சாப்பிடுவது எப்படி ..
சமைப்பது எப்படி?' படித்திருக்கிறோம். "சாப்பிடுவது எப்படி?' அதற்கும் சாஸ்திரம் இருக்கிறது.
* பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே போஜனம் செய்ய வேண்டும். சந்தியா காலம், விடியற்பொழுது, நடுநிசி ஆகிய வேளைகளில் எதையும் புசிக்கலாகாது.
* தாமரை இலை தவிர, வேறு எந்த இலையிலும் பின்புறத்தில் சாப்பிடக் கூடாது.
* போஜன காலத்தில் பேசினால், ஆயுள் குறையும்.
* ஈர வஸ்திரத்துடனும், ஒற்றை வஸ்திரத்துடனும் சாப்பிடக் கூடாது.
* மனைவி சாப்பிடும் போது, கணவன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
* பந்தி போஜனம் பண்ணும்போது, முன்னதாக எழுந்து விடலாகாது. அப்படி எழுந்து விட்டால், அந்தப் பந்தியைச் சேர்ந்த மற்றவர்களின் பாவத்தை அவன் அடைய வேண்டும்.
* பழம், பட்சணம் இவைகளைக் குழந்தைகளுக்கு முதலிலும், மற்ற பதார்த்தங் களைப் பெரியவர்களுக்கு முதலிலும் பரிமாற வேண்டும்.
No comments:
Post a Comment