jaga flash news

Sunday 26 May 2013

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம்
இதில் குழந்தை என்பது ஐந்தாம் பாவத்தையும் , பாக்கியம் என்பது ஒன்பதாம் பாவத்தையும் சேர்ந்தே குறிக்கிறது , இதிலிருந்து நாம் உணர வேண்டியது பாக்கியம் என்னும் பாவம் ஒருவருக்கு 100  சதவிகிதம் நன்றாக இருப்பது, மிக முக்கியம் ஏன் எனில் ஐந்தாம் பாவம் நன்றாக இருந்தால் குழந்தை நிச்சயம் உண்டு .

 
ஆனால் ஒன்பதாம் பாவகம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு பிறக்கும் குழந்தை சிறப்பான திறமைகளும் , நல்ல குணங்களும் பரிபூரணமாக நிறைந்த அதிர்ஷ்ட வாழ்க்கையை வழங்கும் ஜாதக அமைப்பை பெற்று இருக்கும்


எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே , அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் , பெற்றோர் மற்றும் முன்னோர் செய்யும்  பாக்கியமே ! என்று சொல்வதே சாலசிறந்தது .

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் குழந்தை பருவத்தையும் , இளமை பருவத்தையும், நல்ல நிலையில் அமைய வேண்டும் எனில் நிச்சயம் இந்த  ஐந்தாம் பாவகமும் , ஒன்பதாம் பாவகமும் 100  சதவிகிதம் நன்றாக இருக்க வேண்டும்.

 இந்த இரு பாவங்களும் பாதிக்க பட்ட ஜாதக அமைப்பை சேர்ந்தவர்களின் குழந்தை பருவம் மற்றும் இளமை பருவம் இரண்டும் வெகுவாக பாதிக்கப்படுவது நிச்சயம் .

 
மேலும் அஸ்திவாரம் நன்றாக இல்லாத கட்டிடம் நிலைத்து 
நிற்பதில்லை , அதுபோல் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்  தனது குழந்தை பருவத்தையும் , இளமை பருவத்தையும் பல சிரமங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் இந்த அமைப்பை பெற்ற குழந்தையின் பெற்றோர் அல்லது அந்த ஜாதகரோ   குல தெய்வ வழிபாட்டினையும் , பித்ரு கர்மங்களையும் , தொடர்ந்து செய்து வருவதால் ஜாதகருக்கு இந்த பாவகங்கள் வலிமை பெரும் .

சம்பந்தப்பட்ட பாவகங்களின் வழியே சகல நன்மையையும் பெற முடியும் , மேலும் ஜாதகரின் வாழ்க்கை படி படியாக முன்னேற்றம் அடைவார் என்பது நிச்சயம் , நடைமுறையில் பயன்படுத்தி நன்மை பெறுங்கள் .


No comments:

Post a Comment