jaga flash news

Wednesday, 28 June 2017

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம் வந்தது எப்படி?

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம் வந்தது எப்படி?
------------------------------------------நாம் ஜோதிடத்தில் கூறியுள்ள நல்ல நேரத்தில் தான், எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். பொதுவாக ஜோதிடப்படி, ராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்கள். ஆனால் குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும். அதன்படி நாம் ஒரு காரியத்தை நல்ல நேரத்தில் செய்ய முடியவில்லை என்றால் குளிகை நேரத்தில் செய்யலாம். குளிகை நேரம் என்றால் என்ன? யார் அந்த குளிகன் என்பதைப் பற்றி பார்ப்போம்.
குளிகை நேரத்தில் செய்யப்படும் நல்ல காரியங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் என்று ஜோதிடக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகையால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு குளிகை நேரம் பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது. குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்துகொண்டே இருக்கும்.
இதனால் அடகுவைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டுசெல்வது போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது. அதேபோல, குளிகை நேரத்தில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அச்செயல்கள் எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டும் இருக்கும்.
நல்ல காரியங்களை செய்வதற்கு உகந்த குளிகை நேரத்திற்குரிய குளிகனின் பிறப்பே ஒரு நல்ல நிகழ்வைத் தொடங்குவதற்காகத்தான் உருவானது. குளிகன் உருவான கதை என்னவென்றால், ராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ராவணன் தனது குல குருவான சுக்கிராச்சாரியாரை சந்தித்து, எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கும் நிலையில் உள்ளது என்றும், யாராலும் வெல்ல முடியாத, அழகும், அறிவும்கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்றும், அதற்கு என்ன வழி என்றும் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும் என்று யோசனை சொன்னார். உடனே, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டார் ராவணன். ஒரே அறையில் இருந்த கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர். இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்து கொண்டனர். ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர்.
இதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெரும் தவிப்பில் கிடந்தார். வலி அதிகம் இருந்தபோதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்தச் செய்தி நவகிரகங்களின் காதிற்கு எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று ராவணன் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டனர். இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். இந்தச் சிக்கலில் இருந்து விடுபடவேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரிவதற்கென்று இன்னொரு புதியவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றார்.
அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் விடுதலை ஆகலாம் என்றார். அதன்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால் ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்க வழிசெய்தார். குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மேகநாதன் என்று பெயர் சு+ட்டினர். தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவகிரகங்களால் பாராட்டப்பட்டார். குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரம், காரிய விருத்தி நேரம் என ஆசீர்வதிக்கப்பட்டது. இதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.
LikeShow More Reactions
Comment

மாயக்கண்ணனும்! மாயக்கண்ணாடியும்!

மாயக்கண்ணனும்! மாயக்கண்ணாடியும்!
அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.
அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப் போல, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர்.
என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த "சகுனி" கண்ணாடியில் தெரிந்தான். கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனை வரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை..இல்லை... என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன்.

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்
நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு.
சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
சமித்து குச்சிகளும் பலன்களும்:
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.
வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.
துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.
சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.
பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.
அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.
செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்
நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.
வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.
தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.
கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.
ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.
இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.
தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.
சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.
மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.
நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.
மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்

Monday, 26 June 2017

கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே வழி

கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே வழிதான் உள்ளது. இருப்பதில், மிக மிக இலகுவானதிலும் இலகுவான வழி இவ்வழி ஒன்றே.
முதலில் இறைவனை அடைதல் என்றால் என்ன??
*இறைவன்:
முதலில் நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டியது இறைவன் என்பது எங்கோ இருக்கும் ஒரு பொருளோ, ஒரு நபரோ, ஆணோ, பெண்ணோ, அலியோ, அக்ரினையோ, உயர்தினையோ....... அல்ல. இறைவன் என்பது நம் அறிவால் விளங்கிக்கொள்ள வேண்டிய மாபெரும் சத்தியம்!!!
நம் உடல் என்பது ஒரு பொருளாக தோன்றினாலும், சற்றே சிந்தித்தால், பல எண்ணற்ற உயிரணுக்களின்/ செல்களின் ஒருங்கிணைப்பே நம் உடம்பு ஆகும். இதை யாராலும் மறுக்க முடியாது. பல அனந்தகோடி உயிரணுக்கள் ஒன்றிணைந்து உடம்பு என்னும் ஒருபொருள் ஆவது போல, சத்தியத்தில் உள்ள, சூரியன், சந்திரன், நீங்கள், நான், நாய், நரி, மீன், மான், கோள்கள், அண்டங்கள்............ இவை அனைத்தின் ஒருங்கிணைந்த ஒன்றிற்கு அளிக்கும் பெயரே பிரபஞ்சம், இறைவன்,......... என்றெல்லாம். இதை நாம் அறிவால்தான் விளங்கவேண்டும். இதைத்தான் இறைவன் அறிவுஸ்வரூபன் என்பது.
*இறைவனை அடைதல்:
இங்கு நம் அறியாமையை எண்ணி நாம் கட்டாயம் முட்டிக்கொள்ளதான் வேண்டும். இறைவனில் ஒரு பகுதியாக, இறைவனில் ஒரு அங்கமாக, ஏன் இறைவனாகவே இருக்கும் நாம், நம்மை தனி ஜீவன் என்று எண்ணுவது எத்துனை மடமை. நாம் உடலளவில் என்றுமே இறைவனை பிரிந்தது இல்லை. ஏனெனில், உடம்பு முழுமையே வடிவான இறைவனில் ஓரங்கம். ஆனால் நாம் இறைவனில் இருந்து பிரிவது மனத்தால், எண்ணத்தால்.
நான் வேறு, இறைவன் வேறு என்ற எண்ணம் ஒன்றே நம்மை இறைவனிடம் சேராமல் தடுக்கிறது. எண்ணங்கள் ஓய்ந்த நிலையே இறைநிலை ஆகும்.
அந்த எண்ணங்கள் ஓய இரண்டு அவசியம். ஒன்று ஞானம், மற்றொன்று பக்தி.
இவை இரண்டுமே பறவையின் இரண்டு இறகுகளைப்போன்று நமக்கு. ஞானம் என்பது முன்கூரினார் போல, இறைவன் யார்? அவனிடம் இருந்து நாம் எவ்வாறு பிரிகிறோம்? என்று "அறிதல்" (Theory), அறிந்தபடி, எண்ணங்கள் உதிக்காமல் வாழ்வதே பக்தி (Practical) இவை இரண்டில் எதில் தேர்ச்சி அடையாவிட்டாலும் தோல்வியே.
ஞானம் கண்களை போல - நடக்க சரியான பாதையை காட்டும்.
பக்தி கால்களைப்போல - சரியான பாதையில் நடக்கும்.
"பக்தி இல்லா ஞானி முடவன் ஆவான்.
ஞானம் இல்லா பக்தன் குருடன் ஆவான்"
ஆக அறிதலும், நடைமுறை படுத்துதலும் இரண்டும் அவசியம்.
இந்த நவீன யுகத்தில் மனதை கட்டுப்படுத்த எந்த உக்தியாலும் இயலாது. யாதாலும் பயன் இல்லை.
யோகம் பழகினாலும், யோகம் செய்யும் அந்த அரைமணிநேரம் மனம் சும்மா இருக்கும். பிறகு தன் வேலையை துவங்கிவிடும்.
பூஜையும், புனஸ்காரமும்,, தீர்த்த யாத்திரையும், புத்தகம் படித்தாலும்,.............................. அனைத்துமே அவ்வாறே.
ஆனால் மகான்கள் கண்ட எளிய ஒரே வழி "இறைவன் திருநாமத்தை சொல்வது" ஒன்றே.. தியானம் செய்ய, யோகம் பழக, பூசை செய்ய............ தனி நேரமும் இடமும் தேவை. ஆனால் இறைவனின் நாமத்தை கூற இடம் பொருள் ஏவல் ஏதும் இல்லை. எப்பொழுதும் எங்கும் கூறலாம்.
அனைத்தும் அவன் பெயர்களே. ஏதாவது ஒரு பெயரை திரும்பத்திரும்ப கூறுவதால் மனம் தானே நசிக்கும். சிந்தனைகள் தானே குறையும்.
எதைப்பற்றியும் கவலை வேண்டாம். இறைவன் நாமம் கட்டாயம் நம்மை காக்கும்.
இறைநாம ஜபம் ஒன்றே முக்திக்கு ஒரே வழி!!!

செய்வினைகளின் பாதிப்பினை நீக்கும் பரிகாரங்கள்!

