jaga flash news

Monday 11 February 2013

அற்புதமான கீரைகள் பட்டியல்...!!!


அற்புதமான கீரைகள் பட்டியல்...!!!

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைதிறனுக்கு உதவும் சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது .

* கீரைகளை சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டிவிடக் கூடாது. மேலும் கீரைகளை சமைக்கும்-பாத்திரங்களை சமைக்கும்போது திறந்து வைக்காமல் மூடி வைக்க வேண்டும்.

* கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி உலர்த்தினால் அவற்றில் இருக்கும் கரோட்டீன்கள் வீணாகி விடும்.

* கீரைகளை பொரிப்பதை தவிர்க்க வேண்டும்.

முருங்கைக்கீரை, முருங்கையிலை
பொன்னாங்காணி
குப்பை மேனி
வல்லாரை
தூதுவளை
பசளிக் கீரை, பசளி
இலைக்கோசு - lettuce
பூக்கோசு - cauliflower
முட்டைக்கோசு
அகத்திக் கீரை
குறிஞ்சா
முளைக்கீரை
அரைக்கீரை
ஆரைக்கீரை
சிறுகீரை
மணத்தக்காளிக் கீரை
மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை
கோவைக்கீரை
குறிஞ்சாக்கீரை
புளிச்சங்கீரை
பிரண்டை
முல்லை
முசுட்டை
பேசில்

ப்ரோக்கோலி
பசலைக்கீரை -
லீக்ஸ்
வெந்தயக்கீரை
கரிசலாங்கண்ணி
சண்டியிலை
முசுமுசுக்கை
நொச்சி
குல்லை
கொத்தமல்லிக்கீரை,மல்லிக்கீரை
காணாந்தி
காரை
குமுட்டி -
கொய்லாக்கீரை - l
சண்டிக்கீரை -
தேங்காய்ப்பூக்கீரை -
பயிரி
புதினாக்கீரை
காசினிக்கீரை
தண்டுக்கீரை
முடக்கற்றன் கீரை
மயில் கீரை
முள்ளங்கிக்கீரை
பருப்புக்கீரை..!!!

நன்றி : வாய்மையே வெல்லும்..!!

1 comment:

  1. கீரைகள் எல்லாமே, மருத்துவக்குணங்களும், சத்துக்களும் நிறைந்தவை தான். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கீரை வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுவதை வாங்கி சாப்பிட வேண்டும் வெ.சாமி. அவர்களே. விழுப்புரத்தில் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால், அந்த கீரை வேக வைக்கப்படும்போதே, செப்டிக்டேங்க் நீர்(கழிவு நீர்) வாடைதான் வரும். காரணம், அந்தக் கீரைகளுக்கு, அந்த தண்ணீர்தான் பாய்ச்சப்படுகிறது. அங்குள்ளவர்கள் பழக்கத்திற்கு வந்துவிட்டார்கள். நெல்லை மாவட்டத்தில் உள்ளவர்கள், உண்மையாகவே, அந்த கீரையை பயன்படுத்தமாட்டார்கள்.

    ReplyDelete