jaga flash news

Tuesday 9 June 2020

ஆறு சமயம்

இந்து மதம் என்பது ஒரே கடவுள் கொண்ட தனி மதம் அல்ல..அது ஒரு கூட்டுக்குடும்பம் மாதிரி....நிறைய உட்பிரிவு மதங்கள் உண்டு....அவை ஆறு சமயம் எனப்படும்..சிவனை மட்டும் கும்பிடுவோர் சைவ மதம் எனப்படுவர்.பெருமாளை மட்டும் வழிபடுவோர்
வைணவம் எனப்படுவர்..எல்லா சாமிகளையும் கலந்து கட்டி கும்பிடுவோர் ஸ்மார்த்தம் எனப்படுவர்.இந்த ஆறு சமயத்தவர்களையும் தனிதனியே குறிப்பிடுவதில் குழப்பமாகி ஆங்கிலேயர்களும் வெளிநாட்டவர்களும் மொத்தமாக இந்து மதம் என என குறிப்பிட்டனர்..

சைவம் - 
 சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.

வைணவம் - விஷ்ணுவையும் அவரது பத்து அவதாரங்களையும் வணங்கும் சமயப் பிரிவு.

சாக்தம் - 
சக்தியை வணங்கும் சமயப் பிரிவு.
கௌமாரம் -
 முருகனை வணங்கும் சமயப் பிரிவு (குமரனை வணங்குவது கௌமாரம்).
சௌரம் - 
சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.

காணாபத்தியம் - விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.

ஸ்மார்த்தம் -
 சிவன், சக்தி, விஷ்ணு, கணேசர், சூரியன் மற்றும் முருகனை வணங்கும் சமயப் பிரிவு




No comments:

Post a Comment