செய்வினைகளின் பாதிப்பினை நீக்கும் பரிகாரங்கள்!
❋ செய்வினை என்பது ஒருவரை அழிக்க மந்திரவாதிகளைக் கொண்டு செய்யப்படும் தீய யாகமாகும். தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்யப்படும் மாந்திரிக முறையே செய்வினை எனப்படுகிறது. மிகவும் கொடுமையான மாந்திரிக முறைகளில் இதுவும் ஒன்று. செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகளின் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம்.
பாதிப்படையும் கிரக நிலை :
❋ லக்னம் மற்றும் லக்னாதிபதி 6ஃ8ஃ12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது.
❋ சந்திரன் லக்னத்திற்கு 4ஃ8ஃ12 ஆகிய வீடுகளில் நிற்பது. சந்திரன் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது சந்திரன் ராகுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6ஃ8ஃ12 வீடுகளில் நிற்பது.
❋ ஆத்ம காரகனாகிய சூரியன் கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6ஃ8ஃ12 வீடுகளில் நிற்பது. தேய்பிறையில் பஞ்சமிக்கு பிறகு வரும் திதிகளில் குறிப்பாக அஷ்டமியில் பிறந்திருப்பது.
❋ சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்கள்.
செய்வினை யாரிடம் பலிக்காது :
❋ வேதத்தை ஓதும் அந்தணர்களிடம் அபிசாரம் பயனளிக்காது. குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் தெய்வாம்சம் நிறைந்திருப்பதால் அவர்களிடம் அபிசார வித்தைகள் பயனளிக்காது.
❋ காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் அபிசார வித்தைகள் அனுகாது.
❋ ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்களிடமும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடமும் பலிக்காது. மேலும் லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பவர்கள், கிரஹன காலங்களில் பிறந்தவர்களிடமும் பலிக்காது.
செய்வினையை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள் :
❋ குல தெய்வ வழிபாடு, பித்ருகள் வழிபாடு, ராகுஃகேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீலக்ஷமி நரசிம்மர் வழிபாடு, ப்ரத்யங்கிரா வழிபாடு மற்றும் காளி வழிபாடு.
❋ மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசீலம், திருப்பதி வழிபாடு மற்றும் சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி வழிபாடுகள்.
❋ மேலும் குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.
❋ சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பவர்கள் ஆகியவர்களை அபிசாரங்கள் நெருங்குவதில்லை.
❋ ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழம்-18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை-18, கதம்பப்பூ - ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். மேலும் அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்துவதே மனோவசியம் மற்றும் அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழியாகும்.

வீட்டில் செல்வம் சேருவதற்கான 80 வீட்டு பூஜை குறிப்புகள்!!

வீட்டில் செல்வம் சேருவதற்கான 80 வீட்டு பூஜை குறிப்புகள்!!
1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.
4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.
7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.
11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.
14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும். saispiriritualcenter.org
18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.
20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.
21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.
24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
Traditional and holy lamp of Tamils.
25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.
32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.
33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம். saispiriritualcenter.org
35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.
38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.
39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.
40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.
41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.
42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.
43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.
46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.
47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.
48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.
49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும். saispiriritualcenter.org
53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.
59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.
60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.
61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.
65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.saispiriritualcenter.org
66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.
68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.
72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.
பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.
பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்..
சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?....

