jaga flash news

Monday 9 June 2014

புற்றுநோயைத் தடுக்கும் மிளகு

காரத்துக்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு. அது பல அரிய மருத்துவ குணங்களையும் கொண்டது. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்…
மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின்படி மார்பகப்புற்றுநோய் மற்றும் புற்றுக் கட்டிகள் வளர்ச்சியை மிளகு தடுக்கிறது. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோட்டின்கள் மற்றும் பிற சத்துக்கள் நமக்கு பாதுகாப்புக் கவசங்களாகத் திகழ்கின்றன.
சருமப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.
நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
மிளகு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நாக்கின் ருசி ஆதாரங்களைத்தூண்டிவிட்டு வயிறு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம் தான் செரிமானத்துக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஜீரணம், வயிற்றுப்போக்கு மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.
நாம் எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் கருமிளகு அதன் ஊட்டச்சத்துகளைக் கிரகிக்கும் தன்மை கொண்டது. மேலும் மிளகின் புற அமைப்பு, கொழுப்புச் செல்களைச் சிதைக்கிறது. இதனால் உடல் பருமனாவதையும் தடுக்கலாம். மேலும் உடல் வியர்வையை அதிகரிக்கிறது. சிறுநீர்சீராக வெளியேற உதவிபுரிகிறது. இதனால் உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப் பொருட்களை அது வெளியேற்றுகிறது. இவைதான் உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும்.
சரியாக செரிமானமாகாமல் அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை கருப்பு மிளகு பெரிதும் குறைக்கிறது. மிளகாய்ப்பொடிக்கு பதிலாக மிளகுப்பொடியைப் பயன்படுத்துவது நல்லது.
கருப்பு மிளகை நன்றாகப் பொடி செய்து ஒரு கப் தயிருடன் கலக்கவும். இந்தக் கலவையை தலையில் நன்றாக பரவரலாகத் தடவவும். அரை மணிநேரம் கழித்து தலை முடியை நன்றாக அலசவும். இப்போது ஷாம்பூ போட்டு குளிக்கவும். இப்டிச் செய்வது, தலைப் பொடுகைப் போக்கும்.
கருமிளகு, மனச்சோர்வையும், களைப்பையும் போக்குகிறது. மூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment