ஜோதிட குறிப்புகள்
*********
மகர ராசிக்கார்ரகள் வீட்டின் அருகாமையிலேயே தொழில் செய்வார்கள்
விருச்சிகனும், மேஷ ராசிக்காரனும் காலையில் எழுந்தவுடன் "அப்பனே முருகா" என்பர்
எந்த மதக்காரனாக, இருந்தாலும் மிதுன லக்கின, இராசிக்கார்கள் திருப்பதி பகவானை தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டார்கள்
மேஷத்தோனுக்கு நெற்றியிலோ, அல்லது தலையிலோ அடிபட்ட தழும்பு இருக்கும்
திருவோணத்தோனுக்கு பேசும் போது உச்சந்தலையை சொறிவார்கள்
(திருவோணம், குரங்கின் நட்சத்திரம்,
உதா: ரஜினிகாந்த்)
கன்னியில் இராகு இருந்தால் வேற்று மத ,இனத்தவருடன் காதலோ, கள்ள காதலோ வரும்,
துலாம், ரிஷபக்காரன்கள்,காரிகள், அழகான துணை இருந்தாலும் கள்ள காதலில் ஈடுபட ஆசை ஏற்படும்.
உபய, இராசி, லக்கினம்(மீனம், மிது, தனு, கன்னி)திருப்தியான வாழ்க்கை துணை அமையாது.
உடன் பிறப்புகளும் உறுதுணையாக அமையாது.
இருபது வயதினுள் ஏழரை சனி வந்தால்
இரு பாலருக்கும், நீச அமைப்புடையவர்களுடன் கள்ள தொடர்பு, வயது முதிர்ந்த வர்களுடன் தொடர்பு ஏற்படும்.
பெரும்பாலும் ஏழரை நடக்கும்போது தான் விவாஹம் நடக்கும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சனி, செவ்வாய் சேர்ந்து இருந்தால் கண்டிப்பாக அகோர வாகன விபத்து ஏற்படும்.
சனி, சூரி சேர்ந்து இருந்தால் தந்தைக்கும், மகனுக்கும் ஆகாது, ஆனால் தந்தை தொழிலையே மகன் செய்ய வேண்டி வரும்.
குருவை, சந்திரன் பார்த்தாலோ, சேர்ந்தாலோ அது கஜகேசரி யோகம், குரு சந்திர யோகம் என சொல்லுவார்கள்,
ஆனால் உண்மையில் இவர்கள் கோழைகளாக இருப்பர், இவர்களை பின்னால் இருந்து ஊக்கம் கொடுத்தால் மட்டுமே ஜொலிப்பார்கள்.
கும்ப லக்கினக்கார்கள், ஆரம்பத்தில் கோமாளிகளாகத்தான் இருப்பார்கள்
கடகத்தில் குரு உச்சமாக இருந்தால் திடீர் மாரடைப்பு ஏற்படும்.
(உதா;அப்துல் கலாம்)
லக்கினாதி உச்சமாக இருப்பதை விட,ஆட்சியாக இருந்தால் நலம்
உச்சம் அவர் உழைப்பு அடுத்தவருக்காக பெரும்பாலும் பயன் படும்
ஆட்சியாக இருந்தால் அவருக்கு சிறப்பு,
உச்சனை, உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான்.
நீசனை, நீசன் பார்த்தால் நினைத்தெல்லாம் முடிப்பான்
லக்கின கேந்திரம்(முதல் வீடு)
சதுர்கேந்திரம் (நான்கு)
சப்தம கேந்திரம் (ஏழு)
தசம கேந்திரம் (பத்து)
இவை நான்கும் எந்த மனிதனுக்கும் சிறப்பாக அமையாது, அமைந்த்தும் இல்லை,
இதில் கடவுளும், விதிவிலக்கல்ல!
ஜோதிஷனும் விதிவிலக்கல்ல!!
லக்கினத்தில் குரு இருந்தால் ஒரு காலகட்டத்தில் குடும்பத்தை விட்டு விலகி ஆன்மீக வழி செல்வர்
நீர் ராசிகளில் இராகு வெளி நாட்டு பயணம் நிச்சயம்
ஏழரை இளமையில் நடக்கும்போது காதல் தோல்வி ஏற்பட்டு தற்கொலை முயற்சி செய்வர்
ஆனால் சனி கொல்லான்
பெற்ற தகப்பன் சொல்லி கொடுக்காத பாடத்தை சனிபகவான் சொல்லி தருவர்.
ஏழரை சனி ஆரம்பிக்கும் போது காக்கை தலையில் கொட்டி போகவோ, எச்சத்தை கொட்டவோ செய்யும்
பரணி,பூரம், பூராடம் இந்த நட்சத்திரத்தில் குழந்த்தைகள் பிறந்தால் அந்த தசை வரை அப்பனுக்கு கஷ்டகாலம்,
கடைசி பாத தத்தில் பிறந்தால் தப்பிக்கலாம்
இல்லையெனில் இன்னும் ஒரு குழந்தை பிறக்க வேண்டும், அதுவும் அதே சுக்கிரன் நட்சத்திரம் பாதங்களில் பிறந்தால் குழந்தையை தத்து கொடுத்து எடுக்க வேண்டும்.
கடவுளிடம் தத்து கொடுக்க கூடாது,
உடன் பிறந்த சகோதர்களுக்கு,
பெண் ஆனால் சகோதரிக்கு
பிறகு தத்து எடுக்க வேண்டும்.
திருமணம் முகூர்த்தம் முக்கியமில்லை
உடல் உறவு கொள்ளும் சுப நேரம்
மணமக்கள் மன நிலை முக்கியம்
சுக்கிலம் உச்ச கட்ட இன்பத்தை இருவரும் அடையும் போதுதான் வரப்போகும் அந்த உடலில் எந்த ஆத்மா நுழைய வேண்டும் என இறைவன் தீர்மானிக்கிறான்
திருமண பொருத்தம் பார்க்கும் போது ஆயுள் பாவம், தொழில் பாவம் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
பத்தாம் பாவத்தை தீர்மானிப்பது பத்தாம் பாவமல்ல!
இலக்கின பாவம்தான்!
அந்த லக்கின பாவத்தை தீர்மானிப்பத்து, ஐந்தாம் பாவமே!!!!!!!!!
ஒரு ஜாதகத்தை நன்றாக அலசி ஆராய குறைந்த்து ஐந்து மணி நேரம் பிடிக்கும்,
சந்திரன் ஆண் கிரகமா?!
பெண் கிரகமா?!
பெண் கிரகம் என பதில் வரும்!!!!!!
பிறகு ஏன் குருவின் மனைவியை தாராவை சந்திரன் கவர்ந்தார்?!
பெண், பெண்ணை கவர்ந்தாளா?!
அப்படியே கவர்ந்தாலும்(LESBIANS)
எப்படி புதனை பெற்றாள்?!
கிரகங்கள் ஆணோ,பெண்ணோ, அலியோ, இல்லை
அவைகளின் தன்மைகள்,
பகலில் பிறந்தவனுக்கு சூரியன் பித்ரு காரகன்
இரவில் பிறந்தவர்கட்கு சனி பித்ரு காரகன்
பகலில் பிறந்தவர்கட்கு சுக்கிரனே மாத்ரூ காரகன்
இரவில் பிறந்தவர்கட்கு மட்டும் தான் சந்திரன் மாத்ரூ காரகன்.
No comments:
Post a Comment