அசைந்து கொண்டிருப்பவை விட, அசையாமல் ஸ்திரமாய் இருப்பவை பலமானவை. அசைந்து கொண்டிருப்பது கிரகங்கள், அசையாதிருப்பவை நட்சத்திரங்கள். அதனால்தான் ஜோதிடத்தின் வேராக நட்சத்திரங்கள் இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் உறைந்திருக்கும் நட்சத்திர மண்டலங்கள் உங்களை இயக்குகிறது.
ஏன் ராசியை வைத்து மட்டும் கோச்சாரம் பார்க்கப்படுகின்றன என்பது பலருக்கு சந்தேகம். ஜென்ம லக்னம் போல சந்திர லக்னமென்று ஒன்று இருக்கிறது. அது சந்திரனை மையப்படுத்தியே உருவாக்கப்படுகிறது. சந்திரன் அமர்ந்த நட்சத்திரமே நமது ஜென்ம நட்சத்திரம், திசை புத்திகள் கூட சந்திரன் அமர்ந்த நட்சத்திர நாதனை மையமாக்கிய உருவாகி இருக்கிறது. அதுபோல சந்திரனை மையப்படுத்தியே கோச்சார பலன்களும் வருவிக்கப்படுகிறது.
சந்திரன் மட்டுமே பூமி ஈர்ப்பு விசையில் நகரும் கிரகம். மேலும் அதுவே நமது உடல் மற்றும் மனோக்காரகனாக விளங்குகிறது. உடலையும் மனதையும் இயக்குவதால் சந்திரனும் அது அமர்ந்த நட்சத்திரமும் அத்தியாவசிய காரணியாக ஜோதிடம் எடுத்து கொள்கிறது.
லக்னம் என்பது நாம் பிறக்கும்போது சூரிய ஒளி விழுந்த அட்சரேகை தீர்க்கரேகை வெட்டுப்புள்ளி அதை வைத்து பாவகங்கள் மட்டுமே தீர்மானிக்கப்படும். ஆனால் திசா புத்திகளை தீர்மானிக்க ஜென்ம நட்சத்திரமே பிரதானமானது.
No comments:
Post a Comment