jaga flash news
Sunday 22 November 2020
கருவளையம் நீங்க
கருவளையம் நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள்
மருத்துவ குறிப்பு: 1
தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.
மருத்துவ குறிப்பு: 2
வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
மருத்துவ குறிப்பு: 3
பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.
மருத்துவ குறிப்பு: 4
தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.
மருத்துவ குறிப்பு: 5
வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்து ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் கருவளையம் மறையும்.
மருத்துவ குறிப்பு: 6
பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment