jaga flash news

Friday, 27 June 2014

சுப நிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்?

சுப நிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்?

நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

பலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து விருப்பங்களும் நிறைவேற,குரு தோஷங்கள் விலக...)

பலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து விருப்பங்களும் நிறைவேற,குரு தோஷங்கள் விலக...)

ஸ்வர்ணாஸ்வரதமாரூடம் பீதத்வஜ ஸுஸோபிதம்
மேரோ: ப்ரதக்ஷிணம் ஸம்யகாசரந்தம் ஸுஸோபனம்
அபீஷ்டவரதம் தேவம் ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம்
ஸர்வகாமார்த்த ஸித்யர்த்தம் ப்ரணமாமி குரும் ஸத
(ப்ரம்ம வைவர்த்திக புராணத்தில் உள்ள
ப்ரஹஸ்பதி கவசம்)

பொதுப்பொருள்:

மஞ்சள் வண்ணக் கொடி பறந்து பட்டொளி வீச, தங்கம் போல ஜொலிக்கும் குதிரைகள் இழுக்கும் ரதத்தில் ஆரோகணித்திருப்பவரே, பிரஹஸ்பதி என்ற குரு பகவானே, நமஸ்காரம். மேரு மலையை வலம் வருகிறவரே, பக்தர்கள் வேண்டும் வரங்களை அருள்பவரே, தேவர்களால் பூஜிக்கப்பட்டவரே, ப்ரஹஸ்பதி பகவானே, நமஸ்காரம்.

ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது ஏன்?

ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது ஏன்?

பல சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது. செய்யக் கூடாது என்ற வழக்கமும் உள்ளது. அதற்கும் காரணம் உள்ளது. இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் என மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். பல்வேறு ஊர்களில் நடக்கும் விழா, உற்சவங்களில் கலந்துகொள்ள வேண்டி இருக்கும். ஆன்மிகத்திலும், இறைவழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டி இருப்பதால் மற்ற விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமமாக இருக்கும். அதனால் இந்த மாதத்தை ஆன்மிகத்துக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

இறைவனை துதிப்பதற்கும் பல்வேறு திவ்ய ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற வீட்டில் நடக்கும் விழாக்கள், சுபநிகழ்ச்சிகள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆடி மாதத்தில் சுபவிசேஷங்கள் தவிர்க்கப்படுகிறது.

அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?

அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?

கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். இதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு. உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக்கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும் என்பது ஏன்?

மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும் என்பது ஏன்?

திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள். தந்து என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது. மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம். வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும். கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜி எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள். கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை
காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால்
துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.

சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில்
வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

லட்சுமி கடாட்சம் வேண்டுமா?..

லட்சுமி கடாட்சம் வேண்டுமா?..

லட்சுமி கடாட்சம் வேண்டுமா? மகாலட்சுமிதேவியின் அருளைப் பெற அனைவருமே விரும்புவோம். கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லிவாருங்கள். உங்கள் இல்லத்திலும் மகாலட்சுமி மனமாரக் குடிகொண்டு அருள்வாள். தினமும் இந்த வழிபாட்டைச் செய்ய இயலாதவர்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இதைச் செய்வது நல்லது. இதோ, அந்த அற்புத ஸ்லோகம். பாராயணம் செய்யுங்களேன்...

'ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம் சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம் ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம் ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம் ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் சஸ்வத்ஸுஸ்திரயௌவனாம் ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்''

கருத்து: ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும், சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளும், தனது காந்தியால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே (பிரகாசமே) உருவெடுத்து. . .

ப்ரம்ம(பரம) இரகசியம்.

ப்ரம்ம(பரம) இரகசியம்.

எது இரகசியம் ? பிறரிடத்தில் பகரப்படாதது இரகசியம். பேசாமலேயே இருந்தால் ஒன்றும் பகரப்படுவதில்லை. ஆக மௌனம் இரகசியத்தை நன்கு காக்கிறது என்பது புலனாகிறது. மௌனம் எத்தன்மையுடையது ? சப்தம் செய்யாமல் இருப்பது மௌனம். பூரண அமைதியே அதன் தன்மை. எது அசைகிறதோ அது சப்தம் செய்கிறது. பிரகிருதி முழுவதும் அசைகிறது. எனவே பிரகிருதியினிடத்தில் அமைதியில்லை. அதனால் அதனிடம் மௌனமில்லை. ஆனால் மனம் அடங்க அடங்க அது மௌனத்தில் நிலை பெறுகிறது. முற்றிலும் மனம் அடங்கி, ஒடுங்கினால் என்ன நடக்கும் ? ஆன்ம சொரூபம் மட்டுமே எஞ்சி நிற்கும். இந்த ஆன்மா அசையாதது. அதில் சப்தமில்லை. எனவே ஆன்மா மௌன சொரூபமாகும். மேலும் இந்த ஆன்மாவை இன்னதென்று வாய்விட்டுப் பேசி விளக்கிவிட முடியாது. எது விளக்கத்துக்கு வரவில்லையோ அது இரகசியமாகும். ஆகையால் இரகசியங்களுள் முடிவானது மௌனம் அல்லது ஆன்மாவாகும். அதனால் தான் எனது முக நூல் பக்கங்களுக்கு மௌனத்தின்(ஆத்மாவின்) நாதம், மௌனத்தின்(ஆத்மாவின்) குரல், மௌனத்தின் (ஆத்மாவின்) அலைகள் என்று பெயர் சூட்டினேன்.

இந்த ஆன்மா பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். நமக்கு ஐந்து வகையான சரீரங்கள் உண்டு. அவை 1. அன்னமய கோசம், 2. பிராணமய கோசம், 3. மனோமய கோசம், 4. விஞ்ஞானமய கோசம், 5. ஆனந்தமய கோசம் என்பனவாம். அதைப் போல ஐந்து அவஸ்தைகளும் உண்டு. அவற்றை உபாதிகள் என்றும் கூறுவார்கள். அவை 1. நனவு, 2. கனவு, 3. உறக்கம், 4. பேருறக்கம், 5. உயிர்படக்கம் என்பவைகளாம். இந்த ஐந்து அவத்தைகளும் நம் உடலில் அன்றாடம் ஏறியும், இறங்கியும் வருவதை நாம் உள் முகமாக கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

நம் உயிரானது அன்னமய கோசம் என்ற பரு உடம்பைப் பற்றித் தொழிற்பட்டு வினைப்பயனை நுகரும் நிலையே நனவு அல்லது சாக்கிரம் எனப்படும். அதைவிட்டுப் பிராணமய கோசம் என்கிற சூக்கும சரீரத்தைப் பற்றி நினைவுணர்வுகளோடு கூடி, சூக்கும வினைப் பயன்களை நுகரும் நிலை கனவு அல்லது சொப்பனம் எனப்படும். அவ்விரண்டையும் விட்டு மனோமய கோசம் என்கிற சித்தத்தைப் பற்றி நின்று முந்தைய வியாபாரங்களிலிருந்து நீங்கி ஒடுக்கமுறும் நிலை உறக்கம் அல்லது சுழுத்தி எனப்படும். இந்த மூன்றையும் விட்டு விஞ்ஞானமய கோசம் எனப்படும் கஞ்சுக சரீரத்தைப் பற்றி, அறிவு நிகழ்ச்சி சிறிதும் இன்றி உயிர்ப்பு முதலிய செயல்களை மாத்திரம் உடையதாய் நிற்கும் நிலை பேருறக்கம் அல்லது துரியம் எனப்படும். இனிக் கஞ்சுக சரீரத்தின் தொழிற்பாடும் நிகழாமல்ஆனந்தமய கோசம் எனப்படும் காரிய மாயையின் செயல் ஒன்றே நிகழப் பெற்று உயிர்ப்பும் அடங்கி நிற்கும் நிலை உயிர்ப்படக்கம் அல்லது துரியாதீதம் எனப்படும்.

இப்படி அசுத்த மாயை காரியங்களாகிய ஐங்கோசங்களை பற்றி, அவ்வவற்றால் விளங்கும் உணர்வுகளையே தன் இயல்பாகக் கொண்டு விளங்கி, அவத்தை வேறுபாடு அடைவதாய், இவ்வைங் கோசங்களுக்கும் அப்பாற்பட்டதாய் உள்ள தன்னோக்கு உணர்வே ''ஆன்மா'' எனப்பட்டது. எனவே ஆன்ம தத்துவங்கள் இருபத்தி நான்கும், வித்யா தத்துவங்கள் ஏழும் கூடிய ஐங்கோசங்களையும் கடந்து, சிவ தத்துவம் ஐந்தையும் உணர்ந்து, கடந்தால் மட்டுமே ஆன்மாவை உணர முடியும். இதுவே தன்னை உணர்தல் ஆகும்.

தத் என்றால் அது. துவம் என்றால் தன்மை. அதாவது தன் தன்மை மாறாதது தத்துவம். அதாவது படைப்பு காலம் முதல் ஊழிக்காலம் வரை தன் தன்மை மாறாது நிலைத்து நிற்கும் பொருள்கள் தத்துவங்கள். மேலே கூறிய மூவகை தத்துவங்களின் செயலே உயிர்களை உலக போகத்தில் அழுந்துப்படி செய்வது. எனவே இந்தத் தத்துவங்களை உணர்ந்தவன் அதைக் கடந்து ஆன்மாவைக் கண்டு கொள்வான்.

நமஸ்காரங்களும் செய்யும் முறையும்...

நமஸ்காரங்களும் செய்யும் முறையும்...

நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும் அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

ஓரங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.

மூன்று அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்

பஞ்ச அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும்.

அஷ்டாங்க நமஸ்காரம்: ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.

சாஷ்டாங்க நமஸ்காரம்: வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

நமஸ்கார தத்துவம்:

என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை;
எல்லாம் உன் செயல்;
என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்

கோயிலின் உள்ளே நமஸ்காரம் செய்வதெப்படி?

கோயில் வளாகத்தில் எல்லா இடங்களிலும் நமஸ்கரிப்பது உசிதமல்ல. கோயில் கர்ப்பக்கிருகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால். கொடிமரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம் கர்ப்பக்கிருகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம்.

அபிஷேகம் அல்லது நிவேதனம் செய்யும் நேரங்களில் நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வது நியதி, நமஸ்காரம் செய்வதானால் 3,5, 7,9,12 முறைகள் நமஸ்காரம் செய்ய வேண்டும், 1 அல்லது 2 முறை நமஸ்கரித்தல் கூடாது. நமஸ்காரம் செய்பவர் தலை, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நமஸ்காரம் செய்யவேண்டும்.

