jaga flash news

Monday, 20 May 2013

சாந்தி ஹோமங்கள்

திருக்கடவூரில் நிகழும் சாந்தி ஹோமங்கள் பற்றி தெளிவாக அறிய உதவும் இக்கட்டுரை. அஷ்ட சிரஞ்சீவிகள் சாந்திகளுக்கு உரிய தெய்வங்கள் பற்றி முதற்கண் விளக்குகிறது. ஆயுள் ஹோமம் உக்ரத சாந்தி மணிவிழா பீமரத சாந்தி சதாபிஷேகம் முதலியன பற்றி அறியவும் ஒவ்வொன்றின் நோக்கமும் செய்யும் முறையும் வழிபடவேண்டிய தெய்வங்களும் பயனும் இன்னவை என்பதை மேலும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
திருக்கடவூர் திருக்கோயில் ஒரு நித்திய கல்யாண கோவில் இந்த தலத்தில் எந்த நாளும் அனைத்து ஹோமங்களும் சிறப்பான வகையில் நடந்து வருகிறது. பக்தர்கள் இறைவன் இறைவி வழிபட்டு எல்லா நலமும் பலமும் பெற்று வாழ்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுள் 120 வயது வரை வாழும் விதி உண்டு. இந்த 120 வயது காலத்தில் ஒவ்வொரு நவகிரக தேவர்களும் நம் வாழ்க்கையில் 120 வயது வரை பங்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் பெரும் பங்கு வகிப்பவர் சனீஸ்வர பகவான் இந்த சனிபகவானுக்கு சகோதரன் தான் எமதருமராஜன் மனிதனின் உயிரை எடுத்து செல்வது தான் எமதருமராஜனின் பணி. மனிதனாக பிறந்த மார்கண்டேயனுக்கு இந்த திருக்கடவூர் திருத்தலத்தில் சுவாமி சிரஞ்சீவி பட்டத்தை அளித்தார். ஸ்ரீ மார்கண்டேயர் உயிரை எடுக்க வந்த எமதருமனை ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி சம்காரம் செய்தார். ஸ்ரீ மார்கண்டேயர் உயிரை எடுக்க வந்த எமதருமனை 
ஸ்ரீ காலசம்கரமூர்த்தி சம்காரம் செய்தார். ஸ்ரீ மார்கண்டேயர் தெய்வ அனுகிரகம் பெற்றார். இதனால் தான் திருக்கடவூர் தலத்தில் திரளான பக்தர்கள் மேற்பழ வைபவத்தை செய்துகொண்டு ஸ்வாமியின் அனுகிரகத்தை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
 
இறைவன் அனுகிரகத்தால் இறவாமை அடைந்தவர்கள் மார்கண்டேயர். அசுவத்தாமன் மாவலி வியாசர் ஹனுமான் விபீஷணன் கிருபர் பரசுராமர் ஆகியவர்கள் எண்மர் ஆவார்கள். சாந்தி காலங்களில் மட்டும் இன்றி ஏனைய காலங்களிலும் இவர்களின் பெயர்களை நினைவுகூர்ந்து வழிபடுவது நற்பயனை தரும்.


ஆயுளை வளர்க்கும் அனைத்து சாந்தி ஹோமங்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாலாம்பிகை உடனாகிய மிருத்யுஞ்சயரே பிரதான தெய்மாவார். திருக்கடவூரில் மட்டும் இன்றி எந்த ஊர்களிலும் இந்த சாந்தி ஹோமம் செய்து கொண்டாலும் இந்த தெய்வங்களைத் தான் அவாகனம் செய்வார்கள்.

1. ஆயுள் ஹோமம்
2. உக்ரரத சாந்தி
3. ஷஷ்டியப்தபூர்த்தி
4. பீமரதசாந்தி
5. சதாபிஷேகம் கனகாபிஷேகம்





ஆயுள் ஹோமம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறந்த நாள் பிறந்த வருடம் பிறந்த நகூஷத்திரம் அன்று செய்து கொள்ள வேண்டிய ஒன்று. இதில் 16 கலசம் நவதான்யம் நெய் நெல் அரிசி தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு போன்ற பூஜைக்குரிய பொருள்கள் இருக்கவேண்டும். இந்த ஆயுள் ஹோமத்திற்கு பிரதான சுவாமி மிருத்ஜியர் பாலாம்பிக மார்கண்டேயர்.
பரிவார தேவதைகள் :
மகாகணபதி சுப்பிரமணியர் வள்ளி தேவசேனா. ஆயுள் தேவதை தன்வந்திரி தேவதை நவரகிரகங்கள் அனைத்தும் உகந்த தேவதைகள்.



59 வயது பூர்த்தி – 60 வயது ஆரம்பம்

ஒரு மனிதன் 60 வயதிற்கு முன்பு ஒரு தாயின் வயிற்றில் கருவாக இருப்பான். அதன் ஆரம்பம் மனித பிறப்பு அடையக்கூடிய தன்மை அடைகிறான்.
அப்போது இரு ஜீவன்களுக்கு ஒரு கஷ்டமான நேரமாக இருக்கிறது. அதே நேரமானது 60 வயது ஆரம்பத்தில் கிரகங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதைப் போன்று ஒரு நிலையானது ஸ்ரீ மார்கண்டேயர் 16 வயது நிரம்பியபோது தோன்றுகிறது. அவரை காப்பாற்ற ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் சிவலிங்கத்திலிருந்து வெடித்து தோன்றிய சிவனின் காட்சி. ஸ்ரீஉக்ரமிருத்ஞ்யர் இவருக்கு எட்டு கைகள் ஐந்து சிரசு உள்ள அற்புதமான மூர்த்தி இந்த உக்ரமிருத்ஞ்யரை கலசத்தில் ஆவாஹனம் செய்து உக்ரமிருத்ஞ்ய ஹோமம் செய்தால் மேலே சொல்லப்பட்ட கஷ்டங்கள் நீங்கும்.


ஷஷ்யப்த பூர்த்தி மனிதன் இப்பூவுலகில் பிறந்த நேரம் திதி கிழமை அனைத்தும் திரும்பவும் சேரும் காலம் இந்த 60 ஆம் ஆண்டு முடிந்து 61 வயது ஆரம்பம் இந்த நேரம் ஆகும் அதாவது மனிதன் மறுபடியும் உலகில் பிறப்பது போன்ற ஒரு சூழ்நிலை காலம் ஆகும். அதற்கு இறைவனுக்கு நன்றி கடனாக வாழையடி வாழையாக குடும்பம் தழைத்தோங்க வம்சம் விருத்தியாகி குலம் தழைத்து இருக்க வேண்டி செய்வதே (ஹோமம்) ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியாகும். இந்த சாந்தியால் கலசத்தில் ஆவாஹனம் செய்து ஒரே குடும்பமாக இருக்க கூடிய இதில் பிரதான தேவதைகள் ஸ்ரீமிருதிஞ்சயர் ஸ்ரீபாலாம்பிகை ஸ்ரீமார்கண்டேயர் மகாகணபதி வள்ளிதேவசேனா சுப்பிரமணிய பைரவர் சிவசூரியன் சமயகுரவர் சுந்தரர் வீரபத்திரர் அஸ்திரதேவர் திருநந்தி தேவர் சந்தான குறவர் கங்கை யமுனை அமிர்தேஸ்வரர்  அமிர்தேஸ்வரி 60 தமிழ் வருட தேவதைகள் நட்சத்திர தேவதைகள் முதலிய தேவதைகளை ஆவாகனம் செய்யலாம் செய்து பூஜிக்க வேண்டும் மனிதனின் 120 வயதில் பாதி கடந்ததினால் சுவாமிக்கு பிராத்தனை செய்வது போல் இந்த நிகழ்சிச அமைந்து உள்ளது. இதற்கு ஷஷ்டியப்தபூர்த்தி என்று பெயர்.



70 வயது ஆரம்பம் 75க்குள்
இந்த வயதில் எல்லா மனிதர்களுக்கும் உடல் தளரக்கூடிய வயதாகும். இது இயற்கை. உடல் தளர்ந்தாலும் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்று இறைவனை நோக்கி செய்யக்கூடியது பீமரதசாந்தி இதற்கு சாட்சி மஹாபாரதத்தில் வரகூடிய பஞ்சபாண்டவர்கள். பஞ்சபாண்டவர்களில் பீமன் செய்த சிவபூஜை எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
பீமன் செய்த சிவபூஜைக்காக  சிவன் மகழ்ந்து தன்னுடைய எட்டு நாமாவளியில் ஒரு நாமாவளியை விட்டு கொடுத்தார்.

அது பின்வருமாறு :
1. பவன் 2. சர்வன் 3. ஈசானன் 4. பசுபதி 5. உக்ரன் 6. ருத்ரன்
7. பீமன் 8. மஹாதேவன் இதுவே எட்டு நாமாவளிகள்.
ஆதலால் பீமன்போல் மனதளவிலும் உடல் அளவிலும் வலு இருக்க வேண்டும் என்று இறைவனை நோக்கி பராத்திப்பதே பீமரத சாந்தி.



ஒருவர் நிறைவாக வாழக்கூடிய வயது நூறு. அதனாலேயே 'சதமானம் பவதிசதாயுஸூ' என்று அழைக்கிறோம். நூறு வயது வாழ்ந்து வாழ்க்கையின் முழுப் பலனை முழந்த வரையில் பெறும்படி செய்யும் ஆசீர்வாதம் இது.

கணவனும் மனைவியும் ஒற்றுமையாக மக்கட் செல்வத்துடன் வாழ்ந்து எண்பது வயது கணவனுக்கு நிறையும் போது சதாபிஷேகம் என்று கொண்டாடுகிறோம். தமிழ் ஆண்டுகள் அறுபது. அதை முழுமையாக ஒரு தடவை வாழ்க்கையில் பூர்த்தி செய்வதே நிறைவு என்று கொண்டாடுகிறோம். கணவனும் மனைவியும் மங்கள அபிஷேகம் செய்து கொண்டு மாலை மாற்றிக் கொண்டு மனைவி கணவன் கையால் மாங்கல்யதாரணம் செய்து கொள்கிறாள். அவர்களுடைய புத்திரர்களும் புத்திரிகளும் சேர்ந்து செய்ய வேண்டிய மங்கள வைபவம் இது. அவர்கள் தமது பெற்றோரின் கல்யாணத்தைப் பார்க்க இயலாது. அதனால் தான் இந்த நிகழ்ச்சியை இப்போது செய்து பார்த்து மகிழ்கிறார்கள்.
அதே போலக் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்ந்து மக்களின் அடுத்தத் தலைமுறையாக பேரன் பேத்திகளும் வளர்ந்து வாழ்க்கையில் நிலைக்கும் போது கணவனுக்கு எண்பது வயது பூர்த்தியானால் சதாபிஷேகம் என்று கொண்டாடுகிறோம். சதம் எண்பது நூறு என்றாலும் அந்தப் பலன் எண்பது வயது நிறையும் போது பூரண அளவில் கிடைத்து விடுகிறது என்று பெரியோர்கள் கூறி ஆசீர்வதிப்பதே இதன் பெருமை ஆகும்.
'ஆயிரம் பிறைகண்டவர்' என்று கூறி ஒருவர் நீண்ட காலம் வாழ்ந்ததைப் பெருமையுடன் கொண்டாடுகிறோம். ஆயிரம் முறை பூர்ணமான சந்திரனை தரிசிப்பது பெரும் பாக்கியம். ஆனால் அப்படி முழுமையாக தரிசிக்க எண்பது மூன்று வயது வாழவேண்டும். ஆனால் எண்பது வயது நிறைந்தவுடன் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகிறோம். இதைப் பேரன் பேத்தி பேத்திமார் நிறைவுடன் செய்வதே சிறப்பானது. அவர்களும் தாத்தா பாட்டியின் திருமண நிகழ்ச்சிகளை மீண்டும் பார்த்து மகிழலாம்.
சதாபிஷேகத்தில் பரமேஸ்வரன் பிரும்மா விஷ்ணு நவக்கிரஹங்கள் சிரஞ்சீவிகளான பக்த மார்கண்டேயர் ஹனுமன் அஹ்வத்தாமா மஹாபலி வேதவியாசர் விபீஷணர் கிருபாச்சாரியார் பரசுராமர் சப்தரிஷிகள் இந்திராதி தேவர்கள் அஷ்டதிக்பாலகர்கள் ஆயுர் தேவதை நகூஷ்த்திர தேவதை இவர்களை ஆராதனை செய்து ஐபித்த புனித ஐலத்தை தம்பதிகளுக்கு அபிஷேகம் செய்கிறோம்.
சதாபிஷேகம் செய்து கொள்பவர்கள் பாக்கியசாலிகள். ஆவர்கள் பகவானின் பூரண அனுக்கிரத்தைப் பெற்றவர்கள். அவர்களை தனக்கு மிகவும் பிடித்த 'சகஸ்ரஜீவிகள்' என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். அவர்கள் உமா மகேசுவரர் ஆகவே மதிக்கப்படுகிறார்கள். அந்த வைபவத்தில் அவர்களை நமஸ்காரம் செய்து ஆசிகளைப் பெறுவது மிகவும் விசேஷமானது. அதனால் அப்படிப்பட்ட தம்பதியரை எல்லோரும் நாடிப் போய் அன்றைய தினம் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து அவர்களுடைய ஆசிகளைப் பெறவேண்டும்.
இந்த சதாபிஷேகம் இத்திருக்கோயிலில் அன்றாடம் நடைபெறுகிறது. சதாபிஷேகம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகள் இவ்வலை முகவரி மூலமாக தொடர்பு கொள்ளலாம். தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


'அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது' கிடைத்தற்குரிய மானிட பிறவியானது தெய்வதன்மை அடைவதற்கு உரியது. மனித வடிவத்திலேயே தெய்வம் ஜோதிட நூல் மூன்று கணங்களாக வகுத்துள்ளது.
1. மனித கணம் 2. ராஷ்சகணம் 3. தேவகணம்
தெய்வ புலவரான திருவள்ளுவர் வைத்துள்ள வாழ்வாங்கு வாழ்பவரே
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றார். வாழ்வாங்கு வாழ்வதற்கு வேதம் மூன்று சாந்திகளை கூறுகிறது. ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மனிதனுக்கு மூன்று பருவம் உள்ளது. அவை பாலபருவம் இளமை பருவம் யவன வாலிப பருவம் விருத்த வயோதிக பருவம் ஆகும்.



1 வயது முதல் 20 வயது வரை செய்வது ஆயுள் ஹோமம்
(1 வயது ஆரம்பத்தில் செய்வது அப்தபூர்த்தி)
20 வயது முதல் 40 வயதிற்குள் செய்வது ருது சாந்தி விருத்த பருவம்
40 வயது முதல் 60 வயதிற்குள் செய்வது பூரத்தில் செய்வது மணிவிழா
ஷஷ்டியப்தபூர்த்தி ஆகும்.

இவை அனைத்தும் சாந்தி என்று குறிப்பிடப்படுகிறது. அதுவே ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மும்முறை கூறப்படுகிறது. மனிதனுக்கு அறுபது வயதில் அபமிருத்யு ஏற்படும் காலம் (விபத்து) என்பதால் 59 வயது பூர்த்தி ஆகும் போது அறுபது வயது துவக்கத்தில் உக்கிரத சாந்தியும் அறுபது பூர்த்தி ஷஷ்டியப்த பூர்த்தியும் எழுபது வயதில் பீமரத சாந்தியும் செய்து கொள்கிறோம். எண்பதாவது வயதில் ஆயிரம் பிறை கண்டதால் தெய்வத்தன்மை உடையவராய் ஆகிவிடுகிறார்கள். அப்பொழது சதாபிஷேகம் சாந்தி செய்கிறோம். எண்பது வயதிற்குமேல் கொள்ளுபேரன் (மகனுத்யா பேரன் கைகளினால் அபிஷேகம் வாங்கும் பேரு கிடைப்பதால் அது பொற்காசு அபிஷேகம் என்று பெயராகி கனகாபிஷேகம் ஆகிறது அவர்களுடைய மனைவிக்கு நவரத்தின கற்களினால் ஆன மாங்கல்யம் அணியும் பேரு கிடைக்கிறது.

மனிதனுக்கு மனைவியுடன் இணைந்து சதாபிஷேகம் கிடைத்தால் அதுவே பூர்ணாபிஷேகம்.
தான் பேரனுக்கு ஆண் குழந்தை பிறந்து அவன் கையால் அபிஷேகம் கிடைத்தால் கனகாபிஷேகம்.
செயற்கரிய செயல்களை செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் செய்து கொள்வதும் கனகாபிஷேகம் தான்.

பெரியோர் வர்ழ்த்தும்போது தனம் தான்யம் நிறைந்த புதல்வர் நூறாண்டு வாழ்வு ஆகியன பெறுமாறு கூறி ஆசிர்வதிப்பதை காணலாம். இவற்றுள் பூரணமான ஆயுள் என்பது மிகமுக்கியமான ஒன்று எல்லாம் இருந்தும் நீடிய வாழ்வு இல்லையெனில் ஏனைய நன்மைகள் நாம் எவ்வாறு நுகரமுடியும்?

இச்சாந்திகளை செய்து கொள்ள உற்ற தலம் திருக்கடவூர். மார்கண்டேயர் இந்த திருத்தலத்தை வழிப்பட்டே மிருத்யு பயம் போக்கிக் கொண்டார்.
ஆதலால் பக்தகோடிகள் மேற்படி வைபவங்களை திருக்கடவூரில் செய்து கொண்டு சுவாமி அனுகிரகத்தை பெற்று எல்லா வளமும் பெற்று இனிதுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

மேலும் விவரம் அறிய இவ்வலை முகவரி மூலமாக தொடர்பு கொள்ளலாம். தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

உக்ராத சாந்தி சஷ்டியப்தபூர்த்தி பீமரத சாந்தி சதாபிஷேகம் வைபவத்தின் 4 விதமான பூஜை ஹோமம் திட்ட ஜாப்தா:
1. வது திட்டம்:   [ சிறப்பானது ]

64 கலசம் ஸதாபனம் திருமணல்மேடு ஸ்ரீ மார்கண்டேயர் ஆலயத்தில் ஸ்ரீ மருத்துவதி அம்பாள் சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் ஸ்ரீ கங்கா பூஜை திட்டம் ரூ.
 
2. வது திட்டம்:

32 கலச ஸ்தாபனம் திருமணல்மேடு ஸ்ரீ மார்கண்டேயர் ஆலயத்தில் ஸ்ரீ மருத்துவதி அம்பாள் சன்னதியில் ஸ்ரீ சக்ர யந்திரபூஜை திருவிளக்கு பூஜை (20 விளக்கு ஸ்தாபனம்) இரண்டு ஜதை மேளம் ஸ்ரீ கங்கா பூஜை திட்டம் ரூ.
 
3. வது திட்டம்:

(16 கலச ஸ்தாபனம்) திருமணல்மேடு ஸ்ரீ கங்கா பூஜை இரண்டு ஜதை மேளம் இரண்டு காலம் யாகம் திட்டம் ரூ.
 
4. வது திட்டம்:

திருமணல்மேடு ஸ்ரீ மார்கண்டேயர் ஆலயம் ஸ்ரீ கங்கா பூஜை திட்டம் ரூ.
 
