jaga flash news

Saturday, 15 March 2014

மாங்கல்ய தோஷ நிவாரண பூஜை

மாங்கல்ய தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற, சுமங்கலிப் பிரார்த்தனை மிக நல்லது. சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள், சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்கலாம், சுக்ல பட்ச வெள்ளிக்கிழமையன்று, மகாலட்சுமிக்கு, லட்சுமி பூஜை செய்தால் தோஷ நிவாரணம் பெறலாம். 

மிருத்தியஞ்ச ஹோமம், பிரார்த்தனை மிகவும் சிறப்பானது. இந்தப் பிரார்த்தனையும், ஹோமமும் கணவனின் ஆயுளை நீண்ட நாட்களுக்கு அதிகரித்துக் கொடுக்கும் வல்லமை பெற்றது. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களன்று, வன்னிமரத்தடியில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகரை வழிபட்டு, 

அன்றே ஒன்பது கன்னிப்பெண்களுக்கு வஸ்திரதானம் செய்தால், மாங்கல்ய தோஷம் விலகிவிடும். எந்தக் கிரகத்தினால் தோஷமோ, அந்தக் கிரகத்திற்குரிய பரிகாரத்தைச் செய்தால் மட்டுமே போதும். ராகு திசை, ராகு புத்தி நடப்பவர்கள், 

ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சையில், நெய் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம். எலுமிச்சை அன்னம் படைத்து படையல் செய்வதும் தோஷ நிவர்த்திக்குச் சிறப்பு

11 comments:

  1. Sun. 14, May, 2024 at 5.49 pm.

    *திருப்பழநம் :*


    தலம் ...*திருப்பழநம் :* *கதலிவனம்* என்ற பெயரும் உண்டு.

    சந்திரன் வழிபட்ட தலம். காவிரி வடகரைத் தலம்.

    ஐயாறு சப்தத் தானத் தலங்களில் இரண்டாம் தலம்.

    அப்பூதியடிகளின் அடிமைத் திறத்தினை அப்பர் பிரானே விதந்தோதிய தேவாரம் பெற்ற தலம். இங்கு வாழை விசேடம்.

    சந்திரனின் கிரணங்கள் பங்குனி, புரட்டாசி இவ்விரு மாதங்களில் பெளர்ணமியிலும் அதற்கு முன் பின் ஆகிய இருதினங்களிலும் இறைவன் மேல் படுகின்றன.

    சுவாமி : ஆபத்சகாயர்
    அம்பிகை : பெரியநாயகி
    தல மரம் : வாழை
    தீர்த்தம் : மங்கள தீிர்த்தம், காவிரி.

    பாடல் :

    வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு
    வெள்ளை எருதேறிப்

    பூதம் சூழப் பொலிய வருவார்
    புலியின் உரி தோலார்

    நாதா எனவும் நக்கா எனவும்
    நம்பா என நின்று

    பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார்
    பழந நகராரே.

    *விளக்கம் :*

    வேதத்தை ஓதி, முப்புரி நூல் தரித்து வெண்மையான இடபத்தில் அமர்ந்து, பூத கணங்கள் புடைசூழ, புலியின் தோலை ஆடையாக உடுத்தி, பொலியும் சிறப்புடன் காட்சி நல்கும் ஈசன் , நாதா ! நக்கா ! நம்பா ! என மனம் ஒருமித்து நின்று பாதம் தொழுபவர்களின் பாவம் தீர்ப்பவர். அவர் பழன நகரில் விளங்குபவர்.

    நக்கன் என்றால் நிர்வாணி.

    திருச்சிற்றம்பலம்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  2. Sun. 14, May, 2023 at 10.26 pm.

    அறிந்து கொள்வோமே...!

    * *அசத்து :*

    சைவ சித்தாந்தத்தில் அசத்து என்பதற்கு.... நிலையில்லாதது, மாறுதல் அடைவது என்பது பொருள்.

    இப்பொருள் தரும் தமிழ்ச் சொல் *பொய்* என்பதாகும்.

    அசத்து அறிவற்ற சடமாயும் இருக்கும். அவ்வகையில்... *ஆணவம், கன்மம், மாயை இம் மூன்றும் அசத்து ஆகும்.*

    * *அத்துவா :*
    அத்துவா என்னும் சொல்லுக்குப் *படிவழி* என்பது பொருள்.

    மாயையின் காரியங்கள் ஆறு பகுதியாய் நின்று உயிர்களோடு தொடர்பு கொள்கின்றன. அவை... மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்பன.

    * *சொல்லுலகம் :*
    சொல்லுலகம் என்பது....மந்திரம், பதம், வன்னம் இம் மூன்றும் சொல்லுலகம்.*

    * *பொருளுலகம் :*
    பொருளுலகம் என்பது....புவனம், தத்துவம், கலை என்னும் மூன்றும் பொருளுலகம்.*

    *கவனிக்க...*
    சொல்லும், பொருளுமாகிய இவற்றாலேயே தான் நமக்கு வினைகள் உண்டாகின்றன.

