jaga flash news

Monday 18 February 2013

மாந்தி


மாந்தி

பஞ்சமுஹன் ஜோதிட பயிற்சி மற்றும் கல்வி மையம்  நாமக்கல்
நாள்- 3-7-2011
அன்புள்ள மாணவர்களுக்கு  என்  நெஞ்சார்ந்த வணக்கம் ,
ஜோதிடத்தில் எத்தனையோ விஷயம்  நாம் கற்க வேண்டிஉள்ளது,
ஆனால் அடிப்படையாக நாம் சில விசயங்களை நன்றாக  கற்றுகொண்டால் நாம் எளிதாக கற்றுகொள்ளலாம் .அதற்க்கு நாம் புரிந்து கொள்ள கூடிய தன்மை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும்.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்துதான் பாரேன் என்றான் இறைவன்

இறப்பில் வருவது யாதேனக்கேட்டேன்

இறந்துதான் பாரேன் என்றான் இறைவன்

மனையாள் சுகமெனில் எதுவெனக் கேட்டேன்

மனந்துதான் பாரேன் என்றான் இறைவன்

அனுபவித்தேதான் அறிவைத் வாழ்வெனில்

ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்

ஆண்டவன் சற்றேன அருகினில் வந்து

"அனுபவம் என்பதே நான்தான் " என்றான் 

மாணவர்களே எந்த விசயத்தையும் பார்த்த உடனே, அல்லது படித்த உடனே முடிஉக்கு வரக்கூடாது  , அனுபவித்துதான் தெரிந்துகொள்ளவேண்டும் .

நாம் விரைவில் ஜோதிடராகவேண்டும் என்று நினைக்ககூடாது, நல்ல, பண்பான, விஷயம் தெரிந்த , உண்மைகளை உரைக்கும் ஜோதிடராக மாறவேண்டும்.

உங்களை நீங்களே உணரவேண்டும், எந்த அளவிற்கு ஜோதிடத்தில் ஆர்வமாக இருக்கிறீர்கள் ,வாரம் ஒருமுறை இங்கு வரும்போது மட்டுமே உங்களுக்கு ஜோதிட பாடம் நாபகம் வருகிறதா ?

தயவு செய்து அப்படி இருக்காதீர்கள் , இனிமேலும் தாமதம் செய்யாதீர்கள் , விழிப்புடன் இருங்கள், நிறைய தெரிந்துகொள்ள முயற்சி கொள்ளுங்கள் ,உங்களுக்கு சந்தேகம் நிச்சயம் வரும், வரும் சந்தேகங்களை ஒரு நோட்டில் குறித்துகொள்ளுங்கள் , நமது வகுப்பறைக்கு வரும்போது அதைப்பற்றி கேளுங்கள்

நீங்கள் உயர்நிலை வகுப்பில் பசித்து வருகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

இன்னும் பாவக காரகங்களை படிக்காமல் எத்தனை பேர் இருக்கின்றனர் ,?

இன்னும் ராசியின் தன்மைகளை தெரிந்துகொள்ளாமல் உள்ளீர் ?

கிரக காரகத்துவம் பற்றி எத்தனை பேர் தெரிந்துகொள்ளாமல்  இருப்பீர் ,?

தயவு செய்து இனிமேல் ஆவது தெரிந்துகொள்ளுங்கள் ,இல்லாவிட்டால் கூமுட்டை ஜோதிடர் என்ற பெயர் உங்களுக்கு வந்துவிடும்,

ஒரு சிறு கதை படித்து விட்டு நாம் பாடத்திற்கு செல்வோமா

ஒரு திறமை மிகுந்த ஜோதிடர்  ஒருவர் தன்  சிறு வயது சீடனுடன்  , ஆறு ஓடும் ஓர் அழகிய மலைப்பிரதேசத்தின் அருகில் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில்  ஜோதிடம் பற்றி படிப்பது இவரின் அன்றாட வழக்கமாக இருந்து வந்தது.
மற்றவர்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தும் தனது  குருவை  போன்றே தானும் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட அவரின்  சீடன் அவரது ஒவ்வொரு செய்கையையும் கவனித்து அவற்றை தானும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.
ஒருநாள்  சீடன்  குருவை  பார்த்து, “குருவே ! உங்களைப் போன்றே நானும் ஜோதிடத்தை  படிக்க முயற்சி செய்தேன். ஆனால் ஒன்றுமே விளங்கவில்லை. அதுமட்டுமன்றி ஜோதிட புத்தகத்தை  மூடிவைத்ததும் படித்த கொஞ்சமும் மறந்தும் போய் விடுகிறது. எதுவுமே விளங்காமல்  ஜோதிடத்தை  படிப்பதனால் அப்படி என்ன நன்மை நமக்கு வந்துவிடப்போகிறது?” என்று கேட்டான்.
சமைத்துக்கொண்டிருந்த குருவோ , கூடையில் எஞ்சியிருந்த அடுப்புக்கரியை அடுப்பினுள் தள்ளி விட்டுக் கொண்டு பேரனிடம் திரும்பி காலியான கூடையை அவன் கையில் கொடுத்து, “இந்த கரிக்கூடையில் ஆற்றுத்தண்ணீரை நிறைத்துக் கொண்டு வா!” என்றார். சீடனும் அவ்வாறே ஆற்றிற்குச் சென்று தண்ணீரை கூடையில் நிறைத்து வீடு திரும்பினான். ஆனால் ஆற்றங்கரையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து சேர்வதற்குள் கூடையில் கொண்டுவந்திருந்த தண்ணீர் முழுவதும் சிறிது சிறிதாக ஒழுகி கூடை காலியாகி விட்டிருந்தது. வருத்தமுடன் வீட்டினுள் நுழைந்து காலிக்கூடையைக்  குருவிடம் காண்பித்தான். அவன் மனதின் வருத்தத்தைப் புரிந்து கொண்ட  குரு   சிரித்துக் கொண்டே, “சரி பரவாயில்லை! இம்முறை விரைவாக வீட்டிற்கு வந்து விடு!” என்று கூறி மறுபடியும் தண்ணீர் கொண்டு வர ஆற்றுக்கு அனுப்பினார்.
இம்முறை தண்ணீரை கூடையில் நிரப்பி விரைவாக  சீடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். எனினும் கூடை முன்பு போலவே காலியாகிவிட, “இக்கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமே இல்லை  குருவே !” என்று மூச்சிரைக்க கூறிக் கொண்டே தண்ணீர் கொண்டுவர கூடைக்குப் பதிலாக வீட்டிலுள்ள மற்றொரு பெரிய பாத்திரத்தை எடுக்க முயன்றான். அப்போது அவனை தடுத்த  குரு , “எனக்குப் பெரிய பாத்திரத்தில் நீர் தேவையில்லை. இந்தச் சிறு கூடையில் தான் வேண்டும். நீ கடுமையாக முயற்சிக்கவில்லை என்று எண்ணுகிறேன்!” என்று அவனைப் பார்த்து கூறினார்.
சிறு துளைகள் உடைய அக்கூடையில் ஆற்றிலிருந்து வீடுவரை தண்ணீரை ஒழுகாமல் தன்னால் கொண்டு வரமுடியாது என்று நன்றாகத் தெரிந்தும்,  குருவிற்கு  தன் கடுமையான முயற்சிகளைக் காண்பிக்க வேண்டும் என்ற ரோஷம் கொப்பளிக்க மறுபடி ஆற்றுக்கு ஓடினான் சீடன் . ஆனால் பாவம் மறுபடியும் தோல்வியுடனே வீடு திரும்பினான்.
குருவே  ! நான் மிகக் கடுமையாக முயற்சி செய்தும் பயன் ஏதுமில்லை என்பதை பார்த்தீர்களா?” என்று அவரிடம் கூடையைக் காட்டினான்.
“உனது இம்முயற்சி பலன் தரவில்லை என்றா நினைக்கிறாய்? கூடையை நன்றாகப் பார்!” என்றார் குரு .
தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்ற கவனத்திலேயே இருந்த சீடன்  முதல் முறையாக கூடையினுள் பார்வையை செலுத்தினான். அப்பொழுது தான் குருவிடமிருந்து வாங்கிய கூடைக்கும் தற்போது கையில் இருக்கும் கூடைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தான்.
ஆம்! அடுப்புக்கரியினால் அழுக்கேறியிருந்த அக்கூடை இப்போது உள்ளும் புறமும் தூய்மையாகி பளிச்சென்றிருந்தது.
அன்புடன் தன் சீடனை அரவணைத்த  குரு   சொன்னார்,
“ஒருவர் தொடர்ந்து  ஜோதிடத்தை படித்து வந்தால்  இதுவே நிகழ்கிறது.  ஜோதிடத்தை படிக்கும் பொது  அதன் பொருளறிந்து     படித்து அதன்படி செயல் படுவது சிறந்தது என்பதில் மாற்று கருத்து கிடையாது.
ஆனால் பொருளறியாமல் அதை    படித்தாலும்  அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்கும் என்று     இறைவன் சொல்லி உள்ளார்  நம்மை படைத்த இறைவனின் வார்த்தை இது என்ற எண்ணத்தில் ஒருவர்  ஜோதிடத்தை படிக்கும்  பொழுது   படிப்பவனுக்கு அப்போது அது புரியாமல் போனாலும், படிப்பது  அனைத்துமே அவரின் நினைவில் நிற்காமல் போய் இந்தக் கூடைநீர் போல் வழிந்தோடி விட்டாலும்    படிப்பவரின்  உள்ளம்  ஜோதிட த்தில் நம்பிக்கை  அடைகிறது. விரைவில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தன்னபிக்கை ஏற்படுகிறது  அவரின் வாழ்வில் தெளிவு பிறக்கிறது. இதுவே மனிதனைப் படைத்த இறைவன் புரியும் அற்புதமாகும்!” என்று கூறினார்.
இதனைக் கேட்ட சிறுவன் மகிழ்ச்சியுடன், “மிக்க நன்றி குருவே . இனி நானும் உங்களை போல் தினமும் அதிகாலையில் முதல் வேலையாக தொடர்ந்து ஜோதிடத்தை படிப்பதை  வழக்கமாக கொள்வேன்” என்று கூறினான்.

முயற்சி இன்றி  ஏதுவும் கிடைக்காது என்பதை நன்கு புரிந்துகொள்ளுங்கள்


சரி மாணவர்களே ,நாம் இன்றைய பாடமாக நாம் மாந்தி கணிதமும் மற்றும் பன்னிரண்டு பாவத்திலும் மாந்தி நின்ற பலன்களை கற்று கொள்வோம் .
  1. மாந்தியை குளிகன் என்றும் அழைக்கபடுகிறது
  2. சனிபகவானின் புத்திரன் என்றும் அழைக்கபடுகிறது
  3. இது துணை கிரகமாக செயல்படுகிறது
  4. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்றும் சொல்ல படுகிறது
  5. இந்த உபகிரகம் எப்போது உதயமாகும் என்று ஒரு நிலையான கணக்கு உள்ளது
கிழமை                                          பகல் நாழிகை                               இரவு நாளிகை
நாயிறு                                                    26                                                         10
திங்கள்                                                   22                                                          06
செவ்வாய்                                              18                                                         02
புதன்                                                       14                                                          26
வியாழன்                                               10                                                         22
வெள்ளி                                                  06                                                         18
சனி                                                         02                                                          14

ஓவொரு நாளும் சூரிய உதயத்திற்கு பின் ,மேலே குறிப்பிட்ட நாழிகையில் மாந்தி உருவாகிறது ,அந்த நாளிக வினாடிக்கு எந்த லக்னம் உதயமாகிறதோ அந்த ராசியில் குளிகனை குறிப்பிடவேண்டும்
மொத்தத்தில் லக்னத்தை கணிப்பது போலவே இதற்கும் கணிதம் செய்யவேண்டும்
எப்படி கணிதம் செய்யவேண்டும் என்பதை நாம் கற்றுகொள்வோம்
அதற்க்கு முன் மாந்தியபற்றி விரிவாக கானவேநன்மை- தீமை செய்வதில் முக்கியமானவர் சனி மைந்தன் மாந்தி!
நம்ம நாட்டு வானிலை விஞ்ஞானிகள் இப்ப உள்ள ஆளுகளை சொல்லலை. நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு பலன்களை சொன்னாங்களே அந்த குரூப்பை சொல்றேன். அவங்க சொன்ன ஒரு துணைக் கோள்தான் மாந்தி.




சனிக்கிரகம் இருக்கு அதோட துணைக்கோளை பாத்தீங்களா-டைட்டன் அதைத்தான் மாந்தி அப்படின்னிருக்காங்க நம்ம ஆளுங்க. சமீபத்து செய்தில டைட்டன்ல தண்ணி இருந்ததுக்கான அடையாளம் இருக்குங்கறாங்க.



ரஷ்ய விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்க யு.எப்.ஓ எனப்படும் பறக்கும் தட்டுகளில் வரும் அயல் கிரகவாசிகள் டைட்டனில் இறங்கி ரெஸ்ட் எடுத்து பயணக் களைப்பை போக்கிட்டு பூமிக்கு வந்து பாத்துட்டு போறதா சொல்றாங்க.



எது எப்படியோ ஆயிரம் வருஷத்துக்கு முன்னால எந்த விதமான விஞ்ஞான உபகரணமும் இல்லாமல் நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு மாந்திய பத்தியும் சொல்லியிருக்காங்க இது நிச்சயமா நம்ம ஆளுகளுக்கு வெளி கிரக தொடர்பு நிச்சயமா இருந்ததுக்கான ஒரு ஆதாரம்.


-ஜாதகத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்!



பிறவிப் பலனை அறிய, ஜாதகத்தில் ஸ்ரீசனீஸ்வரரைப்போல் சனியின் மைந்தன் மாந்தியின் அமைப்பும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சனி ஆயுள் காரகன் என்றால், மாந்தி மரணத்திற்கு காரகன் ஆவார். சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுவைவிட மாந்திக்கு அதிகப் பலன் உண்டு என நூல்கüல் கூறப்பட்டுள்ளது.



ஸ்ரீவிஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எடுத்த பின்னரே ராகு- கேதுக்கள் தோன்றி னர். தேவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பன மாக விளங்கிய இராவணனின் அழிவுக்குப் பிறகு ராகு- கேதுக்கள் மகாவிஷ்ணுவின் ஆசியுடன் கிரகப் பதவியேற்றனர்.



இராவணன் மகன் மேகநாதன் (எ) இந்திரஜித் பிறந்த நேரத்திலேயே மாந்தி அவதரித்தார். சர்வ வல்லமையும், அரிய அற்புதமான வரங்களையும் பெற்ற இந்திரஜித் தின் இறப்பின் பொருட்டே, அவன் பிறக்கும்போதே பிறந்தவர்தான் மாந்தி
.
ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர்கள் அறியத்தரலாம். தன் தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில் நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம். ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின் ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம். கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த, அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன் இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம். Mandi being on the lagna gave Indrajit, a short span of life!


ஸ்ரீசனீஸ்வரரைப்போல் சர்வ வல்லமை பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு நிகரானவர் எனலாம். அதனால் ஜாதகத்தில் மாந்தியின் பலன்களையும் நிர்ணயித்து அறிய வேண்டும். மாந்தி கடிகாரச் சுற்று முறையில் வலம் வரும் கிரகமாகும். மாந்தி ஆவியுலகத் தலைவர் ஆவார். சனீஸ்வரர் ஸ்ரீஐயப்பனுள் இணைந்தவர். மாந்தி ஆஞ்சனேயருள் இணைந்தவர்.



கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கüல் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜாதகத்தில் குறிப்பார்கள். மாந்தியினால் விளையும் நன்மை, தீமைகளையும் கூறுவார்கள். குருவாயூர் தேவஸ்தான பஞ்சாங்கத்தில், பாலக்காடு ரேகாம்சத்தைக் கணக்கிட்டு மாந்தியின் உதய நேர விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.



தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாந்தி என்ற கிரகம் இருப்பதை நன்கு அறிந்திருந்தா லும், பெரும்பாலும் அது பஞ்சாங்கங்கüல் குறிப்பிடப்படுவதில்லை. மிக அபூர்வமாக ஒரு சில ஜோதிடர்களே மாந்தியை ஜாதக ராசிக்கட்டத்தில் குறிக்கின்றனர். மேலும் ஜாதகத்தில் மாந்தி குறிக்கப்பட்டிருந்தாலும், மாந்தியைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடுகின்றனர்.



ஜாதக ராசிக்கட்டத்தில் மாந்தியைக் குறிக்காவிட்டால் மாந்தி என்ற கிரகம் இல்லையென்று ஆகிவிடாது. ஜாதக ராசிக்கட்டங்களான பன்னிரண்டு வீடுகüல் ஏதாவது ஒன்றில் நிச்சயம் மாந்தி இருப்பார். மாந்தி அமர்ந்த இல்லத்திற்கேற்ப- மாந்தி சேர்க்கை பெற்ற கிரகத்திற்கேற்ப அதன் பலன்கள் நமக்கு நிச்சயம் நடைபெறும்.



மகரம், கும்பம் ஆகிய ராசிகளை ஆட்சி வீடாகப் பெற்ற ஸ்ரீசனீஸ்வரரிடமிருந்து கும்ப ராசியை ஆட்சி வீடாகப் பெற்றவர்தான் மாந்தி. இவருக்கு உச்ச வீடு, நீச வீடு இல்லை. மாந்தி தான் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து 2, 7, 12 ஆகிய இல்லங்களைப் பார்ப்பார் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது.



சனீஸ்வரர் கெடுப்பது உண்டென்றாலும், குதூகலமான சந்தோஷத்தையும் நன்மை களையும், செல்வம், செல்வாக்கு, ராஜயோகம் போன்றவற்றையும் வாரிவழங்கி, ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை வானளாவ உயர்த்திப் புகழ் பெற வைப்பார். இதனால்தான் "மந்தன் செய்வதைப்போல் மகேஸ்வரன்கூட செய்ய மாட்டார்' எனச் சொல்வார்கள். ஸ்ரீசனீஸ்வர ரைப்போல் மைந்தன் மாந்திக்கும் மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும் பொருந்தும்.



ஜாதகத்தில் மாந்தியின் அமைப்பில் பூர்வீக சாபம், அதிர்ஷ்டம், குடும்பம், தொழில், மனைவி, எதிர்பாராத நன்மை, திடீரென ஏற்படும் விபத்துகள், மரண அபாயம், அவமானம், புதையல், துர்ஆவிகüனால் துன்பம் போன்றவற்றை அறியலாம்.



பொதுவாக மாந்தி இருக்கும் கிரகத்தின் பலன் எட்டாம் வீட்டோன் பலன்போல் அசுபப் பலனாக அமையும். மாந்தி ஜாதகத்தில் எந்த பாவத்தில்- எந்த காரகர்களுடன் இருந்தாலும், சேர்ந்தாலும், பார்த்தாலும் அந்த காரகத்துவப்படி தீய பலனாகும். மாந்தியைப் பொறுத்தவரை ஜாதகத்தில் ஓரிரு இடங் களைத் தவிர, தான் இருக்கும் இடங்கüல் தீய பலன்களையே அüப்பார். பொதுவாக மாந்தி எந்த கிரகத்துடனும் சேராமல் இருப்பது சிறந்த பலனாகும்.



ஜாதகத்தில் மாந்தியின் பலன்கள்



ஜாதகத்தில் மாந்தி நின்ற ராசிநாதன் கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் அமையப் பெற்றால், ஜாதகர் பெரும் செல்வத்திற்கு அதிபதி யாகவும்; செல்வம், செல்வாக்கு, பூமி, மனை, வாகனம் உள்üட்ட எல்லா ஐஸ்வர்யங் களுடனும் வாழ்வார். லக்னத்திற்கு 11-ல் மாந்தி நின்றாலும் ராஜயோகம்.



லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் அமர்ந்து ஆவியுலகத் தலைவன் மாந்தி சேர்க்கை பெற்றால், ஜாதகர் துர்ஆவிகüனால் பீடிக்கப்பட்டு மரண வேதனை அடைவார். ஸ்ரீஆஞ்சனேயரை வழிபட்டால் துர்ஆவிகள் விலகும். மாந்தியினால் ஏற்பட்ட தோஷம் விலகும்.



மாந்திக்கு 7-ல் புதன் அமர்ந்து சுபர்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் தந்தை செய்த தொழில் மூலம் நிரம்ப வருமானம் பெற்று எல்லா ஐஸ்வர்யங்களுட னும் வாழ்வார்.



ஆண் ஜாதகருக்கு, மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்தால், ஜாதகரின் சகோதரர் தீய பழக்கங்கள் மிகுந்தவராவார். குலப்பெருமை கெடும். அரச தண்டனைக்கு உள்ளாவார்.



பெண் ஜாதகத்தில், மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்து ஜென்ம நட்சத்திரம் ரோகிணி என்றால், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியிராது. வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டமாக இருக்கும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் துரதிர்ஷ்டமா கும். தோஷம் மிகுதி.



மாந்திக்கு 5-ல் ராகு அல்லது சனி இருந்தால், ஜாதகர் ஆண்மையில்லாதவரா வார். பெண் ஜாதகம் என்றால் பிரசவத்தில் துன்பம் ஏற்படும். பெண் ஜாதகத்தில் செவ்வாய், சூரியனோடு மாந்தி சேர்க்கை பெற்றால் நெறியற்ற வாழ்க்கை வாழ்வாள்.



லக்னத்திற்கு 5, 9-ஆம் இடங்கள் கன்னி, மிதுனம், மகரம், கும்பம் போன்ற ராசிகüல் ஒன்றாக அமைந்து, சனி- மாந்தி சேர்க்கையோ, பார்வையோ 5, 9-ஆம் இடங்களுக்கு ஏற்பட்டால் ஜாதகி மலடியாவாள்.



லக்னத்திற்கு 3-ல் சனி உச்சம் பெற்று மாந்தியின் சேர்க்கை பெற்று சுக்கிரன் பார்த்தால், ஜாதகர் பெண் பித்தனாவான். பெண் நோயால் அவதியுறுவான்.



லக்னத்திற்கு 4-ல் கேதுவும் மாந்தியும் சேர்க்கை பெற்றால் மிகுந்த துரதிர்ஷ்ட மாகும். வாழ்க்கையில் எல்லா விஷயங்கü லும் அதிருப்தி காணப்படும். ஒரு இடத்திலும் நிலையாக வாழ முடியாது. நாடோடி போல் வாழ்க்கை அமையும். தாய்க்கும் தோஷமாகும்.



பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 4-ல் மாந்தி நின்றால் புத்திரதோஷம் மிகுதி. கணவன் நோயாü ஆவான். 4-ல் உள்ள மாந்தியுடன் சனி சேர்க்கை பெற்றாலோ பார்த்தாலோ ஜாதகி மிகுந்த துரதிர்ஷ்டசா-. லக்னத்திற்கு 2, 8-ல் சர்ப்ப கிரகங்கள் அமையப் பெற்று மாந்தி சேர்க்கை பெற்றால், நாக தோஷத்தால் மாங்கல்ய தோஷமாகும்.



ஆண், பெண் ஜாதகங்கüல் லக்னத்திற்கு 2, 5, 8, 11 போன்ற இடங்கüல் மாந்தி இருப்பின், ஜாதகர் இந்தப் பிறவியில் செய்யும் கர்மப்பலனை அடுத்த பிறவியில் அனுபவிக்க நேரிடும்.



லக்னத்திற்கு 1, 4, 7, 10 போன்ற இடங்கüல் மாந்தி இருப்பின், ஜாதகர் இந்தப் பிறவியில் தமக்குத் தெரிந்தே சந்தர்ப்ப சூழ்நிலையால் பல தவறுகள்- குற்றங்களைப் புரிய உள்ளார் என்பதை அறிவிப்பதாகும். அதேசமயம் ஜாதகர் செய்யக்கூடிய தவறுகள்- குற்றங்களுக்கேற்ப சரியான தண்டனைகளை உடனுக்குடன் அனுபவிக்க நேரிடும்.



குளிகை  அற்புதப் பலன்கள்



மாந்திக்கு குளிகன்  என்ற சிறப்பு பெயர் உண்டு. பொதுவாக குளிகன்  காலம் நல்ல காலம்- சுபகாலம் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது. சனியின் மைந்தனாகிய மாந்தி ஒவ்வொரு நாüலும் தான் ஆட்சி செய்யும் குளிகன்  காலத்தில் செய்யப்படும் சுபகாரியங்களை- மகிழ்ச்சிக்குரிய காரியங்களை மேன்மேலும் பன்மடங்கு அபிவிருத்தி செய்து நம்மை மகிழச் செய்வார்.



குளிகன்  காலத்தில் பூமி, மனை, வாகனம் வாங்கலாம். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்; அணிந்து மகிழலாம். புதுவீட்டிற்குக் குடிபோகலாம். கல்வி பயிலலாம். பயிர் அறுவடை செய்யலாம். மனைவியுடன் உறவு கொள்ளலாம். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். பாங்கில் புதிய கணக்கு துவங்கி சேமிக்கலாம். வெகுமதி கொடுக்கலாம். பதவியேற்கலாம். பொதுவாக நமக்கு முன்னேற்றம் தரும் மகிழ்ச்சிக்குரிய சுபகாரியங்கள் அனைத்தையும் குளிகன்  காலத்தில் செய்தால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.



அதேபோல் நமக்குத் துன்பம் தரக்கூடியக் காரியங்களை குளிகன்  காலத்தில் செய்தால் அவை பன்மடங்கு அபிவிருத்தியாகி துன்பங்கள் எல்லையில்லாமல் காணப்படும்.



பொதுவாக ஒரு மனிதர் இறந்துவிட்டால் பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல குளிகன் க்காலம் தவிர்த்துதான் எடுத்துச் செல்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததேண்டியம் அவசியம் நமக்கு உள்ளது
சரி மாணவர்களே இனி பன்னிரண்டு பாவத்திலும் மாந்தி நின்ற பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்
1ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்




2ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால், சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும். சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள். இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில் (Dictionary)மட்டும்தான்.



3ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன். யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன். உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு நல்ல உறவு இருக்காது. சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின் தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.



4ல் மாந்தி இருந்தால்: ஒரே வரியில் சொன்னால் - துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)



5ல் மாந்தி இருந்தால்: நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான். நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன். அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள் தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது. சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள். பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்.



++++++6ல் மாந்தி இருந்தால்: துணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி. அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes). மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம் ஈடுபாடுகொள்வாள் (loved by women)



7ல் மாந்தி இருந்தால்: வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை உடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன். சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே வாழ்க்கையை ஓட்ட நேரிடும்!



8ல் மாந்தி இருந்தால்: கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக் கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன். துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன். ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.



9ல் மாந்தி இருந்தால்: தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள் அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய் விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும். (deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள். வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.



10ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில் விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்



11ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம் கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான். சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது . உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப் பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.



12ல் மாந்தி இருந்தால்: ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும். கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும். சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள். சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில் இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.
அன்பு மாணவர்களே குளிகன் என்ற மாந்தியை பற்றி உங்களுக்கு விரிவாக தெரிந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்
இதை பற்றிய சந்தேகம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் நீங்கள் கேட்கலாம்
இன்னும் சில நாட்களே நமக்கு உள்ளது ,எனெவே முடிந்த வரை விரைவாக கற்று கொள்ள வேண்டியது நமது கடமை
இன்று எனக்கு அவசரமான வேலை இருப்பதால் இத்துடன் எனது ஜோதிட பாடத்தை முடித்து கொள்கிறேன் 

1 comment: