jaga flash news

Saturday 19 September 2020

லக்னம் ,லக்னாதிபதியின் வலிமை...

லக்னம் ,லக்னாதிபதியின்
__________________________
வலிமை
________

1) லக்னம் லக்னாதிபதி உங்களை குறிக்கும். லக்னம் ,லக்னாதிபதி வலுவாக இருந்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். லக்னம் வலுத்தவன் தான் பணக்காரன், லட்சாதிபதி,கோடீஸ்வரன்.
லக்னம் எந்தளவுக்கு எவ்வளவு க்கு எவ்வளவு வலுத்திருக்கிறதோ, உயர்வாக உள்ளதோ அந்தளவுக்கு ஜாதகனது உயர்வு இருக்கும். அதாவது வெள்ளத்தனையது மலர்நீட்டம் என்பது போல

2) எந்த ஒரு யோகமுமே லக்னம், லக்னாதிபதியோடு சம்பந்தப்படும்போது மட்டுமே அந்த யோகம் முழு அளவுக்கு யோகத்தை தரும். அதாவது 100/100

3)லக்னம் சுத்தமாக எந்த ஒரு கிரகமும் இல்லாமலும், பார்க்காமலும் இருக்க லக்னம் வலுவாக இருக்குது என்று அர்த்தம். அதாவது 2,7,8 சுத்தம் என்பார்களே அதுபோல

4)அப்படி கிரகம் இருந்தால் என்ன செய்வது என்றால் வளர்பிறை சந்திரன், குரு,சுக்கிரன், தனித்த புதன் போன்ற கிரகங்கள் இருக்கலாம், பார்க்கலாம்.
அப்போது லக்னம் வலுவாக, புஷ்டியாக உள்ளது என்று அர்த்தம்.

5)லக்னத்தில் ஆட்சி, உச்சம் ,நட்பு,பெற்ற கோள்கள் இருந்தால் லக்னம் வலுவாக உள்ளது என்று அர்த்தம்.

6)லக்னாதிபதி கேந்திரம், திரிகோணங்களில் இருந்தால் லக்னம் வலுப்படும்.இதிலும் ஒரு நுணுக்கம் என்னவென்றால் லக்னாதிபதி சுபகிரகமாக இருந்தால் திரிகோணங்களிலும் ,லக்னாதிபதி பாவராக இருந்தால் கேந்திரங்களிலும் நிற்க வேண்டும்

7) லக்னம்,லக்னாதிபதி லக்ன யோகாதிபதிகளின் சாரம் பெறவேண்டும். லக்ன யோகாதிபதிகள் லக்னாதிபதியின் நண்பர்களாகவே வருவார்கள். இதன் மூலம் லக்னம் ,லக்னாதிபதி வலுப்பார்.

8) லக்னம் சுபராசிகளில் அமையவேண்டும். சுபராசிகள் எவை?
ரிஷபம், மிதுனம், கடகம்,கன்னி, துலாம், தனுசு, மீனம் .

9)லக்னம், லக்னாதிபதி ராசி மற்றும் அம்சத்திலும் ஒரே ராசியில் இருந்து லக்னம், லக்னாதிபதி வர்கோத்தமம் அடைவது. இதன் மூலம் லக்னம் புஷ்டியை அடையும். பலத்தை அடையும்.

10)லக்னத்திற்கு இருபுறமும் சுபர்கள் இருப்பது சுப கர்த்தரி யோகம் என்று அழைக்கப்படும்.இதன் மூலம் லக்னம் பலத்தை அடையும்.

11)லக்னாதிபதியை ,லக்னத்தை ஆதிபத்தியம் விஷேஷம் உள்ள குரு பார்ப்பது லக்னம் பலத்தை அடையும்.

12) லக்னாதிபதி சுபத்தன்மை அடைந்து தன்னுடைய வீட்டை தானே பார்ப்பதாலும் லக்னம் பலத்தை அடையும்.

