jaga flash news

Monday 1 June 2015

திருமணம் @ தாரை பலம்

திருமணம் @ தாரை பலம்
========================

திருமணம்:
இல்லறத்திற்கு நுழைவாயிலாக அமைவதனை 'மணம்' என்ற சொல்லால் குறிப்பிட்டதன் நோக்கம் மண்ணைப் (நிலத்தை) போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வன்மை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை. சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது.

தற்கால நடைமுறை

ஒருவன் திருமணத்திற்கு முன் எவ்வளவு பெயர், புகழோடு இருக்கிறான் என்பது முக்கியமல்ல அவன் திருமணத்திற்கு பின் அவன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம். ஒருவனின் மணவாழ்க்கை அவனது வாழ்க்கையை மீண்டும் முதலிருந்து துவங்குகிறது. அதாவது ஒருவன் திருமணம் ஆவதற்கு முன் எப்படி இருந்தாலும் அவன் திருமண வாழ்வில் தோல்வியை தழுவினால் அவன் வாழ்க்கையிலும் தோல்வி அடைந்தான் என்பதாகும்.

ஆக ஒரு மனிதனின் வெற்றியை அவன் திருமணம் முடிவு செய்யும். அதாவது அவன் யாரின் கரம் பிடித்தானோ அவளே அவனின் வாழ்க்கையை வெற்றியடைய செய்வாள்.

திருமண பொது விதியில் ஒன்றை பார்ப்போம்:

பொதுவாக திருமணம் என்று வரும் போது ஒரே ராசியில் பிறந்தவர்களை சேர்க்க மாட்டார்கள் ஆனால் காலம் எற்படுத்தும் மாயாத்தால் சில சமயம் காதலித்தவர்கள் ஒரே ராசியாய் அமைந்துவிடுவது உண்டு. அப்படி அமையும் போது இந்த பொது விதியை பரிசிலித்து பார்க்கலாம்.

ஒரே ராசியில் பிறந்த இருவருக்கு திருமணம் செய்யும் போது பெண்ணுக்கு பின் நட்சத்திரத்தில் உள்ள வரனைத் தான் தேர்வு செய்வர்.

உதாரணம் : ஆண் = துலாம் ராசி சுவாதி நட்சத்திரம், பெண் = துலாம் ராசி = விசாகம் நட்சத்திரம்.

ஏன் ?

சுவாதி நட்சத்திரத்திற்கு விசாகம் சம்பத்து தாரையாக வரும். ஆக ஒரு ஆண் தன் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்றால் தனக்கு சம்பத்துதாரையாக வரும் பெண்னை மணந்தால் வாழ்க்கையில் வெற்றி அடைவான் என்பது இதில் உள் இருக்கும் உண்மை.

நாம் அடுத்த் உள்ள நட்சத்திரத்தின் உருவத்தை தொடத்தொட நம் வாழ்க்கை வெற்றி அடைவது சாத்தியம் என்றால் இதுவும் சாத்தியமே.

இது ஒரு பொது விதியே. இதர விதிகளையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

1 comment:

  1. அய்யா.. வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.

    அய்யா திருமணமாக கீழ்கண்ட திருப்புகழ் பாடலை பக்தியுடன் படித்தால் நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.

    பாடல் இதோ...! அதற்கான விளக்கமும் அளித்துள்ளேன்.

    திருப்புகழ் :

    இப்பாடலை பக்தியுடன் படித்தால்.. நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்...!

    ஆதி தாளம்..

    விறல் மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
    மிகவானில் இந்து வெயில்காய

    மிதவாடை வந்து தழல்போல ஒன்ற
    வினைமாதர் தந்தம் வசைகூறக்

    குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
    கொடிதான துன்ப மயில்தீரக்

    குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து
    குறைதீர வந்து குறுகாயோ

    மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
    வழிபாடு தந்த மதியாளா

    மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
    வடிவேல் எறிந்த அதிதீரா

    அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும்
    அடியார் இடைஞ்சல் களைவோனே

    அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து
    அலைவாய் உகந்த பெருமாளே !

    இதன் பொருள் :

    வீரமிக்க மன்மதன்... தாமரை, மா , அசோகம் , முல்லை , நீலோற்பலம் என்னும் ஐந்து மலர் அம்புகளைச் செலுத்துகிறான்....

    வானத்து நிலவு வெயில்போல மிக அதிகமாகக் காய்கிறது...

    மிதமான வாடைக் காற்று வந்து தீப் போல வீசுகிறது....

    வீண் பேச்சுப் பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூறுகிறார்கள்.

    இவைகளால் துன்புற்றுக் குறவர் வாழும் குன்றில் இருக்கும் வள்ளி போல...

    இந்தப் பேதைப் பெண் கொடிய மயக்கம் கொண்டாள்....

    அது தீர... குளிர்ந்த மாலைப் பொழுதில் வந்து, நீ அணிந்துள்ள மாலையைத் தந்து, குறை தீர வந்து
    அணுக மாட்டாயா ...?

    இளமையான மானை உகப்புடன் ஏந்தி ஆடும் சிவபிரான், உன்னிடம் உபதேசம் பெறுவதற்காக மகிழ்ந்து வழிபடப் பெற்ற பேரறிஞனே !...

    ஏழுமலையும், மாமரமும் வீழவும்...
    அலைகடல் அஞ்சவும் வடிவேலைச் செலுத்திய தீரமிக்கவனே ! ...

    அறிவின் மூலம் உன்னை அறிந்து, உன்னுடைய இரண்டு திருவடிகளையும் வணங்கும் அடியார்களின் துன்பங்களைக் களைபவனே !...

    அழகிய செம்பொன் மயில் மேல் அமர்ந்து கடற்கரைத் தலமான.. திருச்செந்தூரில் மகிழ்வுடன் வீற்றிருக்
    கும் பெருமாளே ! ....

    உன் மாலையைக் கொடுக்க மாட்டாயோ ...?

    என்பதே இதன் பொருள்.

    பக்தி சிரத்தையுடன் படித்தால்.. நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.

    திருப்புகழை வாய்மணக்க படித்து பயனடையுங்கள்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete