ஸ்ரீசூக்த ஹோமம்
பாற்கடலில் அவதாரம் செய்த மகாலட்சுமி, திருமாலை கணவனாக அடைய எண்ணி செண்பக
மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினாள். அது ஒரு அமாவாசை தினம். அடுத்த எட்டாம்
நாள், அதாவது சுக்லபட்ச அஷ்டமி அன்று பெருமாள் கிழக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்யும்
தாயாருக்கு எதிர்திசையில் தோன்றி காட்சி கொடுத்தார். மேலும் மகாலட்சுமியை தனது மார்பில்
செண்பக லட்சுமியாக ஏற்றுக்கொண்டார். தாயாரின் தவம் நிறைவேறி பெருமாள் ஏற்றுக்கொண்ட
, சுக்லபட்ச அஷ்டமியில், கும்பகோணத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாதன்
கோவிலில் 'ஸ்ரீ சூக்த ஹோமம்' செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால், கணவன் -
மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment