jaga flash news

Friday 27 June 2014

சிவசக்தி

சிவசக்தி
சூரியனில் இருந்கு ஒளியையும் ஒளியிலிருந்து சூரியனையும் பிரிக்க இயலாது. ஆகையால் சூரியன் இல்லாமல் ஒளியில்லை, ஒளியில்லையேல் சூரியன் இல்லை. அதுபோலத் தன்னிலையில் "சிவனே" என்றிருப்பதை சிவம் என்கிறோம், அந்த சிவனது ஆற்றலை நம்மை நோக்கி இறங்கும் ஆற்றலை அந்த கருனையை நாம் சக்தி (பரா சக்தி ) என்கிறோம். சிவனை ஆணாகவும், அவன் சக்தியை பெண்ணாகவும் உருவகித்து நாம் வணங்குகிறோம். ஆகச் சிவன் இன்றி சக்தி யில்லை / சக்தி இன்றி சிவன் இல்லை. இரண்டும் ஒன்றாகி பிரிவினை இல்லாத பொருள்தான். ஆண்,பெண் என்ற வேறுபாடு ஏதும் இல்லை.
சிவனும் சக்தியும் தன்னுள் பிரிப்பில்லாதது என்பதை " பின்னம் இலான் எங்கள் பிரான் " என்று திருவருட் பயன் கூறுகிறது. நாம்வழிபடும் சிவலிங்கத் திருமேனியில் மேலுள்ள இலிங்கத்தை ஆண்பாகமாகவும (சிவன்), கீழுள்ள ஆவுடை பீடத்தை பெண்பாகமாகவும் (சக்தி) ஏற்று வழிபாட்டில் சிவம்,சக்தி இரண்டும் கலந்தே உள்ளன. எனவே சிவத்திற்குள் சக்தியைக் கண்டு வழிபடுகிறோம். இதனை
" மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலை
கண்ணில் நல்அக்துறும் கழமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

ஒரே பரம்பொருளை ஆணாகவும், அவனது பிரிக்கஇயலாத ஆற்றலை இரக்கத்தை அவனது குணத்தை உமையாகவும், உருவகம் செய்து " அந்த நீங்காத கருணையுடன் இறைவன் என்றும் இருப்பதால் நாம்் இந்த மண்ணில் வாழலாம் " எனறு ஞானசம்பந்தர் பாடுகிறார். எனவே சத்தியும் சிவனும் ஒன்று சிவனை வழிபட்டாலே சக்தியின் கருணை நமக்கு கிடைக்கும் என்பதறிக.
 · Comment · Share

No comments:

Post a Comment