    இந்த ஆறும் இறைவனை அடைவதற்குப் படிவழி போன்று இருத்தலால் அத்துவாக்கள் எனப்படுகின்றன.

    * *அவத்தை :*
    அவத்தை என்பதற்கு *நிலை* என்று பொருள்.

    * *காரண அவத்தை :*
    காரண அவத்தை என்பது... உயிர்கள் கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூன்று நிலைகளை உடையன. இவை காரண அவத்தைகள் எனப்படும்.

    * *அத்துவிதம் :*
    அத்துவிதம் என்பது... இறைவனுக்கும், உலகுக்கும் உள்ள தொடர்பை, அதாவது உறவு நிலையைக் குறிப்பதாகும்.

    * *உலகு :*
    உலகு என்பது... அறிவுள்ள உயிர்களையும், அறிவற்ற ஏனையப் பொருட்களையும் குறிக்கும்.

    மீண்டும் சந்திக்கலாம் ...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  3. Mon. 15, May, 2023 at 8.20 am.

    *திருக்களிற்றுப்படியார்....!

    *பாடல் :*

    தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்

    தாங்களே சட்ட உறங்குவர்கள் − ஆங்கு அதுபோல்

    ஐயன் அருட்கடைக்கண் ஆண்டதற்பின் அப்பொருளாய்ப்

    பைய விளையுமெனப் பார்.

    என்பதே அப்பாடல்.

    இன்ப துன்ப விளைவுகளில் மிகவும் தொடக்குண்டவர்கள் தம் *அறி கருவிகள், தொழிற் கருவிகள்* ஆகியனவற்றால் பெரிதும் அயர்ந்துவிடத் தூக்கத்தைப் பெறுவர்.

    அவர்களைத் தூய்மையும், மென்மையும் உடைய படுக்கையில் கூட்டுவிப்பின், அவர்கள் தம்மையும் இவ்வுலகையும் முழுமையாக மறந்து நன்கு தூங்கி விடுவர்.

    அதைப் போன்றே...

    *புறத்தும் (சரியை), அகத்தும் (கிரியை) , ஒன்று பட்டும் (யோகம்) , இறை வழிபாடு ஆற்றியவர்கள், அவற்றின் வழி இறைவனின் அருள் வீழ்ச்சிக்கு (சத்திநிபாதம்) உரியவராவர்.*

    மேலும், அவர்க்குக் குருவருள் கிட்டுங்கால் அவ்வருள் வழியே நின்று, முற்றிலும் *தம்மையும், இவ்வுலகையும் மறந்து மெல்லச் சிவப்பேறு−விலும் அழுந்தி விடுவர்.*

    இவையே அவர்களின் *நுகர்வு முறை*

    என்பதே இப்பாடலின் விரிவான விளக்கம்.

    இப் பாடலில்....

    சயனம் என்பது படுக்கை.

    சட்ட என்பது முழுமையாக

    திருவருட்பேறு அவரவர்களின் பக்குவத்திற்கேற்ப விளைவது ஒன்றாதலின் *பைய விளையும்* என்றார்.

    பைய என்றால் மெதுவாக எனப் பொருள்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  4. Mon. 15, May. 2023 at 5.03 pm.

    *திருவருட் பயன் :*

    பதிமுதுநிலை பார்த்துவிட்டோம்.

    இன்று பார்க்கவிருப்பது...

    *உயிரவை நிலை :*

    உயிரவை நிலை குறளுக்குள் செல்லும் முன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில....!

    * சதசத்து என்பது....
    *உயிர்.*

    * சத்து என்பது....
    *மாறுதல் அடையாத பொருள்.*

    * அசத்து என்பது....
    *தோன்றுதல், அழிதல் முதலிய மாறுதல்களுக்கு உட்படுவது.*

    * உலகம் என்பது....
    *அசத்துப் பொருள்.*

    * விஞ்ஞானகலர் என்பவர்....
    *ஒரு மலம் உடையவர்.*

    * பிரளயாகலர் என்பவர்....
    *இருமலம் உடையவர்.*

    * சகலர் என்பவர்....
    *மும்மலம் உடையவர்.*

    * சகலர் என்ற சொல்லுக்கு.... *கலையோடு கூடியவர் என்ற பொருள்.*
    * கலை என்பது.....
    *பிரகிருதி மாயையைக் குறிக்கும்.*

    * அகலர் என்பது....
    *கலையில்லாதவர் என்று பொருள்.*

    * விஞ்ஞானம் என்பது.....
    *சிறந்த ஞானம்.*

    * பிரகிருதியோடு கூடியிருப்பவர்....
    *சகலர்.*

    * பிரகிருதியினின்று நீங்கியவர்....
    *அகலர்.*

    * உயிர்களுக்கு இடம்.....
    *மாயை*

    * மாயை மூன்றாக அமையும். அவை...
    *சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை.*

