jaga flash news

Tuesday, 14 May 2013

ஆபீசில் லீவெடுக்காமல் அதற்கான பணத்தை வாங்கினால் வரி கட்டணுமா?


சென்னை: ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அவர்கள் வேலைப் பார்க்கும் நாட்களில் பல வகையான விடுப்புகள் அளிக்கப்படுகின்றன. உரிமை விடுப்பு, நோய் விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு போன்ற பல வகையான விடுப்புகள் அளிக்கப்படுகின்றன.
தற்செயல் விடுப்பை உபயோகிக்காமல் போனால் அந்த விடுப்பிற்கீடான பணத்தை பெறலாமா என்ற கேள்விக்கு இடமே இல்லை. அந்த விடுப்பை உபயோகப்படுத்தியே தீர வேண்டும். ஆனால் தற்செயல் விடுப்பை உபயோகிக்காமல் போனால் அந்த விடுப்பிற்கீடான பணத்தை பெறலாம். உங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி தற்செயல் விடுப்பை உபயோகிக்காமல் போனால் அந்த விடுப்பிற்கீடான பணத்தை பெறலாம் என்றிருந்தால் அதனை பெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. சில நிறுவனங்களில் எந்த வகை விடுப்பானாலும் உபயோகிக்காத விடுப்பிற்கீடான பணத்தை பெற கொள்கை இருக்காது. அதனை நீங்கள் பயன்படுத்தியே தீர வேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் எடுக்க வேண்டிய விடுப்புகள் காலாவதியாகிவிடும்.
ஆனால் பல நிறுவனங்கள் இதற்கு எதிர்மறையாக, உங்கள் விடுப்பை பயன்படுத்த முடியாமல் போனால், விடுப்பிற்கீடான பணத்தை பெற அனுமதி அளிக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் பெறும் பணத்திற்கு வரி கட்ட வேண்டும். அதனால் உங்கள் விடுப்புகளை பயன்படுத்தாததால் பெறும் பணத்திற்கு பதிலாக அந்த விடுப்பை எடுத்துக் கொள்வதே நல்லது.
ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் சலுகை:
ஆனால் தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள், அந்த பணத்தை பணியில் இருந்து ஓய்வு பெற்றப்பின் வாங்கிக் கொண்டால், 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் படி வரிவிலக்கு உண்டு. மேற்கூறிய படி நடந்தால் வருமான வரி சட்டத்தின் பிரிவு 10(10ஏஏ) வின் படி உங்கள் நிறுவனத்திடமிருந்து விடுப்பிற்கீடான பணம் பெறுதலுக்கு வரி கிடையாது.
நீங்கள் வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், உங்கள் வருமானத்திற்கான கோப்புகளை வருமான வரி துறையில் சமர்பிக்க வேண்டும். பல பேர் தங்கள் சம்பளத்தின் மூலம் வரும் வருமானத்தை மட்டும் தான் வரி கணக்கிற்கு எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் வங்கி சேமிப்பால் கிடைக்கும் வட்டி, வாடகையால் வரும் வருமானம் போன்றவற்றை உங்கள் வருமான கோப்புகளை சமர்பிக்கும் போது சேர்த்து கொள்ள மறந்து விடாதீர்கள்.

No comments:

Post a Comment