jaga flash news

Sunday, 11 October 2020

மனோகாரகன் எனும் சந்திரன்...

மனோகாரகன் எனும் சந்திரன்...

சந்திரன் சோதிடத்தில் மிக முக்கிய கிரகமாவார், சூரியனுக்கு அடுத்த நிலையில் ஒளியை பரதிபலிப்பவர், சூரியன் ஆத்ம பலம் என்றால் சந்திரன் மனோ பலம், சந்திரனே உடல் காரகர், சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் நிலை நன்றாக இருக்கும், நீர் காரகர் சந்திரன் நமது உடல் 75% நீரால் நிரம்பியது என்பதை மறக்கவேண்டாம், மாத்ருகாரகர் என்பார்கள் சந்திரனை, குழந்தை பாக்கியத்துக்கு சந்திரன் மிக முக்கிய காரகம் வகிக்கிறார், சந்திரன் கெட்டால் அந்த ஜாதகரின் மனம் எப்போதும் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும், சோதிடத்தில் சந்திரன் ராகு/கேதுவை தவிர மற்ற கிரகங்களை நட்பாகவே பாவிக்கிறார், சோதிடத்தில் மிக எளிமையாக ஒரு கிரகத்தின் காரகத்தை வலுப்படுத்த இயலுமென்றால் அது சந்திரன் மட்டுமே, ஏனெனில் சந்திரன் தாய்மையை குறிக்கும், ஒரு தாய் தன் பிள்ளை எவ்வளவு தப்பு செய்தாலும் உதாசீனம் செய்யமாட்டாள், காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதைபோல தாய்க்கு தன் பிள்ளை நல்லவனே, இதனால் தான் விதி, மதி, கதி இம்மூன்றில் சந்திரன் வலுத்தால் அந்த ஜாதகர் பரிகாரம் செய்து தன் வாழ்க்கை நிலையை மேம்படுத்திக்கொள்ள இயலும் என்கின்றனர், ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும், மனிதனாக பிறப்பவன் பல்வேறு கர்மங்களை சுமந்தே பிறக்கிறான், அதில் தீய கர்மத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள சந்திரனின் ஆற்றல் மிக அவசியம், எல்லோரும் கர்மத்தால் பிறக்கிறோம் என்றாலும் அதில் சிலர் வாழ்வில் மிளிர காரணம் என்ன?, சந்திரன் அவரின் ஜாதகத்தில் சாதகமான நிலையில் இருப்பார் அதை சரியான முறையில் அந்த ஜாதகர் தூண்டி (பரிகாரம்) வாழ்வில் மேல்நிலைக்கு வந்திருப்பார் இவ்வாறான ஜாதகர்களை என் அனுபவத்தில் அதிகம் பார்த்ததுண்டு, உடனே பரிகாரம் பொய் என்று கிளம்ப வேண்டாம், நம்பினால் தான் தெய்வம் நம்பிக்கை இல்லை என்றால் அந்த உருவம் வெறும் கல் தான், உங்கள் மனம் பரிகாரம் பொய் என்று கூறுகிறது என்றால் உங்களுக்கு சந்திரன் பாதிக்கப்பட்டுள்ளான் என்று பொருள், பரிகாரம் எப்போதும் பொய்ப்பதில்லை, அதை உரைத்தவர் கூறிய வழிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும், நம்பிக்கையும் அவசியம், கொலை பாதகத்துக்கும் பரிகாரம் உரைப்பதே நம் இந்து மதம் எவ்வாறு?, பிரம்மனின் தலையை கொய்த சிவபெருமான் காசியில் அன்னையின் கையால் அன்னம் பெற்று சாபம் நீங்க பெற்றார் இதன் பெயர் என்ன? பரிகாரம் தான், புராணங்கள் பலவற்றை இவ்வாறு மேற்கோள் காட்ட இயலும், நீங்கள் செய்த பரிகாரம் பலன் தரவில்லை என்றால் அதன் காரணம் இரண்டு, ஒன்று நீங்கள் சரியாக அந்த வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை, இரண்டு கர்ம சோதிடரை இன்னமும் நீங்கள் கண்டடையவில்லை, தெய்வங்கள் சோதனை தராமல் எந்த கர்மத்தையும் கழிக்க வழிகூறாது...

சந்திரன் தாய்காரகன் சந்திர பலத்தை தன் தாயை கவனித்து கொள்வதில் வழியே ஒருவர் எளிதில் பெற இயலும், சந்திரன் பெண் தெய்வங்களை குறிக்கும் இவ்வாறான பெண் சாந்த தெய்வ வழிப்பாட்டின் வழியே சந்திரனை வலுப்படுத்தலாம், பால் அருந்துவது, அரிசி உண்பது இவ்வாறான பல்வேறு வழிகளில் சந்திரனை வலுப்படுத்தலாம், ஆனால் ஒன்று சந்திரனை எவ்வாறு தூண்டி வலுப்படுத்த வேண்டும் என்பதை சோதிடரே நன்கு அறிவார் ஆகவே ஆலோசனை பெறுவது உத்தமம், மனோகாரகன் பாதித்தால் வாழ்க்கையில் என்ன நிலைக்கு சென்றாலும் திருப்தி கிட்டாது, சந்திரன் ஒரு ஜாதகத்தின் 2ம் கண் ஆவார்.

No comments:

Post a Comment