    * சகலருக்கு இடமாக அமைவது....
    *பிரகிருதி மாயை.*

    * பிரளயாகலருக்கு இடமாக அமைவது....
    *அசுத்த மாயை.*

    * விஞ்ஞானகலருக்கு இடமாக அமைவது....
    *சுத்த மாயை.*

    * தொத்து என்பது....
    *கொத்து. அதாவது தொகுதி என்று பெயர்.*

    * நிலையற்ற ஆக்கப் பொருள்கள் என்பது....
    *தனு, கரணம், புவனம், போகம்.*

    * சகலர் பிரிவைச் சேர்ந்தவர்கள்....
    *தேவர்கள், அசுரர்கள், மக்கள், அடிமுடி தேடிய பிரமன் மாயோன்.*

    * சுயம்பிரகாசம் என்பது....
    *தானே விளங்குகிற அறிவு.*

    * சித்து என்பது....
    *குறைபாடு என்பதே இல்லாத அறிவு. அவன் இறைவன் என்ற பொருள்.*

    * சித்து என்றால்....
    *இறைவன்.*

    * பாசம் என்பது....
    *அசித்து.*

    * உயிர் என்பது.....
    சித்துவுக்கும், பாசத்திற்கும் இடைப்பட்டது. அதாவது சிதசித்து.

    * மன் என்பதன் பொருள்....
    *தலைவன்.*

    * சித்தாந்தத்தில் கண் என்பதற்கு...
    *அறிவு என்று பொருள்.

    * மன் கண் என்பதற்கு....
    *நிலைபெற்ற பேரறிவு.*

    * ஊமன் என்பது....
    *கூகையைக் குறிக்கும் ஒர் அரிய சொல்.*

    இவற்றை முதலில் நன்கு அறிந்து கொண்டோமானால்... உயிரவை நிலை குறளுக்குள் செல்ல, எளிதாகப் புரியும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  5. Wed. 17, May, 2023 at 7.23 am.

    *திருவருட்பயன் :*

    உயிரவை நிலை பார்த்து வருகிறோம்.

    *உயிரவை* என்பது ஞானசம்பந்தர் பாசுரத்தில் இடம் பெற்ற சொல்.

    ஒரே இறைவன் என்பது போன்று, ஒரே உயிர் என்று சைவ சித்தாந்தம் கூறுவதில்லை.

    ஒவ்வோர் உடம்பிலும் நின்று, இன்ப துன்ப அனுபவங்களை அடையும் உயிர் வேறு வேறு ஆகும்.

    இதிலிருந்து உயிர் ஒன்றல்ல, பல என்று அறியலாம். பல என்றால்... எண்ணற்றவை.

    எல்லா உயிர்களும், ஆணவம் என்னும் மாசு (மலம்)உடையவை.

    அம் மலம் உயிர்களிடத்தில்... மூன்று வகையாகப் பொருந்தி இருக்கிறது.
    அவை... *வன்மை, இடைமை, மென்மை.* என்பனவாம்.

    ஆணவம் வன்மையாய்ப் பற்றிய உயிர்களே பிரகிருதியின் (மாயை) தொடர்பைப் பெறும்.

    மாயை, உடம்பாகவும், உலகமாகவும் பரிணமித்து, அவ்வுயிர்களைப் பெரிதும் மயக்கும்.

    அவ்வுயிர்கள் தமக்குத் துணையாக
    உள்ள இறைவனை அறியாது, உலக வாழ்வில் மயங்கி நிற்கும். *அவ்வுயிர்களே நாம்.*

    உயிர்களுக்கென்று எந்த சுதந்திரமும் கிடையாது. இறைவனது ஆணை செலுத்திய வழியே அவை செல்வன வாகும். எனவே அவைகள் தம் வயம் உடையன அல்ல. அன்றாடம் காணும் கனவே அதற்குச் சான்று.

    உதாரணமாக.... ஏழை ஒருவன் கனவில் தன்னைப் பெருஞ் செல்வனாகக் கண்டு மகிழ்கிறான். செல்வன் கனவில், தான் எல்லாவற் றையும் இழந்து, நடுத்தெருவில் நிற்பதாகக் கண்டு பதறிப்போய் கண் விழிக்கிறான். இப்படிக் கனவில் அறிவு மயங்கி நிற்கிற உயிர்களுக்குத் தன்வயம் கிடையாது.

    கனவு நிலையிலே தான் இப்படி என்றில்லை...நனவு நிலையிலேயும் உயிருக்குத் *தன்வயம்* இல்லை.

    விழிப்பு நிலையில் ஐம்பொறிகளின் வயப்பட்டு நிற்கின்றது. ஐம்பொறிகள் அறிவிக்கவே அறிகின்றது.

    உயிர்க்குரிய இயல்பானது,
    தன்வயம் இல்லாத உயிர், எந்த பொருளைச் சேர்ந்தாலும், அந்தப் பொருளின் தன்மையைப் பெறும். இதுவே உயிரின் முதன்மையான இயல்பு ஆகும்.

    இதற்கு உதாரணமாக.... உலகில் பல கூறலாம். அவற்றில், கண், படிகம், ஆகாயம் இவ்வாறானவை.

