ராகுவின் சுயநலம்..!
தலைப்பே ராகுவை பற்றிய ஒரு புரிதலை தரும் என்று நம்புகிறேன், ராகு ஒரு சுயநலவாதி ஜாதகத்தில் ராகு எங்கு நின்றாலும் ராகுவுடன் இணைந்த கிரகம் அதன் சார்ந்த உறவு ராகுவின் சாரம் பெற்ற கிரகம் இப்படி ராகு தொடர்பு பெற்ற பாவ/கிரக காரக உறவுகள்/பொருள்களில் ஜாதகருக்கு சுயநலம் இருக்கும், ராகு நின்ற வீட்டின் ஆதிபதிய பலனை பெருக்குவார், ராகு தொடர்பு பெற்ற வீடு/கிரகம் அனைத்திலும் தீராத பற்றை தருவார், ராகுவுடன் சந்திரன் இணைந்தால் அந்த ஜாதகருக்கு தன் தாய் தன்னை தவிர யாரிடமும் தனக்கு இணையான அல்லது மிஞ்சிய அன்பை செலுத்துவது பிடிக்காது, குடும்பம்/வருமானம் இவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவார், எப்போதுமே ராகு தருவது அதிக ஆசையே அந்த ஆசையே விட இயலாத அடிமைத்தனத்தை தரும், ராகுவால் ஏற்பட்ட பழக்கத்தை அவ்வளவு எளிதில் விட இயலாது, ராகு நின்ற பாவத்தில் சுய நலத்தை தருவார், தன் நலத்தை தான் ராகு அதிகம் விரும்புவார்...
ராகு ஜாதகத்தில் எங்கே நின்றாலும் நின்ற வீட்டில் ஜாதகருக்கு திருப்தி ஏற்படுவது கடினமே, ராகு ஒன்றை அடையும்வரை அதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்ய தயங்கமாட்டார், அடைந்த பின்பு வேறொன்றை அடைய ஆசையை தூண்டுவார், அப்போது ஏற்கனவே அடைந்ததை அலட்சியம் செய்வார், ராகுவுக்கு எல்லாவற்றின் அதிகம் வேண்டும், தற்பெருமை/புகழ்ச்சிக்கு மயக்குபவர் ராகு, ராகு எதிலும் தன் நலத்தை சார்ந்தே இயக்குவார், பிரற் நலத்திலும் சுயநலம் நிச்சயம் இருக்கும், ராகுவுக்கு அசுபர்களை தான் மிகவும் பிடிக்கும் அவருக்கு நெருக்கமும் கூட, ஆகவே ராகு அசுபரான சனியுடன் இணையும் போது அல்லது சனியின் தொடர்பை பெறும்போது ஜாதகரை இரக்கம் இல்லாமல் செய்து விடுவார், தன் நலத்தில் நாட்டம் அதிகம் கொண்டு அதற்க்காக எந்த கர்மத்தையும் செய்ய ஜாதகர் தயங்குவதில்லை, இதே ராகு சுபருடன் தொடர்பு பெரும் போது தான் ஏதோ பெரிய மஹான் போல் மற்றவருக்கு அறிவுரை கூறியே தன் காரியத்தை சாதித்து கொள்வார், ராகுவுக்கு அனைத்து கேட்ட வழிகளும்/பழக்கங்களும் மிகவும் விருப்பம், ஒருவர் ஜாதகத்தில் ராகு நின்ற வீட்டில் இவைகளை பிரதிபலிப்பார், ராகு ஒருவருக்கு கற்று தரும் படமானது எது சரி என்பதை தவறான பாதையில் பயணம் செய்யவைத்து அதன் வழியே ஜாதகருக்கு ஆசை காட்டி கர்மம் சேர்க்க வைத்து அதிலேயே உழலும் அமைப்பை ஏற்படுத்திவிடுவார் இதை விட்டு ஜாதகர் வெளியேறும் போது தான் தன் தவறையே உணர்வார்கள், குடிப்பவனை குடிப்பது தவறு என்று கூற சொன்னால் அவன் கூறுவான் ஒரு அளவீட்டில் குடித்தால் அது மருத்துவம் என்று, இப்படித்தான் இருக்கும் ராகுவின் அறிவுரையும் தனக்கு என்றால் எல்லாம் சரியே, அதுவே மற்றவருக்கு என்றால் அதில் தனக்கு என்ன சாதகம் என்பதை பொறுத்தே ராகுவின் செயல்பாடு இருக்கும், பொருளாசை அதிகம் உண்டு ராகுவுக்கு ராகு வலுத்து/யோகி என்றானால் அந்த ஜாதகருக்கு பொருளாசை அதாவது பொருள்களின் மீது ஆசை/பற்று அதிகம், அனாவசிய செலவுகளை அனாயசமாக செய்வார், அப்படி செலவு செய்வதை யாராவது சுட்டிக்காட்டினால் அதனை நியாயப்படுத்த அதற்கு தகுந்த வார்த்தைகளை பிரயோகித்து எதிராளியை அடக்குவார், ராகு 2ல் நின்றால் ஜாதகர் பேசி பேசியே காரியம் சாதிப்பார், ராகு எந்த செயலையும் சுற்றத்தரை நினைத்து செய்வதில்லை யார் எப்படி நினைத்தால் என்ன போனால் என்ன, தனக்கு தன் காரியம் நிறைவேறினால் போதும் என்பதே ராகுவின் வாதம், ராகுவால் கனவுகளை தகுதிக்கு மீறி காணவும் முடியும், அதை அடைய எந்த எல்லைக்கு கொண்டு செல்லவும் முடியும், சுய ஜாதகம்/கிரக நிலைகள் .
No comments:
Post a Comment