jaga flash news

Wednesday, 26 March 2014

அ‌ம்‌மி ‌மி‌தி‌த்து அரு‌ந்த‌தி பா‌ர்‌‌ப்பது எத‌ற்கு?

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்று சொல்கிறார்கள். இதில் அருந்ததி என்பது நட்சத்திரம். இதனை எப்படி பகலில் பார்க்க முடியும் என்று சிலர் கிண்டலாகக் கூட பேசுகிறார்கள். இதுகுறித்து விளக்குங்கள்? 

ஒன்றை நினைத்து வணங்குதல்தான் முக்கியம். மானசீகமாக நினைத்து வணங்குகிறோம். பகலில் சூரியன் தெரிகிறது. ஆனால் சந்திரன் தெரிவதில்லை. ஆனால் பகலிலும் சந்திரனுக்குரிய மந்திரங்கள் எல்லாம் உண்டு. அதனையும் நாம் சொல்கிறோம். திங்கட்கிழமைகளில் சோமவாரம், சோம காயத்திரி எல்லாம் சொல்கிறோம். அதுபோல, அருந்ததி நட்சத்திரம் என்பது ஒளிவடிவில் இருக்கிறது. அந்த நேரத்தில் அதனை மானசீகமாக நினைத்து வணங்குகிறோம். ள

அம்மி மிதித்தல் என்பது எல்லாவற்றையும் கடப்பது. மன உறுதிக்காகத்தான் அம்மியை மிதிக்க வைப்பது. அம்மி என்பது என்ன, ஒரே இடத்தில் இருப்பது, அசையாதது என்று பொருள். அடி மேல் அடி அடித்தால்தான் அம்மியும் நகரும் என்று சொல்கிறார்கள். சாதாரண அடிக்கெல்லாம் அது நகராது என்றுதானே அர்த்தம். அந்த உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும். 

மாமியார், நாத்தனார் என்கின்ற கூட்டுக் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள், பல்வேறு இடையூறுகள், பல்வேறு நன்மைகள் எல்லாமே உண்டு. நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இரண்டையும் சமாளித்து உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது போ‌ன்றதெ‌ல்லா‌ம்.

No comments:

Post a Comment