ருத்ர ஏகாதசனி ஹோமம்
(பிராமணாள்-க்கு மட்டும்)

ருத்ர ஏகாதசனி ஹோமம் என்பது 2 நாட்கள் நடைபெறும். இவ்விசேஷ பூஜை பிராமணாள்க்கு சிறப்பான முறையில் செய்யப்படுகிறது. இதில் 11 சாஸ்திரிகள் பங்கு கொண்டு 9 வகையான ஹோமங்கள் கங்கை பூஜை கஜ பூஜை கோ பூஜை பஞ்சமூர்த்தி அர்ச்சனை சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் மற்றும் திருவிளக்கு பூஜை செய்யப்படும்.
 

மேற்கண்ட திட்டத்திங்களில் ஒரு கால பூஜை மட்டும் இருந்தால் திட்டத்தில்
ரூபாய் குறையும்.

தரிசனம் பூஜை :-
 
 
ஸ்ரீ அபிராமி அம்பாள் சன்னதியில் சிறப்பு பாராயண தரிசனம் ரூ
 
ஸ்ரீ அபிராமி அம்பாள் அந்தாதி பாராயண சிறப்பு பூஜை திட்டம் ரூ.
 
ஸ்ரீ தேவார திருமுறை பாராயணம் பக்கவாத்தியத்துடன் ரூ.
  
ஸ்ரீ அபிராமி அம்பாள் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் மூலவர் மார்கண்டேயர் அபிஷேக ஆராதனை செய்ய திட்டம் ரூ.
 
சங்கு மண்டபத்தில் செய்ய கட்டணம் ரூ.2526
 
காலசம்ஹாரமூர்த்தி மண்டபத்தில் செய்ய கட்டணம் ரூ.1526
 
சுவாமி அம்மன் உள்பிராகரத்தில் செய்ய கட்டணம் ரூ.1126
  
ஹோமங்கள் விபரம்:-
 
 
1. கணபதி ஹோமம்
2. நவகிரக ஹோமம்
3. மிருத்யுஞ்ஜய ஹோமம்
4. ஆயுள் ஹோமம்
5. தன்வந்திரி ஹோமம்
6. மகாலெட்சுமி ஹோமம்
7. துர்கா ஹோமம்
8. சுதர்சன ஹோமம்
ஹோமங்கள் செய்து கொள்ள தகுந்த வயது:-
 
 
வயது 59 பூர்த்தி 60 ஆரம்பம் உக்கரத சாந்தி
வயது 60 பூர்த்தி 61 ஆரம்பம் சஷ்டியப்த பூர்த்தி
வயது 70 ஆரம்பம் 75 முடிய பீமரத சாந்தி
வயது 80 ஆரம்பம் 85 முடிய சதாபிஷேகம்
ஜன்ம நட்சத்திரம்
ஆயுஷ்ய ஹோமம்

1 comment:

  1. அய்யா..அவர்களுக்கு நமஸ்காரம்.

    எல்லா ஹோமங்களுக்கும் பொதுவான அக்னிமுகம்.

    1) யத்ராக்னி: ஸ்தாபயதே தத்ர ச்வேத−தண்டுல சூர்ணேன ப்ராதேச −மாத்ரம் ஸ்தண்டிலம் சதுரச்ரமண்டலம் கல்பயித்வா, த்வாப்யாம் தர்ப்பாப்யாம்
    ப்ராசி−ருதீசீச்ச திஸ்ரஸ்திஸ்ரோ ரேகா லிகித்வா அத்பிரவோ௯ஷ்ய, சகலம் நைர்ருத்யாம் நிரஸ்ய, அப உபஸ் ப்ருச்ய .

    // எங்கு அக்னியை ஸ்தாபிக்க வேண்டுமோ.. அங்கு வெண்மையான அரிசி மாவால், ஒரு சாணளவு தரையில் சதுரமாக மண்டலம் செய்து, இருதர்ப்பைகளால். (தெற்கில் ஆரம்பித்து) கிழக்கு நோக்கியும்,(மேற்கில் ஆரம்பித்து) வடக்கு நோக்கியும் , மூன்று மூன்று கோடுகள் கிழித்து, ஜலத்தைத் தொட்டுத் தர்ப்பையை தென்மேற்கு திக்கில் போட்டுவிட்டு மறுபடி ஜலத்தைத் தொட வேண்டும்.

    2) பூர்ப்புவஸ்ஸுவரோமித்− யக்னிம் பிரதிஷ்ட்டாப்ய|
    அக்னி−தாரணபாத்ரே அ௯ஷதானத்பிச்ச ஸேசயித்வா அவோ௯ஷணதோயசேஷம் ப்ராகுத்ஸிச்ய| ப்ராக்தோயம் அன்யந்நிதாய| அக்னிமித்வா, ப்ரஜ்வால்ய||

    3) ப்ராகக்ரை−ருதகக்ரைச்ச தர்ப்பை−ரக்னிம் பரிஸ்த்ருணாதி| ப்ராகாதி|ப்ராக்பச்சாச்ச உதகக்ரா:|| த௯ஷிணத உத்தரதச்ச ப்ராகக்ரா:| த௯ஷிணானுத்தரான் உத்தரானதரான் க்ருத்வா|உத்தரேணாக்னீம் தர்ப்பான் ஸம்ஸ்தீர்ய| தேஷுத்வந்த்வம் ந்யஞ்சி பாத்ராணி ப்ரயுனக்தி| தர்வீம் ஆஜ்யஸ்தாலீம் ப்ரோ௯ஷணீபாத்ரம் ப்ரணீதா−பாத்ரம் இதரதர்வீம் இத்மஞ்ச|

    // பூர்புவஸ்ஸுவரோட் என்று அக்னியைப் பிரதிஷ்டை செய்க. (ஸ்த்ரீகள்) அக்னி கொண்டு வந்த பாத்திரத்தில் அ௯ஷதையும், தீர்த்தமும சேர்க்க. ப்ரோ௯ஷணம் செய்த மீதி ஜலத்தை கிழக்கில் கொட்டிவிடு்க.. வேறுஜலம் கிழக்கில் வைக்க. அக்னிக்கு விறகிட்டு மூட்டி நன்கு எரியச் செய்க.

    // கிழக்கு நுனியாகவும், வடக்கு நுனியாகவும், தர்ப்பைகளால் அக்னிக்குப் ஞரிஸ்தரணம் கிழக்கில் ஆரம்பித்து ஏற்படுத்துக. கிழக்கிலும், மேற்கிலும் உள்ளவை வடக்கு நுனியாகவும், தெற்கிலும், வடக்கிலுமுள்ளவை கிழக்கு நுனியாகவும் இருக்க வேண்டும். தெற்கிலுள்ளது மேற்கு பரிஸ்தாணத்திற்கு மேலும், வடக்கில் உள்ளது கீழும் அமைய வேண்டும். அக்னிக்கு வடக்கில் தர்ப்பைகளைப் பரப்பி அவற்றின்மேல் இரண்டு இரண்டாகச் சேர்த்துப் பாத்திரங்களை கீழ்கண்டவாறு வைக்கவும்.. முக்கிய தர்வியும் நெய் பாத்திரமும்; புரோ௯ஷணீ பாத்திரமும் ப்ரணீதா பாத்திரமும்; மற்ற தர்வியும் இத்மமும். (பரிஸ்தரணத்திற்குள் பரிதியும், அக்னி கூண்டமும் தவிர வேறெதுவும் இருக்கக்கூடாது.

    [[ இத்மம் − பரிதிக்காக மூன்று, ஆகாரத்திற்காக இரண்டு, ஹோமத்திற்காகப் பதினைந்து, உபஸ்தானத்திற்காக ஒன்று... என 21 ஸமித்துகளைக் கட்டி வைக்க வேண்டும்.]]