மந்திரம், மாயவித்தை சில அடிப்படைகள்

மந்திரம், மாயவித்தை சில அடிப்படைகள்
சில அடிப்படைகள்

அஸ்டகர்மம்

மாந்திரீக சக்தி மூலம் நாம்
1.வசியம்
2. மோகனம்
3. ஆகர்சணம்
4. தம்பனம்
5. பேதனம்
6. வித்வேசணம்
7. உச்சாடனம்
8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம்.

மந்திரங்கள்

வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.

உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.

ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.

மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

பலா பலகை - தம்பனம்
மாம் பலகை - மோகம்
வில்வம் - வசியம்
பேய்த்தேத்தான் - பேதனம்
எட்டிப்பலகை - வித்துவேடணம்
அத்திப்பலகை - மாரணம்
வெண்நாவல் - ஆக்ருசணம்
வெப்பாலை - உச்சாடனம்.

இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.

மல்லிகை - வசியம்
முல்லை - மோகனம்
தும்பை - உச்சாடனம்
அரளி - ஆக்ருசணம்
காக்கனமலர் - வித்துவேடணம்
ஊமத்தம் - பேதனம்
கடலைமலர் - மாரணம்
தாமரை - தம்பனம்

இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர்.

செம்பட்டு - வசியம்
மஞ்சள் பட்டு - மோகனம்
பச்சைப்பட்டு - தம்பனம்
வெள்ளைப் பட்டு - பேதனம்
கழுதைவண்ணப்பட்டு - வித்துவேடணம்
பஞ்சவர்ணபட்டு - உச்சாடனம்
ஆந்தைவண்ணப்பட்டு - ஆக்ருசணம்
கருப்பு வண்ணப்பட்டு - மாரணம்.

சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும்,
அதன் மூல மந்திரங்களைப் பற்றியும்,
அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

கிழக்கு - இந்திரன் - தம்பனம்
தென்கிழக்கு - அக்கினி - மோகனம்
தெற்கு - எமன் - மாரணம்
தென்மேற்கு - நிருதி - உச்சாடனம்
மேற்கு - வருணன் - ஆக்ருசணம்
வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம்
வடக்கு - குபேரன் - பேதனம்
வடகிழக்கு - ஈசன் - வசியம்

இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும்.
மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

உருத்திராட்சம் - வசியமாகும்
மிளகுமணி - மோகனந்தான்
துளசிமணி - உச்சாடனம்
தாமரைமணி - தம்பனம்
நாகமணி - மாரணம்
சங்குமணி - ஆக்ருசணம்
எட்டிமணி - வித்துவேடணம்
வெண்முத்து - பேதனம்

இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.

ஞாயிறு - வசியம் மற்றும் பேதனம்

திங்கள் - தம்பனம்

செவ்வாய் - மோகனம்

புதன் - மாரணம்

வியாழன் - உச்சாடனம்

வெள்ளி - ஆக்ருசணம்

சனி - வித்துவேடணம்

மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.

முதலில் ம
 — with Santha Moorthy.

சிவசக்தி

சிவசக்தி
சூரியனில் இருந்கு ஒளியையும் ஒளியிலிருந்து சூரியனையும் பிரிக்க இயலாது. ஆகையால் சூரியன் இல்லாமல் ஒளியில்லை, ஒளியில்லையேல் சூரியன் இல்லை. அதுபோலத் தன்னிலையில் "சிவனே" என்றிருப்பதை சிவம் என்கிறோம், அந்த சிவனது ஆற்றலை நம்மை நோக்கி இறங்கும் ஆற்றலை அந்த கருனையை நாம் சக்தி (பரா சக்தி ) என்கிறோம். சிவனை ஆணாகவும், அவன் சக்தியை பெண்ணாகவும் உருவகித்து நாம் வணங்குகிறோம். ஆகச் சிவன் இன்றி சக்தி யில்லை / சக்தி இன்றி சிவன் இல்லை. இரண்டும் ஒன்றாகி பிரிவினை இல்லாத பொருள்தான். ஆண்,பெண் என்ற வேறுபாடு ஏதும் இல்லை.
சிவனும் சக்தியும் தன்னுள் பிரிப்பில்லாதது என்பதை " பின்னம் இலான் எங்கள் பிரான் " என்று திருவருட் பயன் கூறுகிறது. நாம்வழிபடும் சிவலிங்கத் திருமேனியில் மேலுள்ள இலிங்கத்தை ஆண்பாகமாகவும (சிவன்), கீழுள்ள ஆவுடை பீடத்தை பெண்பாகமாகவும் (சக்தி) ஏற்று வழிபாட்டில் சிவம்,சக்தி இரண்டும் கலந்தே உள்ளன. எனவே சிவத்திற்குள் சக்தியைக் கண்டு வழிபடுகிறோம். இதனை
" மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலை
கண்ணில் நல்அக்துறும் கழமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

ஒரே பரம்பொருளை ஆணாகவும், அவனது பிரிக்கஇயலாத ஆற்றலை இரக்கத்தை அவனது குணத்தை உமையாகவும், உருவகம் செய்து " அந்த நீங்காத கருணையுடன் இறைவன் என்றும் இருப்பதால் நாம்் இந்த மண்ணில் வாழலாம் " எனறு ஞானசம்பந்தர் பாடுகிறார். எனவே சத்தியும் சிவனும் ஒன்று சிவனை வழிபட்டாலே சக்தியின் கருணை நமக்கு கிடைக்கும் என்பதறிக.
 · Comment · Share

Tuesday, 24 June 2014

விவாஹ காலம் என்பது என்ன?

ஒருவருடைய ஜாதகத்தில் தசாபுக்திகளின் செயல்பாட்டால் அனைத்து விஷயங்களும் நடக்கின்றன அதில் திருமணமும் ஒன்று.

ஜாதகத்தில் குருபலம் வந்துடுத்து திருமணம் கைகூடி வரும்னு சொல்றாங்க ஆனா அமைய மாட்டேங்குதே என்று அன்பர் கேட்டார். 

பொதுவா விவாஹ காலம் என்பது ஒருவருடைய ஜாதகத்தில் 7மிடத்திலிருப்பவனுடைய 7மிடத்தை பார்ப்பவனுடைய 7மிடத்துக்குறியவனுடைய தசை புத்தி நடைபெம் காலத்தில் கோச்சாரரீதியாக லக்னாதிபன் 7ம் இடத்தில் வரும்போது குரு திரிகோணம் எனப்படும் 1,5,9ம் இடத்தில் வரும்பொழுது திருமணம் நடக்கும்.

மேலும் 7க்குடையவன் இருக்கும் ராசி அம்ஸம் இவற்றின் அதிபர்கள் சந்திரன் சுக்ரன் இவற்றுள் பலம் வாய்ந்த கிரஹம் எதுவோ அதனுடைய தசையில் 7க்குடையவன் இருக்கும் ராசி அம்ஸம் இவற்றிலோ இவற்றுக்கு திரிகோணத்திலோ குரு கோச்சார ரீதியாக சஞ்சாரிக்கும் போது திருமணம் நடை பெறும்.

ஆக திருமணம் நடைபெற பொருத்தம் மட்டும் பார்க்காமல் இருவருக்கும் திருமண காலம் வந்துவிட்டதா என்பதை அவர்களின் ஜாதகத்தின் நடப்பு தசை புக்தி விவரங்களை பார்த்து பலன் சொல்ல வேண்டும்.

இராவணன் உபதேசிதான் இராமனுக்கு........

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!
....

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக ,
அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான் .

உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் .

இராவணன் உபதேசித்தான் ........

1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர்.

2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .

3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .

4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .

5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.

6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய் .

கலப்பு திருமணம்

கலப்பு திருமணம்

1 ) சுக்கிரனும் , இராகுவும் இணைந்து 6 அல்லது 11 – ல் இருக்க …
2 ) 7 மிடத்தை அல்லது அதன் அதிபதியை இராகு பார்க்க ….
3 ) சந்திரனும் , செவ்வாயும் 6 / 8 ஆக ..
4 ) சுக்கிரனும் செவ்வாயும் கோணத்திலிருக்க அல்லது 12 ல் இருக்க
5 ) துலாம் அல்லது கும்பம் 7 மிடமாகி அதில் குரு இடம் பெற …
6 ) 7 -ம் அதிபதியுடன் செவ்வாய் , இராகு இணைய ….
7 ) 5 -ம் இடத்தில் பலமற்ற சந்திரன் இருக்க , 7 மற்றும் 12 ம் இடங்களில் ஆண் கிரகங்கள் இடம் பெற ….
8 ) 7 -ம் அதிபதி சனியுடன் இணைத்து 12 ல் இருக்க …
9 ) 7 -ம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரன் , சனி அல்லது நிழல் கிரகங்களால் பாக்கப்பட 

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும் :-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

*அருகம்புல் பவுடர் :- 

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :-

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பவுடர் :-

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :-

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :-

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :-

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :-

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :-

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :-

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :-

மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :-

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :-

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :-

ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :-

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :-

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :-

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :-

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :-

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :-

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :-

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :-

வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :-

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :-

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :-

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :-

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :-

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :-

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :-

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :-

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :-

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :-

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :-

ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :-

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :-

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :-

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :-

சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :-

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :-

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :-

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :-

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :-

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :-

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :-

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :-

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :-

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :-

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :-

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :-

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :-

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :-

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :-

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :-

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :-

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

சகட யோகம்


 தேவகுரு வியாழன் நின்ற ராசிக்கு 6,8,12 -ல் சந்திரன் நிற்க அது சகடயோகம். 

சகடம் என்பது சக்கரம் ஆகும். சக்கரம் போல் நிலையில்லாத ஏற்ற தாழ்வு ஏற்ப்படுத்தும் ,படிபடியாக உயர்ந்து “திடீர் வீழ்ச்சியை” சந்திக்கும் சகடயோக ஜாதகர்ளுக்கு வாடிக்கையே!!

சகட யோக ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் ஆட்சியிலும், ரிஷபத்தில் உச்சத்திலும், குருவின் வீடான தனுசு, மீனத்திலும் இருக்க பெற்ற ஜாதகர்களுக்கு தீமைகள் விலகி “நன்மைகள்” ஏற்ப்படும், 

 “நறுமணம் தனுமீன் கன்னி நண்டுடன் எருது தண்டு, திறமுடன் சசியே நிற்கில் தீர்க்கமாம் சகடபின்னம்”

பொருள்:- சந்திரன் தனுசு.மீனம். கன்னி. கடகம். ரிஷபம்.மிதுனம். ஆகிய ராசிகளில் இருந்து “சகட யோகமாயின்” தீமைகள்  குறைந்து நன்மைகள் ஏற்றப்படும் என்பதே பாடலின் பொருள்,

தீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும்-பிரண்டை

தீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும்
மூலிகைகளின் மருத்துவப் பயன் என்ன?
+++++++++++++++++++++++++++++++++++

'உடல் ஆரோக்கியத்துக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு மூலிகைச் செடி கட்டாயம் வளர்க்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி விழிப்புஉணர்வு பிரசாரம் செய்து வருபவர்,
(கடலூர் அரங்கநாதன்) 'வீட்டுத் தொட்டிகளில் எந்த வகையான மூலிகைகளை வளர்க்கலாம்? அந்த மூலிகைகளின் மருத்துவப் பயன் என்ன?’

பிரண்டை :-

தொட்டியில் வளர்த்தால் அழகாகப் படர்ந்து நிற்கும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரண்டையின் தண்டை துவையல் அரைத்துச் சாப்பிடலாம். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், வாரத்துக்கு இரண்டு நாட்கள் சாபிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. தீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும். செரியாமை நோயைக் குணப்படுத்தும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும்.
Photo: மூலிகைகளின் மருத்துவப் பயன் என்ன?
+++++++++++++++++++++++++++++++++++

'உடல் ஆரோக்கியத்துக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு மூலிகைச் செடி கட்டாயம் வளர்க்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி விழிப்புஉணர்வு பிரசாரம் செய்து வருபவர்,
(கடலூர் அரங்கநாதன்) 'வீட்டுத் தொட்டிகளில் எந்த வகையான மூலிகைகளை வளர்க்கலாம்? அந்த மூலிகைகளின் மருத்துவப் பயன் என்ன?’

பிரண்டை :-

தொட்டியில் வளர்த்தால் அழகாகப் படர்ந்து நிற்கும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரண்டையின் தண்டை துவையல் அரைத்துச் சாப்பிடலாம். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், வாரத்துக்கு இரண்டு நாட்கள் சாபிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. தீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும். செரியாமை நோயைக் குணப்படுத்தும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும்.

இயற்கையாய் இயற்கையோடு வாழ..! 
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..! 
++++++++++++++++++++++++++++++++
பொது நலம் கருதி வெளியிடுவோர் :-

- கடலூர் அரங்கநாதன்...

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே :

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே :-
++++++++++++++++++++++++++++++++++++++++++

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..

இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்...

சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..

கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்,
அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்...

இது அவர்களது நன்மைக்காகத்தான்...

என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!

பிரதோஷ காலத்தில் செய்யத்தகாத எட்டு விஷயங்கள்

பிரதோஷ காலத்தில் செய்யத்தகாத எட்டு விஷயங்கள் ........

1.போசனம் - உணவு உண்ணுதல். 
2. சயனம் - தூங்குதல் 
3. ஸ்நானம் - குளித்தல் 
4. எண்ணெய் தேய்த்தல் 
5. வாகனம் ஏறல் -இது வெளியூருக்குப் பயணித்தலைக் குறிக்கும்.
6. நூல் படித்தல்
7. மந்திர செபம் - பலர் தவறுதலாக பிரதோஷ காலத்தில் பஞ்சாட்சர செபம் செய்கின்றனர். இது தவறு.
8. விஷ்ணு தரிசனம் - விஷ்ணுவே பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்துவிடுவதால் இக்காலத்தில் விஷ்ணு வழிபாடு இல்லை.

பிரதோஷ காலத்தில் சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த விதிகள். பலர் இக்காலத்தில் சிவாலயத்துக்குச் செல்லாமல் தாமே பூஜை, அபிஷேகங்கள் செய்து வழிபடுதலும், மற்றவர்களையும் அதற்கு அழைத்தலும் தவறாம்

மனைவி ராசியில் இருந்து எண்ணி வர கணவன் ராசி 6 , 8 இடங்களில் இருந்தால்

மனைவி ராசியில் இருந்து எண்ணி வர கணவன் ராசி 6 , 8 இடங்களில் இருந்தால் அவர்கள் இருவர்க்கும் அடிக்கடி சண்டை வரும், நிம்மதி இருக்காது. இவ்வாறு அமைப்பு உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார கோவிலாக காஞ்சிபுரம் அருகில் உள்ள திருமால் ஈஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது கணவன் மனைவி சேர்ந்து சென்று வழிபட இருவருக்கும் ஒற்றுமை சந்தோஷ வாழ்வு அமையும் ஓம் திருமால் ஈஸ்வரரே போற்றி


அருள்மிகு திருமால் ஈஸ்வரர் திருக்கோயில்
சிங்கடிவாக்கம் காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிக்கு கிழக்கே 12 கி.மீ.
இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் திருபுரசுந்தரியம்மன் பிரகாரத்தில் பரிவார மூர்த்தங்களும் உள்ளன. இங்குள்ள மூலவருக்கு நாமம் அணிவிக்கப்படுவதால் இறைவனுக்கு திருமால் ஈஸ்வரர் என்று பெயர். 250 வருட முற்பட்ட கோயில்.

Monday, 23 June 2014

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய்

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுகசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து.
ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது.
அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை.
கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும்.
மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்.
மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது. முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.
இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

Thursday, 19 June 2014

ராசியா? லக்னமா?

ஜோதிடத்தை நம்புபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது!
உங்களுடைய ராசி என்ன? என்று கேட்டால் `பளிச்’ சென்று பதில் சொல்லும் ஒருவரிடம் அவரது லக்னம் என்ன? என்று கேளுங்கள். சற்றுத் திணறுவார். ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களே சமயத்தில் லக்னத்தின் முக்கியத்துவத்தை உணருவதில்லை.
ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பதுதான் உயிர். ராசி என்பது உடல்தான். லக்னம் ஒன்றுதான் ஒருவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவருடைய முழு வாழ்க்கையிலும் அவருக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ஆதாரத்தூண் போன்றது.
ராசி என்பது லக்னத்திற்கு துணை செய்யும் ஒரு அமைப்புத்தான்.. அப்படியானால் இத்தனை சிறப்பு மிக்க லக்னத்தை ஒருவர் நினைவில் கொள்ளாமல் ராசியைத்தானே தெரிந்து வைத்திருக்கிறோம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி போன்ற பிற ஊடகங்களும் ராசிபலன்தானே வெளியிடுகின்றன?
லக்னபலன் வெளியிடுவதில்லையே அது ஏன்? லக்னம் ராசி இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்தான் என்ன? நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி அளவு கொண்ட வான்வெளியை பனிரெண்டு சமபங்குள்ள தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாகப் பிரித்த நமது ஞானிகள் அவற்றிற்கு மேஷம், ரிஷபம், மிதுனம் என பனிரெண்டு பெயர்களையும் சூட்டினார்கள்.
இவை பொதுவான ராசி வீடுகள். நீங்கள் பிறந்த நேரத்தில் பூமியின் கிழக்கு வானில் இவற்றில் எந்த ராசி உதயமானதோ, அதாவது பூமியின் சுழற்சிப் பாதையின்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ அந்த ராசி வீடே ஒரு மனிதனின் லக்னம் எனப்படுகிறது.
அதாவது பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்வதால் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருப்பவருக்கு தோராயமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியும் மாறுவது போன்ற தோற்றம் இருக்கும்.
எனவே பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை லக்னம் மாறிக் கொண்டே வரும். அதாவது ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் அடுத்தடுத்த லக்னங்களில் மனிதர்கள் பிறப்பார்கள்.
உதாரணமாக சென்னையில் ஒரு குறிப்பிட்ட இரண்டுமணி நேரத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் ஒரே லக்னம் ஒரே ராசியில்தான் பிறக்கும்.
எடுத்துக்காட்டாக மிதுன லக்னம், தனுசு ராசி என்றால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அதனையடுத்த கடக லக்னம், தனுசு ராசி என்றும் அதனையடுத்து சிம்ம லக்னம், தனுசு ராசி என்றும் பிறக்கும். அதே நேரத்தில் ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்கு பின்னால் இந்த பனிரெண்டு ராசிகளில் எந்த ராசி இருக்கிறதோ அதுவே அந்த ஜாதகரின் ராசி எனப்படுகிறது.
லக்னத்தின் அளவு தோராயமாக இரண்டுமணி நேரம் என்பதைப் போல ராசியின் அளவு சுமாராக இரண்டேகால் நாள் இருக்கும். ஒரு ராசியில் இரண்டேகால் நட்சத்திரங்கள் அடங்கியுள்ளபடியால், சந்திரன் தோராயமாக ஒருநாள் முழுவதும் ஒரே நட்சத்திரத்திலும், இரண்டு நாட்கள் ஒரே ராசியிலும் இருப்பார்.
பத்திரிகை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வரும் பொதுவான ராசிபலன் என்பது உங்களின் தோராயமான பொதுப்பலன்தான். அவை துல்லியமானவை அல்ல. இந்த ராசிபலன்கள் உலகில் உள்ள ஒட்டு மொத்தமான அனைவரையும் பனிரெண்டு பகுதிகளாகப் பிரித்து சொல்லப்படுபவைதான்.
இவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பலிக்கும் என்பது நிச்சயம் அல்ல. பலிக்கவும் செய்யாது. ஆனால் லக்னப்படி பலன்கள் என்பது அப்படி அல்ல. அந்த பலன்கள் பிறந்த ஜாதகப்படி கிரகங்கள் அமைந்த விதத்தைத் கொண்டு ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனித்தனியாக சொல்லப்பட வேண்டும் என்பதால் ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் 70 சதவிகிதம் வரை துல்லியமான பலன்களைச் சொல்ல முடியும்.
லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றவைதான். இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல முடியும். சொல்லவும் வேண்டும். அப்போதுதான் அது முறையான ஜோதிட பலன்களாக இருக்கும்.
அது ஏனெனில் லக்னப்படி ஒரு கிரகம் ஒருவருக்கு கெட்டபலன் அளிப்பதாக இருந்தாலும் அவர் பிறந்த ராசிப்படி அந்தக் கிரகம் யோகக்கிரகமாக இருந்தால் முழுமையாக கெடுபலனைச் செய்யாது. அதாவது, லக்னப்படியும், ராசிப்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருந்து அதன் தசை நடக்கும் போது அந்த கிரகத்தின் தசை பிரமாதமான அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும்.
லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்க அந்த கிரகம் விதிக்கப்பட்டிருந்தால் அதன் தசையில் 60 சதவிகித நன்மைகள் நடக்கும். லக்னம், ராசி இரண்டின்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு தீமை செய்ய வேண்டிய அமைப்பு இருந்தால் நிச்சயம் அதன் தசையில் கெடுபலன்கள்தான் நடக்கும் என்று கண்களை மூடிக் கொண்டு பலன் சொல்லி விடலாம்.
சரி…….. ராசிப்படி பலன்கள் சொல்லப்படும் வழக்கம் எப்படி வந்தது? லக்னம் என்பது தோராயமாக இரண்டுமணி நேரத்திற்கு ஒரு முறை மாறக்கூடியது. ராசி என்பது ஏறத்தாழ இரண்டு நாள் உடையது என்று முன்பே சொன்னேன்….
நேரத்தை அளவிடும் துல்லியமான கருவிகள் கண்டுபிடிக்கப்படாத முன் காலத்தில், அல்லது நேரக்கருவிகள் பாமரமக்கள் உட்பட அனைவரிடமும் போய்ச் சேராத அந்தக் காலத்தில் சமுதாயத்தின் மேம்பட்ட நிலையினரான அரசகுடும்பத்தினர், மந்திரிகள், தளபதிகள், பணக்காரர்கள் போன்ற உயர் அந்தஸ்து கொண்டவர்களுக்கு மட்டுமே துல்லியமாக நேரக்கணக்கை கணித்து லக்னப்படி பலன் பார்க்கப்பட்டது.
சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கு ஒருநாள் முழுவதும் ஒரு நட்சத்திரமும் இரண்டு நாட்கள் வரை ஒருவரின் ராசியும் இருக்கும் காரணத்தால் ராசி அல்லது நட்சத்திரத்தை வைத்தே தோராயமான பலன்கள் ஜோதிடர்களால் சொல்லப்பட்டன.
அதன்படியே தற்போது வழிவழியாக வரும் மரபுப்படி பெரும்பாலானவர்களுக்கு பொதுப்பலன்களாக ராசிப்படி பலன்கள் சொல்லப்படுகின்றன. தற்போது கடிகாரங்கள் எல்லா இடங்களிலும் புழக்கத்திற்கு வந்து விட்டதாலும், மக்களிடமும் குழந்தை பிறக்கும் சரியான நேரம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாலும் லக்னப்படி பலன் அறிவதே சரியானதும், துல்லியமானதும் ஆகும்