மகாலட்சுமி
மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?....
1. தன்னம்பிக்கையற்றவர்கள்
2. கடமையைச் செய்யாதவர்கள்,
3. குலதர்மம் தவறியவர்கள்,
4. செய்ந்நன்றி மறந்தவர்கள்,
5. புலனடக்கம் இல்லாதவர்கள்,
6. பொறாமை கொண்டவர்கள்,
7. பேராசை கொண்டவர்கள்,
8. கோபம் கொள்பவர்கள்,
9. சான்றோரை மதிக்காதவர்கள்,
10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்.
11. குரு நிந்தனை செய்பவர்கள்,
12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள்,
13. இறைச்சி உண்பவர்கள்,
14. விருந்தினரை உபசரிக்காதவர்கள்,
15. பொய் பேசுபவர்கள்,
16. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள்,
17. பிறர்மனை விரும்புகிறவர்கள்,
18. மனத்துணிவு அற்றவர்கள்,
19. அகத் தூய்மை அற்றவர்கள்,
20. புறத்தூய்மை அற்றவர்கள்.
21. கொடுஞ்சொல் பேசுகிறவர்கள்,
22. ஆணவம் கொண்டவர்கள்,
23. சோம்பேறியாய் இருப்பவர்கள்,
24. அழுக்கு ஆடை அணிபவர்கள்,
25. பகலில் உறங்குபவர்கள்,
26. பகலில் உடல் உறவு கொள்பவர்கள்,
27. பசுக்களை வதை செய்பவர்கள்,
28. விரதங்கள் மேற்கொள்ளாதவர்கள்,
29. நம்பிக்கை துரோகம் செய்பவர்கள்,
30. நகத்தால் புல்லைக் கிள்ளுபவர்கள்.
31. நீரில் கோலம் போடுபவர்கள்,
32. நிலத்தில் நகத்தால் கீறுபவர்கள்,
33. சந்தியா வந்தனங்கள் உள்ளிட்ட அவரவர் கடமைகளை செய்யாதவர்கள்
34. நித்திய அனுஷ்டானங்களைப் புறக்கணிப்பவர்கள்,
35. தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள்,
36. கல்வி கற்காதவர்கள்,
37. கற்றவழி நிற்காதவர்கள்,
38. வீண் சண்டை விரும்புகிறவர்கள்,
39. விவேகம் இல்லாதவர்கள்,
40. இரக்கம் அற்றவர்கள்.
41. பிறர் பொருளைக் களவாடுபவர்கள்,
42. தந்திரமாக ஏமாற்றுபவர்கள்,
43. உழைப்புக்கேற்ற ஊதியம் தராதவர்கள்,
44. திருமணத்தைத் தடை செய்பவர்கள்,
45. நீதி சாஸ்திரங்களைக் கற்க மறுப்பவர்கள்,
46. தற்புகழ்ச்சி கொள்பவர்கள்,
47. பிறரை ஏளனம் செய்பவர்கள்,
48. காலைக் கழுவாமல் வீட்டிற்குள் நுழைபவர்கள்,
49. ஈரக் காலோடு படுக்கையை மிதிப்பவர்கள்,
50. ஆடையின்றி நீராடுபவர்கள்.
51. எண்ணெய்க் குளியலன்று பகலில் உறங்குபவர்கள்,
52. வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பவர்கள்,
53. அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள்,
54. அந்திம வேளையில் உணவு உண்பவர்கள்,
55. தெய்வப் பிரசாதங்களைப் புறக்கணிப்பவர்கள்,
56. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள்,
57. கோள் மூட்டுபவர்கள்,
58. தீய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்.
59. வீட்டை அசுத்தமாக வைத்திருப்பவர்கள்
60. மது அருந்துபவர்கள்.
இவை அனைத்தும் விலக்கப்பட வேண்டியவைகள். இவற்றை நீங்கள் மறந்தும் செய்யாதீர்கள். இவைகளை செய்தால் திருமகள் உங்கள் கிரகத்தில் தங்கமாட்டாள் என்பதுடன் இவை பாவச் செயல்களும் கூட. நம்மால் நிச்சயம் இவைகளை நிச்சயம் தவிர்க்க முடியும்

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா??

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா??
.
இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்!!
.
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. 
ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.
அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பூக்களைச் சூடும் கால அளவு
.
முல்லைப்பூ - 18 மணி நேரம்
அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
தாழம்பூ - 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்
மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.
மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.
.
பூக்களின் பயன்கள்:
.
ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
.
மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
.
செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
.
பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
.
செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
.
மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
.
வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
.
சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
.
தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
.
தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
.
கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.
.
பூக்களைச் சூடும் முறை:
.
பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.
.
உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
.
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.
அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால்
மனம் அமைதி பெற உதவும்.
.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
.
முல்லைப்பூ, வில்வப்பூவை
குளித்த பின்பு சூடலாம்.
.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
.
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
.
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
.
தலையில் பூ வைப்பது,
மனமாற்றத்துக்கு உதவும்.
.
ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.
.
பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.
மனமாற்றத்துக்கு உதவுகிறது.
.
மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
.
இருந்தாலும் மற்றவர் காதில் பூ சுத்துவது
நல்லதில்லை.

கருடி வாஹனம்

கருட பகவான் கேள்வி பட்டிருப்பீர்கள்
பொதுவாக கருடன் ஆண் வம்சமாகும்
பெருமாளுடைய வாகனம்
பெண் கருடன் கேள்விப்பட்டதுன்டா 
கருடனின் மணைவியான கருடி எனப்பெயர்
நாகை அழகியார் கோவில் தாயாருக்கு
பெண் கருட ( கருடி) வாஹனம் உண்டு
இந்த கருடி வாஹனத்தில் தாயார் பவனிவருவது சிறப்பு
பல கோவில்களில் தாயார் கோவிலை விட்டு வெளியே வரமாட்டார்.( படிதாண்டா பத்தினி என பெயர் உண்டு)
நாகை அழகியார் கோவிலில்
பெருமாள் கருட வாஹனத்திலும்
தாயார் கருடி வாஹனத்திலும்
ஜோடியாக வருவது கண்கொள்ளாகாட்சியாகும்⚘⚘

!!*கட்டை விரலில் மோதிரம் அணியலாமா?*!!