    பரிஸ்தரணம் முதலியன :

    (அக்னிம் ஷோடசபிர் − தர்ப்பை: புரதஸ்து பரிஸ்தரேத்).
    அன்யேஷாம் த௯ஷிணாதீனாமேவம் ஸங்க்யா விதியதே|| பாத்ராணாஞ்ச த்விஷட்கம் ஸ்யாத் ப்ரணீதாயாச்ச ஸாதனே| அஷ்டாபிச்சாதனம் தஸ்யாஸ் த்ரிபிர்-ப்ரஹ்மாஸனம் பவேத்|| ப்ரோ௯ஷணார்த்தபவித்ரே த்வெளத்வே தர்ப்பாக்ரே தவைத ச| பர்யக்னிகரணஸ்யைகோ ஜ்வலனஸ்யைக உச்யதே|| ஸம்மார்ஜனம் த்ரிபிர்− தர்ப்பை −ரேவ−மஷ்டோத்தரம் சதம்|]

    *அக்னிக்குக் கிழக்கில் பதினாறு தர்ப்பைகளால் பரிஸ்தாணம்.
    * தெற்கு முதலிய மற்ற பக்கங்களிலும் அவ்வாறே.
    * பாத்திர ஸ்தானத்திற்கும், பிரணீதா ஸாதனத்திற்கும் 12− தர்ப்பைகள்.
    * பிரணீதா பாத்திரத்திற்கு ஆச்சாதனம் செய்ய எட்டு.
    * பிரம்மாவிற்கு ஆஸனமளிக்க மூன்று.
    * புரோ௯ஷணத்திற்காகப் பவித்திரம் செய்ய இரண்டு.தர்பை நுனிக்காக இரண்டு.பர்யக்னி கரணத்திற்கு ஒன்று. ஜ்வலனத்திற்கு ஒன்று. மார்ஜனத் திற்கு மூன்று என நூற்றெட்டு.

    உத்பவனம் : இரண்டு கைகளிலுமுள்ள அங்குஷ்டம், அநாமிகை இரண்டு விரல்களாலும் பவித்திரத்தைப் பிடித்துக் கொண்டு மேற்கில் ஆரம்பித்து கிழக்கு நோக்கிக் கடத்துதல்.

    4) ஸமாவப்ரச்சின்னாக்ரெள தர்பெள ப்ராதேசமாத்ரெள பவித்ரே க்ருத்வா | அப உபஸ்ப்ருச்ய| அத்பிரனும் ருஜ்ய | ஸபவித்ரேண பாணினா பாத்ராணி ஸம்ம்ருச்ய| ப்ரோ௯ஷணீ−பாத்ரமாதாய பச்சிம?பரிஸ்தரணாத்பஹி:
    தர்ப்பேஷு நிதாய ஸபவித்ரே ப்ரோ௯ஷணீ−பாத்ரே அ௯ஷதை: ஸஹ அப ஆஸிச்ய| ப்ராசிஸ்த்ரிருத்பூய| பாத் ராண்யுத்தானானி க்ருத்வா| இத்மக்ரந்திம் விஸ்ரஸ்ய| ஸபவித்ரேண பாணினா ஸர்வாபிரத்பி: த்ரி: ப்ரோ௯ஷ்ய| ப்ரோ௯ஷணீ பாத்ரம் த௯ஷிணதோ நிதாய.

    4) ஒழுங்கானதும் நுனி சிதையாதது மான இரு தர்ப்பைகளால் ஒரு சாணளவில் பவித்ரம் செய்து ஜலத்தைத் தொட்டு ஜலத்தால் சுத்தி செய்து அந்தப் பவித்திரத்தை கையில் கொண்டு பாத்திரங்களைத் தொட வேண்டும்.
    புரோ௯ஷணீ பாத்திரத்தை எடுத்து மேற்கிலுள்ள பரிஸ்தரணத்திற்கு வெளியில் தர்ப்பையின் மேல் வைத்துக் கொண்டு அ௯ஷதையும், ஜலமும் அதில் சேர்த்து பவித்திரத்தால் கிழக்கு நோக்கித் தடவிப் பரிசுத்தம் செய்து, பாத்திரங்களை நிமிர்த்தி வைத்து , ஸமித்தைக் கட்டவிழ்த்து, பவித்திரத்தால் ஜலத்தைத் தொட்டு எல்லாவற்றையும் மூன்று தடவை புரோ௯ஷித்து மிகுந்த ஜலத்தை வலது பக்கமாக வைத்துக் கொள்க.

    5− அடுத்த பதிவில்.

    ReplyDelete