jaga flash news

Monday, 9 June 2014

கால்களை குளிர் நீர், சுடுநீரில் கழுவுவதன் மூலம் கிடைக்கும் வியக்கும் நன்மைகள்

குளிர் காலமாகினும், வெய்யிற் காலமாகினும் கால் கழுவும் பழக்கம் கால்களை நேரடியாகப் பராமரிப்பதாக மட்டுமில்லாது, முழு உடலின் ஆரோக்கியத்திலும் மறைமுகமாகத் துணை போவதாக நவீன ஆய்வுகள் கருதுகின்றன.
கால்களைக் கழுவுவதற்குக் குளிர் நீரும், சுடு நீரும் தனித்தனியாகப் பாவிக்கப்படுவதும், அவை மாறி மாறி உபயோகிக்கப்படும் முறைமைகளும் அதற்கமைந்த நன்மைகளைப் பகருமென்கிறது ஆய்வுகள் . சிறிய தொட்டி போன்ற பாத்திரம், அல்லது வாளி இவற்றில் ஒன்றை வசதிக்கேற்ப பாவித்துக் கொள்ள முடியும்.
குளிர் நீர் கொண்டு கால்களைக் கழுவும் முறையானது தலையிடி, உடற் சோர்வு, கடும் வெப்பம் காரணமாக ஏற்படக் கூடிய வேகமான இரத்த ஓட்டம் போன்றவற்றைக் குணப்படுத்துவதிலும், நல்ல தூக்கத்தை ஏற்படுத்துவதிலும், ஈடு இணையற்றதென ஆய்வுகள் கூறுகின்றன.
குளிர்ந்த நீரால் கால்களைக் கழுவிய பின் கால்களைத் துடைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது மிகவும் ஆரோக்கியமானது. குளிர் நீரால் கழுவிய கால்களை இயல்பாய்க் காயவிடுதலும், சிறிது நேரம் நடந்து கொள்வதும் உகந்ததென ஆய்வுகள் கூறுகின்றன.
சுடு நீர் கொண்டு கால் கழுவுவதன் மூலம் கலவரமடைகின்ற மனப் போக்கிலிருந்தும், பதட்ட மடைகின்ற தன்மையிலிருந்தும் விடுபடலாம். 28°C வெப்ப நிலையிலுள்ள நீரில் கால்களை வாளி ஒன்றில் வைத்துக் கழுவுவதனால் 30 நிமிடங்கள் வரையிலும், 36°C வெப்ப நிலையிலுள்ள நீரை உபயோகிப்பின் 15 நிமிடங்கள் வரையிலும் கால்கள் நீரினுள் இருப்பது பலனைத்தரும்.
கால்களை மாறி மாறிச் சுடு நீரிலும், குளிர் நீரிலும் கழுவும் பழக்கமும், இரத்த ஓட்டக் கோளாறுகளை நீக்கி, இருதயத்தின் இயக்கத்திற்குத் துணைபுரிந்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். ஒரு வாளியில் சுடு நீரும், பிறிதொன்றில் குளிர் நீரும் கொண்டு கால்களை மாறி, மாறி வாளிகளுள் 10 நிமிடங்கள் வரை வைத்து எடுப்பதன் மூலம் பலன் பெற முடியும். கழுவி முடியும் சமயம் குளிர் நீரால் இரு கால்களையும் கழுவுதல் வேண்டும்.
கால்களை வாளிக்குள் அல்லது தொட்டிக்குள் வைத்துக் கழுவாது தண்ணீர் ஊற்றிக் கழுவும் சமயங்களில், பின் காலில் தண்ணீர் ஊற்றப் படல் வேண்டும். இப்பகுதியில் இரத்த ஓட்டத் தமனிகள் இருப்பதனால் இரத்த ஓட்டக் கோளாறுகளை குளிர் அல்லது சுடு நீரின் தாக்கம் சீர் செய்யும். பின் காலில் நீர் படாது போகின் இரத்த ஓட்டக் கோளாறு, தலையிடி, பதட்டநிலை போன்றவை தோற்றம் பெற்று நாளடைவில் நிலைத்து விடுமென ஆய்வுகள் கூறுகின்றன.
கால் கழுவும் சமயங்களில் தொடர்ச்சியாகப் பின் காலில் நீர் படாது போகின் மேற்கூறிய கோளாறுகள் உடலில் தொடர்ந்து நிலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். எதுவும் தொடர்ந்து தரிப்பது தரித்திரமாகும். அதாவது “திரம்” என்பது உறுதியாக என்றும், “தரி” என்பது இருத்தல் எனும் பொருள் படும் நிலையில், தரித்திரம் என்பது உறுதியாய் எதிலும் நிலைத்து விடுமென அர்த்தம் தரும்

No comments:

Post a Comment