!!*கட்டை விரலில் மோதிரம் அணியலாமா?*!!
👉 நாம் பார்க்கும் பலரில் சில இளம் வயதினர்கள் கட்டை விரலில் மோதிரம் அணிந்துள்ளனர். ஆனால் கட்டை விரலுக்கு மோதிரம் அணியக்கூடாது. மோதிரவிரலுக்கு மட்டுமே மோதிரம் அணிவது சரியானதாகும்.
👉 கட்டைவிரலில் எந்த உலோகத்தையும் அணிய கூடாது. அதன் மூலம் உங்களுக்குத் தேவையில்லாத சக்திகள், உங்களோடு தொடர்பு கொள்ள நேரும். குறிப்பாக, கட்டை விரலில் தங்கம், செம்பு போன்றவற்றை அணிந்தால், மாந்திரீகப் பயிற்சி ஏவப்பட சில சக்திகளை நீங்கள் ஈர்ப்பீர்கள். வேறொருவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற இத்தகைய சக்திகளுக்கு அடிமையாவது உங்களுக்கு நல்லதில்லை.
👉 கட்டைவிரலில் மோதிரம் அணிவதால் குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது, கட்டை விரலில் மோதிரம் அணிந்திருந்தால் அது குறிப்பிட்ட விதமான சில சக்திகளை உங்களை நோக்கி ஈர்க்கும். அதனால் உங்கள் வாழ்க்கையே உலுக்கப்படலாம். வாழ்வின் செயல்முறையில் உங்களை நீங்களே முழுமையாக ஆற்றல் இழக்கச் செய்து கொள்வீர்கள். சந்தோஷமாக, பிரயத்தனப்படாமல் செய்ய வேண்டியவற்றை தவறான விஷயங்களைச் செய்து வலுவிழப்பீர்கள்.
👉 மோதிர விரலின் அடி முதல் நுனி வரை பிரபஞ்சமே இருக்கிறது. சில குறிப்பிட்ட விஷயங்களை இந்த விரலில் செய்வதனால், ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல முடியும். இந்த உடலைக் கொண்டு நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். உங்கள் உடலில் மட்டுமல்ல, இங்குள்ள அத்தனை உடல்களின் மீதும் ஆளுமை செலுத்தலாம். உங்கள் மோதிர விரல் மூலம் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும்.
👉 மோதிர விரலைப் பற்றி யோகத்தில் முழுமையான அறிவியலே இருக்கிறது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதற்கு மோதிர விரல் ஒரு சாவி போல் செயல்படுகிறது. இதனால் மோதிர விரலை செப்பனிடுவது மிக அவசியமாகிறது. இதன்மூலம் உடலிற்கு ஒருவித ஸ்திரத்தை ஏற்படுத்த முடியும்.
👉 கட்டை விரலில் மோதிரம் அணிவது தீய சக்திகளை நம் நோக்கி ஈர்க்கும். அதனை கையாளும் திறன் நமக்கு இல்லாமல் இருக்கும். ஆதலால், கட்டை விரலில் மோதிரம் அணியக் கூடாது...

*பழநி மலை முருகன் அதிசய தகவல்கள்*

*பழநி மலை முருகன் அதிசய தகவல்கள்*
***********************
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடும், ஆண்டி கோலத்திலும் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் ஆச்சரியங்கள்......!
🌹 தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபு தி) மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.
🌹 இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை) வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முழு அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபு தி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
🌹 ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
🌹 அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, புக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
🌹 இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தப்படுகிறது.
🌹 விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்பு சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பிறகு இந்த முறை மாற்றப்பட்டது.
🌹 விக்ரகம் மிகுந்த சு டாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.
🌹 தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தௌpவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
🌹 அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
🌹 இந்த சிலையை போகர் செய்து முடிக்க ஒன்பது வருடங்கள் ஆயிற்று.
🌹 அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சி எடுத்தாகவும், இதற்காக 4000க்கும் மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து, 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் செய்தனர்.
🌹 போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
🌹 கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோவில்கள் சேதமடைந்து போனாலும், நவபாஷாணத்தில் சிலை செய்த இந்த கோவில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான்.
🌹 தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க முடியாது.
🌹 பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக கூறுப்படுகிறது...

!!*மகா பெரியவாள்*!!

