jaga flash news

Saturday 23 February 2013

மாந்திரீகம் உண்மையா ?


மாந்திரீகம் உண்மையா ?


சக மனிதர்களின் இன்ப துன்ப உணர்வுகள், ஒருவரையொருவர் மகிழ்விக்கிறது, பாதிக்கிறது.  உணர்வுப் பரிமாற்றங்கள் தான் மனிதர்களைப் புதுபித்துக்கொள்ளச் செய்கிறது. உணர்வுகளின் சங்கமம் மனிதன். உணர்வுகளுக்கு காந்த சக்தி அதிகம். மனித உணர்வுகளை வசப்படுத்த தெரிந்த அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், கலைஞர்கள் பிரபலத்துவம் பெறுகிறார்கள்.
.
பேச்சு, எழுத்து, மற்றும் செயல் வடிவில் வெளிப்படையாக பரிமாறப்படும் உணர்வுகள் கண்ணுக்கு தெரியும் வகையைச் சேர்ந்தது. மற்றொரு வகை எண்ணங்களில் மட்டுமே பரிமாறப்படும். வெளிப்படையாக அறிய முடியாது. மன எண்ணங்களின் பிதிபலிப்பு கண்களில் தெரியும். ’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதுபோல…ஒருவர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை, அவர் வாய் திறந்து சொல்ல முற்படுவதற்கு முன்பாக, அவரது கண்களைப் பார்த்த மாத்திரத்தில் சிலர் புரிந்துகொள்வர். இது அருகருகே இருக்கும் போது நிகழ்வது.
.
இதிலே இன்னும் முதிர்ந்த நிலை ”இப்பதான் உங்ககிட்ட போன் பேசனும் நினைச்சுகிட்டே இருந்தேன். நீங்களே போன் பண்ணிட்டிங்க.” என்பது போன்ற அனுபவங்கள்.  இது அருகில் இல்லாதபோதும் நிகழக்கூடியது. இவையெல்லாம் எண்ணங்களின் வலிமையை உணர்த்தக்கூடியவை.
.
கண்களால் உள்வாங்கப்படும் காட்சிகள் மூலம் மனித மனதில்அன்பு,பாசம்,காதல்,ஆசை,போன்ற உணர்வுகள் எழுவது பாசிடிவ்எனர்ஜியின் வெளிப்பாடு. ஆழ்மன பாசிட்டிவ் எனர்ஜியைக்கொண்டு ஆக்கபூர்வமான சமூக பணிக்கு ஓர் உதாரனம்தான் உலகம் முழுதும் நல்லவர்கள் தங்கள் மனங்களில் பாசிடிவ் எனர்ஜியால் செய்யப்படும் பிராத்தனைகள்.
.
நெகட்டிவ் எனர்ஜியின் வெளிப்பாடுதான் ஏக்கம், பொறாமை, இச்சை போன்ற உணர்வுகள்.  இப்படி மனித உணர்வுகளில் உருவாகும் நெகட்டிவ் எனர்ஜியின் குழந்தைதான் கண் திருஷ்டி. வளர்ந்துவிட்ட விஞ்ஞான யுகத்திலும்…செல்வாக்கோடு திகழ்கிறது, கண் திருஷ்டி.
.
பிதுங்கி வழியும் ஜன நெருக்கடி மிகுந்த சென்னை நகரில் அமாவாசை தோறும் பல ஆயிரம் பூசணிக்காய்கள் காய்கறிக்கடைகளில் விற்பனையாகின்றன. உணவில் சிறந்த காயான பூசணி, அன்றைய தினம் திருஷ்டி கழிப்பு என்ற பெயரில் உடைக்கப்படுகிறது. தங்கள் மேல், தங்கள் வீட்டின் மேல், தங்கள்கடையின் மேல், தங்கள் நிறுவனத்தின்மேல் படிந்துள்ள பிறரின் பொறாமை, வயிற்றெரிச்சல், ஏக்கம் போன்ற நெகட்டிவ் எனர்ஜியை துடைப்பதற்கு இந்தக் காயை வாங்கி உடைக்கிறார்கள். இப்படி உடைப்பதின் வாயிலாக ’நம் மீது படிந்த நெகட்டிவ் எனர்ஜி நம்மை விட்டு போய்விட்டது’ என தங்கள் மனதை, தாங்களே நம்ப வைக்கும் வெளிப்புறப் பயிற்சியேத் தவிர வேறறொன்றும் இல்லை.
.
நெகட்டிவ் எனர்ஜி எனும் குடும்பத்தில் கண் திருஷ்டி என்பது கடைக்குட்டிப் போல. அப்படியென்றால் அந்தக் குடும்பத்தின் தலைவர் யார்? அவர்தான் மாந்திரீகம். மாந்திரீகம் உண்மையா என்றால், பாசிடிவ் எனர்ஜியைக்கொண்டு நிகழ்த்தப்படும் பிராத்தனைகள் உண்மையெனில், நெகட்டிவ் எனர்ஜியைக்கொண்டு நிகழ்த்தப்படும் மாந்திரீகமும் உண்மைதான்.
.
கண் திருஷ்டி என்பது காசு செலவில்லாதது. சக மனிதர் அணிந்திருக்கும் நல்ல சட்டையை பொறாமையோடு அல்லது ஏக்கத்தோடு ஒருவர் பார்ப்பாரேயானால், பார்ப்பவரின் ஆழ்மனதில் அந்த நேரம் நெகட்டிவ் எண்ணங்கள் எழும். அது, சட்டை அணிந்திருப்பவருக்கு கண் திருஷ்டியாக இடம் பெயர்கிறது. அங்கே பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்திருந்தால் கண் திருஷ்டி அலைகள் பலமிழக்கின்றன. அப்படி இல்லாதபோது அவரது நெகட்டிவ் எனர்ஜி அறையில் சேர்ந்துகொள்கின்றன. நெகட்டிவ் எனர்ஜியின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது மறதி, காரியத்தடை, கவனக்குறைவு, விபத்து போன்றவை நிகழக்காரணமாகிறது. (பார்வையில் ஒருத்தர் கண் போல மற்றொருவர் கண் இருக்காது என்பார்கள், அனுபவம் வாய்ந்தவர்கள்.)
.
இப்படியாக ஒருவர் மீது ஒருவர் பல்வேறு காரணங்களால் எழுப்பிக் கொள்ளும் பொறாமை, ஏக்க உணர்வுகளே கண் திருஷ்டியாகப் படிகிறது. இதே நெகட்டிவ் எனர்ஜிப் பரிமாற்றத்தை மேலும் வலிமையாகச் செலுத்தப் பொருள் செலவு செய்து, அதற்கென தொழில்முறையாக உள்ள நெகட்டிவ் எனர்ஜி மனிதர்களை (மந்திரவாதிகள்) நியமித்து நிகழ்த்தப்படுவதுதான் மாந்திரீகம்.
.
ஒருவர் மீது பொறாமை, ஏக்கம் கொள்வதன்மூலம் எழும் உணர்வுகளில் இருந்து, அதாவது கண் திருஷ்டியில் தொடங்கி மாந்திரீகம் வரை தன்னை உட்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் உணரத் தவறுவது யாதெனில்… தன்னுடைய தூய்மையான மன அறையில் பிறர் மீதான காழ்ப்புணர்ச்சி, பொறாமை, ஏக்கம் போன்ற நெகட்டிவ் உணர்வுகளை விதைத்து மரமாக்கி அதன் பலத்தில் எதிராளிக்கு இழப்பு ஏற்படுத்துபவர்கள், பின்னர் அதே எனர்ஜியின் பலனை தங்களது சொந்த வாழ்க்கையிலும் சந்தித்துவிடுவார்கள். எதிராளியின் பாதிப்பை விரும்பும், இவரும் இணைந்தே பாதிப்பைச் சந்திப்பார்.
.
எண்ணங்களில் நெகட்டிவ் எனர்ஜியின் ஆதிக்கம் தொடங்கி விட்டால் தனி மனித வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளும், செயல்களும் சுகமானதாக அமைவது இல்லை. வாழ்க்கைப் பயணம் சலிப்பும், அலுப்பும் நிறைந்ததாகவே அமையும். கடைசி வரை அடுத்தவர்களை ஆதங்கத்தோடும், ஏக்கத்தோடும் காணும் பாக்கியத்தை மட்டுமே பெறுவர். எந்த நிலையிலும் மனநிறைவு ஏற்படாது. ஆக, ஒரு மனிதன் பிறரை வாழ்த்துபவனாகவும், பிறருக்காக பிராத்தனை செய்பவனாகவும் இருப்பாரேயானால், அவர் ஏழ்மையிலும் மனநிறைவையும், மகிழ்வையும் சந்திப்பவராகவே வாழ்வார்.
பிறரைக் கண்டு ஏங்குபவனாக வாழ்கிறவன் எத்தகைய செல்வத்திலும் நிம்மதியற்றவனாகவே இருப்பான். சரி, இந்த நெகட்டிவ் எனர்ஜி மனிதர்கள் சமூகத்தின் எல்லா பக்கங்களிலும் பாதிப்பை ஏற்படுத்திவிட இயலுமா? என்றால்… அதுதான் இல்லை.
.
ஒருவரின் பொறாமை, இன்னொரு பொறாமைக்காரரைதான் எளிதில் பாதிக்கும். உடன் ஈர்த்துக் கொள்ளும். அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள இவர்கள் நாளடைவில் ஒரு குழு போல மாறிக் கொள்வார்கள். தங்களைத் தாங்களே பாதித்துக்கொள்வார்கள். இத்தகையவர்களின் பேச்சில் ஒரு போலித்தன்மை, ஏமாற்றம், ஏக்கம் போன்றவை எப்போதும் நிறைந்திருக்கும்.
.
பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்தவர்களை மற்றொரு பாசிட்டிவ் எனர்ஜிக்காரர் ஈர்த்துக்கொள்வார். அவர்களும் வலிமையானக் குழுவாக மாறுவர்.
.
கண்திருஷ்டி, மாந்திரீகம் போன்ற கெட்ட உணர்வு அலைகள் யாரைப் பாதிக்கும்? புண்ணியத்தில் பலவீனமானவர்களையே பாதிக்கும்.  பாவங்களையும், சாபங்களையும் மிகுதியாக பெற்றிருப்பவர், மனசாட்சிக்கு விரோதமான செயல்கள் பல செய்வதன் மூலம் ஆன்மபலம் இழந்தவர், இவர்களே எளிதில் வீழ்த்தப்படக்கூடியவர்கள்.
.
மாந்திரீக தொழிலில் தொடர்புடைய ஒருவரை ஒரு காலத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியபோது… அவர் என்னிடம் கூறினார், ”சமூகத்தில் மூன்று விஷயங்களுக்கு மாந்திரீகத்தில் இடமில்லை. ஒன்று அரசாங்கம். ஒரு அரசாங்கத்திற்கு மாந்திரீகம் செய்ய இயலாது. அலுவலகங்களுக்கு நாள், நட்சத்திரம் பொருந்தாது. இரண்டாவது, மகான், ஞானி, துறவி இவர்களுக்கு எதிராக மாந்திரீகம் செய்ய இயலாது. மூன்றாவது, குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும் பத்தினித்தன்மையில் குறையாமல் ஞான நிலையில் உயர்பவராகவும் உள்ள பெண்கள். இவர்களைத் தவிர மற்றவர்களில், பாவிகளுக்கே மாந்திரீகம் முதலில் பலிக்கும்.
அதிலும் குறிப்பாக ஒருவரது ஜோதிட அமைப்பில் மாந்திரீகத்தால் மரணமோ, பாதிப்போ நிகழ வேண்டும் எனும் அம்சம் இருந்தால் மட்டுமே அத்தகைய நபர்களுக்கு மட்டுமே நாங்கள் பயின்ற மாந்திரீக கலையைப் பிரயோகப்படுத்துவோம். ஜாதக அம்சத்தில் மாந்திரீக தோஷம் இல்லாத நிலையில் புண்ணியங்கள் நிறைந்தவராக அந்த ஆத்மாக இருந்தால், கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்பணியில் ஈடுபடுவதில்லை” என்றார்.
.
ஆக, இதன்மூலம் அறிய வேண்டியது… ஒருவன் ’எனக்கு அவன் செய்வினை செய்து விட்டான்,  இவன் செய்து விட்டான்’ என அல்லாடுகிறான் என்றால், அந்த அளவுக்கு ’தான் பாவம் செய்திருக்கிறோம்’ என்பதைத்தான் முதலில் அவன் புரிந்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் பிறரின் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் மிகுதியாக சம்பாதிக்கும் ஒருவர் புண்ணியப்பேறுகள் பல பெற்றிருப்பார். இப்படியான மனிதர்களுக்கு எதிராக கோடி ரூபாய் கொடுத்தாலும் மாந்திரீகம் வேலை செய்யாது. கண் திருஷ்டியும் கண்டு கொள்ளாது.

1 comment:

  1. arumaiyana pathivu thaguntha samayathil enkku nanmaikkum theemaikkumana thalivu kitaithathu.. nantri aiyaa..

    ReplyDelete