jaga flash news

Monday, 11 February 2013

அதிசய தகவல்கள்...!

அதிசய தகவல்கள்...!

1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும்.(எப்போதுமே உள்ளே என்ன நடக்கிறது என்று கணிப்பது கஷ்டம்தான்.)

2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.(ரோலர் கோஸ்டர் அப்படீனா என்ன?)

3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்(.நீல லென் மாட்டிக்கலாமா)

4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான்.(அது எப்படின்னு சொல்லீட்டிங்கன்னா சௌகரியமா இருக்கும்.)

5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும்.(மப்பு தலைக்கேறியிருக்கும்.)

6.வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் கண்ணிர் வராமல் இருக்க சூயிங்கம் மென்றால் போதும்.(கண்ணுக்கு பாதுகாப்பு வாயா?)

7.உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.(எல்லாத்துலேயும் no.1 நாங்க)

8.ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்கும் போது ,காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.(அப்போ ஏற்கனவே காதில் பாக்டீரியா இருக்கா?)

9. வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பழக்கம் உடையவர்களைவிட சராசரியாக ஒன்பது வருடங்கள் உயிர் வாழ்கிறார்கள்.(இது என்ன புது புரளி?)

10.ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.அப்படினா (ஓயாம சிரிச்சுகிட்டே இருந்தா?)

11.நமது மூக்கு நமது உடலில் ஒரு குளிர் சாதனப் பெட்டி போல் இயங்குகிறது.இது உடலுக்குள் செல்லும் குளிர் காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது.சூடானக்காற்றை குளிரச் செய்து அனுப்புகிறது.மேலும் காற்றில் உள்ள மாசுக்களை தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாகவும் மூக்கு செயல்படுகிறது.(மூக்கைப் பற்றி மூக்குமுட்டச் செயதி)

12.நமது மூளையானது சக்தி வாய்ந்த கணினியை விட பல மடங்கு சக்தி வாயந்தது.மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும்.(ஆனா அந்த மூளையே உதவிக்கு கணினியைதானே தேடுது.)

13.மனிதன் இறக்கும் போது முதலில் அவனின் கேட்கும் திறனையே இழக்கிறான்.(எல்லாம் முடிந்த பிறகு பார்த்தா என்ன கேட்டா என்ன)

14.ஒரிகான் என்ற இடத்தில் 2400 வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காளான் ஒன்று உள்ளது.இது 3.4 சதுரமைல் இடத்தில் பரந்து காணப்படுகிறது.இதில் விசேசம் என்னவென்றால் அது இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.(காம்ப்ளான் தொழிற்சாலை பக்கத்தில் இருக்குதோ என்னவோ?)

15.மற்ற வகை நாய்களை விட, ஜெர்மன ஷெப்பர்ட் வகையைச் சார்ந்த நாய்களே மனிதனை அதிக அளவில் கடிக்கிறது.(இனிமேல் அந்த நாய்களை ஹிட்லர் ஷெப்பர்ட் என்று அழைக்கலாம்.)

16.ஆண்களின் சட்டைகளில் வலது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.ஆனால் பெண்களின் சட்டைகளில் இடது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.(அப்படியா.ஆச்சர்யக்குறி )

17.நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது .நமது விழித்திரையானது சாதாரண நிலையவிட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது.(பாக்க நல்லாவா இருக்கும்?)

18.தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டிருப்பதுதான்.(எனக்கு ரொம்ப உபயோகப்படும்)

19.உண்மையான டைட்டானிக் கப்பலைத் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? வெறும் ஏழு மில்லியன் டாலர் மட்டும்தான்.ஆனால் டைட்டானிக் படம் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? 200 மில்லியன் டாலர்.(கப்பல உடைக்கிறதுக்கு இவ்வளவு செலவாகியிருக்கும்.)

20.நாம் நமது கழுத்தை அசைக்கும் போது டிரிக் என ஏற்படும் சத்தமானது நைட்ரஜன் வாய்வுக் குமிழ்கள் எரிக்கப்படுவதால் உண்டாகிறது.(நல்ல வேளை ஹார்பன் டை ஆக்ஸைடு இல்ல.)

21.மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.(இது எனக்கு புதுசு.)

இன்னும் கோடி கோடி காணக்கான ஆச்சர்ய தகவல்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் துயில் கொள்கிறாள்,

இயற்கை அன்னை...!

No comments:

Post a Comment