jaga flash news

Monday 1 February 2016

அரைஞாண்

மருத்துவ ரகசியம்!.
அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்......
ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்.

3 comments:

  1. ஆதி காலத்தில் விவசாய பணியில் ஆண்கள் ஈடுபட்டு இருந்ததால் இடுப்புக்கு கீழ் துணி அணிய முடியாமல் போனதால் கோவணம் ( கெளபீனம்) கட்ட வேண்டியதால் அது பிடிமானக இருக்க இடுப்பில் கயிறு கட்ட வேண்டியதாயிற்று.அரை என்பது பாதி என்றும் இடுப்பு என்றும் பொருள் வரும்.ஞான் என்றால் ஞானம் என பொருள்படும்.ஞானத்தை அடைய இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகள் மறைத்து இறுக்கி இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஆதி காலத்தில் விவசாய பணியில் ஆண்கள் ஈடுபட்டு இருந்ததால் இடுப்புக்கு கீழ் துணி அணிய முடியாமல் போனதால் கோவணம் ( கெளபீனம்) கட்ட வேண்டியதால் அது பிடிமானக இருக்க இடுப்பில் கயிறு கட்ட வேண்டியதாயிற்று.அரை என்பது பாதி என்றும் இடுப்பு என்றும் பொருள் வரும்.ஞான் என்றால் ஞானம் என பொருள்படும்.ஞானத்தை அடைய இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகள் மறைத்து இறுக்கி இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. ஆடையில்லா மனிதன், அரை மனிதன், என்ற பழமொழிபோல், அருணாக்கயிறு இல்லாத மனிதன் அரைமனிதன். (முண்டம் என்று கூட சொல்லலாம்.) அந்தகாலத்தில் பெரியவர்கள், ஒன்றும் சும்மா சொல்லிச் செல்லவில்லை. மருத்துவ ரீதியாகத்தான், ஒவ்வொன்றும் உணர்த்தப் பட்டிருக்கிறது. உண்மையான கருத்து, பெண்களை விட, ஆண்களுக்கு, குடலிறக்கம் என்ற நோய் அதிகம் வர வாய்ப்பிருப்பதால், இடையில், இந்த கயிறு கட்டினால், வயிறு இடுப்புக்கு கீழே அதிகம் தொங்காது, என்பதற்காக அறுணாக்கயிறு கட்டினார்கள். இரண்டாவது, இந்த உலகத்தில், நாம் ஒன்றும் கொண்டு வரவும் இல்லை, இந்த இடுப்பில் அணிந்திருக்கும், அறுணாக்கயிற்றைக்கூட, நாம் விட்டு விட்டுத் தான் செல்லப்போகிறோம், ஆகவே, ரொம்ப ஆடாதடா மனிதா, என்பதை உணர்த்துவதற்காகவும், அறுணாக்கயிறை கட்டி பழக்கப்படுத்தினார்
    கள்.

    ReplyDelete