
எலிசபெத் பாத்தரி 1560 இல் பிறந்து 1614 இல் இறந்துபோன கவுண்டெஸ் எலிசபெத் பெத்தோரி டி எக்ஸெட் ஹங்கேரி இராச்சியத்தில் புகழ்பெற்ற பெத்தோரி குடும்பத்தின் பிரபுக்களின் கவுண்டஸ் ஆவார். இவர் எத்தனை பேரை கொலை செய்தார் என்பது இன்றும் விவாதத்திற்கு உரிய ஒன்றாக இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 650 பெண்களை கொலை செய்ததாக கூறப்படுகிறது.வரலாற்றின் மிகப்பெரிய பெண் தொடர் கொலையாளி என்ற பெருமை இவர்களையே சேரும். கடுமையாக அடித்தல், எரித்தல், உடல் பாகங்கள் சிதைப்பது, முகத்தை நசுக்கிக் கொல்வது போன்றவற்றால் விவசாயப் பெண்களைக் கொன்றார். மேலும் கன்னிப் பெண்களின் இரத்தத்தில் குளிக்கும் வழக்கமும் இவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது. தனது சருமம் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கொலைகளை அவர் செய்தார். இவர் வீட்டுக் காவலில் இருந்தார், இவருடைய அந்தஸ்தின் காரணமாக இறுதிவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.
No comments:
Post a Comment