கிரகங்களின் பெயர்கள்:-
இந்திய முறை ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் கூறப்பட்டுள்ளன. “கிரகம்” என்றால் “பற்றுவது” அல்லது “பிடிப்பது” எனப்பொருள்படும். “கிரகம்” என்றால் “நகர்வது” எனவும் பொருள்படும். அதாவது பூமியிலிருந்து வானத்தைப்பார்க்கும்போது எவையெல்லாம் கண்களுக்கு நகர்வது போல் காட்சியளிக்கின்றனவோ அவை கிரகம் என அழைக்கப்படுகின்றன. எவையெல்லாம் தன்னுடைய ஆகர்ஷண சக்தியால் பூமியை பற்றியிழுக்கின்றனவோ அவை கிரகம் என அழைக்கப்படுகின்றன. வானத்தில் நகர்ந்துகொண்டே பூமியை பற்றியிழுப்பவையாக கருதப்படுபவை ஒன்பது கிரகங்களாகும். அவைகளின் பெயர்கள் கீழேதரப்பட்டுள்ளன.
1.சூரியன் 4.புதன் 7.சனி
2.சந்திரன் 5.குரு 8.ராகு
3.செவ்வாய் 6.சுக்கிரன் 9.கேது
சூரியன் ஒரு கிரகமில்லை,அது பூமிக்கு வெகு அருகில் உள்ள ஒரு நட்சத்திரமாகும்.பூமியானது சூரியனை சுற்றிவருகிறது. பூமியானது எந்த திசையை நோக்கி சுற்றுகிறதோ, அந்த திசைக்கு நேர் எதிர் திசையை நோக்கி சூரியன் சுற்றுவது போல் பார்ப்பவர் கண்களுக்கு தென்படுகிறது. அது எப்படியென்றால் குடை ராட்டிணத்தில் அமர்ந்துகொண்டு ஒருவர் சுற்றிவரும்போது ,ராட்டிணத்தின் அச்சானது ,ராட்டிணம் எந்த திசையை நோக்கி சுற்றுகிறதோ,அந்த திசைக்கு எதிர் திசையை நோக்கி நகர்வதுபோல் காட்சியளிக்கும். இது ஒருவகையான ஒப்புமை இயக்கமாகும். இதுபோல் நிஜத்தில் சூரியன் சுற்றுவதில்லை ஆனால் சுற்றுவது போல் காட்சியளிக்கிறது. இதன் காரணத்தினால் சூரியனை ஒரு கிரமாக பாவிக்கிறார்கள்.
சந்திரன் பூமியின் துணைக்கோள்தான்,ஆனால் அது பூமியை பற்றியிழுப்பதாலும்,வானத்தி ல் சுற்றிவருவதாலும் ஒரு கிரகமென எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது .
வானத்தில் சூரியப்பாதையும்,சந்திரப்பா தையும்
இரு இடங்களில் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கின்றன. அவ்விரண்டு
வெட்டுப்புள்ளிகளே ராகு,கேது என அழைக்கப்படுகின்றன. இப்புள்ளிகள்
சந்திரனின் சஞ்சாரத்தால் ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்துகொண்டேயிருப்பதால்
அவை கிரகங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய முறை ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் கூறப்பட்டுள்ளன. “கிரகம்” என்றால் “பற்றுவது” அல்லது “பிடிப்பது” எனப்பொருள்படும். “கிரகம்” என்றால் “நகர்வது” எனவும் பொருள்படும். அதாவது பூமியிலிருந்து வானத்தைப்பார்க்கும்போது எவையெல்லாம் கண்களுக்கு நகர்வது போல் காட்சியளிக்கின்றனவோ அவை கிரகம் என அழைக்கப்படுகின்றன. எவையெல்லாம் தன்னுடைய ஆகர்ஷண சக்தியால் பூமியை பற்றியிழுக்கின்றனவோ அவை கிரகம் என அழைக்கப்படுகின்றன. வானத்தில் நகர்ந்துகொண்டே பூமியை பற்றியிழுப்பவையாக கருதப்படுபவை ஒன்பது கிரகங்களாகும். அவைகளின் பெயர்கள் கீழேதரப்பட்டுள்ளன.
1.சூரியன் 4.புதன் 7.சனி
2.சந்திரன் 5.குரு 8.ராகு
3.செவ்வாய் 6.சுக்கிரன் 9.கேது
சூரியன் ஒரு கிரகமில்லை,அது பூமிக்கு வெகு அருகில் உள்ள ஒரு நட்சத்திரமாகும்.பூமியானது சூரியனை சுற்றிவருகிறது. பூமியானது எந்த திசையை நோக்கி சுற்றுகிறதோ, அந்த திசைக்கு நேர் எதிர் திசையை நோக்கி சூரியன் சுற்றுவது போல் பார்ப்பவர் கண்களுக்கு தென்படுகிறது. அது எப்படியென்றால் குடை ராட்டிணத்தில் அமர்ந்துகொண்டு ஒருவர் சுற்றிவரும்போது ,ராட்டிணத்தின் அச்சானது ,ராட்டிணம் எந்த திசையை நோக்கி சுற்றுகிறதோ,அந்த திசைக்கு எதிர் திசையை நோக்கி நகர்வதுபோல் காட்சியளிக்கும். இது ஒருவகையான ஒப்புமை இயக்கமாகும். இதுபோல் நிஜத்தில் சூரியன் சுற்றுவதில்லை ஆனால் சுற்றுவது போல் காட்சியளிக்கிறது. இதன் காரணத்தினால் சூரியனை ஒரு கிரமாக பாவிக்கிறார்கள்.
சந்திரன் பூமியின் துணைக்கோள்தான்,ஆனால் அது பூமியை பற்றியிழுப்பதாலும்,வானத்தி
வானத்தில் சூரியப்பாதையும்,சந்திரப்பா
No comments:
Post a Comment