jaga flash news

Sunday, 30 March 2025

வெற்றிலை...


சுகரை கட்டுப்படுத்தும் வெற்றிலை...
ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு வெற்றிலையின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மனஅழுத்தம் போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

வெற்றிலையை நம்மில் பலரும் பூஜைக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், வெற்றிலையில் எவ்வளவு நன்மைகள் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு வெற்றிலையின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மனஅழுத்தம் போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

100 கிராம் வெற்றிலையில் 1.3 மைக்ரோகிராம் அயோடின் உள்ளது. 4.6 மைக்ரோகிராம் பொட்டாசியம், 2.9 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 13 மைக்ரோகிராம் வைட்டமின் பி1, 0.89 மைக்ரோகிராம் நிக்கோடினிக் அமிலம் ஆகியவை உள்ளது.

வெற்றிலையில் வைட்டமின்கள் சி, பீட்டா கரோட்டின், தாது பொருட்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மேலும், வெற்றிலையில் நார்ச்சத்தும் புரதமும் அதிகளவில் உள்ளன. வெற்றிலை என்றாலே நோயெதிர்ப்பு சக்திதான் என்கிறார் மருத்துவர் சாலை மருதமலை முருகன்.

வெற்றிலை, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது உடலில் உள்ள அமில அளவைக் குறைக்கிறது. வயிறு தொடர்பான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது மலச்சிக்கலைப்போக்க உதவுகிறது. வெற்றிலையை நசுக்கி, ஓரிரவு தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். காலையில் எழுந்தவுடன், தண்ணீரை வடித்து வெறும் வயிற்றில் பருகவேண்டும்.

வெற்றிலையின் சிறப்புத்தன்மை அதன் காரம்தான். அதனை உட்கொள்ளுவதால் வயிற்றில் கார அமிலத்தன்மை சீர்படுத்துவதில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான குறைபாடுகள், ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்னைகளில் வெற்றிலையில் உள்ள கார அமிலத்தை சரி செய்யக்கூடிய வேதிப்பொருட்கள் ஆண்டி அல்சருக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. கல்லீரல் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு தன்மையை வெற்றிலை மேம்படுத்துகிறடு என்கிறார் மருத்துவர் சாலை மருதமலை முருகன்.

வெற்றிலையில் இருக்கும் மருத்துவப் பயன்பாடு மட்டும் 250-க்கும் மேல் உள்ளது. மருத்துவ குறைபாடுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது வெற்றிலை. பாரம்பரிய முறைப்படி குழந்தைகளுக்கு சலி, இருமல் மூச்சுநிற்றல் போன்ற பிரச்னை இருந்தால் வெற்றிலையை நல்லெண்ணெய்யில் தடவி விளக்கில் வாட்டி நெஞ்சுப்பகுதியில் நீவி விடுவார்கள். அப்படி செய்யும்போது, இருமல், சளி போன்ற நோய்கள் ஓடிவிடும். குழந்தைகளுக்கு செரிமான பிரச்னை, வயிற்று வலிக்கு வெற்றிலைச் சாறு உடன் 5 மில்லி தேன் கலந்து கொடுக்கும்போது சரியாகிறது என்கிறார் மருத்துவர் சாலை மருதமலை முருகன்.


No comments:

Post a Comment