!!*மகா பெரியவாள்*!!
கேட்டதும் கிடைக்கும் சன்னதி
ஒரு சுமங்கலி தன் மகனை அழைத்துக் கொண்டு மகானிடம் வந்து “இவனுடைய வாயில் புண் இருக்கு…எத்தனையோ மருந்து கொடுத்தும் போகலே. பெரியவாதான் காப்பாத்தணும்” என்று வந்து நின்றாள்.
உடனே ஸ்ரீ பெரியவா அங்கிருந்தவர்களைப் பார்த்து “தேங்காய் பூ கிடைக்குமா” என்றார்.
பலபேருக்கு அப்படி ஒரு பூ இருப்பதாக தெரியவில்லை. தேங்காய் பூ பற்றி தெரிந்தவர்களுக்கோ அது கேட்டவுடனே கிடைக்கும் வஸ்து அல்ல என்பது தெரியும். ஏதாவது ஒரு தேங்காயில் அபூர்வமாக தென்படக்கூடியதாயிற்றே இப்படி திடுதிடுப்பென்று கேட்டால் கிடைக்காத பொருளாயிற்றே என்று செய்வதறியாமல் நின்றனர்.
இப்படி ஸ்ரீ பெரியவா தேங்காய் பூ கிடைக்குமா என்று கேட்டு நிறுத்திய உடனேயே காக்கிநாடாவிலிருந்து சிந்தாமணி கணபதி என்ற பண்டிதர் பக்தி பரவசத்தோடு ‘சந்திரசேகர பாஹிமாம்’ என்று பாடிக்கொண்டே வந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.
மேலும் தான் கொண்டுவந்த முப்பது தேங்காய்களை ஸ்ரீ பெரியவா முன்னே வைத்தார். எப்போதும் எல்லோரும் செய்வது போல தேங்காய்களை அப்படியே சமர்பிக்காமல் எல்லா தேங்காய்களை ஸ்ரீ பெரியவா முன்னாலேயே உடைத்து உடைத்து தட்டில் வைத்தார்.
என்ன அதிசயம்….அவற்றுள் நாலு மூடி தேங்காய்களுள் அரை எலுமிச்சை அளவில் தேங்காய் பூ என்ற கட்டி இருந்தது. அவைகளை அந்த மாதுவிடம் கொடுக்கச் சொல்லி “வெயிலில் உலர்த்தி தினமும் கொஞ்சமாக சாப்பிடச் சொல்லு” என்றார்.
பையனுக்கோ அவசரம். அதை உடனே அப்படியே வாயில் போட்டுக் கொண்டான். பெரியவா மற்ற பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்க ஒரு மணி நேரம் ஆனது. பையன் திரும்பி வந்தான். சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் பையனுக்கு என்ன ஆனதோ என்று திகீரென்றது.
“பாதி புண் சரியாயிடுத்து” என்றான் பையன்!
இப்பேற்பட்ட ஆனந்த அனுபவங்களை அள்ளித் தந்து, தன் அபார கருணையால் ஆட்கொண்டருளும் ஸ்ரீ மகா பெரியவாளிடம் நாம் கொளும் பூர்ண சரணாகதம் நமக்கு சகல நன்மைகளையும், சர்வ மங்களங்களையும் அருளும் என்பது திண்ணம்.

"ஓம் நமோ நாராயணாய"