13) லக்னாதிபதி எந்த வீட்டுக்கு போறாரோ அந்த வீட்டை வாழவைப்பார். ஒரு பாவம் வலுப்பெற வேண்டும் என்றால் அந்த வீட்டில் லக்னாதிபதி அமர வேண்டும்.

14)லக்னத்தில் நிற்கும் கிரகத்தின் குணம், லக்னாதிபதி எந்த கிரகமோ அந்த கிரகத்தின் குணம் ,லக்னத்தை பார்த்த கிரகத்தின் குணம் ஜாதகருக்கு இருக்கும்.

15) லக்னாதிபதி திக்பலத்தோடு இருப்பது லக்னத்தின் பலத்தை கூட்டும்.

16)லக்னாதிபதி,லக்னம் அம்சத்திலும் சுபத்தன்மை அடையவேண்டும்.

17)லக்னத்தின் காரக கிரகம் சூரியன் ஆவார். அதாவது சூரியன் தான் ஆத்ம காரகன்.எனவே சூரியன் நன்றாக இருந்தால் சூரியன் சுபத்தன்மை பெற்று காணப்பட்டால் லக்னம் வலுப்பெறும்.

18)லக்னாதிபதி உபயம லக்னங்களுக்கு அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் 3,6,12 ல் நட்பு பெற்று மறைவது லக்னம் புஷ்டியை அடையும்.

19) லக்னாதிபதியின் தசாக்காலங்களில் நன்மைகள் இருக்கும். பொதுவாக கெடுதல்கள் இருக்காது.

20) லக்னம் வலுத்தவனே அதிர்ஷ்டசாலி..லக்னம் வலுவாக இருந்தால் ஜாதகம் வலுவாக இருக்கும்.
ஜாதகம் வலுவாக இருந்தால் நீங்கள் பலமாக இருப்பீர்கள். லக்னம் ,லக்னாதிபதி,சூரியன் கெட்டு விட்டால் வாழ்க்கை பெரிய போராட்டமாக மாறிவிடும். சாண் ஏறினால் முழம் சறுக்கும். வாழ்க்கை யுத்த களம்.
எதுவுமே ஈசியாக கிடைக்காது.
போராடி போராடித்தான் எதையுமேஅடையமுடியும்.
வெற்றி என்பது கானல் நீராக இருக்கும்.
திருமணம், குழந்தை பாக்கியம் ,வீடு ,உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்கு கூட அவர்கள் போராட வேண்டியது வரும். எல்லாமே தாமதமாகத்தான் கிடைக்கும்..

21)லக்னாதிபதி நீசமாகிவிட்டால் அவர் முறையான நீசபங்க ராஜயோகத்தை அடைய வேண்டும். அப்போது அது உச்சத்துக்கு மேலான பலனைத்தரும். ஆனால் வாழ்வின் முற்பகுதிகளில் போராட்டமும் பிற்பகுதியில் உயர்வையும் தரும் யோகம் இது. வாழ்வின் இரண்டாவது பகுதியில் நன்றாக இருப்பார்கள்.

22)லக்னம் , லக்னாதிபதி புஷ்கர நவாம்சத்தில் இருப்பது அவருடைய தசையில் நன்மையளிப்பதோடு இல்லாமல் லக்னம் பலத்தை அடைய காரணமாக இருக்கும்.

23) லக்னம், லக்னாதிபதி, சூரியன் வலுத்தவர்களுக்கு எப்படியும் உணவு,உடை, இருப்பிடம், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற அடிப்படை தேவைகள் குறித்த நேரத்தில் கிடைத்து விடும்.

24)லக்னம் பலம் பெற்று இருந்தால் ஜாதகன் சாதாரண எளிய ஏழைகுடும்பத்தில் பிறந்திருந்தாலும்
பிற்காலத்தில் மிக உயர்ந்த நிலையை அடைவது திண்ணம்.


No comments:

Post a Comment