கள், அனுகூலங்கள், சுப விரைய பிராப்தம், வீடு கட்டுவது போன்றவற்றை செய்வீர்கள்.
உத்தியோகத்தில் அற்புதமான ஏற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மையைக் காண்பீர்கள். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த அனைத்து பதட்டங்களில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். பெரிய மகான்களை சந்திப்பது, குருமார்களை சந்திப்பது, தெய்வ காரியத்தில் ஈடுபடுவது, தொழிலில் தள்ளிக் கொண்டு போன காரியங்ளை செய்து முடிப்பீர்கள்.
No comments:
Post a Comment