jaga flash news
Tuesday 24 November 2020
அற்புத பலன்களை தரும் வில்வப்பழம்.:
அற்புத பலன்களை தரும் வில்வப்பழம்.:
வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும்.
வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் குணமாகும்.
வில்வத் தளிருடன் சிறிது துளசி, சில மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நசித்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.
வில்வ வேர்ப்பொடி நான்கு சிட்டிகையெடுத்து தேனில் கலந்து உட்கொண்டால் உஷ்ணபேதி நிற்கும்.
வில்வ வேர் தூளை நான்கு சிட்டிகையெடுத்து பசும்பாலில் கலந்து ஒரு நாளைக்கு இரு வேளையென தொடர்ந்து பதினெட்டு நாட்கள் உட்கொள்ள உடலழகும் சருமப் பளபளப்பும் மிகும்.
வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும்.
வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம். சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.
வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.
வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment