jaga flash news

Friday, 26 February 2016

சர்ப்ப தோஷம் விலக 8 வெள்ளிக்கிழமை கால பைரவர் வழிபாடு

சர்ப்ப தோஷம் விலக 8 வெள்ளிக்கிழமை கால பைரவர் வழிபாடு
ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது நின்றால் அது சர்ப்ப தோஷம் ஆகும். வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்து புனுகு பூச வேண்டும்; பிறகு நாகலிங்கப்பூமாலை சார்த்தி பால் பாயாசம், பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். யாருக்கு சர்ப்ப தோஷம் இருக்கிறதோ, அவர் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்; அதன்பிறகு, கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும். பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் நிம்மதியும், சிறந்த வாழ்க்கைத்துணையும் அமைந்துவிடும். லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால், அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும். இந்த திசை முழுவதுமே அசைவம், மது, போதைப்பொருட்களை கைவிட வேண்டும். அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தால், ராகு மற்றும் கேதுவால் ஏற்பட இருக்கும் அவமானங்கள் படிப்படியாக விலகிவிடும்.

No comments:

Post a Comment