லஹிரி அயனாம்ச முரண்பாடுகள்
நடைமுறையில் லஹிரி அயனாம்சமே பெரும்பாலான இந்திய ஜோதிடர்களால் (அடியேன் உட்பட) பயன்படுத்துப்படுகிறது. காரணம், N.C.லஹிரி என்கிற ஆங்கிலேயர் Dr.மேகநாத சகாவுடன் சேர்ந்து முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒத்துழைப்போடு 1950ம் ஆண்டு Indian Calendar Reform Committee குழுவாக லகிரி அயனாம்சத்தை வரையறுத்தார். அது தற்கால விஞ்ஞான ரீதியாக இல்லாது, வேத ஜோதிட முறையிலிருந்து சற்று மாறுபட்டு வரையறுக்கப்பட்டதால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. காரணம், சூர்ய சித்தாந்தத்தின்படி ரேவதி (ζ Piscium) நட்சத்திரத்தைக் கணக்கிடாது, சித்திரை (Spica) நட்சத்திரத்தை மேஷாதி புள்ளியிலிருந்து மையப்படுத்தி (180*) வரையறுத்துள்ளார்.
#முரண்பாடுகள்
லஹிரியின் அயனாம்சம் குறித்த மாற்றுக் கருத்துக்கள்:
1. கி.மு.7000 காலத்து மயாசுராவின் பழைய சூர்ய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை என வாக்கியப் பஞ்சாங்க நிபுணர்கள் கூறுகின்றனர் (கி.மு.800 என்பது தவறு)
2. கி.பி. 400-500 காலத்து ஆர்யபட்டா மற்றும் வராகிமிரரின் புதிய சூர்ய சித்தாந்த கணக்கீடுகளுடனும் லஹிரி அயனாம்சம் ஒத்துப்போகவில்லை எனவும் வாக்கியப் பஞ்சாங்க நிபுணர்கள் கூறுகின்றனர்
3. இந்தியக் கணித மேதை Dr.B.V.ராமனின் அயனாம்சக் கோட்பாடும் லஹிரியுடன் ஒத்துப்போகவில்லை
4. "இந்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் வரையறுத்தமையால் அதுவே சரியென ஏற்க இயலாது" என்றும் சிலர் கூறுவர்
5. லஹிரி அயனாம்சத்தை இன்றைய அறிவியல் உலகம் ஏற்கவில்லை. காரணம், NASA வின் புள்ளி விபரத்தோடும் அது ஒத்துப்போகவில்லை
6. லஹிரியின் சொந்த மகனும் அவர் கூறிய கருத்திலிருந்து வேறுபடுகிறார்
7. சித்திரை நட்சத்திரத்திற்கு பதிலாக ரேவதி நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு வரையறுப்பதே சரி என இந்திய ஜோதிடவியல் ஆய்வாளர் Dr.சந்திரஹரி கூறுகிறார்
8. லக்கின சந்தி, ராசி சந்தி மற்றும் நட்சத்திர சந்தியில் பிறந்தோருக்கு லஹிரி அயனாம்சம் துள்ளியமாக இல்லை என ஜோதிடர்கள் சிலர் கூறுகின்றனர்
No comments:
Post a Comment