    இவைகள்... இருளில் இருளாகவும், ஒளியில் ஒளி பெற்றும் விளங்குகிறது.

    அதுபோலவே உயிரும் இருளாகிய ஆணவத்தைச் சார்ந்து, அறியாமையே வடிவாய் நிற்கும்.

    ஒளியாகிய திருவருளைச் சாருங்காலத்தில் அதன் அறிவு முழுதும் விளங்கி நிற்கும்.

    நாம் ஏற்கனவே கடந்த பதிவில் கற்றபடி..

    உயிருக்கு சதசத்து என்ற பெயர் உண்டு. சத்து என்பது என்றும் மாறுதல் அடையாத பொருள்.

    அசத்து என்பது... தோன்றுதல் , அழிதல் முதலிய மாறுதல்களுக்கு உட்படுவது.

    இறைவன் ஒருவனே சத்துப் பொருள். உலகம் அசத்துப் பொருள்.

    உயிர் இல்லிரண்டையும் சார்ந்து நிற்கும் பொருள் என்று பார்த்தோம்.

    கூகையின் கண்ணிற்குப் பகலிலும் சூரிய ஒளி புலப்படாது.

    அதுபோல, அநாதியில் உயிர்கள் இறைவனது ஞானமாகிய திருவருள் ஒளியில் இருந்தும் அத்திருவருளை உணரமாட்டாமல், ஆணவமாகிய இருளில் அழுந்தி நிற்கும்.

    அன்று தொட்டு இன்று வரையில்... ஆணவ இருளே உயிர்கள் படுந் துன்பங்களுக்கு எல்லாம் மூல காரணம்.

    திருவருள் ஒளியைப் பெற்று, மல இருளிலிருந்து நீங்கும் போது தான், உயிர்கள் பிறவித் துன்பம் நீங்கிப் பேரின்பத்தை அடையும்.

    மீண்டும் அடுத்த பதிவில்..!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  6. Thu. 18, May, 2023 at 4.30 am.

    *திருஅம்பர்மாகாளம் :* (மாகாளம்)

    திருத்தல சிறப்பு...!

    *அம்பன், அம்பாசுரன் என்ற இரண்டு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கக் காளி பூசித்த பதி . ஆதலின் இப்பெயர் பெற்றது.

    இக்கோயில் *மாகாளம்* என்றும் வழங்கப் பெறும்.

    இது காவிரியின் தென்கரைத் தலங்களுள் *ஐம்பத்தைந்தாவது* தலம்.

    இறைவரின்
    திருப்பெயர் : காளகண்டேசுவரர்.

    இறைவியார் : பட்ச நாயகி.

    தீர்த்தம் : மாகாள தீர்த்தம்.

    காளியால் பூசிக்கப் பெற்றது. இச்செய்தியை,
    *காளி ஏத்தும் அழகனார் அரிவை− யோடிருப்பிடம் அம்பர் மாகாளந்தானே* என்னும் இத்தலத்துத் தேவாரப் பகுதியால் அறியலாம்.

    இத்தலத்து இறைவரை புதிய மலர், சந்தனம், புகை இவைகளைக் கொண்டு வழிபடுவோர் தாம் எண்ணிய பொருளைப் பெறுவர்.

    *இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பதிகங்கள் மூன்று உள்ளன.*

    *ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், ஆயில்ய நாளில், சோமாசி மாற நாயனார் யாக விழா மிகச் சிறப்புடன் நடைபெறும்.*

    அம்பருக்கும், அம்பர்மாகாளத்திற்கும் இடையில், சோமாசிமாற நாயனார் யாகம் செய்த மண்டபம் இருக்கின்றது.

    சோமாசிமாற நாயனார் அவருடைய மனைவியார் இவர்களின் பிரதிமைகள் கோயிலில் இருக்கின்றன.

    *அதிகார நந்தி மானிட உருவம் முன் நந்தி இடம் மாறி இருக்கிறது.*

    *நந்திக்கு அருகில் நாயனாருக்கு, இறைவனும் இறைவியும் காட்சிதரும் வண்ணம் எழுந்தருளி இருக்கிறார்கள்.*

    *அருகில் நாகநாதர் என்ற பெயரில் மற்றொரு சிவலிங்கம் இருக்கிறது.*

    *அம்பர்மாநகர் மாகாளத்தை வழிபட்ட திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனாருடன் வாழ்ந்திருந்த பொழுது பாடிய திருப்பதிகங் களுள் ஒன்று இத் திருப்பதிகம்.*

    கோயில் ஊர் நடுவில் இருக்கிறது. இவ்வூரில் நல்ல ஸ்தபதிகளுள்ளனர். சோழர் திருப்பணி. ஆனால் பூர்த்தியாகவில்லை.

    பேரளம் − திருவாரூர் தொடர்வண்டித் தொடரில் பூந்தோட்டம் நிலையத்தில் இருந்து, கிழக்கே 4−கி.மீ தூரத்தில் உள்ளது.

    இப்போது பாடலைப் பார்க்கலாம்...!