ஜோதிடத்தில் ராசியா.. லக்னமா எது முக்கியம்?

ஜோதிடத்தை நம்புபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது!
உங்களுடைய ராசி என்ன? என்று கேட்டால் `பளிச்’ சென்று பதில் சொல்லும் ஒருவரிடம் அவரது லக்னம் என்ன? என்று கேளுங்கள். சற்றுத் திணறுவார். ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களே சமயத்தில் லக்னத்தின் முக்கியத்துவத்தை உணருவதில்லை.
ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பதுதான் உயிர். ராசி என்பது உடல்தான். லக்னம் ஒன்றுதான் ஒருவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவருடைய முழு வாழ்க்கையிலும் அவருக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ஆதாரத்தூண் போன்றது.
ராசி என்பது லக்னத்திற்கு துணை செய்யும் ஒரு அமைப்புத்தான்.. அப்படியானால் இத்தனை சிறப்பு மிக்க லக்னத்தை ஒருவர் நினைவில் கொள்ளாமல் ராசியைத்தானே தெரிந்து வைத்திருக்கிறோம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி போன்ற பிற ஊடகங்களும் ராசிபலன்தானே வெளியிடுகின்றன?
லக்னபலன் வெளியிடுவதில்லையே அது ஏன்? லக்னம் ராசி இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்தான் என்ன? நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி அளவு கொண்ட வான்வெளியை பனிரெண்டு சமபங்குள்ள தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாகப் பிரித்த நமது ஞானிகள் அவற்றிற்கு மேஷம், ரிஷபம், மிதுனம் என பனிரெண்டு பெயர்களையும் சூட்டினார்கள்.
இவை பொதுவான ராசி வீடுகள். நீங்கள் பிறந்த நேரத்தில் பூமியின் கிழக்கு வானில் இவற்றில் எந்த ராசி உதயமானதோ, அதாவது பூமியின் சுழற்சிப் பாதையின்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ அந்த ராசி வீடே ஒரு மனிதனின் லக்னம் எனப்படுகிறது.
அதாவது பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்வதால் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருப்பவருக்கு தோராயமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியும் மாறுவது போன்ற தோற்றம் இருக்கும்.
எனவே பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை லக்னம் மாறிக் கொண்டே வரும். அதாவது ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் அடுத்தடுத்த லக்னங்களில் மனிதர்கள் பிறப்பார்கள்.
உதாரணமாக சென்னையில் ஒரு குறிப்பிட்ட இரண்டுமணி நேரத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் ஒரே லக்னம் ஒரே ராசியில்தான் பிறக்கும்.
எடுத்துக்காட்டாக மிதுன லக்னம், தனுசு ராசி என்றால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அதனையடுத்த கடக லக்னம், தனுசு ராசி என்றும் அதனையடுத்து சிம்ம லக்னம், தனுசு ராசி என்றும் பிறக்கும். அதே நேரத்தில் ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்கு பின்னால் இந்த பனிரெண்டு ராசிகளில் எந்த ராசி இருக்கிறதோ அதுவே அந்த ஜாதகரின் ராசி எனப்படுகிறது.
லக்னத்தின் அளவு தோராயமாக இரண்டுமணி நேரம் என்பதைப் போல ராசியின் அளவு சுமாராக இரண்டேகால் நாள் இருக்கும். ஒரு ராசியில் இரண்டேகால் நட்சத்திரங்கள் அடங்கியுள்ளபடியால், சந்திரன் தோராயமாக ஒருநாள் முழுவதும் ஒரே நட்சத்திரத்திலும், இரண்டு நாட்கள் ஒரே ராசியிலும் இருப்பார்.
பத்திரிகை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வரும் பொதுவான ராசிபலன் என்பது உங்களின் தோராயமான பொதுப்பலன்தான். அவை துல்லியமானவை அல்ல. இந்த ராசிபலன்கள் உலகில் உள்ள ஒட்டு மொத்தமான அனைவரையும் பனிரெண்டு பகுதிகளாகப் பிரித்து சொல்லப்படுபவைதான்.
இவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பலிக்கும் என்பது நிச்சயம் அல்ல. பலிக்கவும் செய்யாது. ஆனால் லக்னப்படி பலன்கள் என்பது அப்படி அல்ல. அந்த பலன்கள் பிறந்த ஜாதகப்படி கிரகங்கள் அமைந்த விதத்தைத் கொண்டு ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனித்தனியாக சொல்லப்பட வேண்டும் என்பதால் ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் 70 சதவிகிதம் வரை துல்லியமான பலன்களைச் சொல்ல முடியும்.
லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றவைதான். இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல முடியும். சொல்லவும் வேண்டும். அப்போதுதான் அது முறையான ஜோதிட பலன்களாக இருக்கும்.
அது ஏனெனில் லக்னப்படி ஒரு கிரகம் ஒருவருக்கு கெட்டபலன் அளிப்பதாக இருந்தாலும் அவர் பிறந்த ராசிப்படி அந்தக் கிரகம் யோகக்கிரகமாக இருந்தால் முழுமையாக கெடுபலனைச் செய்யாது. அதாவது, லக்னப்படியும், ராசிப்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருந்து அதன் தசை நடக்கும் போது அந்த கிரகத்தின் தசை பிரமாதமான அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும்.
லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்க அந்த கிரகம் விதிக்கப்பட்டிருந்தால் அதன் தசையில் 60 சதவிகித நன்மைகள் நடக்கும். லக்னம், ராசி இரண்டின்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு தீமை செய்ய வேண்டிய அமைப்பு இருந்தால் நிச்சயம் அதன் தசையில் கெடுபலன்கள்தான் நடக்கும் என்று கண்களை மூடிக் கொண்டு பலன் சொல்லி விடலாம்.
சரி…….. ராசிப்படி பலன்கள் சொல்லப்படும் வழக்கம் எப்படி வந்தது? லக்னம் என்பது தோராயமாக இரண்டுமணி நேரத்திற்கு ஒரு முறை மாறக்கூடியது. ராசி என்பது ஏறத்தாழ இரண்டு நாள் உடையது என்று முன்பே சொன்னேன்….
நேரத்தை அளவிடும் துல்லியமான கருவிகள் கண்டுபிடிக்கப்படாத முன் காலத்தில், அல்லது நேரக்கருவிகள் பாமரமக்கள் உட்பட அனைவரிடமும் போய்ச் சேராத அந்தக் காலத்தில் சமுதாயத்தின் மேம்பட்ட நிலையினரான அரசகுடும்பத்தினர், மந்திரிகள், தளபதிகள், பணக்காரர்கள் போன்ற உயர் அந்தஸ்து கொண்டவர்களுக்கு மட்டுமே துல்லியமாக நேரக்கணக்கை கணித்து லக்னப்படி பலன் பார்க்கப்பட்டது.
சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கு ஒருநாள் முழுவதும் ஒரு நட்சத்திரமும் இரண்டு நாட்கள் வரை ஒருவரின் ராசியும் இருக்கும் காரணத்தால் ராசி அல்லது நட்சத்திரத்தை வைத்தே தோராயமான பலன்கள் ஜோதிடர்களால் சொல்லப்பட்டன.
அதன்படியே தற்போது வழிவழியாக வரும் மரபுப்படி பெரும்பாலானவர்களுக்கு பொதுப்பலன்களாக ராசிப்படி பலன்கள் சொல்லப்படுகின்றன. தற்போது கடிகாரங்கள் எல்லா இடங்களிலும் புழக்கத்திற்கு வந்து விட்டதாலும், மக்களிடமும் குழந்தை பிறக்கும் சரியான நேரம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாலும் லக்னப்படி பலன் அறிவதே சரியானதும், துல்லியமானதும் ஆகும்