jaga flash news

Saturday, 20 February 2016

சந்திராஷ்டமம்

'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது. ராசிகட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுதான் ஜென்ம
ராசியாகும்.

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம்.ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்.உதாரணமாக மேச ராசிக்கு,விருச்சிக ராசி எட்டாவது ராசியாகும்,விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில்(விசாகம்4,அனுசம்,கேட்டை) சந்திரன் சஞ்சாரம் செய்யும்பொழுது,மேச ராசிக்கு சந்திராஷ்டம் ஆகும்.

தேவையில்லாத அலைச்சல்கள்,வீண் தகராறுகள்,காரியத்தில் தோல்வி போன்றவை ஏற்படலாம்.சந்திராஷ்டம் அன்று அந்த ராசிக்காரர்கள் சுபகாரியங்களை தவிர்ப்பது நன்று.அதேபோல் வாகன பயணங்களை தவிர்க்கலாம்.

ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதேசந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.


நமது ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் உலா வரும் பொழுது, கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. முகூர்த்தம் வைக்கும் பொழுது, தாலி கட்டும் நேரம் சந்திராஷ்டமமாக இருந்தால், குடும்ப ஒற்றுமை குறையும்.

சாந்தி முகூர்த்தம் சந்திராஷ்டம நாளில் இருந்தால், தாம்பத்திய சுகம் குறையும். உடல் நலம் பாதிக்கும். இருப்பினும், விருச்சிகம், கடகம், ரிஷபம் போன்ற ராசிக்களுக்கு நீச்ச உச்ச, சொந்த வீட்டுக்காராக சந்திரன் இருப்பதால், அந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிக்காது என்று சொல்வர்.

இருப்பினும், சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.

மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து, சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம்.

மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம்.

கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.

கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து, கண்ணபிரானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, சாந்தரூப அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.

தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து, குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மீன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம். வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் அகலும். தக்க விதத்தில் வெற்றியும் வந்து சேரும்.

No comments:

Post a Comment