"ஓம் நமோ நாராயணாய"
ஒரு கிராமத்தில், ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அதன் வாசலில், ஒரு நாய் படுத்துக் கொண்டிருப்பது வழக்கம். தினமும் பெருமாளுக்கு நிவேதனம் செய்யும் பிரசாதத்தை, பக்தர்களுக்கு வழங்குவர். அந்த பிரசாதத்தை சாப்பிட்டபடி, பெருமாளை சுற்றி வருவர் பக்தர்கள்.
அப்படி வரும்போது, அந்த பிரசாதம் கோவில் பிரகாரத்தில் சிந்தி விடும். பிரசாதத்தை பொறுக்கி சாப்பிட்டபடி, பிரகாரத்தை சுற்றி வரும் அந்த நாய். இப்படியே பல நாட்கள் பிரசாதத்தையும் சாப்பிட்டு, பெருமாளையும் சுற்றி வந்தது.
ஒரு நாள், அது மரணமடைந்தது. அந்த ஜீவனை, தர்மராஜன் முன் நிறுத்தினர் எமதூதர்கள்.கணக்கை பார்த்துவிட்டு, "இந்த நாய், பெருமாள் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு, பெருமாளையும் பிரதட்சணம் செய்துள்ளதால், இது, வைகுந்தம் போக வேண்டும்...' என்றான் சித்ரகுப்தன். பூலோகத்தில், சாட்சி தேவதைகள் என்று சில தேவதைகள் சுற்றி வருவதுண்டு.
யார், யார் என்ன புண்ணியம், பாவம் செய்துள்ளனர் என்று தெரிந்து, தர்மராஜன் சபைக்குப் போகும். சித்ரகுப்தன் ஒவ்வொரு ஜீவனும் செய்த பாவ புண்ணியங்களை, தர்மராஜனிடம் தெரிவிப்பான். சாட்சி தேவதைகளைப் பார்த்து, "இது நிஜமா!' என்று கேட்டான் தர்மராஜன். சாட்சி தேவதைகளும், "ஆமாம்!' என்றனர்.
அதன்பின் அந்த நாயின் ஆத்மா, வைகுந்தம் போகலாம் என்று தீர்ப்பு வழங்கினான் தர்மராஜன். உடன் விஷ்ணு தூதர்கள் வந்து, அந்த ஜீவனை வைகுந்தம் அழைத்துப் போயினர். எந்த ஜீவனாக இருந்தாலும், பெருமாள் பிரசாதத்தை உண்டு,
பெருமாளை சுற்றி வந்தால் போதும், வைகுந்த பதவி கிடைக்கும் என்று இந்தக் கதையை சொல்லி முடித்தார் சூதபுராணிகர். இதைக் கேட்ட முனிவர்கள், "பெருமாள் பிரசாதத்துக்கும், பெருமாளை சுற்றி வருவதற்கும் இவ்வளவு புண்ணியம் உள்ளதே!' என்று ஆச்சரியப்பட்டனர்.
"ஸ்ரீ நாராயணன் திருவடிகளே சரணம்"

!!*கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்*!!

!!*கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்*!!
சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு
காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் *உடல் பலவீனம்,*
இரண்டாவது *கண்திருஷ்டி*
நம் உடலில் *ஏழு சக்கரங்கள*் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல
விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர
வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர்
தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும்
சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும்.
மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே
பட்டுபோகுமாம். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில்
இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து
பலவீனமாக இருக்கும். இதற்கு பரிகாரம் *கடல் தண்ணீர்*
கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு
சக்கரங்களும் பலம் பெறும்.
எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி
வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து
நம்முடைய உடலில் உள்ள *சப்த சக்கரங்களை* பலப்படுத்தும்..
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த
வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண
பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம்
நீங்கினால்தான் துர்வாடை போகும். அதனால் கடல் தண்ணீரை
சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி
விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.
கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு
கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால்
குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை
எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு
சக்கரங்களும் பலப்படும்.
*ஸ்ரீராமர்* பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த
லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில்
அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு,
*கடல் நீரே விசேஷமானது* என்றார் ஸ்ரீராம பிரபு....

!!*திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண் குத்துவிளக்கை ஏற்றுதற்கான காரணம்*!!

!!*திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண் குத்துவிளக்கை ஏற்றுதற்கான காரணம்*!!
👩 பெண் திருமணமாகி தன் பெற்றோர், உடன் பிறந்தோர் போன்ற உறவுகளை விட்டுப் பிரிந்து தன் புகுந்த வீட்டிற்கு செல்கிறாள். அப்படி திருமணம் முடிந்து தன் புகுந்த வீட்டிற்கு சென்றவுடன், அப்பெண்ணை அந்த வீட்டில் முதன் முதலில் குத்துவிளக்கை ஏற்றி வைக்கச் சொல்வார்கள். அவ்வாறு திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணை குத்துவிளக்கு ஏற்றச் சொல்வது ஏன்? என்பதைப் பற்றி பார்ப்போம்.
👩 ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய நற்குணங்கள் ஐந்து. குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும், பெண்ணுக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிப்பதாகும். ஆகையால் பெண்ணுக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களையும் கொண்டிருப்பேன் என்று குத்துவிளக்கை ஏற்றி உறுதியளிப்பதாக அர்த்தம்.
👩 குத்துவிளக்கிற்கென்று ஒரு விளக்கம் உள்ளது. குத்து விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் ஐந்து கடவுள்களைக் குறிக்கின்றது. அதாவது குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் - பிரம்மாவையும், குத்துவிளக்கின் நடுத்தண்டு பகுதி - விஷ்ணுவையும், நெய் எறியும் அகல் - சிவனையும், திரி தியாகத்தையும், தீபம் - திருமகளையும், சுடர்- கலைமகளையும் குறிக்கிறது.
👩 ஆகையால் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண், புகுந்த வீட்டில் குத்துவிளக்கை ஏற்றி வைத்து, குத்துவிளக்கில் உள்ள ஐந்து கடவுள்களையும் வணங்கி, குத்துவிளக்கில் இருந்து வரும் ஒளியால் வீடு முழுவதும் பிரகாசம் அடைகிறதோ, அதேபோல் புகுந்த வீட்டில் வாழ வந்த பெண்ணுடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், புகுந்த வீட்டிற்கு வந்த புதுமணப்பெண்ணை முதலில் குத்துவிளக்கை ஏற்றி வைக்கச் சொல்கிறார்கள்.
👩 அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக, தனது கணவனின் வீட்டிற்கு வந்தவுடன், முதல் வேலையாக அப்பெண்ணைக் குத்துவிளக்கை ஏற்றச் சொல்லி, அந்த குத்து விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் மூலமாக வீடு முழுவதும் ஒளிபரவச் செய்கின்றனர். இதுவே திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண் முதலில் குத்துவிளக்கை ஏற்றுதற்கான காரணம் ஆகும்....

எளிமையான வலிமையான மந்திரங்கள்

1.வறுமை நீங்க:
"ஓம் ஸ்ரீம் ஹரயே நமஹ"
2.பக்தி,ஞானம்,முக்தி பெற:
"ஓம் ஹ்ரீம் ஹரயே நமஹ"
3.தம்பதிகள் ஒற்றுமைக்கு ,குடும்பம் நலம் பெற:
"ஓம் க்லீம் ஹரயே நமஹ"
4.எதிரிகளை வெல்ல:
"ஓம் ஹூம் ஹரயே நமஹ"
மேலே உள்ள மந்திரங்களில் உங்கள் தேவைக்கேற்ற மந்திரத்தைத் தேர்ந்தெடுத்து, 90 நாட்கள் தொடர்ந்து ஜெபம் செய்து வரக் குறிப்பிட்ட பலன் கிட்டும்.இவை எளிமையான வலிமையான மந்திரங்கள்.ஜெப காலங்களில் அசைவ உணவு தவிர்க்கவும்.அசைவம் சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்து ஜெபிக்கவும்.

வலம்புரிசங்கு வழிபடும் முறை:

வலம்புரிசங்கு வழிபடும் முறை:
--------------------------------------
ஆண், பெண் இருபாலாரும் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்க்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் அவர்களுக்கு
இருந்துவரும் திருமணதோஷம், செவ்வாய்தோஷம் உட்பட சிலதோஷங்கள் நீங்கி எந்த தடையும் இன்றி திருமணம் இனிதே நடைபெற்று பிள்ளைப்பேரும் பெறுவார்கள்.
இந்த வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது.
சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்ல து வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும்.
அத்துடன், செல்வத்திற்கு அதிதெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடி பூரம், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பௌர்ணமியிலும், ஆனி மாதம் சுக்லபட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பௌர்ணமியிலும் வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமி யையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகிய வைகளை பசு நெய்யில் செய்து பால் பாயாசம் செய்து பசுநெய் ஊற்றி விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
இப்படிச்செய்தால் எல்லா வித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் சங்கிற்கு பூஜை செய்யலாம்.
ஒவ் வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டுஅதில் துளசி,வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது தண்ணீரைக்குடித்துவிட்டு, சிறிது தண் ணீரை வாசற் படியில் தெளிக்கவும்.
இப்படி 90நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும்.
வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.
இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகளும் குணமடையும்.
மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாத விலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

குடித்தனம் போககூடாத மாதங்கள்

குடித்தனம் போககூடாத மாதங்கள்
ஒவ்வொரு சராசரியான மனிதனுக்கும் ஒரு ஆசை இருக்கும் அது என்ன என்றால் ஒரு புதிய வீடு கட்டவேண்டும் என்ற ஆசை. கஷ்டப்பட்டு அந்த வீட்டை கட்டியபிறகு ஒரு நாள் நாளாக பார்த்து அந்த வீட்டிற்க்கு குடிபோகும்போது அந்த மனிதனின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள்
ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி
ஏன் போககூடாது என்ற காரணத்தைப் பார்க்கலாம்
இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது. பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது. இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது. பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம். மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது. மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது.
இந்த மாதத்தில் இருக்கின்ற இடத்தை விட்டு குடிபோனால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். மேலே சொன்ன மாதங்களை தவிர்த்துவிடுங்கள்.

*அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:*

*அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:*
தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.
ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.
ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.
சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.
அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.
அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.
அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.
அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.
முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்...