jaga flash news

Tuesday, 30 June 2015

நலிந்தோற்கில்லை நாளும் கோளும்

நலிந்தோற்கில்லை நாளும் கோளும்

அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு சிரமப்படும் ஏழை எளிய மக்களுக்கு எதிர்காலத்தைப்பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு நேரம் இருப்பதில்லை.நடந்து முடிந்தவைகளைப்பற்றியும் இவர்கள் வருத்தப்படுவதில்லை.பொதுவாக இவர்கள் சோம்பேறிகளாக சும்மா உட்காருவதில்லை.சும்மா உட்கார்ந்திருந்தால் இவர்கள் வீட்டில் அடுப்பு எரியாது.ஆகவே இவர்கள் தினமும் உழைத்தே ஆகவேண்டும்.உடம்பில் தெம்பு இருக்கும்வரை ஓயாமல் உழைத்துக்கொண்டே இருப்பார்கள்.சாகும்வரை தன்னால் இயன்ற வேலைகளை செய்வார்கள்.வாழ்க்கை சிரமங்களைப்பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை.சிரமங்களைக்கண்டு அஞ்சுவதுமில்லை.முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்கவே முயற்சிப்பார்கள்.பெரிய ஆசைகள் எதுவும் இவர்களுக்கு இருக்காது.பெரிய அளவில் இலக்குகள் எதுவும் கிடையாது.இதனால் இவர்களுக்கு மனதில் பெரிய சஞ்சலங்களும் ஏற்படுவதில்லை, நாள் நட்சத்திரம் பார்க்கவேண்டிய தேவையும் ஏற்படுவதில்லை.இவர்களிடம் காணப்படும் மகிழ்ச்சியும்,மன அமைதியும்,தன்னைப்பெரிய மகான் எனக்கூறிக்கொள்பவர்களிடம் கூட காணமுடியாது.உண்மையில் பிறப்பறுக்கப்பிறந்தவர்கள் இவர்கள்தான்

No comments:

Post a Comment