    *பாடல் :*

    குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரைகழல் அடிசேரக்

    கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்தறிந் தவர்மேய

    மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை
    வருபுனல் மாகாளம்

    வணங்கும் உள்ளமோடு அணையவல் லார்களை
    வல்வினை அடையாவோ.

    *கருத்து :*

    அடியார் கூட்டங்கள் குணங்களை எடுத்துக் கூறிப் பாராட்டியும், குற்றங்களைக் கூறுதல் போலப் புகழ்ந்தும் ஒலிக்கின்ற கழல்கள் அணிந்த, திருவடிகளுடன் கூட வேண்டிப் பாடவும், தரிசித்தோர் வாழ்த்தவும், இவ்வாறு வழிபடுவோரின் கருத்தை அறிந்து அருளும் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதும், மணமுடைய பூஞ்சோலைகளை உடையதும், புதுவெள்ளம் வரும், அரிசிலாற்றின் வடகரையில் இருப்பது மாகிய மாகாளம். இதனை வணங்கும் உள்ளத்துடன் சேர வல்லவர்களை , அடையும வன்மை வினைகளுக்கு இல்லை.


    *[[ Our Lord graces the servitors who speak of His noble qualities, but explain their own inadequate nature and speak of their degradation and thereafter try to prostrate at His holy feet.*

    *The goblins sing His fame. The devotees praise and pay respect to Him.*

    *Then our Lord will understand our desire and will similarly agree to grace us. Those servitors, able to reach the city of Thiru-umbar-maakaalam with a sincere devotion in their mind to worship Him, will never get the effect of their bad karma in their life. ]]*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  7. Thu. 18, May, 2023 at 9.01 am.

    *உபதேச வெண்பா :*

    முத்திக்கு மூலம் மொழியுங் குருக் கிருபை
    பத்திக்கு மூலம் பகருமன்பு−புத்திக்கு
    மூலம் அரனெவர்க்கும் மூலமே யென்றறிவில்
    சாலமதிப் பாரே தவர்.

    *விளக்கம் :*

    *குருவருள் இன்றி முத்தி சித்திக்காது என்பது சிவாகம நூல் துணிபு.*

    திருவருட்பயனில் *அருளுரு நிலை* என்னும் அதிகாரத்துள் இவ்வுண்மை நன்கு விரித்து உணர்த்தப் பட்டுள்ளது.

    *முதல்வனிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என்ற உணர்வு ஆன்றோர் துணையால் உண்டாகும்.

    பாச ஞானச் சார்பு முதல் பதி ஞானச் சார்பு வரை எல்லாம், அரன் துணையின்றி நிகழாது.

    முதல்வனிடத்துக் காட்டும் அன்பு அவனியல்பு கூறும் நூல்களைக் கற்பதில் ஆர்வம் பெருக்கிட அவற்றைக் கற்று, அவன் ஈயல்பை உணரவே அவ்வன்பு பத்தியாக மலரும்.

    எனவே... *புத்திக்கு மூலம் அரன்* என்று அருளினார். அதாவது முதல்வனிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என்கிற உணர்வு ஆன்றோர் துணையால் கிட்டும் என்பதே.

    *புத்தி என்பது ஞானம்.*

    ஒவ்வொரு போகத்தை , ஒவ்வொரு அதி தெய்வத்தை வேண்டியே பெற வேண்டும் என்பதில்லை.

    எல்லா அதிதெய்வங்களுக்கும், மூலகாரணன் அரனேயாகலின் , அவனை வேண்டவே யாவும் கிட்டும் என்பார் *எவர்க்கும் மூலமே* என்று அருளினார்.

    *சிவபிரானே முழுமுதற் கடவுள் என்றும்,*

    *அவன் சத்திநிபாத்தை ஆட்கொள்ள அருளிய சிறப்புப் பிரமாண நூல் சிவாகமம் என்றும்,*

    *அச்சிவாகமம் உணர்த்தும் அன்பு நெறியாம் சரியை−யாதியே பத்திக்கு மூலம் என்றும்,*

    *குருவருளாலன்றி முத்தி சித்திக்காது என்றும் உள்ளத்தினில் கருதி, மிக மதித்து வாழ்வோரே, தவமுடையார் ஆவர்....* என்பதே இப்பாடலின் கருத்து.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  8. Thu. 18, May, 2023 at 8.43 am.

    *உபதேச வெண்பா :*

    அரியைப் பதியென் றறிவிப்பார் தம்மைப்
    பிரிவித்தார்க் கன்றோ நற்பேறாம் − பெரிய அரன்
    பாதத்தின் மோகப் படுவாரை நீத்தரியைப்
    போதித்தார்க் கேநிரயப் போக்கு.

    *விளக்கம் :*

    பிரம்மா, விஷ்ணு முதலிய பதங்கள் புண்ணியம் மிக்குடைய ஆன்மாக்களாலே எய்தப் பெறுவன.

    *ஒரு கால எல்லைவரை இப்பதங்கள் நிலைபெறும். பின்னர் அழிவுறும்.*

    இவ்வுண்மை... "நூறு கோடி பிரமர்கள் நொந்தினார், ஆறுகோடி நாராயணர் அங்ஙனே" என்னும் ஆளுடைய அரசுகளின் திருவாக்கால் நன்கு உரைப்படும்.

