jaga flash news

Wednesday, 26 March 2014

ஒருவருக்கு லக்னம், ராசி ஆகிய இரண்டும் ஒன்றாக அமைந்தால் என்ன பலன்?

உதாரணமாக கடக லக்னம், கடக ராசி (ஒரே லக்னம்+ராசி) போன்ற அமைப்பைப் பெற்றவர்கள் மிகவும் நாணயமாக நடந்து கொள்வார்கள். இவர்கள், “சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம” என்ற கொள்கையை பின்பற்றுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்கள். எதிலும் ஸ்திரமான, வெளிப்படையான முடிவை எடுப்பார்கள்.

லக்னாதிபதியும், ராசிநாதனும் ஒன்றாக இருந்தால் நல்ல தசா புக்தி நடக்கும் போது சிறப்பான பலன்களும், மோசமான தசா புக்தி நடக்கும் போது மிக மோசமான பலன்களும் கிடைக்கும். 

ஒரு சிலருக்கு ராசிநாதனும், லக்னாதிபதியும் நட்பாக அமையும். இவர்கள் குறுகிய காலத்தில் மிகப் பெரிய ராஜயோகத்தை பெறுவார்கள். ஆனால் சிலருக்கு லக்னாதிபதி, ராசிநாதனுக்கு பகையாக அமைந்து விடுவது உண்டு. அதுபோன்ற அமைப்பைப் பெற்றவர்களுக்கு வாழ்வில் அதிக தோல்வி ஏற்படும். உதாரணமாக நேர்முகத் தேர்வில் முதல் 2 சுற்றுகளில் வெற்றி பெற்றாலும், 3வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறுவார். 

எனவே, லக்னாதிபதியும், ராசிநாதனும் ஒன்றாக அமைவது நல்ல பலனைத் தரும் என்றாலும், அவை இரண்டும் பகையாக அமைந்து விட்டால் எந்தக் காரியத்திலும் கடுமையான முயற்சிக்குப் பின்னரே வெற்றி கிடைக்கும்

No comments:

Post a Comment