நாடிப்பொருத்தம்
இந்த பத்துப் பொருத்தங்களுள் ஐந்து பொருத்தங்களாவது பொருத்தமாக இருக்கவேண்டும் என்பது சாஸ்திரக் கருத்து இவற்றுக்கு அப்பாற்பட்ட மற்றொரு பொருத்தமும் உள்ளது இதற்கு நாடிப்பொருத்தம் என்று பெயர்.இந்த நாடிப்பொருத்த்த்தை பார்ப்பது எப்படி என்பதைக் கவனிப்போம்.கிருத்திகை ரோகிணி ஆயில்யம் மகம் சுவாதி விசாகம் உத்திராடம் திருவோணம் ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் வாம பார்சுவ நாடியைச் சார்ந்தவையாகும் வாம்ம் என்றால் இடப்பக்கம் என்று பொருள். பரணி மிருகசீரிஷம் பூசம் பூரம் சித்திரை அனுஷம் பூராடம் அவிட்டம் உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மத்திய நாடியைச் சார்ந்தவை.அசுவினி திருவாதிரை புனர்பூசம் உத்திரம் ஹஸ்தம் கேட்டை மூலம் சதயம் பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் வலப் பார்சுவ நாடியைச் சார்ந்தவையாகும்.
ஆண் பெண் நட்சத்திரங்கள் வெவ்வேறு நாடிகளிலிருந்தால் உத்தம்ம் பெண்ணின் நட்சத்திர நாடியும் ஆணின் நட்சத்திர நாடியும் ஒரே நாடியாக இல்லாமல் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு என்று கொள்ளவேண்டும்.இரண்டு நட்சத்திரங்களும் மத்திய நாடியிலிருந்தால் கணவனுக்கு ஆகாது.பார்சுவ நாடியிலிருந்தால் மனைவிக்கு கண்டம். ஆகவே ஆண் பெண் ஆகிய இருவரும் தீர்க்காயுளுடன் வாழ்வதற்கும் உயிருக்கு ஆபத்தான கண்டங்களைச் சந்திக்காமல் இருப்பதற்கும் இந்தப்பொருத்த்த்தைப் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன இந்த நாடிப் பொருத்த்த்தைப் பெரும்பாலும் தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில் பார்ப்பதில்லை என்பதும் குறிப்பிடதக்க செய்தியாகும்
No comments:
Post a Comment