jaga flash news

Wednesday, 20 February 2013

சிரஞ்சீவி பட்டம்

ராம நவமி நாளில் ஒரு சிறுகதை...
============================
ராவண வதம் முடிந்தது. விபீடணனுக்கு பட்டாபிஷேகம் செய்து அவனை இலங்கையில் அரசனாக்கினான் ராமன். அதோடு கூடவே அவன் நீண்ட நாள் வாழவேண்டும் என்ற வகையில் 'சிரஞ்சீவியாக இரு' என்று வாழ்த்தினான். அவ்வாறு ராமன் வாழ்த்தியபோது அது கேட்டு திடுக்கிட்டாள் சீதை. தயக்கத்துடன் அனுமனைப் பார்த்தாள். அனுமனோ கண்மூடி உள்ளுக்குள்ளேயே ராம ஜபன் பண்ணிக் கொண்டிருந்தான்.

சீதையின் தடுமாற்றத்தை பார்த்த ராமன் குழம்பினான். 'விபீடணன் சிரஞ்சீவி பட்டம் பெற்றதற்கு நீ ஏன் வருத்தப்படுகிறாய்?' என்று சீதையிடமே காரணம் கேட்டார். அதற்கு சீதை தணிந்த குரலில், "நீங்கள் விபீடணனுக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுத்ததில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அசோகவனத்தில் தங்கள் தூதுவனாக வந்து எனக்கு உயிரளித்த அனுமனுக்கு நான் சிரஞ்சீவி பட்டம் கொடுத்தேன். ஒருவேனை அனுமன் அதனால் வருத்தப்படலாம். தனக்கு சமமாக வருவதை அனுமன் விரும்புகிறானோ இல்லையோ?" என்று கூறினாள்.

ராமன் சிறிதும் தயங்காமல் அனுமனிடம் சீதையின் குழப்பத்தை தெரிவித்தான்.

அனுமன் பணிவுடன் பதிலளித்தான்,"ஐயனே, சிரஞ்சீவி என்பவர் யார்? இந்த உலகமே அழிந்தாலும் தான் அழியாதவன். ஒரு காலகட்டத்தில் இந்த பிரபஞ்சமே அழிந்த பிறகு சிரஞ்சீவியான நான் மட்டும் தனித்து இருப்பேன். யாராவது ராம நாமன் சொல்ல அதை காது குளிர, மனம் குளிர கேட்பதுதானே எனது பொழுதுபோக்கு? தனியாய் இருக்கும் எனக்கு இப்போது விபீடணன் துணை என்பதில் மிகுந்த சந்தோஷம். அவர் ராம ஜபம் சொல்ல சொல்ல நான் உள்ளம் உருக கேட்டுக் கொண்டிருப்பேன்."

அனைவரும் நெகிழ்ந்தார்கள்......!

No comments:

Post a Comment