jaga flash news

Sunday 20 September 2020

இஸ்ரேல் மக்கள் ஏன் அதி புத்திசாலிகளாக இருக்கிறார்கள்..?

இஸ்ரேல் மக்கள் ஏன் அதி புத்திசாலிகளாக இருக்கிறார்கள்..? உலகின் முக்கிய கண்டுபிடிப்புகள் 90 சதவீதம் ஏன் அவர்களால் மட்டும் சாத்தியம் ஆனது..?உலகின் அதிக பட்டதாரிகள் கொண்ட நாடாக இருக்க காரணம் என்ன..?

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள்.

கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.

உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.

முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்கிறார்கள்.

இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.

யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும் மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.

Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு

No comments:

Post a Comment