    சிவபெருமான் அருளால், *காத்தல் தொழில் செய்யும் திருமாலை முதல்வன் என்று உணர்த்துவோர் சார்பை விட்டுத், தம் உள்ளத்தைப் பிரிப்பவர்க்கே சிவப்பேறு கிட்டும்.*

    பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபிரான் திருவடியில் பேரன்பு பூண்டோரை விட்டு விலகி அரியே பரப்பிரம்மம் எனப் போதிப்போர்க்கு நிரயமே விளையும்.

    இவ்வாறு அழிவுறும் பதத்தில் வைகும் பசுவர்க்கத்துட்பட்ட திருமாலை *அரியை* என வாளா கூறியும், உபநிடதங்கள் கூறும் பிரம்ம வாசகத்தின் பொருளாக இருக்கும் சிவபிரானைப் *பெரிய அரன்* என்று விசேடித்துக் கூறியும் உள்ளமை உளங் கொள்ளத் தக்கது.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  9. Fri. 19, May, 2023 at 9.15 pm.

    *நான்கு வகையான முத்திகள்.*

    *சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்.*

    சாலோகம் என்பது சிவனுலகம்.

    சாமீபம் என்பது அருகாமை.

    சாரூபம் என்பது இறை உரு.

    சாயுச்சியம் என்பது கடவுளோடு ஒன்றி யிருக்கின்ற, அதாவது இரண்டறக் கலப்பது.

    *சாலோகம், சாமீபம் இரண்டும் சரியை மார்க்கம்.*

    இதன் மூலம், இவர்கள் இறைவன் வாழும் சிவனுலகம் அடைந்து அவனருகிருக்கப் பெறுவர்.

    அதாவது ஞானத் திருவுருவம் பெறுதல் சாலோகம்.

    *சாமீபம் :* பாசம் அருளாக உதவி அவன் அருகடையச் செய்தல்.(சாமீபம் என்பது அருகிருத்தல் அல்லவா)

    *சாரூபம் :* பாசம் சிவ சொரூபமாகி இருப்பது.

    *சாயுச்சியம் :* பாசம் கரைந்து, பரம்பொரு ளோடு இரண்டறக் கலப்பது.

    *சாருபம் என்பதே...முத்தி நிலை.*

    அதாவது, யோகத்தில், எட்டாவதாகிய சமாதி நிலை.

    இது அன்பு நெறியாகிச் சன்மார்க்க அறநெறி பற்றி நிற்பவர்களுக்கல் லாது மற்றவர்களுக்குக் கை கூடாது.

    *இந்த நிலை உடல் உறுப்போடு கூடி அடைகின்ற சித்தியைப் பெறுதலாகும். இதனால் இவர்கள் குறைவில்லாத யோகத்தில் உயர்ந்திருப்பர்.*

    *சிவனருள் நினைவில் பொருந்தி, சிவமே ஆகி, ஆணவம், கன்மம்,மாயை என்னும் மும்மலங்களையும்,தாமதம், இராசதம்,சாத்துவிகம், என்னும் முக்குணங்களையும்*அழித்து, தவப்பேறாம் மும்முத்தி தத்துவ மான, அது நீ என்ற நன்னெறி வழியே நடந்தொழுகல் சோகம் என்று நினைப்பவற்கு சிவப்பரம்பொருள், அவர்கள் உள்ளம் சிறக்க நின்றருளு வான்.*

    *தத்துவத்து அயிக்கியத் துவம் அதாவது... நீ அதுவாகிறாய் என்னும் உண்மை தத்துவமசி*

    *சோகம் என்றால், சீவனும், சிவனும் ஒன்றெனப் பாவித்தல்*

    மீண்டும் அடுத்த பதிவில்...!


    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  10. Fri. 19, May. 2023 at 10.01 pm.

    *திருச்சிற்றம்பலம் என்பதன் விளக்கம் :*

    *அம்பலம் என்றால்.... இறைவன் கூத்திடும் நடன சபை.*

    அதாவது...

    * வானவர்கள் வாழ்கின்ற நடன சபை என்றும்....

    * தேவர்கள் குடியிருக்கும் *சித்தாகாசத் தலம்* சிதம்பரம் என்றும்....

    * வானுலகத் தேவர்கள் வந்திருக்கும் இடம் *அழகிய பொன்னம்பலம்* என்றும்..... பொதுவாகக் கூறுவர்.

    *சித் + அம்பலம்= சிற்றம்பலம்.*

    *சித் என்றால் உண்மை*

    *சித்தம் என்றால் மனம்.*

    *அம்பலம் என்பது பொது இடம். அதாவது நடன சபை.*

    இறைவன் *ஆனந்தக் கூத்திடும் இடம்... சிற்றம்பலம், பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிர சபை, சித்திர சபை* எனவும் கூறப்படும்.

