அக்ஷய திருதியை!!
(செய்யக் கூடாதவை, செய்ய வேண்டியவை)
-------------------------------
இனிய காலை வணக்கம் நண்பர்களே. இன்றைய நாள் இனியதாகுக.
(செய்யக் கூடாதவை, செய்ய வேண்டியவை)
-------------------------------
இனிய காலை வணக்கம் நண்பர்களே. இன்றைய நாள் இனியதாகுக.
இன்று அக்ஷய திருதியை. அதாவது சித்திரைமாதம் அமாவாசை சென்ற மூன்றாம் நாள். இன்று பலரும் தங்கம், வெள்ளி,..... வாங்குவத்தின் மும்முரமாக இறங்கியிருப்பீர்கள். ஆனால் அவ்வாறு வாங்குவது, உங்களுக்கு எதிர்பலனையே அளிக்கும் என்பதனை அறிவீர்களா நீங்கள்!!!
அக்ஷய திருதியை ஒரு அற்புதமான முகூர்த நாள், அன்று தங்கம் வாங்கினால் வருடம் முழுதும் செல்வம் செழிக்கும் என்று வியாபார உக்தியால் பலர் கூறுவதைக்கேட்டு இன்று நம் மக்கள் ஏமாந்துகொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் அக்ஷய திருதியை முகூர்த நாள் கிடையாது. இன்று அருமையான "புண்ய கால தினம்"
புண்ய காலம் என்றால் என்ன?
கிரகண புண்ய காலம், மாதப்பிறப்பு புண்ய காலம் போன்று, நம் மூதாதையரை முன்னிறுத்தி, பித்ரு கார்யங்கள் செய்வதனால் நமக்கும் நம் சந்ததியருக்கும், நன்மை பல சேரும் நாள் புண்ய காலம் ஆகும்.
கிரகண புண்ய காலம், மாதப்பிறப்பு புண்ய காலம் போன்று, நம் மூதாதையரை முன்னிறுத்தி, பித்ரு கார்யங்கள் செய்வதனால் நமக்கும் நம் சந்ததியருக்கும், நன்மை பல சேரும் நாள் புண்ய காலம் ஆகும்.
புண்ய கால தினங்களில் பொருட்கள் வாங்குவதோ விற்பதோ கூடவே கூடாது. அன்றைய தினம் முழுவதுமே முன்னோர் வழிபாட்டிற்கும், ஆலயம் தொழுதல், வழிபாடு செய்தல், முயன்ற அளவிற்கு இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்தல் முதலிய தெய்வீக சிந்தனையில் திளைக்கவேண்டிய புண்ணிய நாள் இன்று. ஆனால், விளம்பரதாரர்கள் கூறுவதைப்போல தங்கம் வாங்கினால், செல்வத்திற்கு பதிலாக தோஷமே வந்து நம்மை சேரும்.
புண்ய காலங்களில் வழிபாட்டைக்காடிலும் தானம் சிறந்த பலனை தரும். உப்பு, சர்கரை, அரிசி, மல்லிகைப்பூ போன்ற வெள்ளை நிரப்பொருட்களை தானம் செய்வது மிகவும் உயர்வு.
ஏழைகளுக்கும், முதியவருக்கும், குழந்தைகளுக்கும், வரியவருக்கும் அன்னதானம் செய்வது பல யாகங்களை நிகழ்த்தியதற்கு சமமாகும்.
நம் தமிழகத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகவே மக்களுக்கு நீர்மோர், நீர், முதலிய தாகசாந்திக்கு உதவினால் அனைத்து தெய்வங்களும் வரங்களை உங்கள் இல்லம் தேடிவந்து அருளுவர்.
இது சத்தியம்!!!
ஏழைகளுக்கும், முதியவருக்கும், குழந்தைகளுக்கும், வரியவருக்கும் அன்னதானம் செய்வது பல யாகங்களை நிகழ்த்தியதற்கு சமமாகும்.
நம் தமிழகத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகவே மக்களுக்கு நீர்மோர், நீர், முதலிய தாகசாந்திக்கு உதவினால் அனைத்து தெய்வங்களும் வரங்களை உங்கள் இல்லம் தேடிவந்து அருளுவர்.
இது சத்தியம்!!!
This comment has been removed by the author.
ReplyDeleteMon. 23, Mar. 2026 at 1.10 pm.
ReplyDelete*அக்ஷய திருதியை (திரேத யுகாதி):*
திரேதா யுகம் ஆரம்ப நாள் தான் திரேத யுகம் எனப்படும். அந்த நாளில்தான் *பரசுராமர்* அவதரித்தார்.இந்த சுப நாளானது வைசாக மாதத்தில், வளர்பிறை திருதியை அன்று வரக்கூடியது.
இதுவே *அக்ஷய திருதியை* ஆகும். இந்தத் திதியானது அன்றைய தினத்தில் மதியம் வரை இருக்க வேண்டும்.
அன்று துதியையின் வேதை இருக்கக் கூடாது. அதாவது சூரிய உதயத்தில் துவிதியை திதி இருக்கக் கூடாது.
யுகங்கள் 4-வகைப்படும். அவை :
1.கிரேதா யுகம் 2. திரேதா யுகம் 3. துவாபர யுகம் 4. கலியுகம்.
ஒவ்வொரு யுகமும் ஆரம்பிக்கும் நாளே 'யுகாதி' என்பது. அதுபோல் ஒவ்வொரு யுகமும் முடிவடையும் நாளே 'யுகாந்தம்' எனப்படும்.
இந்த வைசாக சுத்த திருதியை அன்று கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் - 5
அவை எதுவெனப் பார்ப்போம்...
1.கிருத யுகாதி 2. பார்த்திவ யகல்பாதி 3. அக்ஷய திருதியை 4. பரசுராம ஜயந்தி 5. பலராம ஜயந்தி.
கிருத யுகாதி என்பது - வைசாக சுத்த திருதியை. அதாவது வைசாக மாதம் வளர்பிறைத் திருதியை தான் 'கிருத யுகாதி' எனப்படும்.
கிருதய காந்தம் என்பது - சூரியனானவன் சிம்மத்தில் சங்கிரமிக்கின்ற காலமே கிருத யுகாந்தம் ஆகும். சுருக்கமாக.. சூரியன் சிம்ம ராசியில் நுழையும் காலம் *கிருத யுகாந்தம்* எனப்படும்.
திரேத யுகாதி என்பது...
கார்த்திகை சுத்த நவமி *திரேத யகாதி* ஆகும்.
திரேத யுகாந்தம் என்பது - சூரியனானவன் விருச்சிகத்தில் சங்கிரமிக்கும் காலம் திரேத யுகாந்தம் ஆகும்.
துவாபர யுகாதி என்பது - பாத்திரபத பகுளத் திரயோதசி துவாபர யுகதி ஆகும்.
துவாபர யுகந்தம் என்பது - சூரியன் ரிஷபத்தில் சங்கிரமிக்கும் காலம்.
கலி யுகாதி என்பது - மாக சுத்தப் பௌர்ணமி கலியுகாதி ஆகும்.
கலி யுகாந்தம் என்பது - சூரியன் கும்பத்தில் சங்கிரமிக்கும் காலம் கலி யுகாந்தம்.
நரசிம்ம ஜயந்தியானது - வைசாக சுத்தத் திரயோதியன்று கொண்டாடப் படுகிறது.
சுத்த மாதம் என்பது - மாதம் என்பது - ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை பிரதமையன்று சாந்திரமான மாதம் துவங்கும். இந்த வளர்பிறை பிரதமை முதல் பௌர்ணமி வரையே சுத்தமாதம் எனப்படும்.
பகுள மாதம் என்பது - தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை பகுள மாதம் எனப்படும் பிரதமை முதல் அமாவாசை வரை பகுள மாதம் எனப்படும்.
இவ்வாறு எல்லாவிதமான விரதங்கள், பண்டிகைகள், ஜயந்திகள், கல்பாதி மன்வாதி புண்ணிய தினங்கள் என அனைத்தமே சாந்திரமான கணக்குப்படிதான் கொண்டாடப்படுகிறது.
சாந்திரமான மாதம் என்பது - 12-மாதங்களைக் கொண்டதாகும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை பிரதமையில் ஆரம்பித்து அமாவாசை வரை நடக்கும். இந்த 12 மாதங்களும் அந்தந்த மாதத்தில் வரும் பௌர்ணமியில் இருக்கும் நட்சத்திரத்தைக் கொண்டே அழைக்கப்படுகிறது.
12-மாதங்கள மற்றும் அதனதன் நாட்களும் பற்றிப் பார்க்கலாம்...!
1. சைத்ரம் - 30 நாட்கள்
2. வைசாகம் - 31 நாட்கள்
3. ஜேஷ்டம் - 31 நாட்கள்
4. ஆஷாடம் - 31 நாட்கள்
5. சிராவணம் - 31 நாட்கள்
6. பாத்ரபதம் - 31 நாட்கள்
7. ஆஸ்வினம் - 30 நாட்கள்
8. கார்த்திகம் - 30 நாட்கள்
9. மார்க்கசிரம் - 30 நாட்கள்
10. புஷ்யம் - 30 நாட்கள்
11. மாகம் - 30 நாட்கள்
12. பால்குணம் - 30 நாட்கள்
இவ்வாறாக சக வருடம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால்... காளிதாசர் நூலில் தவறான பண்டிகை நிர்ணயித்துள்ளார். ஏன் என்று தான் புரியவில்லை.
அறிந்தவர்கள் தெரியப்படுத்துங்களேன்..
Sivajansikannan40@gmail.com