    *தில்லைப் பொன்னம்பலத்தில், இறைவன் ஓயாது ஆடிக் கொண்டிருக் கிறான்.*

    இது *ஆனந்தக் கூத்து, அற்புதக் கூத்து, ஆன்மாக்கள் உய்ய ஆடும் அம்பலக் கூத்து.*

    *இறைவன் இடைவிடாது ஆடும் திருநடனம் "அனவரதத் தாண்டவம்."*

    *இறைவன் ஆடும் அம்பலங்கள், சிற்சபை, பொற்சபை, சித்திரசபை, வெள்ளியம்பரம், தாமிர சபை என்பதைப் போல..அவன் ஆடும் திருநடனமும் கூட அற்புதத் தாண்டவம், ஆனந்தத் தாண்டவம், அனவரதத் தாண்ட வம், பிரளயத் தாண்டவம் சங்காரத் தாண்டவம் என ஐந்து ஆகும்.*

    *ஆனந்தம் என்றால் பேரின்பம்.*

    *அனவரதம் என்றால் இடைவிடாத.*

    *பிரளயம் என்றால ஊழிக்காலம்.*

    *சங்காரம் என்றால் ஒடுக்கம்.*

    அடுத்து...

    *இறைவனின் ஆனந்தத் தாண்டவம்...ஓம்* என்னும் ப்ரணவ வடிவம்.

    * அந்தத் தாண்டவத்தின் உட்பொருள்... *உயிர்களுக்கு அருள் வழங்குதல்..*

    *இந்த அருட்காட்சி, ஆனந்தக் கூத்து, தில்லைப் பொன்னம்பலத்தில் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருக்கூத்து* ஆகும்.

    திருச்சிற்றம்பலம்

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  11. Fri. 07, July, 2023 at 8.51 pm.

    மஹா ம்ருத்யுஞ்ஜய − ஹோம:

    பூர்வாங்கம் !*
    அனுஜ்ஞா | விக்னேச்வரபூஜா |

    1) ஸங்கல்ப: | சுபே சோபனே முஹூர்த்தே + மமோ பாத்த + ப்ரீத்யர்த்தம் − ந௯ஷத்ரே − ராசெள ஜாதஸ்ய − ஆயுராரோக்ய−ஐச்வர்யாபிவ்ருத்த்யர்த்தம் ஸம்ஸதபீடா பரி்ஹ்ரார்த்தம் மஹாம்ருத்யுஞ்ஜய−ப்ரஸாத ஸித்த்யர்த்தம் மஹாம்ருத்யுஞ்ஜய−ப்ரஸாதேன தர்மாவிரோதேன
    −−−−−−−−−−

    தமிழில் .... :

    மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் :

    1) பூர்வாங்கம்:− அனுக்ஞை, விக்னேச்வர பூஜை :

    ஸங்கல்பம்:− இன்ன ந௯ஷத்திரத்தில் இன்ன ராசியில் பிறந்த இன்னாருக்கு ஆயுள், ஆரோக்கியம் ஐசுவரியம் அபிவிருத்தியாவதற்கும், எல்லா பீடைகளும் நீங்குவதற்கும், மஹாம்ருத்யுஞ்ஜய பிரஸாதம் ஸித்தித்து அதனால் தருமத்திற்கு லிரோதமில்லாமல் சிந்திக்கப்பட்ட மனோரதங்கள் பூர்த்தியாவதற்கு மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் எனும் கர்மாவைச் செய்கிறேன்.


    ஶ்ரீமஹா கணபதயே நம:

    1) அனுஜ்ஞா:−

    ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமஸோபஸத்ய | மித்ரம் தேவம் மித்ரதேயந்நோ அஸ்து ! அனூராதான் ஹவிஷா வர்த்தயந்த: ! சதஞ் ஜீவேம சரத: ஸவீரா: ||

    பவித்ரம் த்ருத்வா ||

    நமஸ்ஸதஸே நமஸ்ஸதஸஸ்பதயே நமஸ்ஸகீனாம் புரோகாணாஞ் ச௯ஷுஷே நமோ திவே நம: ப்ருதிவ்யை ||

    அசேஷே ஹே பரிஷத் பவத்பாதமூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் யத்கிஞ்சித் த௯ஷிணாம் யதோக்த−த௯ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய ||
    ...... இதம் கர்ம கர்த்தும் யோக்யதா−ஸித்தி−மனுக்ரஹாண || (யோக்யதா ஸித்திரஸ்து) || I ||

    தமிழில்....!

    1) அனுக்ஞை :−

    ( தெய்வப் பிரீதியையும், பெரியோர்களுடைய ஆசிர்வாதத்தையும் , அனுமதியையும் பெறுதல் )

    மித்திரனாகிய தேவனை ஹோமத்தாலும்,நமஸ்காரத்தாலும் உபசரித்து, நாம் நிறைவுள்ளவர்களாவோம்.

    மித்திரனே ! எங்களுக்குரிய செல்வத்தை அருள்வாயாக. அனுஷத்திலுள்ள ந௯ஷத்திர தேவதைகளை ஹவிஸ்ஸினால் போற்றி வளர்த்துக் கொண்டு வீரர்களுடன் கூடி நாங்கள் நூறாண்டு வாழ்வோமாக.


    *விக்னேச்வர பூஜா:−*

    தர்ப்போஷ்வாஸீநோ தர்ப்பான் தாரயமான; (பதன்யா ஹை) ப்ராணாநாயம்ய !

    மமோபாத்த + பரமேச்வரப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
    ஆதெள விக்னேச்வரபூஜாம் கரிஷ்யே ||

    அஸ்மின் ஹரித்ரா−பிம்பே விக்னேச்வரம் த்யாயாமி | ஆவாஹயாமி | ஆஸனம் ஸமர்ப்பயாமி | பாத்யம் ஸமர்ப்பயாமி| அர்க்கியம் ஸமர்ப்பயாமி ! ஆசமனீயம் ஸமர்ப்பயாமி | ஸ்நானம் ஸமர்ப்பயாமி | வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி | உபவீதம் ஸமர்ப்பயாமி | புஷ்பை: பூஜயாமி ||


    ஸுமுகாய நம: | ஏகதந்தாய | கபிலாய ! கஜகர்ணகாய ! லம்போதராய ! விகடாய ! விக்னராஜாய ! விநாயகாய ! "தூமகேதவே ! கணாத்ய௯ஷாய ! பாலசந்த்ராய ! கஜானனாய ! வக்ரதுண்டாய ! சூர்ப்பகர்ணாய ! ஹேரம்பராய ! ஸ்கந்தபூர்வஜாய ! ஸித்திவிநாயகாய நம: !
    மஹாகணபதயே நம: ||

    தூபமாக்ராபயாமி ! தீபம் தர்சயாமி !
    நைவேத்யம் நிவேதயாமி ! கர்ப்பூரநீராஜனம் தர்சயாமி ! ஸமஸ்தோபசாரபூஜாம் ஸமர்ப்பயாமி||

    வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி−ஸமப்ரப !
    நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா ||
    இதி ப்ரார்த்ய ||

    சுக்லாம்பரதரம் + சாந்தயே !

    ஓம் பூ: +பூர்ப்புலஸ்ஸுவரோம் |
    −−−−−−−−−−−−−−

    தமிழ் .....!

    சபைக்கும், சபையின் தலைவருக்கும் நமஸ்காரம். சிநேகிதர்களுக்கும், நடத்தி வைப்பவர்களின் பார்வைக்கும் நமஸ்காரம். வானுலகுக்கும் பூமிக்கும் நமஸ்காரம்.

    சபையோர்களே ! உங்கள் அனைவருடைய பாத மூலங்களில் என்றால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பொன்மயமான சிறு த௯ஷிணையை சாஸ்திரோக்தமான த௯ஷிணையைப் போல்.... அங்கீகரித்துக் கொண்டு .....
    இந்த ஹோமகர்மாவைச் செய்வதற்கு எனக்குத் தகுதி சித்திக்கும்படி அனுமதியளிக்க வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன். (தகுதி சித்திக்கட்டும் என்று அனுக்கிரகம்)

    2) விக்னேச்வர பூஜை முறை :

    தர்ப்பாஸனத்தின் மேலிருந்து கொண்டு , தர்ப்பையைக் கையிலும் தரித்துக் கொண்டு (பத்னியுடன்) பிராணாயாமம் செய்க.

    நான் செய்த பாவங்களெல்லாம் நசிப்பதன் மூலம்,பரமேசுவரனைப் பிரீதி செய்யும் பொருட்டுச் செய்யப்போகும் கர்மம் தடையில்லாமல் பூர்த்தியாவதற்காக முதலில் விக்னேச்வர பூஜை செய்கிறேன்.

    இந்த மஞ்சள் பிம்பத்தில்
    ஶ்ரீ விக்னேச்வரனை தியானிக்கிறேன்.
    ஆவாஹனம் செய்கிறேன். ஆஸனம், பாத்யம்,அர்க்கியம், ஆசமனியம், ஸ்நானம்..... ஆகியவற்றை சமர்ப்பிக்கிறேன்.

    வளைந்த துதிக்கையும், பெரிய உடலும் படைத்துக் கோடி சூரியனுக்கு ஒப்பான பிரகாசத்துடன் விளங்கும் தேவனே ! எல்லாக் காரியங்களிலும் எப்பொழுதும் விக்னமில்லாமல் இருக்கும்படி அருள்புரிவீராக.....

    சுக்லம்பரதரம்:− எங்கும் நிறைந்தவரும் (எனினும் அன்பர்க்குகந்த வடிவம் ஏற்பவரும்) வெண்மையான ஆடை உடுத்தவரும்
    நிலவு போன்ற ஒளியுள்ளவரும், நான்கு கைகளுள்ளவரும், ஆனந்தம் பொங்கும் முக மண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக தியானம் செய்ய வேண்டும்.

    மீண்டும் அடுத்த பதிவில்..

    Jansikannan60@gmail.com

    ReplyDelete